தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்திறன்மிக்க மழைநீர் சேகரிப்பு அமைப்புக்கான படிநிலைகள்

மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைச் சேகரித்து, சேமித்து வைத்து, பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய ஒரு நிலையான நடைமுறையாகும். மழைநீர் சேகரிப்பு என்பது நீர்ப்பாசனம், துணி துவைப்பது மற்றும் குடிநீர் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மழைநீரைச் சேகரிக்கவும் சேமித்து வைப்பதற்குமான ஒரு சிறந்த வழியாகும். முறையாகத் திட்டமிடுவது மற்றும் இன்ஸ்டால் செய்வதன் மூலம், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சிக்குப் பயனுள்ள மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளாக இருக்கும். இந்த அமைப்பை அமைப்பதன் மூலம், உங்கள் தண்ணீர் பில்களில் ஆகும் செலவை மிச்சப்படுத்தி, நகராட்சி தண்ணீர் விநியோகத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தண்ணீரைச் சேமிக்க உதவும்.

Share:மக்கள் பெரும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதோடு, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வசிப்பார்கள் என்று அறிக்கைகள் தெரிவிப்பதால் (தண்ணீர் உதவி), மனித இனம் நல்ல தண்ணீரைப் பெற உதவும் ஒரு அமைப்பு அவசரமாகத் தேவைப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கான தீர்வு மழைநீர் சேகரிப்பாகும். இது நல்ல தண்ணீரைப் பெறுவதற்கான மிகவும் நிலையான வழியாகும் மற்றும் இது செயல்படுவதற்கு எந்த ஆற்றலும் தேவையில்லை. இது எந்தவொரு இயற்கை வளங்களையும் அழிக்காது, மாறாக, இயற்கை வாழ்விடத்தைப் பாதுகாத்துப் பராமரிக்க உதவுகிறது. இது மழைநீர் சேகரிப்பின் படிநிலைகளையும், மழைநீர் சேகரிப்பு ஏன் தேவைப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்வதைப் பற்றியதாகும்.மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?


சூரியனின் வெப்பத்தால் கடலில் உள்ள உப்பு தண்ணீர் ஆவியாகி மேகங்களாக உருவாகி நல்ல தண்ணீராக மழையாகப் பொழிகிறது. இந்த மழைநீரின் கணிசமான பகுதி கடல்கள் மற்றும் வடிகால்களில் சென்று சேர்கிறது. இதை நம்மால் திறம்படப் பயன்படுத்த முடிந்தால், பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய முக்கியமான ஆதாரமாக இது இருக்கும். எனவே, சுருக்கமாகக் கூறினால், மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரை அப்படியே வடிந்து செல்ல விடாமல் மீண்டும் பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைக்கும் செயல்முறையாகும். எனினும், அதற்கு முன் மழைநீர் சேகரிப்பின் படிநிலைகளைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

மழைநீர் சேகரிப்பின் வகைகள்:

மழைநீர் சேகரிப்பின் வகைகள் இந்த அமைப்பை நன்கு புரிந்துகொள்ள உதவும். இவற்றைக் குறித்து அறிந்துகொள்வது நல்லதாகும், இதன் மூலம், எது நமக்கு சிறந்தது என்பதை அறிந்து, அதன்படி மழைநீர் சேகரிப்பின் படிநிலைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.


கூரை மழைநீர் சேகரிப்பு :

 

 • இது மழைநீர் விழும் இடத்திலேயே அதைச் சேமிக்கும் அமைப்பாகும். கூரை மழைநீர் சேகரிப்பில், கூறை ஒரு நீர்ப்பிடிப்புப் பகுதியாக மாறுகிறது மற்றும் வீடு அல்லது கட்டிடத்தின் கூரையில் மழைநீர் சேகரிக்கப்படுகிறது. அதை ஒரு தொட்டியில் சேமித்து வைக்கலாம் அல்லது செயற்கை ரீசார்ஜ் அமைப்புக்கு மாற்றலாம். இந்த முறை செலவு குறைவானதாகும், மேலும், சரியாகச் செயல்படுத்தப்பட்டால், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க உதவும்.


மேற்பரப்பு மழைநீர் சேகரிப்பு :

 

 • நகர்ப்புறப் பகுதிகளில், மழைநீர் மேற்பரப்பில் வழிந்தோடிச் செல்லும். இவ்வாறு வழிந்தோடிச் செல்லும் தண்ணீரைச் சேகரித்து, தகுந்த முறைகளைப் பின்பற்றி நிலத்தடி நீர்த்தேக்கத்தை ரீசார்ஜ் செய்யப் பயன்படுத்தலாம்.


மழைநீர் சேகரிப்பின் படிநிலைகளை அறிந்துகொள்வதற்கு முன், மழைநீர் சேகரிப்பின் நன்மைகளைப் புரிந்துகொள்வோம்.


