வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



வீடு கட்டுவதில் கான்கிரீட் மிக்ஸ் அளவு பற்றி அனைத்தும் 

சிமெண்ட், மணல் மற்றும் ஜல்லி எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லையா? வலிமையான கான்கிரீட் பெற உதவும் டிப்ஸ் மற்றும் மிக்ஸ் அளவுகளை இந்த வழிகாட்டி விளக்குகிறது. 

Share:


முக்கிய அம்சங்கள்

 

  • கான்கிரீட் மிக்ஸ் அளவுதான் அதன் வலிமையையும் நீடித்து உழைக்கும் தன்மையையும் தீர்மானிக்கிறது

  • சரியான கான்கிரீட் மிக்ஸ் விகிதம் விரிசல்களையும் பாதிப்புகளையும் தடுக்கும்

  • ஒவ்வொரு கட்டிட அமைப்புக்கும் ஒவ்வொரு விதமான கான்கிரீட் மிக்ஸ் அளவு தேவைப்படும்

  • சரியான கான்கிரீட் மிக்ஸ் விகிதம் நீண்ட கால செலவைக் குறைக்கும்

  • சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கு இணையாகத் தண்ணீரின் அளவும் மிக முக்கியம்



கான்கிரீட் மிக்ஸில் உள்ள பொருட்களைப் புரிந்துகொள்ளுதல்

சரியான கான்கிரீட் மிக்ஸ் அளவு நான்கு முக்கியப் பொருட்களைப் பொறுத்தது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி பங்கு உண்டு.


சிமெண்ட்

சிமெண்ட் என்பது பிணைக்கும் பொருளாகச் செயல்படுகிறது. தண்ணீர் சேர்க்கும்போது மணலையும் ஜல்லியையும் இது ஒன்றாகச் சேர்க்கிறது. சிமெண்டின் தரமும் அளவும் வலிமையை நேரடியாகப் பாதிக்கும். சிமெண்ட் அதிகமானால் செலவும் சுருக்கமும் அதிகமாகும், குறைந்தால் கட்டிடம் பலவீனமாகும்.

 

டிப்ஸ்: கான்கிரீட் விகிதம் சரியாக இருக்க எப்போதும் புதிய சிமெண்டையே பயன்படுத்துங்கள்.



மணல்

மணல் ஜல்லிகளுக்கு இடையிலுள்ள இடைவெளியை நிரப்பி கான்கிரீட்டுக்கு வழவழப்பைத் தருகிறது. சுத்தமான, சரியான தரம் பிரிக்கப்பட்ட மணல் நல்ல பிணைப்பைத் தரும். கான்கிரீட் மிக்ஸ் சரியாக இருந்தாலும், அழுக்கான அல்லது களிமண் நிறைந்த மணல் வலிமையைக் குறைத்துவிடும்.

 

சின்ன டிப்ஸ்: சரியான கான்கிரீட் கலவைக்கு அலசிய மணலைப் பயன்படுத்துங்கள்.



ஜல்லி (சரளைக்கல்/உடைக்கப்பட்ட கற்கள்)

கான்கிரீட் மிக்ஸின் பெரும் பகுதி ஜல்லிதான். இதுதான் கட்டிடத்தின் எடையைத் தாங்கும் வலிமையைத் தருகிறது. தரமான ஜல்லி நீடித்து உழைக்கும் தன்மையை அதிகரித்து சிமெண்ட் தேவையைக் குறைக்கும்.



தண்ணீர்

தண்ணீர் சிமெண்ட்டைச் செயல்பட வைத்து கலக்க உதவுகிறது. ஆனால் அதிகத் தண்ணீர் கான்கிரீட்டைப் பலவீனப்படுத்தும். மிக்ஸ் விகிதம் சரியாக இருந்தாலும் தண்ணீர் அதிகமானால் வலிமை குறைந்துவிடும்.

 

சின்ன டிப்ஸ்: கான்கிரீட் கலக்கும்போது தண்ணீரைத் தோராயமாக ஊற்றாமல் எப்போதும் அளந்து ஊற்றுங்கள்.



கான்கிரீட் மிக்ஸ் அளவுகளின் வகைகள்

வெவ்வேறு கட்டுமான வேலைகளுக்கு வெவ்வேறு விதமான கான்கிரீட் மிக்ஸ் அளவுகள் தேவை.

