தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்

hgfghj


சுவர்களில் விரிசல்களை எப்படி சரிசெய்வது: ஒரு முழு வழிகாட்டி

சுவர்களில் விரிசல்கள் என்பது ஒரு சாதாரண பிரச்சனை, ஆனால் சுவற்றில் உள்ள விரிசல்களை எப்படி சரி செய்வது என்பது சாஸ்வதமான கேள்வி. இந்த விவரமான வழிகாட்டியுடன் நீங்கள் துல்லியமாகவும் சாமர்த்தியமாகவும் எப்படி சுவற்றின் விரிசல்களை சரி செய்வது என்று கற்றுக்கொள்வீர்கள்.

Share:


நீங்கள் சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருந்தால் அல்லது ஒரு சொத்தை வாடகைக்கு எடுத்திருந்தால், சுவர்களில் விரிசல் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அஸ்திவார வெப்பநிலை மாற்றங்கள் அல்லது சாதாரண தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களால் அவை ஏற்படலாம். சிறு விரிசல்கள் பெரிய விஷயமாக தெரியாவிட்டாலும் அவை கவனிக்கப்படாவிட்டால் பெரியதாகி அதிக செலவாகும் பிரச்சனையாகக் கூடும். அதிர்ஷ்டவசமாக, சுவர் விரிசல்களை சரி செய்வது ஓரளவு எளிதான வேலை, அதை வீட்டு உரிமையாளர்களே சிறிது அறிவோடு சிறிய முயற்சியுடன் செய்ய முடியும். இந்த இடுகைகளில் நாம் சுவர் சரி செய்வதற்கான சில அடிப்படைகளை மற்றும் ஆரம்பிக்க சில கருவிகளையும் கொடுக்கிறோம். சட்டைக் கைகளை மடித்து ஏற்றுங்கள், கலவையை எடுங்கள் விரிசலை பார்க்கலாம்.



சுவர்களில் உள்ள விரிசல்களை எப்படி திருத்துவது ?



1)   உலர்ந்த சுவரில் உள்ள விரிசலை சரி செய்வது

 

உலர்ந்த சுவர் என்பது இரண்டு காகிதங்களுக்கு இடையே இடையீடாக வைக்கப்பட்ட ஜிப்சம் பிளாஸ்டர் ஆன இது, பொதுவாக வீடுகளிலும் கட்டடங்களிலும் உட்சுவராக அமைக்கப்படும் பொருளாகும். அதனால் நாம் உலர்ந்த சுவரில் உள்ள விரிசலை சரி செய்வது எப்படி என்று விவாதிக்கும்போது, இது பலருக்கு ஆச்சரியமாக இருப்பதில்லை ஏனென்றால் வீட்டு உரிமையாளர்கள் எப்படியும் ஒரு நேரத்தில் விரிசல்களை எதிர்கொள்வார்கள். அதிர்ஷ்டவசமாக ஒரு உலர்ந்த சுவரில் உள்ள விரிசலை சரி செய்வது மிக எளிதான நடைமுறையாகும்.

பின்வருவது ஒரு உலர்ந்த சுவரில் உள்ள விரிசலை சரி செய்யும் படிகளாகும்.

 

    1) ஏற்கனவே கலக்கப்பட்டது அல்லது "இருகும் வகையான" இணைக்கும் கூட்டை(compound) வாங்குங்கள்.

    2) நீங்கள் சரி செய்ய விரும்பும் விரிசலில் 'V" வடிவத்தில் ஒரு காடி வெட்டுங்கள்

    3)  உடைந்த கழிவு மற்றும் தூசியை சுத்தமாக நீக்கி சுத்தம் செய்யுங்கள்.

    4)  ஒரு மெல்லிய படலமாக இணைக்கும் கூட்டை வைத்து அதை ஒரேவிதமாக பரவச் செய்யுங்கள்

    5) உங்களுக்கு அவசியம் என்று தோன்றினால் அத்தனை முறை தொடர்ந்து பூசுங்கள்.

    6) குறைந்தது 24 மணி நேரம் வரை உலர விடுங்கள்

    7) உலர்ந்ததும் உப்புத்தாள் கொண்டு தடிமனான அல்லது அதிகப்படியான கூட்டு இருப்பதை சுத்தம் செய்து வழுவழுப்பாக்குங்கள்.

    8) சுற்றுப் புற சுவர்களின் வர்ணத்திற்கு பொருந்துமாறு வர்ணம் கொடுத்து முடியுங்கள் .

     

2) கான்கிரீட் சுவரில் உள்ள விரிசலை சரி செய்வது

கான்கிரீட் சுவர்கள் பொதுவாக பேஸ்மென்ட்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பிற வீட்டுப் பகுதிகளில் காணப்படும், மேலும் இந்த சுவற்றில் விரிசல்கள் அஸ்திவாரம் இறுகுவது, உஷ்ணநிலை மாற்றம் மற்றும் நீரால் சேதம் போன்ற உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படுக்கூடும். அதிர்ஷ்டவசமாக, கான்கிரீட் சுவர் மற்றும் கான்கிரீட்டை குணப்படுத்தல் ஏறக்குறைய ஒரு எளிதான நடைமுறையாகும்.

