வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



உங்கள் வீட்டிற்கான கட்டுமான ப்ளானை நீங்களே டிசைன் செய்ய சில டிப்ஸ்

உங்களின் வீட்டிற்கான கட்டுமான ப்ளானை நீங்களே டிசைன் செய்வது சுவாரசியமான விஷயமாக இருக்கும். ஏனெனில், உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப உங்களின் தேவைகளுக்கு ஏற்ப வீட்டினை உருவாக்க முடியும். இந்த வழிகாட்டியில், உங்கள் வீட்டை ப்ளான் செய்வதற்கான முக்கிய டிப்ஸ்களும், ஸ்டெப்ஸ்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்களின் வீட்டிற்கான சிறந்த டிசைனை உருவாக்க இது உங்களுக்கு உதவியானதாக இருக்கும்.

Share:



முக்கிய குறிப்புகள்

 

  • உங்கள் வாழ்க்கை முறை மற்றும் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உங்கள் கனவு வீட்டிற்கான கட்டுமான ப்ளானை தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் ஆரமியுங்கள்.

     

  • உங்கள் டிசைனின் தேர்வுகளுக்கு சரியாக வழிகாட்ட மற்றும் அதிக செலவுகளை தவிர்க்க, முன்னதாகவே ஒரு தெளிவான பட்ஜெட்டை உருவாக்கவும்.

     

  • அழகானதாக மட்டும் இல்லாமல், தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற நடைமுறை அம்சங்களுடன் இடங்களை டிசைன் செய்ய வேண்டும்.

     

  • உங்கள் ப்ளானை டிசைன் செய்யும் போது, ஆர்கிடெக்ட் அல்லது டிசைனர் போன்ற நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது முக்கியம். இது ப்ளானின் துல்லியத்தையும், உள்ளூர் கட்டுமான கோட்பாடுகளை பின்பற்றுவதை உறுதி செய்கிறது.

     

  • கட்டுமான செயல்பாட்டை சிறப்பாக வழிநடத்த, துல்லியமான அளவுகள் மற்றும் அமைப்புகளுடன் கூடிய விரிவான ஃப்ளோர் பிளானை உருவாக்குங்கள்.

     

  • உங்கள் டிசைனிற்கு ஏற்றப்படி கவனமாக மெட்டீரியல்கள், நிறங்கள் ஃபிக்ஸ்சர்களை (fixtures) தேர்வு செய்யுங்கள். இது வீட்டின் மொத்த அழகையும் மேம்படுத்தும்.

     

  • வீட்டு கட்டுமான ப்ளானை இறுதி செய்வதற்கு முன் ஒரு முறை நன்றாக சரி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால், தவறுகளை உடனே கண்டுபிடிக்க முடியும். மேலும், உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா என்பதையும் உறுதி செய்ய முடியும்.

     

  • சேமிப்புகளுக்காக முன்பே ப்ளான் செய்ய வேண்டும், இயற்கை ஒளியை கருத்தில் கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகள் மற்றும் தாமதங்களை தவிர்க்க நிபுணர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.



உங்கள் வீட்டின் கட்டுமான ப்ளானை நீங்களே டிசைன் செய்வது மிகவும் சந்தோஷமான அனுபவமாகும். இதன் மூலம் உங்களின் தேவைகளுக்கும் ஸ்டைலுக்கும் ஏற்ற சிறந்த வீட்டினை உருவாக்க முடியும். ஹவுஸ் ப்ளானை விரிவாக திட்டமிடுவதின் அவசியம் என்ன, பொதுவாக செய்யப்படும் தவறுகளை எப்படி தவிர்ப்பது மற்றும் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதன் பங்கு என்ன, ஆகிவற்றை இங்கே நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். மேலும், வீட்டு கட்டுமான ப்ளானின் அடிப்படைகள் மற்றும் எப்படி சிறந்த வீட்டை உருவாக்குவது என்பதையும் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

 

 


ஹவுஸ் ஃப்ளோர் ப்ளான் (House Floor Plan) என்றால் என்ன?



