வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



ஸ்டெப்டு ஃபூட்டிங் ஃபவுண்டேஷன்கள் (Stepped Footing Foundation) பற்றிய விரிவான வழிகாட்டி

ஸ்டெப்டு ஃபூட்டிங்கள் கட்டுமானத்தில் மிகவும் அவசியமானவை ஆகும். இது சாய்வான நிலம் மற்றும் சமமற்ற நிலத்திற்கு வலுவான ஆதரவை வழங்குகின்றன. இதன் பலன்கள், வகைகள் மற்றும் கட்டுமான செயல்முறையை இந்த வழிகாட்டியின் மூலம் கற்றுக் கொள்ளுங்கள்.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • ஸ்டெப்டு ஃபூட்டிங்குகள், சாய்வான அல்லது சமமற்ற நிலப்பரப்புகளுக்கு நிலைத்தன்மையை வழங்குகிறது.

     

  • இவை சமமற்ற நில அமர்வுகளை தவிர்த்து, கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் குறைக்கின்றன.

     

  • ஸ்டெப்டு ஃபூட்டிங்குகள் பல்வேறு கிரவுண்ட் லேவல்களில், கட்டிடத்தின் லோடை சரிசமமாக பகிர்கின்றன.

     

  • மற்ற கிரவுண்ட் லெவல்லிங் முறைகளை விட இந்த ஃபூட்டிங்கள் விலை குறைவானவையாக இருக்கின்றன.

     

  • சைட்டை மதிப்பிடுதல், கவனமாக திட்டமிடல், குழி தோண்டுதல், ரீஇன்ஃபோர்ஸ்மண்ட் மற்றும் கியூரிங் செய்தல் ஆகியவை இதன் கட்டுமான செயல்முறைகள் ஆகும்.

     

  • ஸ்டெப்டு ஃபூட்டிங் ஃபவுண்டேஷன்கள், வீடுகள் முதல் வணிகக் கட்டிடங்கள் வரை பல்வேறு கட்டுமான பிராஜெக்ட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

     

  • கான்கிரீட்டை சரியாக கியூரிங் செய்வது மிகவும் அவசியம். இது தான் ஸ்டெப்டு ஃபூட்டிங்குகளுக்கு வலிமையையும் நீடித்து உழைக்கும் திறனையும் கொடுக்கும்.



சமமற்ற நிலப்பரப்பில் திடமான ஃபவுண்டேஷனை கட்டமைக்க இந்த ஸ்டெப்டு ஃபூட்டிங் ஃபவுண்டேஷன்கள் மிகவும் அவசியம் ஆகும். ஸ்டெப்டு ஃபவுண்டேஷன் டீட்டெயில்கள், சமமற்ற அமர்வுகளை தவிர்க்க இதன் பங்கு, மற்றும் கட்டிட ஒருங்கிணைப்பிற்கு இதன் பங்கு ஆகியவற்றை இந்த வலைப்பதிவு உள்ளடக்கியுள்ளது. இவற்றை நாம் புரிந்து கொண்டால், கட்டிடங்களுக்கு நீடித்து உழைக்கும் திறனை அளிக்கும் திடமான ஃபவுண்டேஷன்களை உருவாக்க முடியும்.

 

 


ஸ்டெப்டு ஃபூட்டிங் என்றால் என்ன?

கிரவுண்ட் லெவல் மாறுபாடிற்கு ஏற்றதாக அமைக்கப்பட்ட சிறப்பான ஃபவுண்டேஷன்கள் தான் இந்த ஸ்டெப்து ஃபூட்டிங்கள். இவை பல்வேரி ஸ்டெப்ஸ்கள் கொண்டு கட்டமைக்கப்படும். இதனால் சமமற்ற அல்லது சாய்வான நிலப்பரப்பில் திடமான ஃபவுண்டேஷனை உருவாக்க முடியும். சவாலான நிலப்பரப்புகளில் கட்டிடங்களின் ஒருங்கிணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய இந்த ஸ்டெப் ஃபூட்டிங் டிசைன் மிகவும் அவசியம் ஆகும்.



ஸ்டெப்டு ஃபூட்டிங் டீட்டெயில் ஏன் அவசியம்?

ஸ்டெப்டு ஃபூட்டிங் டீட்டெயில்கள் கட்டுமானத்தின் பல்வேறு காரணிகளுக்கு அவசியமாகும். இந்த ஃபவுண்டேஷன் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா, லெவல் செய்யப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்வார்கள். ஏனெனில், சீரற்ற அமர்வுகளை தவிர்த்தால் கட்டமைப்பு பாதிப்படையக்கூடும். ஸ்டெப்டு ஃபூட்டிங்களை டீட்டெயில்டாக ப்ளான் செய்வது, சீரற்ற நிலப்பரப்பின் லோடை சீராக பகிர உதவுகிறது. இதனால் கட்டிடத்தின் நிலைத்தன்மை சிறப்பாக பராமரிக்கப்படும்.

