Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


பல்வேறு வகையான சிமண்ட்கள் பற்றி புரிந்துகொள்ளுதல்: பயன்கள் மற்றும் தரங்கள்

பல்வேறு வகையான சிமண்ட்கள் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள இந்த வலைப்பதிவு உங்களுக்கு முழுமையான வழிகாட்டுதலைக் கொடுக்கும். இது ஒவ்வொரு வகையின் பல்வேறு வகையான பயன்பாடுகள் மற்றும் பயன்கள் மற்றும் சந்தையில் கிடைக்கக் கூடிய சிமண்டின் பல்வேறு வகையான தரங்கள் பற்றியும் கொடுகிறது.

Share:


உலகம் முழுவதிலும் கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு இன்றியமையாத கட்டுமானப் பொருள் சிமண்ட். இது ஒரு இணைக்கும் பொருள் (binding agent) இது மணல், ஜல்லி, மற்றும் தண்ணீரோடு கலக்கப்பட்டு சிமண்ட் ஆகிறது, இது கட்டுமானத்திற்கு வலிமையையும் நீடித்த உழைப்பையும் கொடுக்கிறது. பல்வேறு வகையான சிமண்ட்கள் கிடைக்கின்றன, அவை ஒவ்வொன்றும் தனித்தனி குணங்களோடு குறிப்பிட்ட வகை பயன்பாட்டுக்கு உகந்ததாக உள்ளன. இந்த வலைப் பதிவில் நாம் 15 வகையான சிமண்ட்கள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி விவாதிக்கலாம்



சிமண்ட் வகைகள்

 

1) சாதாரண போர்ட்லான்ட் சிமண்ட்

உலகம் முழுவதும் உள்ள கட்டுமானாத்த் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பொதுவான சிமண்ட் இது. பல்துறை சிமண்ட், இதை பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு பொதுவான கட்டுமானம் முதல் முன்வார்ப்பு கான்கிரீட் பொருட்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. ஒ பி சி (Ordinary Portland Cement) அதன் வலிமை, நீண்ட நாள் உழைப்பு மற்றும் வேலை செய்யும் திறன் ஆகியவை இதை பல்வேறு வகையான கட்டுமானப் பணிகளுக்கு உகந்ததாக செய்துள்ளது. இது பொதுவாக கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் இதர அமைப்புகளுக்கு பயன்படுகிறது. இந்த ஒ பி சி பன்முக வேலைகளுக்கு பயன்படும் மேலும் இதர பொருட்களோடு அதாவது கூட்டாக சேர்த்தும் பல்வேறு வகையான கான்கிரீட் கலவைகள் ஏற்படுத்த பயன்படுத்தலாம்.

 

2) போர்ட்லான்ட் பொசலோனா சிமண்ட்

போர்ட்லான்ட் பொசலோனா சிமண்ட் (பி பி சி) என்பது ஒரு வகை தண்ணீரால் வலுப்படும் சிமண்ட், இது போர்ட்லான்ட் சிமண்ட்டை பொசலானிக் பொருட்களோடு அதாவது பிளை ஆஷ் அல்லது சிலிகா புகை ஆகியவற்றோடு கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் சிமண்டின் வேலை செய்யும் திறன் உழைப்பு ஆகியவற்றை அதிகரித்து எண்ணற்ற வகை கட்டுமானங்களுக்கு உகந்ததாக ஆக்குகிறது. பி பி சிஒரு பொதுவாக வீட்டு கட்டிடங்கள் கட்டுமானம் மற்றும் பெரிய அளவில் கட்டுமானப் பணிகளுக்கு, அதாவது நீடித்த உழைப்பு முக்கியமான அம்சமாக உள்ள அதாவது அணைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதற்கு பயன்படுகிறது.

 

3) விரைவாக வலுப்படும் சிமண்ட்

விரைவாக வலுப்படும் சிமண்ட் என்பது ஒரு தண்ணீரால் வலுப்படும் சிமண்ட் வகையான இது விரைவாக வலுப்பெறும் வகையில் விஷேசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவாக வலுப்படும் சிமண்ட் எங்கே விரைவாக கான்கிரீட் இறுகவேண்டும் என்ற இடங்களில் அதாவது நடைபாதைகள், முன்வார்ப்பு பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் வேலைகளுக்கு பயன் படுத்தப்படுகிறது. இதை ஒ பி சி வகை ஒப்பிடும்போது அதி விரைவாக வலுப்பெறுவது இதனை எங்கே சேவைகள் விரைவாக தேவைப்படுகின்றனவோ அங்கே பயன்படுத்தப்படுகிறது.

