வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



எந்த திசையை நோக்கி வீடு இருப்பது நல்லது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டிற்கான சரியான திசையை நீங்கள் தேர்வு செய்வது, உங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்க வீடு இருக்கும் திசை, சூரிய ஒளி, காற்றோட்டம், ஏன் உங்கள் அதிஷ்டம், வாஸ்து சாஸ்திரம் கோட்பாடுகளின்படி உங்களின் நல வாழ்வு அனைத்தையும் பாதிக்கும். வீட்டின் திசை எந்த பக்கம் இருக்க வேண்டும் என்பது ஏன் அவசியம் மற்றும் எந்த திசையில் வீட்டை அமைப்பது சிறந்தது என்பதை இந்த வலைப்பதிவு தெளிவாக விளக்குகிறது.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • உங்கள் வீட்டின் திசை உங்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்க கூடியதாகும்.

     

  • உங்கள் வீடு எந்த திசையை நோக்கி இருக்கிறது என்பதை அறிய உங்கள் ஃபோனில் இருக்கும் காம்பஸ் ஆப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.

     

  • வாஸ்து சாஸ்திரம் படி, வெவ்வேறு திசைகள் வெவ்வேறு நன்மைகளை அளிக்கும்.

     

  • உங்கள் வீட்டில் எனர்ஜி ஓட்டம் சீராக இருக்க, தலைவாசலின் திசை மிகவும் முக்கியம் ஆகும்.

     

  • குறிப்பிட்ட திசையை நோக்கி அமைப்பதன் மூலம், உங்கள் வீட்டின் ஒவ்வொரு ரூமிற்கும் சிறந்த பலன் கிடைக்கும்.



வீடு கட்டப்படும் திசையின் முக்கியத்துவம்

உங்கள் வீட்டின் திசை உங்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்க கூடியதாகும். நீங்கள் எவ்வளவு சூரிய ஒளியைப் பெற வேண்டும், உங்கள் வீடு எந்தளவு குளிராக, வெதுவெதுப்பாக இருக்க வேண்டும், நீங்கள் உடல் ரீதியாக மன ரீதியாக எப்படி உணர வேண்டும் இவை அனைத்திலும் இந்த வீட்டின் திசை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எந்த திசையை நோக்கி இருக்கும் வீடு சிறந்தது? இந்திய பாரம்பரியமான வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்னவென்றால், உங்கள் வீட்டின் திசை உங்கள் உடல் ஆரோக்கியம், செல்வ வளம், நிம்மதி ஆகியவற்றை பாதிக்க கூடியதாகும். ஃபெங் ஷுய் (Feng Shui), இது ஒரு சீன பயிற்சி முறை ஆகும். இதன் நம்பிக்கை என்னவென்றால், சமநிலையான சந்தோஷமான வீட்டை உருவாக்க வீட்டின் திசை மிகவும் அவசியம் என்பதாகும். அதனால், வீட்டிற்கு எந்த திசை சரியானது என்பதை தெரிந்துக் கொண்டால், சரியான திசையை தேர்வு செய்து நல்ல வீட்டை கட்ட இது உதவியாக இருக்கும்.

 

Which House Facing is Good | UltraTech

வீட்டின் திசையை எவ்வாறு கண்டறிவது?

உங்கள் வீட்டின் திசையை கண்டறிவது மிகவும் எளிதானது. வீட்டின் தலை வாசலின் பக்கத்தில் நின்று, வெளியே நோக்கிப் பாருங்கள். நீங்கள் எந்த திசையை நோக்கி நிற்கிறீர்களோ, அதுவே உங்கள் வீட்டிற்கான திசை. இன்னும் தெளிவாக அறிய, உங்கள் ஃபோனில் உள்ள கம்பாஸ் (Compass) செயலியை பயன்படுத்தலாம்.

 

  • ஃபோன் மூலம் வீட்டு திசையை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?
    ஃபோனில் உள்ள காம்பஸ் செயலியை பயன்படுத்தி உங்கள் வீடு எந்த திசையை நோக்கி உள்ளது என்பதை எளிதாக தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலான ஃபோன்களில் காம்பஸ் ஆப் இருக்கும். இதை எப்படி செய்து என்று கீழே கூறப்பட்டுள்ளது.

     

    1. உங்கள் ஃபோனில் இருக்கும் காம்பஸ் ஆப்பை திறக்கவும்.

 

    2. வீட்டின் தலைவாசலின் அருகில் நின்று , வெளியே நோக்கி பாருங்கள்.

