வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



கட்டுமானத்திற்காக சர்வேயிங்கில் லெவல்லிங்கை புரிந்துக் கொள்ளுதல்.

Share:



சர்வேயிங்கில் லெவல்லிங்கானது நிலம் சமமாக மற்றும் கட்டிடத்திற்காக முறையாக தயாராக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதால் துல்லியமான கட்டுமான பிராஜெக்ட்களுக்கு இது மிக முக்கியமாகும். இது எதிர்காலத்தில் சாத்தியமான பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது. கட்டுமான சைட்டில் உயர வேறுபாடுகளை துல்லியமாக தீர்மானிக்க வெவ்வேறு வகையான லெவல்லிங் வெவ்வேறு நோக்கங்களை கொண்டுள்ளது.

 

 


சர்வேயிங்கில் லெவல்லிங்கானது நிலத்தின் எலிவேஷனை (நிலத்தின் உயரம்) தீர்மானிக்க உதவும் முக்கிய செயல்முறையாகும். இது கட்டிடத்திற்கு தரையானது சமமாக மற்றும் நிலையாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. திடமான ஃபவுண்டேஷனை உருவாக்குதல் மற்றும் சமனற்ற ஃப்ளோர்கள் அல்லது கட்டமைப்பு பிரச்சினைகள் போன்ற சிக்கல்களை தடுக்க இந்த செயல்பாடானது அவசியமாகும். இந்த வலைப்பதிவானது சர்வேயிங்கில் லெவல்லிங் என்றால் என்ன, பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மற்றும் கட்டுமான பிராஜெக்ட்களுக்கு துல்லியமான மற்றும் நம்பகமான முடிவுகளை உறுதிப்படுத்துவதில் உள்ள படிநிலைகள் போன்ற அடிப்படை கொள்கைகளை எடுத்துரைக்கிறது.

 

 

சர்வேயிங்கில் லெவல்லிங்கின் முக்கியத்துவம் என்ன?

கட்டுமான பிராஜெக்ட்கள் நிலையான மற்றும் சமமான ஃபவுண்டேஷன் மீது கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு சர்வேயிங்கில் லெவல்லிங் மிக முக்கியமாகும். சமனற்ற ஃப்ளோர்கள், மோசமான டிரைனேஜ் மற்றும் முறையற்று தயாரிக்கப்பட்ட சைட்களால் ஏற்படும் கட்டமைப்பு பிரச்சினைகள் போன்ற சிக்கல்களை தடுக்க துல்லியமான லெவல்லிங் உதவுகிறது. நிலையான எலிவேஷனை நிறுவுவதன் மூலம் லெவல்லிங்கானது கட்டுமான சைட்டின் அனைத்து பகுதிகளும் சமமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இது கட்டமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் நீண்ட ஆயுட்காலத்திற்கு அவசியமாகும்.

 

 

லெவல்லிங்கின் வகைகள் என்ன?

சர்வேயிங்கில் பல்வேறு வகையான லெவல்லிங் பயன்படுத்தப்படுகிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கங்களுக்கு பொருத்தமானது

 

1. டைரெக்ட் (நேரடி) லெவல்லிங்



டைரெக்ட் லெவல்லிங்கானது பாயின்ட்களுக்கு (புள்ளிகளுக்கு) இடையேயான உயர வேறுபாட்டை அளக்க ஸ்பிரிட் லெவல் அல்லது தியோடலைட் போன்ற வெலவல்லிங் உபகரணத்தை பயன்படுத்துவதை உள்ளடக்கியது ஆகும். உபகரணமானது முக்காலியின் மீது (ட்ரைபாட்) பொருத்தப்பட்டு மற்றும் இதற்கென பட்டம் பெற்ற ஊழியரை கொண்டு (க்ராஜுவேட்டட் ஸ்டாஃப்) அளவீடுகள் பல்வேறு அமைவிடங்களில் (லொக்கேஷன்) வைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. இந்த முறை துல்லியமான நில உயர அளவுகளை வழங்குகிறது மற்றும் கட்டுமானத்தில் சமமான பேஸை (லெவல் பேஸ்) நிறுவுவதற்கு இந்த முறை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

 

2. ட்ரிக்னோமேட்ரிக் (முக்கோணவியல்) லெவல்லிங்

ட்ரிக்னோமேட்ரிக் லெவல்லிங்கில் உயர வேறுபாடுகளை தீர்மானிக்க ஆங்குலர் (கோணம்) அளவுகள் மற்றும் தூர கணக்கீடுகள் பயன்படுத்தப்படுகிறது.தெரிந்த ரெஃபெரன்ஸ் பாயிண்ட்டிலிருந்து (reference point) ஆங்கில்களை அளவிடுதல் மற்றும் தூரத்தை கணக்கிடுதல் மூலம் சர்வேயர் பல்வேறு பாயிண்ட்களின் எலிவேஷனை தீர்மானிக்கலாம். டைரெக்ட் அளவுகள் சாத்தியப்படாத பெரிய அளவிலான சர்வேக்களுக்கு இந்த முறை பயனுள்ளதாகும்.

