வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



கட்டுமானத்தில் ஷோரிங்: 12 வகைகள், விரிவாக விளக்கம்

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • ஷோரிங் கட்டுமானம் என்பது குழி தோண்டுதல் மற்றும் கட்டிட மாற்றங்கள் செய்யும் போது கட்டிடத்தின் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய மிகவும் முக்கியமானதாகும்.

     

  • 12 வகையான ஷோரிங் கட்டுமான முறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பிராஜெக்ட் தேவைகளுக்கு ஏற்றவை.

     

  • சரியான வகை ஷோரிங் கட்டுமான முறையை தேர்வு செய்யும்போது, கட்டுமான பிராஜெக்டின் திறன் மற்றும் பாதுகாப்பு அதிகம் மேம்படுத்தப்படும்.

     

  • வெவ்வேறு வகையான ஷோரிங் முறைகளின் தனித்துவமான பயன்பாடுகளை புரிந்து கொள்வதன் மூலம், கட்டுமான பிராஜெக்ட்களை சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்த முடியும்.



ஷோரிங் கட்டுமானம் என்பது கட்டிட திட்டங்களில் மிக முக்கியமான செயல்பாடாகும். குழி தோண்டுதல் அல்லது மாற்றங்கள் செய்யும் போது, இது கட்டிடங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குகிறது. இந்த வலைப்பதிவில், 12 வகையான ஷோரிங் கட்டுமான முறைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். ஒவ்வொன்றின் தனித்துவமான பயன்பாடுகளும் நன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன.

 

 


கட்டுமானத்தில் ஷோரிங் என்றால் என்ன?



ஷோரிங் கட்டுமானம் என்பது, கட்டுமான பிராஜெட்க்ளில், கட்டமைப்பில் ஏற்படும் இடியும் அபாயங்கள் மற்றும் நிலைத்தன்மையின்மையை தவிர்க்க உதவும் ஒரு தற்காலிக ஆதரவு அமைப்பாகும். பெரிய அளவிலான பிராஜெக்ட்களில் வேலை செய்யும்போது, பாதுகாப்பு மிகவும் அவசியமானது. முக்கியமாக குழி தோண்டும் போதோ அல்லது பழைய கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யும்போதோ பாதுகாப்பு மிகவும் அவசியம் ஆகும். சுவர்கள், காளம்கள் அல்லது அகழிகள் (trenches) போன்றவற்றிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம், இந்த ஷோரிங் கட்டமைப்புகள் கட்டுமானத்தின் செயல்பாட்டை எளிமையானதாகவும் மிக பாதுகாப்பானதாகவும் ஆக்குகின்றன.

 

12 வகையான ஷோரிங்

கட்டுமானத்தில் 12 அடிப்படையான ஷோரிங் வகைகள் இருக்கின்றன:

 

1. H மற்றும் I-பீம் ஷோரிங் (H and I-beam Shoring)

H மற்றும் I-பீம் ஷோரிங் கட்டுமானத்தில், குழி தோண்டும் சைட்களில் (excavation sites) ஆதரவு வழங்குவதற்காக ஸ்டீல் பீம்கள் நிலத்தினுள் அனுப்பப்படும். இந்த பீம்கள் பொதுவாக செங்குத்தாகவே வைக்கப்படும். மேலும் இது நகர்ப்புறங்களில், குறிப்பாக இடம்பற்றாக்குறை உள்ள இடங்களில் செய்யப்படும் ஆழமான குழி தோண்டல்களுக்கு ஏற்றது. இந்த பீம்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால், இது பல பிராஜெக்ட்களில் பொருளாதார ரீதியான சிறந்த தேர்வாக இருக்கிறது.

