உங்களுடைய புது வீட்டைக் கட்டும் பயணத்தில், நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி மனையைத் தேர்ந்தெடுப்பதாகும். நீங்கள் ஒரு முறை மனையை வாங்கிய பின்னர், உங்கள் முடிவை நீங்கள் மாற்ற முடியாது என்பதால், அதிகக் கவனத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். ஒரு வீட்டைக் கட்டுவதற்கான சரியான மனையைத் தேர்ந்தெடுப்பதற்காக உங்களுக்கு உதவுவதற்கான சில உதவிக்குறிப்புகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்
உங்கள் வீட்டுச் சுவர்களில் பிளாஸ்டரிங் செய்வது அவற்றுக்கு ஒரு சீரான பூச்சை வழங்குகிறது, அதில் பெயிண்ட்டை எளிதாகப் பயன்படுத்தலாம். இது காலநிலை மாற்றங்களிலிருந்தும் உங்கள் வீட்டைப் பாதுகாக்கிறது.
This article will help you understand the importance of waterproofing & which areas of your home need it crucially to protect the home against water seepage.
உங்களின் வீடு தான் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பொறுப்புகளில் ஒன்றாகும், மேலும் அதன் ஆயுள் அதன் நிலைப்புத்தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலத் தலைமுறைகளுக்காக நிலைத்திருக்கும் ஒரு வீட்டை நீங்கள் கட்டுவதை ஒரு கட்டமைப்புப் பொறியாளர் உறுதி செய்வார். ஒரு கட்டமைப்பு பொறியாளரைப் பணியமர்த்தாமல் இருப்பதன் மூலம், உங்கள் வீட்டின் நீண்ட ஆயுளில் நீங்கள் சமரசம் செய்துகொள்கிறீர்கள்.
உங்களின் வீட்டைக் கட்டுவதற்காக நிலம் வாங்குவதென்பது மாற்றமுடியாத ஒரு முடிவாகும். நீங்கள் இதை வாங்கியதும், இது உங்களால் பழையபடி மாற்ற முடியாத ஒரு பொறுப்பாகிவிடும் அல்லது அதைப் பழையபடி மாற்றப் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும்
உங்களின் வீட்டைக் கட்டும் போது உங்களின் வாழ்நாள் சேமிப்பில் கணிசமான பகுதியை நீங்கள் செலவு செய்வீர்கள். தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான சில உதவிக்குறிப்புகள் இதோ.
அவர்களது புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் விரிசல்களைப் பார்ப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். கான்கிரீட் செட் ஆன பிறகு அதில் பொதுவாக வெடிப்புகள் ஏற்படத் தொடங்கும். இருப்பினும், கான்கிரீட்டில் தண்ணீரை ஊற்றுவது வெடிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தண்ணீர் ஊற்றுவது என்றால் என்ன என்பதையும், வெடிப்புகளைத் தவிர்க்க அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்
உங்கள் வீட்டின் கட்டுமானம் என்று வரும்போது, திட்டமிடல் தொடங்கி இறுதிப்பூச்சு வரை, சிந்திக்க வேண்டியது நிறைய உள்ளது. ஆனால் நீங்கள் கட்டுமானச் செயல்முறையுடன் செல்லும்போது, பாதுகாப்பு என்பது நீங்கள் சமரசம் செய்துகொள்ளக் கூடாத ஒன்றாகும்.
உங்கள் வீட்டின் கட்டுமானத்தில் பல ஆட்கள் ஈடுபட்டுள்ளனர். உரிமையாளர்கள் - நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம், கட்டடக் கலைஞர் - வீட்டை வடிவமைப்பவர், பணியாளர்கள் மற்றும் மேசன்கள் - உங்கள் வீட்டைக் கட்டுபவர், மற்றும் ஒப்பந்ததாரர் - அனைத்துக் கட்டுமான நடவடிக்கையையும் திட்டமிட்டு ஒருங்கிணைப்பவர்.
உங்கள் வீட்டைக் கட்டுவது என்பது உங்கள் வாழ்வின் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றாகும். உங்கள் வீடு தன் உங்கள் அடையாளம். அதனால் தான் உங்கள் வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு அடியிலும் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பது முக்கியமாகும். உங்களின் வீடு கட்டும் பயணத்தின் பல்வேறு கட்டங்களை அறிந்திருப்பது முக்கியமாகும், எனவே, உங்கள் புது வீட்டின் கட்டுமானத்தை நீங்கள் திட்டமிடலாம் மற்றும் கண்காணிக்கலாம்
உங்கள் வீடு என்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வெறும் ஒரு உறைவிடம் மட்டுமல்ல. இது உங்களுக்கான பாதுகாப்பான இடம் ஆகும். இது சௌகரியமான மென்மையான மெத்தை போலச் செயல்பட்டு, இயற்கை கூறுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. அதனால் தான், பல தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும் ஒரு வீட்டைக் கட்டுவதற்காக நீங்கள் அதிக நேரத்தை, பணத்தை மற்றும் ஆற்றலைச் செலவிடுகிறீர்கள்.
உங்களின் மனையை வாங்குவது ஒரு வீடு கட்டுவதை நோக்கிய எடுத்து வைக்கும் பெரிய முதல் அடி ஆகும். பிற்காலத்தில் சட்டப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு, உங்கள் வீட்டின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன்பு தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருப்பதை உறுதி செய்துகொள்வது நல்லதாகும்.