 

4) எக்ஸ்ட்ரா விரைவாக வலுப்படும் சிமண்ட்

எக்ஸ்ட்ரா விரைவாக வலுப்படும் சிமண்ட் என்பது ஒருவகையான தண்ணீரால் வலுப்படும் சிமண்ட், விரைவாக வலுப்படும் சிமண்ட் போன்றது, ஆனால் இன்னும் வேகமாக வலுப்பெறுகிறது. இது சாதாரன போர்ட்லான்ட் சிமண்ட் கிளின்கரை அதிகமான கால்சியம் குளோரைட் உடன் சேர்த்து அரைக்கப்படுகிறது. இந்த கலவை இறுகும் நேரத்தை விரைவுபடுத்தி வேகமாக வலுப்படுத்துகிறது. எக்ஸ்ட்ரா விரைவாக வலுப்படும் சிமண்ட் எங்கே கான்கிரீட் வேகமாக இறுக வேண்டிய மற்றும் அதிக வலு விரைவாக தேவைப்படும் இடங்களில், அதாவது குளிர் சீதோஷ்ண நிலையில் அல்லது அவசர சரிசெய்யும் நேரங்களில் பயன்படுத்தப் படுகிறது. இது பொதுவாக விமான நிலைய ஓடு தளம், தொழிற்சாலை தரைகள் மற்றும் முன்வார்ப்பு கான்கிரீட் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

5) விரைந்து இறுகும் சிமண்ட்

விரைந்து இறுகும் சிமண்ட் எனப்படும் இது ஒரு வகை தண்ணீரால் வலுப்படும் சிமண்ட் இது விரைவாக இறுகி வலுப்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நேர உணர்வுள்ள திட்டங்களுக்கு அதாவது தண்ணீர்க் குழாய்கள், கழிவு நீர் போக்கிகள், சுரங்கப் பாதைகள் போன்ற இடங்களில். இதில் கலந்துள்ள பொருட்கள் சிமண்டின் இறுகும் காலத்தை விரைவுபடுத்துகிறன அதனால் ஆரம்ப இறுக்கம் சில நிமிடங்களில் பாஸ்ட் செட்டிங் சிமண்ட் போனது.

 

6) குறைந்த வெப்ப சிமண்ட்

குறைந்த வெப்ப சிமண்ட் என்பது ஒரு வகை தண்ணீரால் வலுப்படும் சிமண்ட், இது விஷேசமாக குறைந்த அளவு வெப்பத்தை நீரேற்றும் நடைமுறையில் வெளிப்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ட்ரை கால்சியம் அலுமினேட்டை 6% அளவாகக் குறைத்து தயாரிக்கப்படுகிறது. இதன் முடிவு மெதுவான வலுப்பெறுதல் மற்றும் குறைவான வெப்பம் நீரேற்றும் போது வெளியிடுதல் குணங்கள் பெரிய கான்கிரீட் கட்டுமானங்கள் எங்கே வெப்பம் உண்டானால் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் பயன்படுகிறது. குறைந்த வெப்ப சிமண்ட் பொதுவாக அணைகள், அணுமின் சக்தி நிலையங்கள் மற்றும் பிரமாண்ட பெரிய கட்டுமானங்களில் பயன்படுத்தப் படுகிறது.

 

7) சல்பேட் எதிர்ப்பு சிமண்ட்

சல்ஃபேட் எதிர்ப்பு சிமண்ட் என்பது ஒருவகை தண்ணீரால் வலுப்படும் சிமண்ட் ஆகும் இது மண்ணில் மாற்றும் நிலத்தடி நீரில் இருக்கும் சல்ஃபேட்டால் பாதிக்கப்படாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. சல்ஃபேட் எதிர்ப்பு சிமண்ட் பொதுவாக மண் அல்லது நிலத்தடி நீரில் அதிகளவு சல்ஃபேட் கரைந்திருக்கிறதோ அங்கு அதாவது கடற்கரைப் பகுதிகள், சுரங்கங்கள் மற்றும் கால்வாய் கரைகள் மற்றும் தடுப்பு சுவர்கள் போன்றவற்றில் பயன்படுகிறது.