 

 

1. நாமினல் மிக்ஸ் கான்கிரீட்



நாமினல் மிக்ஸ் கான்கிரீட் என்பது மிகவும் அடிப்படையான மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கான்கிரீட் வகை. இதில் பொருட்கள் லேப் பரிசோதனை இன்றி நிலையான அளவுகளில் கலக்கப்படுகின்றன. உதாரணமாக, 1:2:3 என்றால் 1 பங்கு சிமெண்ட், 2 பங்கு மணல் மற்றும் 3 பங்கு ஜல்லி. 1:2:4 என்பதும் ஒரு பொதுவான அளவு.

இந்த அளவுகள் அனுபவத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படுபவை. சைட்-இல் இவற்றைப் பின்பற்றுவது எளிது. தொழிலாளர்கள் எடையைப் பார்ப்பதற்குப் பதில் சட்டி அல்லது வாளிகளைப் பயன்படுத்துவார்கள். எனவே, தரமானது சரியான மேற்பார்வையைப் பொறுத்தே அமையும்.

 

 

நாமினல் மிக்ஸ் பொதுவாகச் சிறிய குடியிருப்பு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது:

  • வீட்டின் தரைத்தளம்

  • நடைபாதைகள்

  • சிறிய சிலாப்கள்

  • குறைந்த உயரமுள்ள வீடுகளுக்கான அஸ்திவார வேலைகள்

 

எளிமை மற்றும் குறைந்த செலவுதான் இதன் சாதகமான அம்சம். ஆனால் லேப் பரிசோதனை செய்யப்படாததால், அதிக எடையைத் தாங்கும் போது இது நம்பகமானதாக இருக்காது.

 

சின்ன டிப்ஸ்: நாமினல் மிக்ஸை தயாரிக்கும் போது தண்ணீரின் அளவைச் சரியாகப் பராமரிக்கவும். அளவு சரியாக இருந்தாலும் அதிகத் தண்ணீர் வலிமையைக் குறைத்துவிடும்.

 

 

2. ஸ்டாண்டர்ட் மிக்ஸ் கான்கிரீட்

இது நாமினல் மிக்ஸை விடக் கட்டுப்பாடானது. நிலையான அளவுகளுக்குப் பதில், இவை M15, M20 அல்லது M25 போன்ற குறிப்பிட்ட கிரேடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. 'M' என்பது மிக்ஸைக் குறிக்கும், எண் என்பது 28 நாட்களுக்குப் பிறகு அதன் அழுத்த வலிமையை மெகாபாஸ்கலில் (எம்பிஏ) குறிக்கும்.

 

உதாரணமாக:

  • வீடுகள் கட்ட M20 பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

  • சற்று கூடுதல் வலிமை தேவைப்படும் இடங்களில் M25 பயன்படுத்தப்படுகிறது.

 

ஒரு குறிப்பிட்ட வலிமையைப் பெற ஸ்டாண்டர்ட் மிக்ஸ் அளவுகள் வடிவமைக்கப்படுகின்றன. இது பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலும், நாமினல் மிக்ஸை விடச் சிறந்த தரத்தை உறுதி செய்கிறது.

 

ஸ்டாண்டர்ட் மிக்ஸ்கள் இவற்றுக்கு ஏற்றவை:

  • குடியிருப்பு சிலாப்கள்

  • பீம்கள் மற்றும் தூண்கள்

  • அடித்தளப் பகுதி

  • சிறிய வணிகக் கட்டிடங்கள்

 

சாதாரண நிலையான அளவுகளை விட இந்த வகை மிகச் சிறந்த நீடித்து உழைக்கும் தன்மையையும் வலிமையையும் தரும்.

 

சின்ன டிப்ஸ்: வீட்டின் பீம்கள் மற்றும் சிலாப்கள் போன்றவற்றுக்குச் சிறந்த பாதுகாப்புக்காக நாமினல் மிக்ஸை விட ஸ்டாண்டர்ட் மிக்ஸையே தேர்வு செய்யுங்கள்.

 

 

3. டிசைன் மிக்ஸ் கான்கிரீட்

டிசைன் மிக்ஸ் கான்கிரீட் என்பது மிகவும் மேம்பட்ட மற்றும் நம்பகமான கான்கிரீட் வகை. இதில் சிமெண்ட், மணல், ஜல்லி போன்றவற்றை லேப்பில் பரிசோதித்த பிறகே சரியான மிக்ஸ் அளவு கணக்கிடப்படுகிறது.