 

2. சீகண்ட் பைல் ஷோரிங் (Secant Pile Shoring)



இந்த சீகண்ட் பைல் ஷோரிங் முறையில், தொடர்ச்சியான சுவரை உருவாக்க ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் கான்கிரீட் பைல்கள் இன்ஸ்டால் செய்யப்படும். இந்த முறை, அதிகம் நீர் தேங்கும் இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நிலத்தடி நீர் நுழைவதை இது தடுக்கிறது. இது ஆழமான குழி தோண்டல்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக செங்குத்தான குழி தோண்டல்களுக்கு (vertical excavation) இடம் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

 

3. கான்டிகியஸ் பைல் ஷோரிங் (Contiguous Pile Shoring)

இந்த வகை ஷோரிங்கில், பைல்கள் சிறிய இடைவெளியுடன் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்படும். குழி தோண்டும்போது மண்ணிற்கு ஆதரவு அளிக்க இந்த முறை சிறந்ததாகும். நிலத்தின் தன்மை நிலையாக இருக்கும் பிராஜெட்களிலேயே இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பைல்களுக்கு இடையிலுள்ள இடைவெளிகள், நிலத்தடி நீர் ஓட்டத்தை அனுமதிக்கிறது. அதனால், குறைவான நீர் தேக்கம் இருக்கும் சைட்களுக்கு இத ஏற்றவை அல்ல.

 

4. ஷீட் பைல்ஸ் (Sheet Piles)



ஷீட் பைல்கள், நீளமான மெல்லிய ஸ்டீல் ஷீட்கள் ஆகும். இவை ஒரு தடையை உருவாக்க நிலத்தினுள் அனுப்பப்படுகின்றன. இவை பெரும்பாலும் நீர்பரப்பு இருக்கும் ஷோரிங் கட்டுமானங்கள் அல்லது மண் தாங்கும் தன்மை அதிகம் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஷீட் பைல்கள் பன்முகத்தன்மை கொண்டவை. இதை வேகமாக இன்ஸ்டால் செய்ய முடியும். அதனால், தற்காலிக ஷோரிங் தீர்வுகளுக்கு இது சிறந்த தேர்வாக அமைகின்றன.

 

5. டயாஃப்ராம் சுவர்கள் (Diaphragm Walls)



டயாஃப்ராம் சுவர்கள் என்பது நிலத்திற்குள் ஆழமாக கட்டப்படும் ரீஇன்போர்ஸ்ட் கான்கிரீட் சுவர்கள் ஆகும். நிரந்தர சுவர்கள் அல்லது டன்னல்கள் மற்றும் பேஸ்மண்டகள் போன்ற பெரிய கட்டமைப்புகளின் பவுண்டேஷனில் ஒரு பகுதியாகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த டயாஃப்ராம் சுவர்கள் அதிகமான நீடித்து நிலைக்கும் திறன் கொண்டவை, பல லோட்களை தாங்க கூடியவை என்பதால், பெரிய அளவிலான பிராஜெக்ட்களுக்கு ஏற்றவையாக இருக்கின்றன.

 

6. ரேக்கிங் ஷோரிங் (Raking Shoring)

ரேக்கிங் கட்டுமான ஷோரிங், கட்டமைப்புகள் அல்லது நிலத்திற்கு எதிராக ஆதரவு வழங்கும் கோணமான ஆதரவுகள் அல்லது ரேக்கர்களை உள்ளடக்கியது. கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும். சாய்வு அல்லது இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் கட்டிடங்களுக்கு சுவர்களை ஆதரவாக கொடுக்க வேண்டிய தேவை இருக்கும்போது, கட்டுமானத்தில் இந்த வகையான ஷோரிங் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரேக்கிங் ஷோரிங்கானது, கட்டமைப்பிற்கு சிறந்த ஒருங்கிணைப்புடன் கூடிய நிலைத்தன்மையை வழங்குகிறது.