ஹவுஸ் ஃப்ளோர் ப்ளான் என்பது ஒவ்வொரு ரூம்களின் அமைப்பு மற்றும் வீட்டின் உட்பகுதி அம்சங்களை, மேலிருந்து பார்ப்பதுபோன்ற அமைப்பினை வழங்கும், அளவுகளுடன் வரையப்பட்ட வரைப்படமாகும். இதில் அளவீடுகள், ஃபர்னிச்சர்கள், உபகரணங்கள் மற்றும் மற்ற முக்கிய கூறுகள் அனைத்தும் அடங்கும். இவை தான் உங்கள் கட்டுமானம் மற்றும் வீட்டின் டிசைனிற்கான ப்ளூப்ரிண்ட்டாக இருக்கிறது. நடைமுறையான கட்டுமான திட்ட வரைப்படம், கட்டுமான நிபுணர்களை வழி நடத்தும். மேலும், அனைத்து டிசைன் கூறுகளும் தடையின்றி அனைத்துடனும் பொருந்துகிறதா என்பதையும் உறுதி செய்யும்.

 

 

உங்கள் வீட்டு கட்டுமான ப்ளானை உருவாக்குவதன் முக்கியத்துவம்

வீட்டிற்கான கட்டுமான ப்ளானை விரிவாக உருவாக்குவது மிகவும் அவசியம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உங்களின் தொலைநோக்கு பார்வையும் அமைக்கப்பட்ட இந்த வீட்டு ப்ளான், கட்டுமான நிபுணர்களுக்கு சரியாக புரிந்ததா என்பதை உறுதி செய்யவும் இது உதவுக்கிறது. மேலும், தவறுகள் மற்றும் தவறான புரிதல்களை குறைக்கிறது. இந்த விரிவான ப்ளான், பட்ஜெட்டை சரியாக நிர்வகிப்பதற்கு உதவுகிறது. ஏனெனில், மெட்டீரியல்கள், லேபர் மற்றும் மற்ற செலவுகளுக்கான கணக்கினை நீங்கள் முன்பே உருவாக்கி வைக்க முடியும். மேலும், அவசியமான அனுமதிகளைப் பெறவும், உள்ளூர் கட்டுமான கோட்பாடுகளை பின்பற்றுவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.

 

 

வீட்டு ப்ளானை எப்படி உருவாக்க வேண்டும் என்பதற்கான 10 டிப்ஸ்கள்

 

1) டிப் 1: தொலைநோக்கு பார்வையுடன் ஆரம்பம் செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டு ப்ளானை வரைய ஆரமிப்பதற்கு முன், உங்களுக்கு என்ன வேண்டுமென்று தெளிவான தொலைநோக்கு பார்வையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைமுறை, தேவைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளுங்கள். எத்தனை ரூம்கள் வேண்டும், அதன் அமைப்புகள் மற்றும் நீங்கள் விரும்பும் சிறப்பு அம்சங்கள் இவை அனைத்தையும் முன்பே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

 

2) டிப் 2: ஆராய்ச்சி செய்தல் மற்றும் இன்ஸ்பிரேஷனை சேகரித்தல்

இன்சிபிரேஷனுக்காக பல்வேறு வீட்டு டிசைன்கள் மற்றும் ஃப்ளோர் ப்ளான்களை பாருங்கள். வீட்டின் மாடல்கள், ஆக்கிடெக்சர் மாகஸின்கள் ஆகியவற்றைப் பாருங்கள். இணையதளத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களின் ஸ்டைல் மற்றும் தேவைகளுடன் ஒத்துப்போகும் ஐடியாக்களை சேகரித்துக் கொள்ளுங்கள்.

 

3) டிப் 3: உங்கள் பட்ஜெட்டை தீர்மானியுங்கள்

உங்கள் பட்ஜெட்டை முன்பே தீர்மானிக்கும் போது, அது உங்களின் டிசைன் தேர்வுக்காக உங்களை வழிநடத்தும். கட்டுமான செலவுகள், மெட்டீரியல்கள், லேபர் மற்றும் கூடுதல் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். தெளிவான பட்ஜெட்டை உருவாக்கிவிட்டால், தேவை இல்லாத செலவுகளை தவிர்க்க முடியும். மற்றும் சில முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்த முடியும்.

 

4) டிப் 4: சரியான ப்ளாட்டை தேர்வு செய்தல்



உங்கள் வீட்டின் கட்டுமான ப்ளானில், பிளாட் அமைந்திருக்கும் இடம் மற்றும் பிளாட்டின் அளவு, முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். பிளாட் ஏரியா, அது அமைந்திருக்கும் இடம் மற்றும் மற்ற வசதிகள் ஆகியவற்றை முன்பே சரி பார்க்க வேண்டும். பிளாட்டின் அளவு உங்கள் ஆசை வீட்டின் அளவு மற்றும் அமைப்புடன் ஒத்துப்போகிறதா என்பதை முன்பே உறுதி செய்து கொள்ளுங்கள்.