மழைநீர் சேகரிப்பின் நன்மைகள் :

 

 1. போதுமான அளவு நிலத்தடி நீர் இருக்கும்படி செய்கிறது: மக்கள் தொகை அதிகரிப்புடன், நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதும் அதிகரித்து வருகிறது. பல குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலத்தடி நீரை எடுத்தே பயன்படுத்தி வருகின்றன. இதனால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர்மட்டத்தைக் குறைப்பதற்குப் பதிலாக நிலத்தடி நீர்மட்டம் மேலும் நிலைத்திருக்க உதவுகிறது.

   

 2. வறட்சியின் தாக்கத்தைக் குறைக்கிறது: பல நாடுகள், குறிப்பாக வறண்ட சூழலைக் கொண்ட நாடுகள், மழைநீர் சேகரிப்பைச் சுத்தமான நீரின் மலிவான மற்றும் நம்பகமான ஆதாரமாகப் பயன்படுத்துகின்றன. வறட்சி ஏற்படும் போது, ​​கடந்த மாதங்களில் சேகரிக்கப்பட்ட மழைநீரைப் பயன்படுத்தலாம். பாலைவனங்களில், மலைகள் மற்றும் சரிவுகளில் ஓடும் மழைநீரைத் தடுக்கவும், நீர்ப்பாசனத்தை மேம்படுத்தவும் மண் முகடுகள் கட்டப்பட்டுள்ளன. மழை குறைவாக உள்ள காலங்களிலும், பயிர்கள் வளரப் போதுமான தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.

   

 3. நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தி, தண்ணீரை உயர்த்துவதற்கான ஆற்றலை மிச்சப்படுத்துகிறது: மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், நீர்மட்டத்தையும் அதன் தரத்தையும் அதிகரிக்க, வழிந்தோடும் மேற்பரப்பு நீரை நிலத்தடி நீர்த்தேக்கத்தில் ரீசார்ஜ் செய்கிறது. இதன் விளைவாக மழை பொழிவு குறைவாக இருந்தாலும், நிலத்தடி நீர்மட்டத்தை நிலையாக இருக்கச் செய்கிறது.

   

 4. நீரை நிலத்தடியில் சேமிப்பது சுற்றுச்சூழலுக்கு நல்லது: மழைநீரை நிலத்தடியில் சேமிப்பது அது ஆவியாவதைத் தடுக்கிறது மற்றும் நீண்ட காலச் சேமிப்பை வழங்குகிறது, மேலும் இது நிலத்தடி நீரை மீண்டும் நிரப்புகிறது, கடல் நீர் ஊடுருவுவதைத் தடுக்கிறது, நிலத்தடி நீரைச் சார்ந்து வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கிறது.

   

 5. இது செலவு குறைவானதாகும்: மழைநீர் சேகரிப்பு என்பது மற்ற நீர் மறுசுழற்சி முறைகளுக்கான செலவு குறைவான மாற்றாகும், மேலும் இது நீண்ட கால முதலீடாக இருக்கிறது. மேலும், பல்வேறு வழிகளில் தண்ணீரை வீட்டுக்குக் கொண்டு செல்வதற்கான தேவையைத் நீக்குகிறது.

   

 6. இது தண்ணீரைச் சேமிக்க உதவுகிறது: தண்ணீரைச் சேமிக்கும் இந்த யோசனை தண்ணீரைச் சேமிக்கவும், திறம்படப் பயன்படுத்தவும் உங்களுக்கு உதவுகிறது. இது மிகவும் பயனுள்ள நீர் சேமிப்புக்கு முறையாகும். இருப்பினும், மழைநீர் சேகரிப்பு அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கான்கிரீட்டின் வலிமை சோதனை, கான்கிரீட்டைப் பதப்படுத்துதல் மற்றும் கான்கிரீட்டைக் கவனமாகக் கொண்டு சென்று வைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும்.


மழைநீர் சேகரிப்பின் படிநிலைகள் :

மழைநீர் சேகரிப்பின் படிநிலைகள் நீளமாக இருப்பது போல் தோன்றினாலும், சரியாகச் செயல்படுத்தப்பட்டால், இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

 

 • 1. உங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதியைத் தீர்மானித்து, அந்தப் பகுதியைச் சுத்தம் செய்யவும் :


  மழைப்பொழிவை நேரடியாகப் பெறும் மேற்பரப்பு உங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதி ஆகும். அது உங்களின் மொட்டை மாடி, முற்றம் அல்லது நடைபாதை அல்லது செப்பனிடப்படாத மைதானமாக இருக்கலாம். எனவே, நீர்ப்பிடிப்பு பகுதி என்பது, நீர் சேகரிப்பு முறைக்குத் தண்ணீர் வழங்கும் பகுதியாகும். உங்களின் வளாகத்தில் எந்தப் பகுதி இந்த நோக்கத்திற்காக மிகவும் பொருத்தமானது என்பதைத் தீர்மானிப்பதும், இந்தக் கட்டத்தில் மாசு எதுவும் ஏற்படாத வகையில் இந்தப் பகுதியைச் சுத்தம் செய்வதும் முக்கியமாகும்.
 