 

3. பரோமெட்ரிக் லெவல்லிங்



பரோமெட்ரிக் லெவல்லிங்கானது எலிவேஷன் வேறுபாடுகளை கணக்கிடுவதற்கு வளிமண்டல அழுத்தத்தை நம்பியிருக்கிறது. வெவ்வேறு லொக்கேஷன்களின் காற்றழுத்தத்தை ஒப்பிடுவதன் மூலம் சர்வேயர்கள் உயர வேறுபாடுகளை பெறலாம். மற்ற முறைகளை விட இந்த முறை குறைவான துல்லியமானது ஆனால் மற்ற உபகரணங்கள் கிடைக்காத தொலைதூர (ரிமோட்) பகுதிகளில் பயனுள்ளதாக இருக்கும்.

 

4. ஸ்டடியா லெவல்லிங்



ஸ்டடியா லெவல்லிங்கானது ஸ்டடியா ராட் மற்றும் தியோடலைட் அல்லது டோட்டல் ஸ்டேஷனை பயன்படுத்துவதை உள்ளடக்கியது. ஸ்டடியா ராட் படிப்படியான குறியீடுகளை கொண்டிருக்கும் மற்றும் இந்த உபகரணம் உயர வேறுபாடுகளை கணக்கிட குறியீடுகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளவிடுகிறது. தொலைதூரங்களின் எலிவேஷன்களை விரைவாக அளவிட இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இந்த முறையானது பொதுவாக சர்வேயிங் மற்றும் மேப்பிங்கில் பயன்படுத்தப்படுகிறது.

 

 

சர்வேயிங்கில் லெவல்லிங்கின் நன்மைகள் என்ன?

வெற்றிகரமான கட்டுமான பிராஜெக்ட்களுக்கு அவசியமான பல முக்கிய பலன்களை சர்வேயிங்கில் லெவல்லிங்கானது வழங்குகிறது.

 

 

1) துல்லியத்தன்மையை உறுதிப்படுத்துகிறது

நிலையான மற்றும் சமமான ஃபவுண்டேஷனை அமைப்பதற்கு முக்கியமான நிலத்தின் எலிவேஷனின் துல்லியமான அளவுகளை பெறுவதில் லெவல்லிங்கானது உதவுகிறது. துல்லியமான லெவல்லிங்கானது கட்டுமானத்தின் போது தவறான சீரமைப்பு அல்லது கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் தவறுகளை தடுக்கிறது.

 

2) கட்டமைப்பு சிக்கல்களை தடுக்கிறது

கட்டுமான சைட் லெவல்லாக இருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் விரிசல்கள், சமமற்ற ஃப்ளோர்கள் அல்லது ஃபவுண்டேஷன் தோல்வி போன்ற கட்டுமான சிக்கல்களின் எதிர்கால அபாயத்தை வெகுவாக குறைக்கப்படுகிறது. லெவல்லான ஃபவுண்டேஷனானது ஒட்டுமொத்த கட்டமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் நீண்ட ஆயுளை ஆதரிக்கிறது.

 

3) பாதுகாப்பை மேம்படுத்துகிறது

முறையான லெவல்லிங்கானது கட்டுமான சைட் நிலையாக மற்றும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தி விபத்துகள் அல்லது கட்டமைப்பு தோல்விகளின் அபாயத்தை குறைக்கிறது. பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க உதவுகிறது மற்றும் முடிக்கப்பட்ட கட்டமைப்பு பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துகிறது.

 

4) வடிகாலை (ட்ரைனேஜ்) மேம்படுத்துகிறது

திறமையான வடிகாலிற்கு மிக முக்கியமான நிலத்தின் முறையான கிரேடிங்கை லெவல்லிங் உறுதிப்படுத்துகிறது. அரிப்பு, ஃபவுண்டேஷன் பலவீனமாதல் அல்லது பிற தண்ணீர்-சம்பந்தப்பட்ட சேதாரங்கள் ஆகியவற்றை விளைவிக்கக்கூடிய ஃபவுண்டேஷனை சுற்றிய தண்ணீர் தேக்கத்தை நல்ல வடிகால் தடுக்கிறது.

 

5) சிக்கனமானது

துல்லியமான லெவல்லிங்கானது கட்டுமானத்தின் போது அல்லது பின் சரிசெய்தல்கள் (correction) அல்லது அட்ஜெஸ்ட்மென்ட்களுக்கான தேவைகளை குறைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்கிறது. இது விலை உயர்ந்த மறு வேலைப்பாடுகளை தடுக்க உதவுகிறது மற்றும் எதிர்பாராத தாமதம் இல்லாமல் பிராஜெக்ட் மென்மையாக முன்னேறுவதை உறுதிப்படுத்துகிறது.

