M7.5 கான்கிரீட், அதிக வலிமை தேவைப்படாத ஒரு மெல்லிய வகை கான்கிரீட். ஆனால் வலிமையான நிலையான பேஸ்(base) முக்கியமான இடங்களில் பயன்படுகிறது. இது பொதுவாக எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது இங்கே கூறப்பட்டுள்ளது:
1. நடைபாதை (பாவிங்) மற்றும் தள அமைப்பு (ஃப்ளோரிங்)
நடைபாதைகள் மற்றும் ஃப்ளோர்களில் திடமான பேஸ் லேயரை (அடுக்கு) அமைக்க M7.5 விகிதம் சிறந்தது. மிகவும் வலிமையாக இருக்க தேவையில்லாமல் இது மேல் லேயரை ஆதரிக்கிறது.
2. லெவெல்லிங்
நீங்கள் ஃபவுண்டேஷன்கள் போன்றவற்றை கட்டுவதற்கு முன் தரையை லெவெல்லிங் செய்வதற்கும் இந்த கலவை நல்லது. இது அடுத்தடுத்த கட்டுமானத்திற்கு தயாராவதற்காக சீரான மேற்பரப்பை உருவாக்க உதவுகிறது.
3. கட்டமைப்பு இல்லாத கூறுகள்
கட்டிட சுவர்கள் மற்றும் அதிக லோடை தாங்க தேவையில்லாத மற்ற பகுதிகளில் M7.5 கான்கிரீட் நன்றாக வேலை செய்கிறது.
4. தற்காலிக கட்டமைப்புகள்
இது சூப்பர் ஸ்ட்ராங்காக(வலிமை) இல்லாத காரணத்தால் M7.5 விகிதம் நீடித்து நிற்க தேவையில்லாத தற்காலிக கட்டமைப்புகள் அல்லது ஃபார்ம் வொர்க்குகளுக்கும் கூட நல்லது.
பெரிய பிராஜெக்ட்களுக்கு மொத்த கான்கிரீட் தொகுதிகளும் ( பேட்ஜ்) சமமான தரம் மற்றும் வலிமையில் உள்ளதா என்று உறுதிப்படுத்த 1 கன மீட்டருக்கான M7.5 கலவை விகிதத்தை தெரிந்துக் கொள்வது முக்கியம்.
M7.5 கான்கிரீட்டானது எவ்வளவு வலிமையானது மற்றும் நீடித்து உழைக்கக் கூடியது?