 

7. ஹைட்ராலிக் ஷோரிங் (Hydraulic Shoring)



ஹைட்ராலிக் ஷோரிங் கட்டுமான முறையில், ஹைட்ராலிக் பிஸ்டன்களைப் பயன்படுத்தி, மெட்டல் ப்லேட்கள் அகழி சுவர்களுக்கு எதிராக அழுத்தப்படும். இதனால் இடிந்து விழும் அபாயங்கள் குறைகிறது. இந்த அமைப்புகள் எளிமையாக சரி செய்யக்கூடியது மற்றும் வேகமாக இன்ஸ்டால் செய்யகூடியவை. அதனால் இது அகழிகள் தோண்டும் பணிகளில் சிறந்ததாக அமைகிறது. இந்த ஹைட்ராலிக் ஷோரிங் திரும்ப பயன்படுத்தப்படக் கூடியது. அதனால் இவை திரும்ப திரும்ப செய்யப்படும் பணிகளுக்கு செலவுகளை குறைக்கும் தீர்வாக அமைகிறது.

 

8. சாயில் நெயில் ஷோரிங்+B71 (Soil Nail Shoring+B71)

சாயில் நெயில் ஷோரிங் கட்டுமான முறையில், ஸ்டீல் பார்க்ளுடன் (நெயில்களுடன்) மணல் ரீஇன்ஃபோர்ஸ் செய்யப்பட்டு, நிலத்தினுள் அனுப்பப்படும். பிறகு கான்கிரீட் கல் அல்லது ஷாட்கிரீட் ஃபேசிங் மூலம் பாதுகாக்கப்படும். இந்த முறை ஸ்லோப்கள் மற்றும் சுவர்களை நிலைப்படுத்துகிறது. இருக்கை குறைவான (steep gradients) பகுதிகள் அல்லது மண்ணின் தன்மை உறுதியில்லாத நிலையில் இருக்கும் இடங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

 

9. டிம்பர் ஷோரிங் (Timber Shoring)



டிம்பர் ஷோரிங் கட்டுமான முறை, அகழிகள் மற்றும் கட்டுமானங்களுக்கு ஆதரவு அளிக்க, மர பீம்கள் மற்றும் பலகைகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் மிக பழமையான முறைகளில் ஒன்றாகும். நவீன கட்டுமானங்களில் இந்த வகை ஷோரிங் குறைவாகவே காணப்பட்டாலும், சிறு பிராஜெக்ட்கள் அல்லது பாரம்பரிய முறைகள் தேவைப்படும் இடங்களில் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன. விருப்பப்பட்ட படி மாற்றி அமைக்கும் தன்மை டிம்பர் ஷோரிங்கிற்கு அதிகம் உள்ளது. மெட்டல் மற்றும் கான்கிரீட்டை ஒப்பிடும் போது இதன் நீடித்து உழைக்கும் திறன் மிகக் குறைவானதே.

 

10. டெட் ஷோரிங் (Dead Shoring)

டெட் ஷோரிங்கில், செங்குத்தான ஆதரவுகள் லோடிற்கு கீழ் நேரடியாக வைக்கப்படும். இதனால் இடிந்து விழும் அபாயங்கள் தவிர்க்கப்படும். பழுது பார்க்கப்படும் கட்டுமானங்கள் அல்லது மாற்றங்கள் செய்யப்படும் கட்டுமானங்களில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக சுவர்களை அகற்றவும் மாற்றவும் பெரிதும் பயன்படுகின்றன. வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும், கட்டமைப்பை நிலையாக பாதுகாக்க, இந்த டெட் ஷோரிங் உதவுகிறது.

 

11. ஃப்ளையிங் ஷோரிங் (Flying Shoring)

இரண்டு இணையான சுவர்களுக்கு இடையேயுள்ள நிலங்கள் பாதிப்படையாமல் அதற்கு ஆதரவு வழங்க, ஃப்ளையிங் ஷோரிங் முறை பயன்படுத்தப்படுகிறது. சுவர்களுக்கு இடையே கிடைமட்ட ஆதரவுகள் வைக்கப்படும். இது ஒரு பாலம் போன்ற அமைப்பை உருவாக்கி கீழிருக்கும் நிலத்திற்கு எந்த தொந்தரவையும் ஏற்படுத்தாமல் கட்டமைப்பிற்கு நிலைத்தன்மையை வழங்கும். இந்த முறை நெருக்கமான நகர்புற இடங்களில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

 

12. நியூமேட்டிக் ஷோரிங் (Pneumatic Shoring)