 

இன்ஜினியர்கள் சோதிப்பது:

  • பொருட்களின் வலிமை

  • நீர் உறிஞ்சுதல்

  • வேலைத்திறன்

  • தேவையான அழுத்த வலிமை

 

இந்தச் சோதனைகளின் அடிப்படையில், அதிகபட்ச வலிமை மற்றும் செயல்திறனைப் பெறச் சரியான விகிதம் உருவாக்கப்படுகிறது. இது யூகங்களைத் தவிர்த்துப் பெரிய எடையைத் தாங்கும் வகையில் கட்டுமானத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது.

 

டிசைன் மிக்ஸ் கான்கிரீட் இவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது:

  • பல மாடி கட்டிடங்கள்

  • பாலங்கள்

  • வணிக வளாகங்கள்

  • அதிக எடையைத் தாங்கும் அமைப்புகள்

 

இது சிறந்த வலிமை, நீடித்து நிலைக்கும் தன்மை மற்றும் சரியான பொருள் பயன்பாட்டை வழங்குகிறது. சற்றுச் செலவு அதிகமானாலும், இது விரயத்தைக் குறைத்து நீண்ட காலப் பலனைத் தரும்.

 

சின்ன டிப்ஸ்: பெரிய அல்லது பல மாடி வீடுகளுக்கு, சிறந்த பாதுகாப்புக்காக இன்ஜினியரிடம் ஆலோசித்துப் பின் டிசைன் மிக்ஸ் கான்கிரீட்டைப் பயன்படுத்துங்கள்.


பல்வேறு கான்கிரீட் கிரேடுகளுக்கான மிக்ஸ் விகிதங்கள்

கான்கிரீட் விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட வலிமையைப் பெறச் சிமெண்ட், மணல் மற்றும் ஜல்லி கலக்கப்படும் அளவாகும். இவை வழக்கமாகச் சிமெண்ட்: மணல்: ஜல்லி என்ற முறையில் குறிக்கப்படும். கான்கிரீட்டின் வலிமை, நீடித்து நிலைக்கும் தன்மை மற்றும் வேலைத்திறனை இது நேரடியாகப் பாதிப்பதால் மிக்ஸ் அளவு மிக முக்கியம்.

 

பொதுவான கிரேடுகள் மற்றும் அவற்றின் மிக்ஸ் விகிதங்கள் பற்றிய எளிய விளக்கம் இதோ:

  • M10 – 1:3:6
    இதன் பொருள் 1 பங்கு சிமெண்ட், 3 பங்கு மணல் மற்றும் 6 பங்கு ஜல்லி. இது தரை மட்டம் செய்தல், நடைபாதைகள் போன்ற அதிகப் பலம் தேவையில்லாத வேலைகளுக்குப் பயன்படுகிறது.

  • M15 – 1:2:4
    இந்த கான்கிரீட் நடுத்தர வலிமையைத் தருகிறது. சிறிய வீடுகள், தரைத்தளம் மற்றும் எளிய அஸ்திவாரங்களுக்கு இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

  • M20 – 1:1.5:3
    வீடு கட்டும் போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் கிரேடு இது. வீட்டின் தளங்கள், பீம்கள் மற்றும் தூண்களுக்கு இந்த அளவு ஏற்றது.

  • M25 – டிசைன் மிக்ஸ்
    மற்ற கிரேடுகள் போலல்லாமல், M25 பொதுவாக டிசைன் மிக்ஸ் முறையைப் பின்பற்றுகிறது. நிலையான அளவுக்குப் பதில் லேப் சோதனைகள் மூலம் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கேற்ப இதன் விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.

     

இந்த கான்கிரீட் மிக்ஸ் விகிதங்கள் பல்வேறு கட்டுமானத் தேவைகளுக்குப் பாதுகாப்பையும் உறுதியையும் அளிக்கின்றன.