 

5) டிப் 5: செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்

அழகாக இருப்பது முக்கியம் தான். ஆனால் செயல்பாட்டினை முன்னிலைப்படுத்துங்கள். நடைமுறைக்கு ஒத்துப்போகக்கூடிய மற்றும் உங்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்யும் இடங்களை நீங்கள் டிசைன் செய்ய வேண்டும். வீட்டு ப்ளானை உருவாக்கும் போது, சேமிப்புகள் மற்றும் உங்களின் அமைப்புகளை அணுகுதல் போன்ற சில காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

 

6) டிப் 6: நிபுணர்களிடம் ஆலோசித்தல்

உங்கள் வீட்டின் ப்ளானை நீங்களே டிசைன் செய்வது மிகவும் சந்தோஷமானதாக இருக்கும். ஆனால், ஆர்கிடெக்ட்கள் மற்றும் டிசைனர்களிடம் கலந்தாலோசிப்பது ஒரு நல்ல புரிதலைக் கொடுக்கும். நிபுணர்கள், உங்களின் ஐடியாக்களை துல்லியமாக்கி, கட்டுமான கோட்பாடுகளுக்கு ஏற்ப உங்களின் வீட்டை அமைக்க உதவுவார்கள்.

 

7) டிப் 7: விரிவான ஃப்ளோர் பிளானை உருவாக்க வேண்டும்.

டிசைன் சாஃப்ட்வேரை பயன்படுத்தியோ அல்லது நிபுணர்களுடன் இணைந்தோ வேலை செய்து, விரிவான ஃப்ளோர் பிளானை உருவாக்க வேண்டும். துல்லியமான அளவீடுகள், ரூம்களின் அமைப்பு, ஃபிக்ஸ்சர்கள் மற்றும் ஃபர்னிச்சர் ஆகியவற்றின் இட அமைப்பு இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கட்டுமான நிபுணர்கள் சரியாக பின்பற்ற இந்த துல்லியமான ப்ளான் மிகவும் அவசியம் ஆகும்.

 

8) டிப் 8: சாம்பிள்களை பெறுங்கள்

உங்கள் வரைப்படங்களை உறுதி செய்த பின்னர், நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த முக்கியமான விஷயம், உங்கள் வீட்டு கட்டுமான பிளானை நிஜமாக்க சரியான மெட்டீரியல்களை தேர்வு செய்வது ஆகும். உங்கள் இடத்திற்கு தேவைப்படும் ஒவ்வொரு பொருளின் சாம்பிளையும் பெற்று கொள்வது மிக சிறந்தது. இவை ஒன்றோடு ஒன்று எப்படி ஒத்துப்போகிறது என்பதையும் பார்க்க வேண்டும். உதாரணமாக, ஒரு ரூமில் ஒரு குறிப்பிட்ட நிறம் வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், லெவல் மற்றும் சூரிய ஒளியின் திசை, ரூமின் பண்புகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் நிறங்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.



9) டிப் 9: தேர்வுகளை முடிவு செய்தல்

ஹார்ட்வுட், டைல்கள், கல் அல்லது கான்கிரீட் போன்ற மெட்டீரியல்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் இவை நீடித்து உழைக்கும் திறன் கொண்டவை மற்றும் பராமரிக்க ஏதுவானவை. உங்கள் தீமிற்கு ஒத்துப்போகும் நிறங்களை தேர்வு செய்யுங்கள் மற்றும் கூடுதல் ஆர்வத்தினை தூண்டும் வகையில் டெக்ஸ்சர்ஸ்களை தேர்வு செய்யுங்கள். உங்கள் டிசைனை மேம்படுத்த, ஃபிக்சர்கஸ், ஹார்ட்வேர் மற்றும் லைட்டிங் போன்றவற்றை தேர்வு செய்யுங்கள். ஃபாசட்கள், கதவின் கைப்பிடிகள் மற்றும் லைட்டின் ஸ்விட்ச்கள் போன்ற சிறு பொருள்களையும் கவனிக்க வேண்டும். உங்கள் தேர்வுகள் அனைத்தும் உங்கள் ஆசைக்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்றப்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்ய இன்டீரியர் டிசைனருடன் வேலை செய்யுங்கள்.

 

10) டிப் 10: மதிப்பாய்வு

உங்கள் வீட்டின் கட்டுமான பிளானை இறுதி செய்வதற்கு முன்பு, நன்றாக மதிப்பாய்வு செய்து கொள்ளுங்கள். தவறுகள், முரண்பாடுகள் மற்றும் கவனிக்கப்படாத விஷயங்கள் ஏதும் உள்ளதா என்பதை சரிபார்க்கவும். உங்களின் ப்ளான் உங்கள் ஆசைகள் மற்றும் தேவைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில், முக்கியமான சில திருத்தங்களை செய்யுங்கள்.