நியூமேட்டிக் ஷோரிங், அகழியின் சுவரை நிலைப்படுத்த காற்றின் அழுத்தத்தை பயன்படுத்துகிறது. இந்த முறை வேகமாக அமைக்கப்படக்கூடியது. இறுக்கமில்லாத மணல், மென்மையான மணல் இருக்கும் பகுதிகள் மற்றும் மற்ற ஷோரிங் வகைகள் பெரிதும் வேலை செய்யாத இடங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையான ஷோரிங் கட்டுமானம், எடை குறைவானதாகவே இருக்கும். மேலும், எளிமையாக இதை சரி செய்ய முடியும். அதனால் இவை, பல்வேறு அகழி தேவைகளுக்கு ஏற்ப சிறந்த தீர்வுகளை வழங்குகிறது.



கட்டுமான பிராஜெக்ட்களில் ஷோரிங் கட்டுமானம் மிக அவசியமானதாகும். இது தான் பல நிலைகளில் கட்டுமான தோல்விகளை தவிர்த்து தேவையான ஆதரவை வழங்குகிறது. 12 வகையான ஷோரிங் கட்டுமான முறைகளை நாம் பார்த்தோம். ஆழமான நகர்புற குழி தோண்டுதலில் இருந்து, பாரம்பரிய டிம்பர் ஆதரவு வழங்கும் அமைப்பு வரை, இந்த வகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன்பாட்டினைக் கொண்டது. ஒவ்வொரு ஷோரிங் முறையின் பயன்களையும் நாம் புரிந்துக் கொள்ளும்போது, கட்டுமான பிராஜெக்ட்களில் பாதுகாப்பு மற்றும் திறன் அதிகரிக்கும். மேலும் செலவுகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. ஷோரிங்கின் நோக்கம் என்ன?

கட்டுமான ஷோரிங்கின் அடிப்படை நோக்கம் கட்டுமான பிராஜெக்ட்களில் கட்டமைப்பிற்கும், குழி தோண்டுதலுக்கும் தற்காலிக ஆதரவை வழங்குவதே ஆகும். இது நிலைத்தன்மையை வழங்கி, இடியும் அபாயங்களை குறைக்கும்.

 

2. கட்டுமானத்தில் ஷோரிங் அமைப்பு ஏன் அவசியமானது?

கட்டுமானத்தில் ஷோரிங் அமைப்புகள் மிக அவசியமானதாகும். இவை தான் சைட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பை பராமரிக்கிறது. முக்கியமாக குழு தோண்டும் போது அல்லது கட்டமைப்பை மாற்றி அமைக்கும் போது பெரிதும் உதவுகின்றது.

 

3. சிறந்த வகையான ஷோரிங் எது?

ஷோரிங் கட்டுமானத்தில் சிறந்த வகை எது என்பது பிராஜெக்டின் குறிப்பிட்ட தேவையை பொறுத்தே இருக்கிறது. மண்ணின் தன்மை, குழி தோண்டுதலின் ஆழம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகிய அனைத்தையும் பொறுத்தே உள்ளது. சீகண்ட் பைல் ஷோரிங் நீர் தேங்கும் இடங்களுக்கு ஏற்றவை. H மற்றும் I-பீம் ஷோரிங் நகர்ப்புறங்களில் செய்யப்படும் ஆழமான குழி தோண்டுதலுக்கு ஏற்றவை.

 

4. ஷோரிங்கிற்கு எந்த மெட்டீரியலைப் பயன்படுத்தலாம்?

ஸ்டீல், கான்கிரீட், டிம்பர் மற்றும் காற்றை பயன்படுத்தும் நியூமேட்டிக் அமைப்புகள் போன்ற பல்வேறு மெட்டீரியல்களின் மூலம் இந்த ஷோரிங் கட்டுமானங்களை உருவாக்கலாம். பிராஜெக்டின் தேவை மற்றும் எந்த வகையான ஷோரிங் தேவை என்பவற்றை பொறுத்தே மெட்டீரியலின் தேர்வு இருக்கிறது.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....