8) ஊதுளை கசடு சிமண்ட்

ஊதுலை கசடு சிமண்ட் என்பது கசடு சிமண்ட் என்றும் அழைக்கப்படும் இது ஒரு தண்ணீரால் வலுப்படும் சிமண்ட் வகையாகும் இது போர்ட்லான்ட் சிமண்ட் கிளிங்கர் உடன் பொடியாக்கப்பட்ட ஊதுலை கசடு கலந்து தயாரிக்கப்படுகிறது. கழிவு என்பது இரும்பு தயாரிக்கும் செயல்முறையில் ஒரு உப பொருள் இது சன்ன பொடியாக அரைக்கப்படுகிறது, இது பின்னர் போர்ட்லான்ட்சிமண்ட் உடன் கலக்கப்படுகிறது. இந்த கலவை நீரேற்றும் நடைமுறையில் குறைந்த அளவு வெப்பத்தை வெளியேற்றும், சிறந்த வேலை செய்யும் திறன் மாற்றும் மேம்பட்ட நீடித்த உழைப்பு கொடுக்கிறது. ஊதுலை கசடு சிமண்ட் பெரிய கட்டடத் திட்டங்களில் அதாவது அணைகள், பாலங்கள் மற்றும் அதிக உயர கட்டிடங்கள் மற்றும் இயந்திர கட்டுமானங்களில் பயன்படுகிறது.

 

9) அதிக அலுமினா சிமண்ட்

அதிக அலுமினா சிமண்ட் ஒரு தண்ணீரால் வலுப்படும் சிமண்ட் பாக்சைட் மற்றும் சுண்ணாம்புக்கல்லை சேர்த்து உருக்கி அரைத்து தயாரிக்கப்படுகிறது. வெளிவரும் சிமண்ட் அற்புதமான அளவிலான வலிமையுடன் நீண்ட உழைப்பும் கொடுக்கிறது அதிக அலுமினா சிமண்ட் பொதுவாக உலை கான்கிரீட் கட்டுமானத்தில் அதன் அதிக வெப்பத்தை தாங்குவது மற்றும் மற்றும் அதிக ரசாயன சூழ்நிலைகளில் பயன்படுகிறது. இது மேலும் ரசாயன தொழிற்சாலைகள், உலைகள் மற்றும் காலவாசல்களில் எங்கே இதன் வெப்பம் தாங்கும் திறன் மற்றும் அரிக்கும் ரசாயனங்கள் எதிர்ப்பு தேவையோ அங்கே இது நல்ல தேர்வாகும்.

 

10) வெள்ளை சிமண்ட்

வெள்ளை சிமண்ட் இதன் பெயரிலிருந்து அறியலாம், இதன் அதிக அளவிலான வெண்மையை. வெள்ளை சிமண்ட் அலங்கார வேலைகளுக்கே அதாவது சிற்பக்கலை, முன்வார்ப்பு கான்கிரீட் பொருட்கள் மற்றும் அலங்கார தளக் கற்கள் போன்றவைகளில் முதன்மையாக பயன்படுத்தப் படுகிறது. . இதை வர்ண பொடிகளோடு கலந்து எண்ணற்ற வர்ண கான்கிரீட் பொருட்களை செய்யலாம்.

 

11) வர்ண சிமண்ட்

வர்ண சிமண்ட் என்பது நிறமி சிமண்ட் என்றும் அழைக்கப் படும் இது ஒருவித தண்ணீரால் வலுப்படும் சிமண்ட் இது நிறமிகளோடு (5-10%) கலக்கப்பட்டு பல வண்ணங்கள் ஏற்படுத்தப்படுகின்றது. இதில் பயன்படுத்தப்படும் நிறமிகள் செயற்கையானவையாகவோ அல்லதி இயற்கையானதாகவோ இருக்கலாம். மேலும் ஏராளமான வண்ணங்களில் கிடைக்கின்றன. வர்ண சிமண்ட் பொதுவாக அலங்கார நோக்கங்களுக்காக அதாவது கான்கிரீட் காட்சிப்பொருள் மேடைகள், தரைகள் மற்றும் நடைபாதைகள் பயன்படுத்தப் படுகிறது. ஒரு பொருளின் தோற்றத்தை வர்ண சிமண்ட் அதிகரித்து அழகான தோற்றத்தை ஒரு தனிப்பட்ட பார்வையை கொடுக்கிறது.