 

 

ஸ்டெப்டு ஃபூட்டிங்கின் பலன்கள்

 

1) சாய்வான நிலப்பரப்பில் நிலைத்தன்மையை கொடுக்கும்

ஸ்டெப்டு ஃபூட்டிங்கள் சாய்வான நிலம் அல்லது சமமற்ற நிலத்திற்கு நிலையான ஃபவுண்டேஷனை கொடுக்கும். இதனால் கட்டிடம் லெவலாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். கட்டிடத்தை நேரடியாக சாய்மானத்தில் (slope) கட்டும்போது, கட்டிடம் நகரவோ அல்லது ஒரு பக்கமாக அமரவோ வாய்ப்புகள் உள்ளது. இந்த பிரச்சனைகளை ஸ்டெப்டு ஃபூட்டிங்கள் தவிர்க்கின்றன.

 

2) குறைவான செலவு

கிரவுண்ட் லெவல்லிங்கின் மற்ற முறைககளான பெரிய அளவில் தோண்டப்படும் குழி (extensive excavation) அல்லது மண் நிரப்புதல் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஸ்டெப்டு ஃபூட்டிங்களுக்கான செலவு மிக குறைவாகவே இருக்கின்றன. இது குறைந்த மெட்டீரியல் மற்றும் குறைந்த லேபரை பயன்படுத்துவதால், கட்டிட அமைப்பாளர்களுக்கு இது மலிவான முறையாக அமைகிறது.

 

3) சமமான லோட் பகிர்வு

நிலத்தின் சாய்மானத்தை நாம் பின்பற்றும்போது, ஸ்டெப்டு ஃபூட்டிங்கள் ஃபவுண்டேஷன் முழுவதிலும் கட்டிடத்தின் எடையை சரிசமமாக பகிர உதவுகின்றன. இது லோட்கள் சமமாக பகிராமல் போவதால் ஏற்படும் விரிசல்கள் அல்லது சமமற்ற அமர்வு போன்ற பாதிப்பு அபாயங்கள் எதுவும் கட்டமைப்புகளுக்கு வராமல் தவிர்க்கின்றது.

 

4) பல்துறை பயன்பாடு

ஸ்டெப்டு ஃபூட்டிங்கள், சிறு வீடுகளிலிருந்து பெரிய வணிக கட்டிடங்கள் வரை, பல்வேறு கட்டுமான பிராஜெக்ட்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ஃப்ளாட்டான நிலம் குறைவாக இருக்கும் குன்றுகள் மற்றும் மலைப்பகுதிகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

 

 

ஸ்டெப்டு ஃபூட்டிங்கின் கட்டுமானம்

 

1) சைட்டை மதிப்பிடுதல்

சைட்டின் மண்ணின் வகை மற்றும் எடை தாங்கும் தன்மை ஆகியவற்றை மதிப்பிடுவதன் மூலம் இதன் கட்டமைப்பை ஆரம்பிக்க வேண்டும். கட்டுமானத்தை பாதிக்கும் காரணிகளை முன்பே கண்டறிய வேண்டும்.

 

2) திட்டமிடல்

டீட்டெயிலான டிசைன் பிளானை உருவாக்க வேண்டும். இதில் ஸ்டெப்டு ஃபூட்டிங் ரீஇன்போர்ஸ்மண்ட் டீட்டெயில்கள் மற்றும் டைமன்ஷங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இந்த ப்ளான் உள்ளூர் கட்டுமான கோட்பாடுகள் மற்றும் இஞ்சினியரிங் தரங்களுக்கு எற்றதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

3) குழி தோண்டுதல்



டிசைனின் படி சைட்டில் குழி தோண்ட வேண்டும். லேஅவுட்டை குறிக்க வேண்டும் மற்றும் நீளமான படிக்கட்டுகள் அல்லது டெர்ரேஸ்களை உருவாக்க வேண்டும். ஃபார்ம்வொர்க்கை இன்ஸ்டால் செய்வதற்கு ஏற்றபடி குழி தோண்டப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

 

4) ஃபார்ம்வொர்க்கை இன்ஸ்டால் செய்தல்



கான்கிரீட்டை சரியாக வடிவமைக்க ஃபார்ம்வொர்க்கை இன்ஸ்டால் செய்ய வேண்டும். திடமான மெட்டீரியல்களை பயன்படுத்தி, ஃபார்ம்வொர்க்கை சரியாக அமைக்க வேண்டும். அதனை எளிமையாக அகற்ற ரிலீஸ் ஏஜண்டை பயன்படுத்த வேண்டும்.