 

 

 

வீட்டின் கட்டுமான பிளானை டிசைன் செய்யும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்.

 

  • சேமிப்பிற்கான பிளானை தவிர்த்தல், இயற்கை ஒளியின் முக்கியத்துவத்தை கவனிக்காமல் தவிர்த்தல், ரூம்களுக்கு இடையிலான ஓட்டங்களை கருத்தில் கொள்ளாமல் தவிர்த்தல் போன்ற பொதுவான தவறுகளை தவிர்க்க வேண்டும்.

 

  • மேலும், எதிர்பாராத செலவுகள் திடீரென்று எழும் என்பதால், உங்கள் பட்ஜெட்டினைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

 

  • நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் போவது அல்லது உள்ளோர் கட்டுமான கோட்பாடுகளை புறக்கணிப்பது போன்ற செயல்கள், அதிக செலவுகள் கொண்ட திருத்தங்கள் மற்றும் தாமதங்கள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.


ஒரு வீட்டு ப்ளானை உருவாக்க சின்ன விவரங்களுக்கும் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தெளிவான தொலைநோக்கு பார்வை மிக அவசியம். அடிப்படைகளை புரிந்து கொள்ளுதல், செயல்பாட்டினை முன்னிலைப்படுத்துதல் மற்றும் நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்தல் ஆகியவை மூலம், உங்களின் விருப்பங்களுக்கு ஏற்ற சிறந்த வீட்டு கட்டுமான ப்ளானை உருவாக்க முடியும். கட்டுமான செயல்பாடுகள் சீராக இருக்க மற்றும் உங்கள் வீடு உங்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றபடி அமைய, பொதுவான சில தவறுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. என் வீட்டிற்கான கட்டுமான ப்ளானை எப்படி உருவாக்குவது?

வீட்டு கட்டுமான ப்ளானை உருவாக்க, தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் ஆரம்பம் செய்ய வேண்டும், இன்ஸ்பிரேஷங்களை பெற வேண்டும், பட்ஜெட்டை நிர்ணயிக்க வேண்டும் மற்றும் சரியான பிளாட்டை தேர்வு செய்ய வேண்டும். செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இயற்கை ஒளிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் மற்றும் நிபுணர்களிடம் ஆலோசிக்க வேண்டும். விரிவான ஃப்ளோர் பிளானை உருவாக்கி அதனை இறுதி செய்வதற்கு முன் நன்றாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

 

2. வீட்டின் கட்டமைப்பை ப்ளான் செய்வது எப்படி?

உங்கள் வீட்டின் ப்ளானை உருவாக்க, உங்கள் வீட்டின் அமைப்பிலிருந்து ப்ளான் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதில், உங்கள் தேவைகளை புரிந்து கொள்ளுதல், அமைப்புகளை உறுதி செய்தல் மற்றும் மெட்டீரியல்களை தேர்வு செய்தல் ஆகியவை அடங்கும். ஆர்கிடெக்ட்கள் அல்லது டிசைனர்களிடம் ஆலோசிப்பதன் மூலம் கட்டுமானம் சரியாக அமைக்கப்பட்டதா, உள்ளோர் கட்டுமான கோட்பாடுகளுடன் அமைக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியும்.

 

3. நீங்கள் ஒரு வீட்டை படிப்படியாக எப்படி கட்டுவீர்கள்?

வீடு கட்டுதலில் பல படிகள் உள்ளன: சைட்டை தயாரித்தல், ஃபவுண்டேஷன் அமைத்தல், ஃப்ரேமிங், ரூஃபிங், இன்சுலேஷன், ட்ரைவால், ஃப்ளோரிங், ஃபினிஷிங் டச்கள் மற்றும் இறுதி ஆய்வு ஆகியவை அடங்கும்.

 

4. எனது ஹவுஸ் பிளானை நானே டிசைன் செய்ய முடியுமா?

டிசைனிங் சாஃப்ட்வேரை பயன்படுத்தி அல்லது நிபுணர்களுடன் சேர்ந்து வேலை செய்வதன் மூலம், நீங்களே உங்களின் ஹவுஸ் பிளானை உருவாக்க முடியும். உங்களின் ப்ளான் விரிவாக, செயல்படுத்தக்கூடியதாக மற்றும் உள்ளூர் கட்டுமான கோட்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....