கான்கிரீட் சுவரில் உள்ள விரிசலை சரி செய்ய பின்பற்ற வேண்டிய படிகள்:

 

1) ஒரு உளி அல்லது சுத்தி கொண்டு விரிசலை சற்று அகலப்படுத்துங்கள்

2) விரிசலைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள தூசிகளை கம்பி பிரஷ் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

3) ஒரு இணைக்கும் பசையை ஒரு பழைய பிரஷ் கொண்டு விரிசல் பகுதியில் மூடுங்கள்

4) பலமுறை பசையை பூசி ஒரு பட்டிக் கத்தி கொண்டு விரிசளுக்குள் அழுத்தம் கொடுத்து சுவரின் மற்று பகுதிகள் லெவலுக்கு சரி படுத்துங்கள்

5) சுவரின் மற்ற பகுதிகளுக்கு பொருந்தும்படியாக இருப்பதை உறுதி செய்து முடியுங்கள்

 

 

3) பிளாஸ்டர் சுவரில் உள்ள விரிசலை சரி செய்வது

பழங்கால வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கலவைப் பூச்சு சுவர்கள் காணப்படுகிறன, மேலும் இந்த சுவரில் விரிசல்கள் அஸ்திவாரம் இறுகுவது, உஷ்ணநிலை மாற்றம் அல்லது சாதாரணமாக வயதாவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பூச்சு சுவர்களில் உள்ள விரிசலை சரி செய்வதற்கு உலர்ந்த சுவர் அல்லது கான்கிரீட் போல் இல்லாமல் சிறிது வித்தியாசமான அணுகல் தேவை.

ஒரு கலவைப் பூச்சு சுவர் விரிசலை சரி செய்யும்போது பின்பற்ற வேண்டிய படிகள்:

 

1) பூச்சு விலகுகிறதா அல்லது வெளியே வருகிறதா என்று பார்க்க சுவரை மெதுவாக அமுக்குவதில் ஆரம்பிக்கவும்

2) பட்டி கத்திக் கொண்டு விரிசலை சுத்தம் செய்து விரிசலை விரித்து விடவும்.

3) ரெடி மிக்ஸ் அல்லது இருகும் தன்மையுள்ள இணைக்கும் கூட்டு கொண்டு விரிசலை முழுவதுமாக நிரப்பவும்

4) விரிசல் பெரிதாக இருக்கும் பட்சத்தில், தானாக ஒட்டிக்கொள்ளும் கண்ணாடி இழை வலை நாடாவை பூச்சு கொடுக்கும் முன்னர் ஓட்ட வேண்டும்

5) நாடா மீது சில லேயர் கூட்டு வைத்து (2 அல்லது 3 முறை) பூச வேண்டும்.

6) இறுதியாக ஒட்டப்பட்ட பகுதியை சுவற்றின் நிறத்திற்கு வர்ணம் பூசவேண்டும்.

 

 

மேலும் வாசிக்க: எப்படி தண்ணீர் சிமண்ட் விகிதத்தை கணக்கிடுவது?




இறுதியாக, சுவற்றில் விரிசல் என்பது உலர்ந்த சுவர், கான்கிரீட் சுவர் மற்றும் பூச்சு சுவர் அனைத்திலும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை. இருந்தபோதிலும், சரியான கருவிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு சுவற்றின் விரிசலை சரி செய்வது வீட்டு உரிமையாளர்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் ஒரு சமாளிக்கக் கூடிய நீங்களே செய்யலாம் என்ற திட்டமாகும்.. சிறிதளவு பொறுமை மற்றும் முயற்சி மற்றும் இந்த குறிப்புகள் கொண்டு சுவற்றில் விரிசல்களை தவிர்க்க மற்றும் உங்கள் சுவற்றில் உள்ள விரிசல்களை சரி செய்ய மற்றும் உங்கள் சுவர்களுக்கு சிறந்த தோற்றம் கொடுக்கலாம்.



தொடர்புடைய கட்டுரைகள்


சுவர்களில் ஈரப்பதம் ஏற்படுவதை எவ்வாறு தடுக்கலாம்

சுவர்களில் ஈரப்பதம் ஏற்படுவதை எவ்வாறு தடுக்கலாம்

சுவர்களில் ஈரப்பதம் உருவானால் கடுமையான கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த அபாயங்களை அதிகரிக்கும். எங்கள் வழிகாட்டியைப் படிப்பதன் மூலம் சுவர்களில் நீர் கசிவைத் தடுப்பது எப்படி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் முறைகள்: ஒரு முழுமையான வழிகாட்டு | அல்ட்ராடெக்

பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் முறைகள்: ஒரு முழுமையான வழிகாட்டு

அதிகச் செலவை ஏற்படுத்தும் நீர் சேதம் மற்றும் பூஞ்சை வளர்ச்சி போன்ற பிற பிரச்சனைகளைத் தடுக்கப் பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் அவசியமாகும். வெளிப்புற மற்றும் உட்புற பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் குறித்து மேலும் அறிந்துகொள்ளவும்.

15 வகையான சிமண்ட்கள். பல்வேறு தரங்கள் மற்றும் பயன்கள் / அல்ட்ரா டெக்

15 வகையான சிமண்ட்கள். பல்வேறு தரங்கள் மற்றும் பயன்கள்

உங்கள் வீட்டுக்குப் பொருத்தமான பல்வேறு வகையான சிமண்ட்கள் பற்றி புரிந்துகொள்ளுங்கள். இவற்றின் பொதுவான பயன்கள் மற்றும் தரங்கள் பற்றி அறிந்துகொண்டு உங்கள் வீட்டு கட்டுமானத்தின்போது தகவலறிந்த முடிவை எடுங்கள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....