 

6) முறையான திட்டமிடலை ஆதரிக்கிறது

லெவல்லிங்கானது கட்டுமான பிராஜெக்ட்களின் முறையான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் (டிசைன்) அவசியமான தரவுகளை (டேட்டா) வழங்குகிறது. இது ஆர்க்கிடெக்குகள் மற்றும் இன்ஜினியர்கள் சைட்டின் சரியான நிலப்பரப்பை (டோபோகிராபி) கருத்தில் கொண்டு துல்லியமான வரைபடங்கள் (ப்ளூ பிரிண்ட்ஸ்) மற்றும் வடிவமைப்புகளை (டிசைன்ஸ்) உருவாக்க உதவுகிறது.



சர்வேயிங்கில் லெவல்லிங்கானது கட்டுமான பிராஜெக்ட்களின் துல்லியம் மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் குறுப்பிடத்தக்க பங்காற்றக்கூடிய அடிப்படை அம்சமாகும். பல்வேறு வகையான லெவல்லிங் டெக்னிக்குகளை (நுட்பங்களை) புரிந்துக் கொள்ளுதல் மற்றும் பயன்படுத்துதல் மூலம் கட்டுமான குழு துல்லியமான மற்றும் நம்பகமான முடிவுகளை அடைய முடியும், கட்டுமானத்தின் ஒட்டுமொத்த வெற்றி மற்றும் பாதுகாப்புக்கு பங்களிக்க முடியும்.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. லெவல்லிங் என்றால் என்ன மற்றும் அதன் வகைகள் யாவை?

கட்டுமானத்திற்கு தட்டையான (ஃப்ளாட்/flat) மற்றும் நிலையான ஃபவுண்டேஷனை உறுதிப்படுத்துவதற்காக தரைக்கு மேல் உள்ள வெவ்வேறு பாயிண்ட்களின் (புள்ளிகளின்) உயர வேறுபாடுகளை தீர்மானிக்கும் செயல்முறையானது லெவல்லிங் எனப்படும். லெவல்லிங்கின் முக்கியமான வகைகள் டைரெக்ட் லெவல்லிங் (லெவல் உபகரணம் மற்றும் ஸ்டாஃபை (ஊழியர்) பயன்படுத்தி), ட்ரைக்னோமேட்ரிக் லெவல்லிங் ( ஆங்குலர் அளவுகளை பயன்படுத்தி), பரோமெட்ரிக் லெவல்லிங் (வளிமண்டல அழுத்தத்தை பயன்படுத்தி), மற்றும் ஸ்டடியா லெவல்லிங் (ஸ்டடியா ராட் மற்றும் தியோடலைட்டை பயன்படுத்தி) ஆகியவற்றை உள்ளடக்கியது.

 

2. கட்டுமானத்தில் லெவல்லிங் முக்கியம் ஏன்?

கட்டுமானத்தில் லெவல்லிங்கானது மிக முக்கியமாகும் ஏனென்றால் இது ஃபவுண்டேஷன் நிலையாக மற்றும் சமமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது, சமமற்ற ஃப்ளோர்கள், விரிசல்கள் அல்லது சீர்குலைவு போன்ற கட்டமைப்பு பிரச்சினைகளை தடுக்கிறது. முறையான லெவல்லிங்கானது திறமையான வடிகாலையும் ஆதரிக்கிறது, பாதுகாப்பை மேம்படுத்துகிறது, மற்றும் கட்டுமான செயல்முறையின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்துகிறது, விலைமிக்க சரிசெய்தல்கள் (கர்ரெக்ஷன்கள்) மற்றும் அட்ஜெஸ்டமென்ட்களின் தேவையை குறைக்கிறது.

 

3. லெவல்லிங்கின் முதன்மையான செயல்பாடு என்ன?

லெவல்லிங்கின் முதன்மையான செயல்பாடு நிலைத்தன்மை மற்றும் லெவல் பேஸ்ஸை உறுதிப்படுத்த கட்டுமான சைட்டின் மீதுள்ள வெவ்வேறு பாயிண்ட்களின் (புள்ளிகளின்) எலிவேஷனை தீர்மானிப்பதாகும். இந்த செயல்முறையானது ஃபவுண்டேஷன்களுக்கு சரியான தரை லெவல்லை நிறுவுவதற்கு, சாலை சீரமைப்புகள், மற்றும் பிற கட்டுமான கூறுகளில் அதன் மேல் கட்டப்படும் கட்டமைப்புகளின் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளை உறுதிப்படுத்த உதவுகிறது.

 

4. லெவல்லிங்கின் முதன்மையான கொள்கை என்ன?

லெவல்லிங்கின் முதன்மையான கொள்கை ரெஃபரன்ஸ் ப்ளேனை (reference plane) நிறுவுவதற்கு தரை மேல் உள்ள பாயிண்ட்களின் உயர வேறுபாட்டை அளவிடுவதாகும். இது துல்லியமான அளவுகளை எடுக்க லெவல்கள் மற்றும் ராட்கள் போன்ற உபகரணங்களை பயன்படுத்துவதாகும், நிலையான மற்றும் சமமான ஃபவுண்டேஷனுக்காக கட்டுமான சைட்டின் மீதுள்ள அனைத்து பாயிண்ட்களும் சரியான எலிவேஷனில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....