 

12) காற்று உள்வாங்கும் சிமண்ட்

காற்று உள்வாங்கும் சிமண்ட் என்பது ஒரு தண்ணீரால் வலுப்படும் சிமண்ட் வகை இதில் காற்றை உள்வாங்கும் ரெசின்கள், கோந்துகள் மற்றும் சோடியம் உப்புகள் போன்ற பொருட்கள் கலந்துள்ளன அது மிக நுண்ணிய காற்று குமிழிகளை கான்கிரீட் கலவையில் உருவாக்குகிறன. காற்று உள்வாங்கும் சிமண்ட்க்கு ஒரு குறிப்பிட்ட பதத்தை பெறுவதற்கு மற்ற சாதாரண போர்ட்லான்ட் மற்றும் பிற வகை சிமன்ட்களை விட குறைந்த தண்ணீரே போதுமானது. இது பொதுவாக உறைபனி தாக்குபிடிக்கும் கான்கிரீட் நடைபாதைகள், பாலங்கள் மற்றும் குளிர் பிரதேசங்களில் இருக்கும் கட்டிடங்கள் கட்டும் திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.

 

13) விரிவடையும் சிமண்ட்.

விரிவடையும் சிமண்ட். என்பது ஒரு தண்ணீரால் வலுப்படும் சிமண்ட் இது இறுகிய பின்னர் சிறிது விரிவடையும் தன்மையுடையது. இந்த விரிவடையும் சிமண்ட்.பொதுவாக எங்கே இறுக்கமாக நிரப்ப வேண்டிய கட்டுமானத் திட்டங்களில், முன்வார்ப்பு கான்கிரீட், மற்றும் பால பேரிங்குகள் போன்றவைகளில் தேவைப்படுகிறது. இது மேலும் உராய்வு மற்றும் தனிப்பட்ட இடங்களில் இந்த விரிவடைதல் வெற்றிடங்கள் மற்றும் இடைவெளிகளை நிரப்ப பயன்படுமோ அங்கே பயன்படுத்தப் படுகிறது இந்த விரிவடையும் சிமண்டை வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் உலர்தளால் ஏற்படும் சுருக்கத்தை நிரப்ப பயன்படுத்தப் படுகிறது.

 

14) நீர்பரப்புக்குரிய சிமண்ட்

நீர்பரப்புக்குரிய சிமண்ட் ஒரு விஷேசப்படுத்தப்பட்ட போர்ட்லான்ட் சிமண்ட் இது நீருக்கடியில் இறுகி கடினமாகும்படி வடிவமைக்கப்பட்டது. இது போர்ட்லான்ட் சிமண்ட் கிளிங்கர் மற்றும் தண்ணீர் இருக்கும்போது நீரை உறிஞ்சி இறுகும் தன்மை கொண்ட விஷேச சேர்மானங்கள் இரத்து தயாரிக்கப்படுகிறது. இந்த நீர்பரப்புக்குரிய சிமண்ட் பொதுவாக நீருக்கடிளில் காட்டப்படும் திட்டங்களில் கடல் மற்றும் ஈருக்கடியில் இருக்கும் சுங்கப் பாதைகள் போன்றவைக்கு பயன்படுகிறது. மேலும் இது நீச்சல் குளங்கள் மற்றும் நீர்த்தொட்டிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் அமைக்க உதவுகிறது.

 

15) போர்ட்லான்ட் சுண்ணாம்புக்கல் சிமண்ட்

போர்ட்லேண்ட் சுண்ணாம்பு சிமென்ட் (பிஎல்சி) என்பது ஒரு வகை கலப்பு சிமெண்ட் ஆகும், இது போர்ட்லேண்ட் சிமென்ட் கிளிங்கர் மற்றும் 5 முதல் 15% சுண்ணாம்புக் கல்லால் செய்யப்படுகிறது. PLC ஆனது OPC போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது, ஆனால் இது பொதுவாக குறைந்த கார்பன் தடம் மற்றும் நீரேற்றம் செயல்பாட்டின் போது குறைந்த வெப்பத்தை உருவாக்குகிறது. பசுமைக் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற நீடித்து நிலைத்திருப்பது என்பது முக்கியமானதாக இருக்கும் கட்டுமானத் திட்டங்களில் PLC பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. நடைபாதைகள், அடித்தளங்கள் மற்றும் முன்வார்ப்பு அலகுகள் போன்ற பொது நோக்கத்திற்கான கான்கிரீட் பயன்பாடுகளிலும் இது பயன்படுத்த ஏற்றது.

