தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



உங்களின் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதற்காகப் பூஜை அறைக்கான 6 வாஸ்து உதவிக்குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரம் என்பது 'கட்டிடக் கலையின் அறிவியல்' என்பதின் சமஸ்கிருத சொல் ஆகும். இதில் இடைவெளி, ஒழுங்கமைத்தல், லேஅவுட், அளவீடுகள், முதலியன போன்ற அனைத்து வகையான கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு யோசனைகள் அடங்கும். நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதில் வீட்டின் வாஸ்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

Share:




வாஸ்து நிபுணர்களின்படி பூஜை அறைக்கான வாஸ்து

 

பூஜை அறைக்கான வாஸ்து மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் அவை முழு வீட்டின் ஆரா மற்றும் வாஸ்துவைத் தீர்மானிக்கிறது. வீட்டில் உள்ள பூஜை அறை தான் அந்த வீட்டின் நேர்மறை ஆற்றல் மற்றும் அதிர்வுகளுக்கான மையப்பகுதியாகச் செயல்படுவதாகவும், அதனால் தான் உங்களின் வீட்டைக் கட்டும்போது பூஜை அறைக்கான வாஸ்துவைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம் என்றும் வாஸ்து நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

பூஜை அறைக்கான வாஸ்துவின் முக்கியத்துவம்

 

வீட்டில் நேர்மறையான மற்றும் அமைதியான ஆற்றல்களின் மையப்பகுதியாகப் பூஜை அறை செயல்படுகிறது, ஏனெனில் அது உங்கள் வீட்டில் உள்ள தெய்வங்கள் மூலமாகத் தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துகிறது. பெரிதாக அல்லது சிறியதாக இருந்தாலும் சரி, தெய்வங்களுக்காக ஒரு தனி இடத்தை ஒதுக்குவது அதாவது, ஒரு பூஜை அறையை அமைப்பது உங்கள் வீட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும், மேலும், சரியான வாஸ்து அமைதியான, நேர்மறையான ஆற்றலைக் கொண்டுவருவதிலும் உங்களின் வீட்டில் எந்த ஆற்றல் வெளிப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

பூஜை அறை உங்களின் வீட்டில் நல்ல அதிர்வுகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தெய்வீக ஆற்றல்களுடன் நீங்கள் இணையவும் உதவுகிறது. வாஸ்து, உங்களின் வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றலை நீக்கி, மகிழ்ச்சியும் நேர்மறைகளும் நிறைந்திருக்கச் செய்கிறது.


பூஜை அறைக்கான வாஸ்து உதவிக்குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரத்தின் கோட்பாடுகளின்படி பூஜை அறைக்கான சரியான வாஸ்து மூலம் உங்கள் வீட்டில் நேர்மையான மற்றும் தெய்வீக ஆற்ற நிறைந்திருக்க உதவும் சில உதவிக்குறிப்புகள் பின்வருமாறு:

 

  • 1. பூஜை அறை இருக்கும் இடம்:

 

பூஜை அறைக்கான வாஸ்து படி, பூஜை அறையை அமைப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு திசையும் சிறப்பான ஒன்றைக் குறிக்கிறது, இதனால் தான் பூஜை அறையை அமைக்கும் இடம் பூஜை அறைக்கான வாஸ்துவின் மிகவும் முக்கியமான பகுதியாகும்.

 

  • வட கிழக்கு திசையானது பூஜை அறைக்கான சிறந்த திசையாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அது சிவனின் இடம் என்று கருதப்படுவதால் அது மிகவும் மங்கலகரமானதாகும். அதைத் தொடர்ந்து கிழக்கு அல்லது வடக்கு திசை கருதப்படும். தென் திசையை நோக்கி உள்ள பூஜை அறைக்கான வாஸ்து மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது.
 
  • பூஜை அறையைப் படிக்கட்டுகளுக்கு அடியில் அல்லது கழிவறைக்கு அருகில் அமைக்கக்கூடாது, ஏனெனில் இந்த இடங்கள் அமங்கலமானதாகக் கருதப்படுகின்றன.

 

  • தரை தளத்தில் அல்லது உயரமான தளத்தில் பூஜை அறை அமைக்கப்படாததை உறுதி செய்யவும், ஏனெனில் வாஸ்து படி பூஜை அறைக்கு அவை சிறந்த இடங்களாகக் கருதப்படுவதில்லை.

 

  • பூஜை அறையின் கதவுகள் மற்றும் சன்னல்கள் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கித் திறக்க வேண்டும்.
 
  • பூஜை அறை வாஸ்துவின்படி நேர்மறை அதிர்வுகளுக்காகப் பூஜை அறையில் பிரமிட் வடிவிலான கூரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
 
  • பூஜை அறை வாஸ்துவின்படி, கிழக்கு பார்த்து இருக்கும் வீடுகளில் பூஜை அறை தெற்கு அல்லது கிழக்கு மூலையில் இருக்க வேண்டும்.