உங்களின் சொந்த வீட்டைக் கட்டுவதற்கு, நிதி சார்ந்த திட்டமிடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். செலவு அளவுக்கதிகமாக ஆனதன் காரணமாக உங்கள் வீடு முழுமையடையாமல் இருக்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவதை விரும்பமாட்டீர்கள்.
நீங்கள் ஒரு மனையை வாங்க முடிவு செய்ததும், நீங்கள் அனைத்து ஆவணங்களையும் வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவும். அவை இல்லாமல், உங்களுடைய கொள்முதல் தாமதமடையும்.
கட்டுமானத்தில் மரம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. எங்கெல்லாம் மரம் இருக்கிறதோ, அங்கெல்லாம் கரையான் இருக்கும், மேலும், அவை கட்டுப்படுத்தப்படாமல் விடப்பட்டால், இந்தப் பூச்சிகள் கட்டடத்திற்குப் பெருமளவிலான சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு ஒப்பந்ததாரர் மற்றும் ஒரு கட்டடக் கலைஞர் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும்.
நீங்கள் கட்டும் வீடு நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பழுது பார்ப்பது மற்றும் மறுசீரமைப்பிலேயே நீங்கள் அதிகம் பணத்தைச் செலவிடுவீர்கள்.
உங்கள் வீட்டைக் கட்டுவதற்கு முன்பும், கட்டும்போதும் பட்ஜெட்டைக் கையாளுவது உங்களுடைய மிகப்பெரிய கவலை ஆகும். உங்களின் பட்ஜெட்டைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று ஒரு பட்ஜெட் டிராக்கரைப் பயன்படுத்துவதாகும்.
வலுவான வீட்டின் இரகசியம் ஒரு வலுவான அடித்தளத்தில் உள்ளது. எனவே, அடித்தளம் அமைப்பதை மேற்பார்வையிடும் போது நீங்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். உட்புறங்கள் போல் இல்லாமல், அடித்தளத்தை ஒரு முறை அமைத்துவிட்டால், அதை மாற்றமுடியாது.
கட்டடக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் உள்ளது இருப்பினும், இருவரும் சம அளவு முக்கியத்துவம் கொண்டவர்கள், குறிப்பாக உங்கள் வீட்டுக் கட்டுமானத்தின் திட்டமிடல் மற்றும் மேற்பார்வை கட்டத்தில். அவர்கள் என்னென்ன பலன்களை அளிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வோம்.
உங்கள் வீட்டில் உள்ள மரக் கட்டமைப்புகளைக் கரையான்களிடமிருந்து பாதுகாப்பாக வைப்பதற்காகக் கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட் பயன்படுத்தப்படுகிறது.
ஒருவர் சொந்தமாக வீடு கட்டுவது என்பது அவரது வாழ்வின் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றாகும். உங்கள் வீடு தன் உங்கள் அடையாளம். எனவே, வீடு கட்டுவதின் அனைத்துக் கட்டங்கள் குறித்தும் புரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும், இதன் மூலம் நீங்கள் உங்கள் வீட்டின் கட்டுமானத்தைத் திறம்படத் திட்டமிட்டுக் கண்காணிக்கலாம்.
ஒரு வீட்டிற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு முன் மனையில் குழி தோண்டப்படும். அடித்தளம், உங்கள் வீட்டின் கட்டமைப்பின் எடையை அடித்தளத்தின் கீழே உள்ள வலிமை மிகுந்த மண்ணிற்கு இடமாற்றுகிறது. சரியான முறையில் குழி தோண்டப்படவில்லை என்றால், அடித்தளம் வலுவிழக்கக்கூடும், இதன் காரணமாகச் சுவர்கள் மற்றும் தூண்களில் விரிசல்கள் ஏற்படக்கூடும்.
வீடு கட்டும் செயல்முறையானது பொதுவாகப் பல கட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும், மேலும், பெரும்பாலான அந்தக் கட்டங்களில், சிமெண்ட்டில் உங்கள் தேர்வு ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.
உங்கள் வீட்டைக் கட்ட கடல் அல்லது பாலைவன மணலை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இந்த மணல்கள் பளபளப்பான, தெளிவான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன, ஆனால் இவை மிக இலகுவாக தூள் தூளாக இருக்கும். இந்த வகையான மணலைப் பயன்படுத்துவது கட்டமைப்பை பலவீனப்படுத்தலாம். மேலும், கடல் மணலில் உப்பு உள்ளது, இது எஃகு மற்றும் பிளாஸ்டர் மீது எதிர்வினைகளாற்றிவிடும்.
உங்களின் வீட்டைக் கட்டும் செயல்முறையின் போது செலவுகளை மிச்சப்படுத்த உங்களுக்கு உதவுவதற்கான சில உதவிக்குறிப்புகள் இதோ.
திட்டமிடலின் போது, கட்டுமானத்தின் வெவ்வேறு நிலைகளைப் பற்றிய சரியான கருத்தைப் பெறுவது முக்கியமானது. அந்த நிலைகளை மனதில் கொள்வது வீட்டைக் கட்டுபவருக்குத் தனது வீட்டையும் நிதியையும் இன்னும் மேலாகத் திட்டமிட உதவும்.
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…