 

பல்வேறு தரமுள்ள சிமண்ட்



பல்வேறு வகையான சிமெண்டுகளோடு சந்தையில் பல்வேறு தரமுள்ள சிமெண்டுகளும் கிடைக்கின்றன. இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிமெண்டுகள் 33, 43 மற்றும் 53-கிரேடு சிமெண்ட் ஆகும். இந்த தரங்கள் 28 நாட்கள் குணப்படுத்திய பிறகு சிமெண்டின் அழுத்த வலிமையைக் குறிக்கின்றன.

 

1) 33 தர சிமண்ட்

33 தர சிமென்ட் பொதுவாக பொது கட்டுமான பணிகளுக்கும் பூச்சு வேலை செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 28 நாட்கள் குணப்படுத்திய பிறகு இது 33 N/mm² அழுத்த வலிமையைக் கொண்டுள்ளது. இந்த வகை சிமென்ட் அதிக வலிமை தேவை இல்லாத கட்டுமானத் திட்டங்களில் பயன்படுத்த ஏற்றது, அங்கு M20 க்கு மேல் கான்கிரீட் கலவைக்கு இது உகந்தது இல்லை.

 

2) 43 தர சிமண்ட்

43 கிரேடு சிமென்ட் என்பது இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிமெண்ட் தரமாகும். 28 நாட்கள் குணப்படுத்திய பிறகு இது 43 N/mm² அழுத்த வலிமையைக் கொண்டுள்ளது. சாதாரண கான்கிரீட் அல்லது பூச்சு வேலைகள் போன்ற மிதமான மற்றும் அதிக வலிமை தேவைப்படும் கட்டுமானத் திட்டங்களில் இது பயன்படுத்த ஏற்றது. இது டைல்ஸ், பிளாக்குகள், குழாய்கள் போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுகிறது. இது 33-தர சிமெண்டை விட அதிக அழுத்த வலிமை கொண்டது மற்றும் நடுத்தர அளவிலான கட்டுமான திட்டங்களுக்கு ஏற்றது. இது M30 வரை கான்கிரீட் கலவைக்கு ஏற்றது.

 

3) 53 தர சிமண்ட்

53 கிரேடு சிமென்ட் தான் இந்தியாவில் கிடைக்கும் மிக உயர்ந்த சிமண்ட் 28 நாட்கள் குணப்படுத்திய பிறகு இது 53 N/mm² அழுத்த வலிமையைக் கொண்டுள்ளது. உயரமான கட்டிடங்கள், அணைகள் மற்றும் கனரக தொழில்துறை கட்டமைப்புகள் போன்ற அதிக வலிமை தேவைப்படும் கட்டுமான திட்டங்களில் இந்த வகை சிமெண்ட் பயன்படுத்த ஏற்றது. இது 33 மற்றும் 43-தர சிமண்ட் இரண்டையும் விட அதிக அழுத்த வலிமையைக் கொண்டுள்ளது, இது அதிக நீடித்த மற்றும் நீடித்தது. M25 க்கு மேல் கான்கிரீட் கலவைக்கு ஏற்றது.

 

சிமெண்டின் உயர் தரங்கள் அதிக நீரேற்றம் கொண்டவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், இது சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் கான்கிரீட் விரிசல் ஏற்படலாம். எனவே, உத்தேசிக்கப்பட்ட பயன்பாட்டிற்கு பொருத்தமான சிமெண்டைப் பயன்படுத்துவது மற்றும் கியுரிங் கொடுப்பதற்கும் உற்பத்தியாளரின் பரிந்துரைகளைப் பின்பற்றுவது முக்கியம்.





எந்தவொரு கட்டுமானத் திட்டத்தின் வெற்றிக்கும் சரியான வகை சிமெண்டைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஒவ்வொரு வகை சிமெண்டிற்கும் தனிப்பட்ட பண்புகள் உள்ளன, அவை குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும். பல்வேறு வகையான சிமென்ட் மற்றும் அவற்றின் பயன்பாடுகளைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் அடுத்த கட்டுமானத் திட்டத்திற்கு எந்த வகையான சிமெண்டைப் பயன்படுத்துவது என்பது குறித்து நீங்கள் தகவலறிந்த முடிவை எடுக்கலாம்.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....