  1. 2. சிலைகள் அல்லது தெய்வங்களை வைக்கும் இடம்:

 

  • பூஜை அறைக்கான வாஸ்து படி, பூஜை அறையில் உள்ள சிலைகள் ஒன்றை ஒன்று பார்த்தபடி இருக்கக்கூடாது மற்றும் சுவற்றுக்கு நெருக்கமாக இருக்கக்கூடாது.

 

  • சிலைகளை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
 
  • சிலைகள் அனைத்தும் ஒரே திசையைப் பார்த்தபடி இருப்பதையும், கதவைப் பார்த்தபடி இல்லாததையும் உறுதி செய்ய வேண்டும்.
 
  • சிலைகளைச் சுற்றி நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவற்றைச் சுவர்களில் சாய்த்து வைக்கக்கூடாது.
 
  • பூஜை அறைக்கான வாஸ்துவுக்கான உதவிக்குறிப்புகளின் பரிந்துரையின்படி சிலைகளை நிலத்திலிருந்து குறைந்தது 6 அங்குலம் தள்ளி வைக்க வேண்டும்.
 
  • இறந்தவர்களின் புகைப்படத்தையோ அல்லது வன்முறையைக் காட்டும் புகைப்படத்தையோ பூஜை அறையில் வைக்கக்கூடாது.
 
  • சிலைகள் உடையாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
 
  • விளக்குகளைத் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.


  1. 3. புனிதமான பொருட்களை வைக்கும் இடம்:

 

  • புனிதமான பொருட்களையும் மற்ற பூஜை அறை பொருட்களையும் தவிர வேறு எந்தப் பொருட்களையும் பூஜை அறையில் வைக்கக்கூடாது. அறையில் எதுவும் கலைந்திருக்கக்கூடாது.
 
  • சிலைகளுக்கு மேல் எதையும் வைக்கக்கூடாது.
 
  • விளக்கும் அக்னி குண்டமும் தென்கிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும்.

  1. 4. பூஜை அறையில் பெட்டிகளை வைக்கும் இடம்:

 

  • பூஜை அறையில் எந்தவொரு பெட்டியையும் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும், இது பூஜை அறையின் வாஸ்து படி சூரிய வெளிச்சம் தடை படாததை உறுதி செய்கிறது.
 
  • பூஜை பொருட்களை வைக்க ஒரு பிரமிட் வடிவிலான கோபுரம் அல்லது பெட்டிகளை நீங்கள் பயன்படுத்தலாம், ஏனெனில் அவை நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
 
  • வாஸ்து படி பூஜை அறையில் சிலைகளுக்கு மேல் பெட்டிகளைக் கட்டமைக்கக்கூடாது.

  1. 5. பூஜை அறையின் நிறம்:
 
  • அறையில் லேசான நிறத்தைப் பயன்படுத்துவது சிறந்ததாகும், ஏனெனில் அவை நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்துகிறது மற்றும் வழிபடுவதற்கும் பிரார்த்தனை செய்வதற்கும் ஏற்றதாகும்,
 
  • கிரீம் நிறம் பூஜை அறைக்கு ஏற்ற நிறமாகும்.
 
  • லைட்டான நீலம், வெள்ளை, மற்றும் லைட்டான மஞ்சள் நிறங்கள் அமைதியான மற்றும் தியானம் செய்வதற்கு ஏற்ற சுற்றுப்புறத்தை உருவாக்குகிறது.

 

  • வடகிழக்கு திசையில் உள்ள பூஜை அறைக்கு, வெள்ளை நிறம் ஏற்றதாகும்.

 


    மேலும் படிக்கவும்: உங்களின் வீட்டைச் சிறப்பாகப் பெயிண்ட் செய்வதற்கான உதவிக்குறிப்புகள்

  1. 6. பூஜை அறையில் உள்ள வெளிச்சம்:

 

  • பகல் நேரத்தில் பூஜை அறை வெளிச்சமாக இருப்பதற்கு ஒரு சன்னலாவது இருப்பது முக்கியமாகும். பூஜை அறைக்கான வாஸ்து படி, இது சூரியனின் நேர்மறை ஆற்றலும் அதிர்வுகளும் வெளிப்பட அனுமதிக்கிறது.
 
  • சூரியன் மறைந்த பிறகும் அறையில் வெளிச்சம் இருப்பதை உறுதி செய்யவும். போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய, ஒரு லைட் அல்லது விளக்கை பூஜை அறையில் வைக்கவும்.

 



 பூஜை அறை மிகவும் புனிதமானதாகும், அதை வாஸ்து படி வைப்பது வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருப்பதை உறுதி செய்யும். உங்களின் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும், உங்களின் புனிதமான மற்றும் மகிழ்ச்சியான வீட்டில் எதிர்மறை ஆற்றல் இல்லாததை உறுதி செய்யவும் பூஜை அறைக்கான இந்த வாஸ்து உதவிக்குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றவும்.


உங்கள் வீட்டின் பிரதானக் கதவைச் சரியான இடத்தில் வைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் நுழையும் ஆற்றலைக் கட்டுப்படுத்தி, எதிர்மறை ஆற்றலில் இருந்து உங்களின் வீட்டைப் பாதுகாக்கவும்.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....