 

    3. உங்கள் ஃபோனை நேராக பிடித்து அதில் காட்டும் திசையை கவனித்துக் கொள்ளுங்கள்.


வீட்டிற்கான சிறந்த திசை எது?



வாஸ்து சாஸ்திரம் படி, வீடு கிழக்கு திசையை நோக்கி இருப்பதே சிறந்தது. இதுவே பாசிடிவ் எனர்ஜி மற்றும் சிறந்த உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். வடக்கை நோக்கி இருக்கும் வீடுகளும் நல்லதே, இதுவும் செல்வ வளம் மற்றும் வேலை வாய்ப்பைக் கொடுக்கும். எந்த திசை வீட்டிற்கான சிறந்த திசை என்பதை தெரிந்துக் கொண்டால், பாசிடிவ் எனர்ஜியை ஈர்த்து, சந்தோஷமான வீட்டை உருவாக்க முடியும். தெற்கு மற்றும் மேற்கை நோக்கி இருக்கும் வீடுகளை கெட்ட பாதிப்பிலிருந்து பாதுகாக்க சிறந்த வழிகாட்டுதல் தேவை. மேலும், உங்களின் தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

 

 

தலை வாசல் திசைகளுக்கான முக்கியத்துவம்



வீட்டிற்கு தலைவாசல் மிகவும் அவசியம். செல்வ வளம் மற்றும் நலத்திற்கான கதவே இது தான். வீட்டின் தலைவாசல் இருக்கும் திசை, உங்கள் வீட்டினுள் இருக்கும் எனர்ஜி ஓட்டத்தினை பாதிக்கும். வீட்டிற்கு எந்த திசை சிறந்தது என்பதை அறிந்து கொண்டால், சிறந்த இடத்தில் தலை வாசலை வைக்க இது உதவியாக இருக்கும்.

 

 

தலைவாசலுக்கான திசைகளில் நீங்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை

 

செய்ய வேண்டியவை:

  • உங்கள் வீட்டின் தலை வாசல் கதவு மிக பெரியதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

     

  • தலை வாசலை குப்பையின்றி சுத்தமாக வைக்க வேண்டும்.

     

  • தலைவாசலை நல்ல அறிகுறிகள் மற்றும் செடிகளைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

 

செய்யக் கூடாதவை:

  • தலைவாசலுக்கு நேரடி எதிராக கண்ணாடியை வைக்க வேண்டாம்.

     

  • தலைவாசலை சுற்றி இருக்கும் இடங்களை குப்பையாக வைக்க வேண்டாம்.

     

  • மற்ற வீட்டின் தலைவாசலை நோக்கி வீட்டின் தலைவாசல் இருக்க கூடாது.


வீட்டின் வெவ்வேறு ரூம்க்ளுக்கான டிப்ஸ்

அதிக பாசிடிவ் எனர்ஜியை ஈர்க்கும் வகையில் உங்கள் வீட்டின் ஒவ்வொரு ரூமும் அமைக்கப்பட வேண்டும். வீட்டிற்கு எந்த திசை சரியானது என்பதை தெரிந்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு ரூமையும் சரியான இடத்தில் அமைக்க முடியும்.

 

  • வீட்டின் மாஸ்டர் பெட்ரூமிற்கான திசைகள்



மாஸ்டர் பெட்ரூம் தென்மேற்கு (Southwest) திசையில் இருக்க வேண்டும். இது உறுதியான உறவுகள் மற்றும் வாழ்க்கையில் நிலைத்தன்மையை தரும்.

 

  • வீட்டின் குழைந்தைகள் பெட்ரூமிற்கான திசைகள்



குழைந்தகளின் பெட்ரூம் மேற்கு அல்லது வடமேற்கு (West / Northwest) திசையில் இருக்க வேண்டும். இது படைப்பாற்றல் மற்றும் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

 

  • வீட்டின் லிவிங் ரூமிற்கான திசைகள்



லிவிங் ரூமை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு (North, East, or Northeast) திசையில் அமைப்பது சிறந்தது. இவை பாசிடிவிட்டி மற்றும்குடும்பச் சமநிலையும் தரும்.

 

  • வீட்டின் கிச்சனிற்கான திசைகள்



கிச்சனிற்கு தெற்ககிழக்கு (Southeast) திசையே சிறந்தது. இது அக்னி கூறுடன் ( fire element) பொருந்துவதால் வாஸ்து சாஸ்திரத்திற்கு ஏற்றதாகும்.