 

5) ஸ்டீல் ரீஇன்ஃபோர்ஸ்மண்ட்கள்



ஸ்டெப்டு ஃபவுண்டேஷனின் டிசைன் குறிப்புகளுக்கு ஏற்ப ரீஇன்ஃபோர்ஸ்மண்ட் பார்களை ஃபார்ம்வொர்க்கினுள் வைக்க வேண்டும். சரியான இடைவெளி விட்டு மற்றும் இடைவெளிகளை சரியாக நிரப்பி, ஒருங்கிணைப்பை இணைத்து தொடர் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

 

6) கான்கிரீட்டை ஊற்றுதல்



கான்கிரீட்டை நன்கு கலக்கி ஃபார்ம்வொர்க்கினுள் ஊற்ற வேண்டும். கடைசி ஸ்டெப்பில் இருந்து ஆரம்பித்து மேல் ஸ்டெப் வரை ஊற்ற வேண்டும். கான்கிரீட்டை காம்பேக்ட் செய்ய வைப்ரேட்டரை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஸ்டெப்பையும் சரிசமமாக மற்றும் லெவலாக நிரப்ப வேண்டும்.

 

7) கியூரிங் செய்தல்



கியூரிங் செய்யும்போது கான்கிரீட்டை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். இது வேகமாக காய்வதை குறைத்து கான்கிரீட்டின் பலத்தினை அதிகரிக்கும். ஈரமான பர்லேப்பால் (burlap) அவற்றை மூடி, குறைந்தது ஏழு நாட்கள் கியூரிங் செய்ய வேண்டும். இதனால் கான்கிரீட் கனமாகி அதிக வலிமையை அடையும்.

 

8) இறுதி ஆய்வு

கியூரிங் முடித்த பிறகு, ஃபார்ம்வொர்க்கை அகற்ற வேண்டும். ஃபூட்டிங்களில் ஏதேனும் சேதம் இருக்கிறதா என்பதை சரிபார்த்து, சேதங்களை சரி செய்ய வேண்டும். ஃபூட்டிங்கள் தேவையான தரநிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய இறுதி ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.



சமமற்ற நிலப்பரப்பில் கட்டப்படும் கட்டமைப்புகள் நிலைத்தன்மையுடன் திடமாக இருக்க இந்த ஸ்டெப்டு ஃபூட்டிங் ஃபவுண்டேஷன்கள் மிகவும் அவசியம் ஆகும். இந்த ஸ்டெப்டு ஃபூட்டிங்களின் முக்கியத்துவம், பலன்கள், மற்றும் கட்டுமான செயல்முறைகளை புரிந்து கொண்டால், கட்டிடங்களுக்கு நீடித்த உழைக்கும் திறனை கொடுக்கும் திடமான ஃபவுண்டேஷன்களை கட்டிட அமைப்பாளர்களால் உருவாக்க முடியும்.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. ஸ்டெப் ஃபூட்டிங் ஃபவுண்டேஷனின் அதிகபட்ச உயரம் என்ன?

கட்டிட கோட்பாடுகள் மற்றும் இஞ்சினியரிங் குறிப்புகளை பொறுத்து ஸ்டெப் ஃபூட்டிங்களின் அதிகபட்ச உயரம் மாறுபடும். பொதுவாக ஒவ்வொரு ஸ்டெப்பும் 600 மி. மீ அளவில் இருக்க வேண்டும். இது கட்டுமானத்திற்கு நிலைத்தன்மையை வழங்கும்.

 

2. ஸ்டெப் ஃபூட்டிங் அமைப்பதற்கான காரணம் என்ன?

கிரவுண்ட் லெவலில் மாறுபாடுகள் இருந்தால் அதனை இந்த ஸ்டெப் ஃபூட்டிங்கள் சரி செய்து கொள்ளும். சமமற்ற நிலப்பரப்பிலும் நிலையான ஃபவுண்டேஷனை வழங்கும். எந்த பாதிப்பும் ஏற்படாதபடி, கட்டமைப்பின் லோடை சரிசமமாக பகிர இவை பெரிதும் உதவுகின்றன.

 

3. ஸ்டப்டு ஸ்ப்ரெட் ஃபூட்டிங் என்றால் என்ன?

பரந்த இடத்தில் லோடை சரிசமமாக பகிர, நிலைத்தன்மையை அதிகரிக்க இந்த ஸ்டப்டு ஸ்ப்ரெட் ஃபூட்டிங்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளன. இந்த டிசைன், குறைவான எடையை தாங்கும் மண்ணிற்கு உதவியாக இருக்கும். மேலும், லோடை சரிசமமாக சிறப்பாக பகிரும்.

 

4. ஸ்டெப் ஃபூட்டிங்கை எப்போது பயன்படுத்த வேண்டும்?

சமமற்ற நிலப்பரப்பில் கட்டுமானங்களை கட்டும்போது மற்றும் மண்ணின் தன்மைகள் அதிகம் மாறுபடும் நிலங்களில், இந்த ஸ்டெப் ஃபூட்டிங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை கட்டமைப்பின் லோடை தாங்கி, நிலையான மற்றும் நீடித்து உழைக்கும் ஃபவுண்டேஷன்களை உருவாக்குகின்றன.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....