தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்வீடு கட்டும் போது பின்பற்ற வேண்டிய எளிய வாஸ்து குறிப்புகள்

வீட்டிற்கான வாஸ்து குறிப்புகளானது உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்கும் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியைக் கொண்டுவருவதில் உதவுகிறது.

Share:


வீட்டிற்கு மகிழ்ச்சியையும் வெற்றியையும் கொண்டுவர இந்த எளிமையான வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றவும்.

 

நீங்கள் ஒரு புது வீட்டிற்கு மாறுகிறீர்கள் மற்றும் அதை நீங்களாகவோ அல்லது ஒரு இண்டீரியர் டிசைனரின் உதவியுடனோ வடிவமைக்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், வீட்டின் வாஸ்துவைச் சரிபார்க்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. வீட்டிற்கான வாஸ்து சாஸ்திரம் அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் உள்ளது, மேலும் இது வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் லேயவுட்டின் கோட்பாட்டை விவரிக்கிறது. ஒரு வீடு நேர்மறை ஆற்றலைப் பரப்பி எதிர்மறை ஆற்றலைத் தள்ளி வைப்பதற்கு, வீட்டிற்கான வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

நேர்மறை ஆற்றலையும் நல்ல அதிர்வுகளையும் அதிகரிப்பதில் வாஸ்துவின் அறிவியல் மற்றும் நம் வீடுகளின் வடிவமைப்புக்கு இடையில் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வது கட்டாயமாகும். வீட்டிற்குப் பல்வேறு வாஸ்து குறிப்புகள் உள்ளன, அவை உங்களுக்கு அன்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதிப்படுத்த உங்கள் வீட்டில் சேர்க்கப்பட வேண்டும். இதோ சில அம்சங்கள்:


மனை தேர்வு:

 

 • வீட்டின் நேர்மறை ஆற்றலில் வீட்டிற்கான வாஸ்து திசை ஒரு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. குடியிருப்புக்காக ஒரு மனையை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், மனையின் வாஸ்துவைப் பின்பற்றி அதன்படி விஷயங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வது நல்லது. மனையின் திசையமைப்பு, மண் வகை, மனையின் வடிவம் போன்ற சிறிய விவரங்கள் மற்றும் பலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.வீதி சூலங்கள்:

வீதி சூலம் என்பதை மனையில் வந்து சாலை முடியும் நிலை ஆகும். சில வீதி சூலங்கள் நேர்மறை ஆற்றலையும் மற்றவை எதிர்மறை ஆற்றலையும் கொண்டுவருகின்றன. வடகிழக்கின் வடக்கே, வடகிழக்கின் கிழக்கே உள்ள வீதி சூலங்கள் நல்லது எனக் கருதப்படுகின்றன, அதேசமயம், தென்கிழக்கின் தெற்கே, வடமேற்கின் மேற்கே உள்ளவை நடுத்தரமானவையாகக் கருதப்படுகிறது.நீர் வளங்கள்:

 

 • வீட்டு வாஸ்துவைக் கருத்தில் கொள்ளும்போது, நீர் வளங்கள் நாம் பார்க்க வேண்டிய மற்றொரு அம்சமாகும். தொட்டிகள், கிணறுகள் அல்லது மற்ற எதாவது தண்ணீர் வளங்களுக்கு வடகிழக்கு திசை சிறந்த திசை ஆகும். வீடுகளில் வடக்கு திசை மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது, அதனால் அதைக் காலியாக விட வேண்டும். காலியான இடத்தில் தண்ணீர் தொட்டிகளை வைக்க முடியும், அது நேர்மறை ஆற்றலைத் தரும்.


வீட்டின் நுழைவாயிலுக்கான வாஸ்து

 

 • மெயின் டோரின் வாஸ்து மிகவும் முக்கியமான அம்சமாகும், ஏனெனில் அதுதான் உங்கள் வீட்டின் நுழைவாயில். பிரதானக் கதவு எப்போதும் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். பிரதானக் கதவு உயர்தரமான மரத்தால் கட்டமைக்கப்பட வேண்டும். அது மிகவும் கவர்ச்சிகரமானதாக தோற்றமளிக்க வேண்டும். பிரதான நுழைவாயிலுக்கு வெளியே எதாவது ஃபவுண்டன்கள், அல்லது மற்ற எதாவது நீர் அலங்கார அமைப்புகளையோ வைப்பதைத் தவிர்க்கவும்.