 • 2. லேயவுட்டைத் தீர்மானிக்கவும் :


  தொட்டி மற்றும் குழாய்களின் லேஅவுட் மற்றும் இடம், சேகரிப்பு மேற்பரப்புகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் தீர்மானிக்கப்படுகிறது. பல ஆப்ஷன்கள் உள்ளன ஆனால் அவற்றில் பிரதானமானவை ஸ்ப்ரெட்-அவுட் டேங்க் ஆப்ஷன் மற்றும் கிளஸ்டர் டேங்க் ஆப்ஷன் ஆகும்.
 
 • 3. சேமிப்பகத்தை அமைக்கவும் :

 

 1. கட்டிடத்தின் மேற்கூரையில் சேகரிக்கப்படும் மழைநீர் சேமிப்பு தொட்டிக்குத் திருப்பி விடப்படுகிறது. தண்ணீர் தேவை, மழைப்பொழிவு மற்றும் நீர்ப்பிடிப்புக்கு ஏற்பச் சேமிப்பு தொட்டி வடிவமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வடிகால் குழாய் மற்றும் சேகரிப்பு அமைப்பில் பின்வருவன அடங்கும்:

 

 • குழாய் வாயில் ஒரு வலை போன்ற வடிகட்டி மற்றும் தொட்டியில் இருந்து முதல் நீரின் ஓட்டத்தைத் திசைதிருப்பும் முதல் ஃப்ளஷ் (ரூஃப் வாஷர் என்றும் அழைக்கப்படுகிறது) சாதனம்.

   

 • சேமிப்பு தொட்டியுடன் இணைப்பதற்கு முன் ஒரு வடிகட்டுதல் அமைப்பு.

   

 • வெள்ள நீர் பின்னோக்கிப் பாய்வதைத் தடுப்பதற்கான ஒரு காற்று இடைவெளி.

   

 • ஒவ்வொரு தொட்டியிலும் அதிகப்படியான தண்ணீர் வழிவதற்கான அமைப்பு இருக்க வேண்டும்.

   

 • அதிகப்படியான தண்ணீரை ரீசார்ஜ் அமைப்புக்குத் திருப்பி விடலாம்.

   

  4. குழாய்கள் மற்றும் தொட்டிகளை இன்ஸ்டால் செய்யவும் :

   

  குழாய்களை இன்ஸ்டால் செய்வதற்கு :

   

 • குழாய்களை அமைப்பதற்குத் தேவையான அனுமதிகளை (தேவைப்பட்டால்) அதிகாரிகளிடமிருந்து பெறவும்.

   

 • நிலத்தடியில் அமைக்கப்பட்டால், அகழிகளைத் தோண்டவும்.

   

 • சுத்தம் செய்வதற்கு எளிதில் அடைய முடியாத இடங்களில் வண்டல் படிவதைத் தவிர்க்க, குழாய் ஒரேடியாக நேராக இருப்பது விரும்பத்தக்கதாகும்.

   

 • குழாய்களை அகழிகளில் அல்லது வேறு இடத்தில் வைத்து, கனெக்டர்களைப் பயன்படுத்தி இணைக்கவும்.

   

தொட்டிகளை இன்ஸ்டால் செய்வதற்கு :

 

 • இடத்திற்கு ஏற்ற டேங்க் ஸ்டாண்டை உருவாக்கவும்.

   

 • தொட்டிகளை ஒரு ஸ்டாண்டின் மீது வைக்கவும், மேலும், அவை காலியாக இருக்கும்போது பரந்து போகாமல் இருப்பதை உறுதி செய்யவும்.

   

 • அவை ஒரு தொகுதியாகச் செயல்படும் வகையில் இணைக்கவும். பெரும்பாலும் பராமரிப்புக்காக ஒவ்வொரு தொட்டிக்கும் ஒரு வால்வு வைக்கப் பரிந்துரைக்கிறோம்.

   

 • உங்கள் மழைநீர் தொட்டியில் இருந்து மிகவும் அசுத்தமான மழைநீரை வெளியேற்ற முதல் ஃப்ளஷ் டைவர்ட்டர்களை இன்ஸ்டால் செய்யவும்.

   

 • ஒருவித ஓவர்ஃப்ளோ அமைப்பை இணைக்கவும். தொட்டிகள் நிலத்தடியில் இருந்தால், அதற்கு நிரம்பி வழியும் அமைப்பும், நிறைய வடிகால்களும் தேவைப்படும். ஓவர்ஃப்ளோ அமைப்பு சிறியதாக இருக்கும் போது, ​​பம்புகள் வெள்ளத்தில் மூழ்கும்.

   

 • PVC சேகரிப்பு குழாய்கள் மற்றும் தொட்டிகளுக்கு இடையே இறுதி இணைப்பை உருவாக்கவும்.

   

 • உங்களின் தண்ணீர் மட்டத்தையும் பயன்பாட்டையும் தொடர்ந்து கண்காணிக்க ஒரு தொட்டி அளவையை இன்ஸ்டால் செய்யவும்.இவை உங்களுக்கான ஒரு நல்ல அமைப்பை உறுதி செய்யும் மழைநீர் சேகரிப்பின் படிநிலைகள் ஆகும்.தொடர்புடைய கட்டுரைகள்
பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்

  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....