 

  • வீட்டின் டைனிங் ரூமிற்கான திசைகள்

    டைனிங் ரூம் மேற்கு அல்லது கிழக்கு (West / East) திசையில் இருக்க வேண்டும். இது ஆரோக்கியம் மற்றும் செழிப்பைத் தரும்.

     

  • வீட்டின் பூஜை ரூமிற்கான திசைகள்



பூஜை ரூமிற்கு, வடகிழக்கு (Northeast) மூலையே மிகவும் சிறந்த இடம். இது ஆன்மிக வளர்ச்சி மற்றும் அமைதியை கொண்டுவரும்.

 

  • வீட்டின் பாத்ரூமிற்கான திசைகள்

    பாத்ரூம்களை மேற்கு அல்லது வடமேற்கு (West / Northwest) திசையில் அமைப்பது நல்லது. இது நெகடிவ் எனர்ஜிகளை சமநிலைப்படுத்தும்.



வீட்டின் திசையின் முக்கியத்துவங்களை புரிந்துகொள்வதன் மூலம், வீட்டின் வாழ்க்கையை அழகாக முன்னேற்ற முடியும். புது வீடு வாங்குவதாக இருந்தாலும் சரி, பழைய வீட்டை சரி செய்வதாக இருந்தாலும் சரி, இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதால், சந்தோஷமான சமநிலையான வீட்டை உருவாக்க முடியும். ஒவ்வொரு ரூம் மற்றும் தலைவாசலை சிறந்த இடத்தில் அமைக்கும் பொழுது, பாசிடிவ் எனர்ஜியின் ஓட்டம் சீராக இருக்கும். வீட்டை அமைப்பதற்கான சரியான திசை என்பதை தெரிந்துக் கொள்வது மிகவும் நல்லது.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. வீட்டிற்கான சிறந்த திசை எது?

கிழக்கு திசை நோக்கிய வீடு சிறந்தததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் காலை நேர சூரிய ஒளி வீடு முழுவதும் நுழைந்து பாசிடிவ் எனர்ஜி, ஆரோக்கியம், மற்றும் நிம்மதியான வாழ்க்கையை கொண்டு வரும். இந்த திசை பாரம்பரியமாக செழிப்பு, நல்வாழ்வு, மற்றும் ஒற்றுமையை குறிக்கிறது. பல்வேறு வீடு கட்டுமானங்களிலும் கலாச்சாரங்களிலும், பிரபலமான தேர்வாக இந்த திசை இருக்கிறது.

 

2. எந்த திசையை நோக்கி இருக்கும் வீடு அதிர்ஷ்டம் தரும்?

வடக்கு நோக்கிய வீடுகள் பொதுவாக அதிர்ஷ்டம் தரும் எனக் கருதப்படுகின்றன. ஏனெனில், இவை செல்வசெழிப்பையும், தொழில்வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் ஈர்க்க கூடியதாகும். இந்த திசை நிதிநிலையில் வெற்றி மற்றும் நிலைத்தன்மையை கொடுத்து, செல்வ செழிப்பான வாழ்க்கை மற்றும் தொழிலில் வெற்றியை கொடுக்கிறது.

 

3. எந்த திசை நோக்கி வீடு இருப்பது நல்லதல்ல?

தெற்கு மற்றும் மேற்கு நோக்கிய வீடுகள் பொதுவாக குறைவான நன்மை தரும் திசைகளாக பார்க்கப்படுகின்றன. ஏனெனில் அவை சவால்கள் அல்லது நெகடிவ் எனர்ஜியை கொண்டு வரலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால், சரியான ஆர்கிடெக்சுரல் டிசைன் மற்றும் சில வழிகாட்டுதல்களுடன், இந்த திசைகளில் உள்ள வீடுகளையும் நன்மை தரும் சுபிக்ஷமான வாசஸ்தலமாக மாற்ற முடியும். இது சமநிலையையும் பாசிட்டிவான வாழ்வாதார சூழலையும் வழங்கும்.

 

4. வீட்டின் தலை வாசல் எந்த திசையில் இருக்க வேண்டும்?

வீட்டின் தலைவாசல், கிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைக்கப்படுவது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த திசை நல்ல எனர்ஜி ஓட்டம் மற்றும் செல்வ செழிப்பை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. இந்த திசைகளில் தலைவாசல் இருந்தால் வீட்டினுள் பாசிடிவிட்டி வெற்றி மற்றும் செழிப்பான சூழலை ஈர்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு நலனளிக்க முடியும்.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....