லிவிங் ரூம்:

 

 • ஒரு வீட்டில் பெரும்பாலான செயல்பாடுகள் லிவிங் ரூமில்தான் நடைபெறும். இது உங்கள் வீட்டைக் குறித்த முதல் எண்ணத்தை ஏற்படுத்துகிறது, அதனால் அது நேர்த்தியாக இருப்பதை உறுதி செய்யவும். அது கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கை நோக்கி இருக்க வேண்டும். எடை அதிகமான ஃபர்னிச்சர்களை லிவிங் ரூமின் மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.

   

இதையும் படியுங்கள் : லிவிங் ரூமிற்கான வாஸ்து குறிப்புகள்


மாஸ்டர் பெட்ரூம் :

 

வழக்கமாக, தென்மேற்கு திசையில் உள்ள படுக்கையறை நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் உறுதி செய்கிறது. படுக்கையைப் படுக்கையறையின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். படைக்கு முன்னால் கண்ணாடி அல்லது தொலைக்காட்சியை வைப்பதைத் தவிர்க்கவும்.

 

இதையும் படியுங்கள் : உங்கள் பெட்ரூமிற்கான டாப் 5 அத்தியாவசிய குறிப்புகள் வாஸ்து குறிப்புகள்


குழந்தைகளின் அறை/விருந்தினர் அறை:

 

 • குழந்தையின் அறை வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும், ஏனெனில், அது அறிவுத்திறன், வலிமை மற்றும் சக்தியின் தரத்தை உறுதி செய்கிறது. அதே திசையில் படுக்கையையும் வைப்பது குழந்தை எதிர்மறை ஆற்றலைப் பெறுவதை உறுதி செய்கிறது.

சமையலறை:

 

 • சமையலறைக்குத் தென்கிழக்கு திசை ஏற்றதாகக் கருதப்படுகிறது. சுவர்களுக்கு மஞ்சள், பிங்க், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் கருப்பு போன்ற ப்ரைட்டான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும். அடுப்பைத் தென்கிழக்கு திசையில் வைப்பதை உறுதி செய்யவும்.

   

இதையும் படியுங்கள் : சமையலறையை வடிவமைப்பதற்கான எளிமையான வாஸ்து குறிப்புகள்


டைனிங் ரூம்:

 

 • வழக்கமாக, ஒருவர் கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையை நோக்கி உணவு உண்ண வேண்டும். தினமும் தெற்கு திசையை நோக்கி உணவு உண்பது உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். டைனிங் டேபிள் சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும், வட்டமாக அல்லது மற்ற எதாவது சீரற்ற வடிவத்தில் இருக்கக் கூடாது.


பூஜை அறை:

 

 • பூஜை அறைக்குக் கிழக்கு அல்லது வடகிழக்கு திசை ஏற்றதாகும். ஒரு புனிதமான பீடத்தை உருவாக்கி, அதில் மெழுகுவர்த்திகள் அல்லது ஊதுபத்திகளால் அலங்கரிக்கவும். வெள்ளை, பீச், வெளிரிய மஞ்சள் அல்லது பச்சை உள்ளிட்டவை சுவர்களுக்கான சிறந்த வண்ணத் தேர்வுகளாகும்.

   

இதையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க 6 வழிகள்


குளியலறை/கழிவறைகள்:

 

 • வாஸ்துவின்படி, வாஷ்பேசின் மற்றும் ஷவர் உள்ளிட்டவை குளியலறையின் கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசை குளியலறை மற்றும் கழிவறையில் தண்ணீர் அவுட்லெட்கள் மற்றும் டிரைனேஜின் சரியான வாஸ்து திசை ஆகும்.


பால்கனிகள்:

 

 • வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் பால்கனிகளைக் கட்டமைக்க வேண்டும். தென்மேற்கு அல்லது தெற்கு திசையில் பால்கனியுடன் இருக்கும் வீட்டை ஒருவர் தவிர்க்க வேண்டும்.
உங்களின் வீடானது மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தால் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வீட்டிற்கான வாஸ்து குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.தொடர்புடைய கட்டுரைகள்
பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்

  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....