 

 

கான்கிரீட் விகித முறைகள்

கான்கிரீட் விகித முறைகள் என்பது கலவையில் சிமெண்ட், மணல், ஜல்லி மற்றும் தண்ணீரின் சரியான அளவைத் தீர்மானிக்கப் பயன்படும் செயல்முறையாகும். கான்கிரீட் தேவையான வலிமை, நீடித்து நிலைக்கும் தன்மை மற்றும் வேலைத்திறனைப் பெறுவதை இந்த முறைகள் உறுதி செய்கின்றன. 

 

1. ஆர்பிட்ரரி முறை

இது அனுபவத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் முறை. சிறிய வேலை இடங்களில் இதைப் பார்க்கலாம்.

இருப்பினும், இது சீரற்ற கான்கிரீட் கலவைக்கு வழிவகுக்கும்.

டிப்ஸ்: முக்கியமான கட்டுமான வேலைகளுக்கு இந்த முறையைத் தவிர்க்கவும்.

 

2. ஃபைன்னெஸ் மாடுலஸ் முறை

இந்த முறை மணல் மற்றும் ஜல்லியின் தரவரிசைக்கு ஏற்ப அளவுகளை மாற்றியமைக்கும்.

இது சிறந்த கான்கிரீட் கலவையைப் பெற உதவுகிறது.

டிப்ஸ்: மணலின் தரம் மாறிக் கொண்டே இருக்கும்போது இது ஏற்றது.

 

3. மேக்சிமம் டென்சிட்டி முறை

வெற்றிடங்களைக் குறைக்கப் பொருட்களை நெருக்கமாகச் சேர்ப்பதே இம்முறையின் நோக்கம்.

இது குறைவான சிமெண்டைப் பயன்படுத்தி அதிக வலிமையைத் தரும்.

டிப்ஸ்: சிக்கனமான கட்டுமானத்திற்கு இது சிறந்தது.

 

 

மிக்ஸ் அளவைப் பாதிக்கும் காரணிகள்

பாதிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்வது, கான்கிரீட் சிறப்பாகச் செயல்படவும், நீடித்து நிலைக்கவும் மற்றும் நீண்ட காலப் பாதுகாப்பைத் தரவும் உதவும்.

 

வலிமைத் தேவைகள்

அதிக வலிமை தேவைப்பட்டால் தண்ணீரின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இது கான்கிரீட் மிக்ஸ் அளவை நேரடியாகப் பாதிக்கும்.

 

வேலைத்திறன்

கான்கிரீட் வேலை செய்ய எளிதாக இருக்க அதிகத் தண்ணீர் தேவைப்படும், ஆனால் அது வலிமையைக் குறைக்கும். எனவே சரியான சமநிலையைப் பராமரிப்பது முக்கியம்.

டிப்ஸ்: கான்கிரீட் இலகுவாக இருக்க அதிகத் தண்ணீர் ஊற்றுவதற்குப் பதில், அட்மிக்ஸ்சர்களைப் (வலிமையைக் குறைக்காமல் தன்மையை மேம்படுத்தும் ரசாயன அல்லது தாதுப் பொருட்கள்) பயன்படுத்துங்கள்.

 

சுற்றுச்சூழல் நிலைமைகள்

தண்ணீர் அல்லது ரசாயனங்கள் படக்கூடிய கான்கிரீட்டுக்குச் சிறப்பு மிக்ஸ் விகிதங்கள் தேவை.

டிப்ஸ்: கடற்கரை ஓரப் பகுதிகளில் இன்னும் வலிமையான மிக்ஸ் தேவைப்படும்.

 

குறிப்பிட்ட பயன்பாடு

அடித்தளங்கள், தளங்கள் மற்றும் தூண்களுக்கு வெவ்வேறு விதமான கான்கிரீட் மிக்ஸ் விகிதங்கள் தேவை.

 

டிப்ஸ்: எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான சிமெண்ட் கலவையைப் பயன்படுத்தாதீர்கள்.

 

 

கான்கிரீட் சிமெண்ட் மிக்ஸின் நன்மைகள்

சரியான கான்கிரீட் மிக்ஸ் விகிதம் இவற்றை வழங்கும்:

  • அழுத்தத்தைத் தாங்கும் அதிகத் திறன்

  • நீண்ட ஆயுள்

  • விரிசல் எதிர்ப்புத் திறன்

  • எடையை நன்றாகத் தாங்கும்

 

கட்டுமானப் பொருட்கள் வீணாவதைக் குறைத்தால், குறைந்த செலவில் சரியான வீட்டை கட்ட முடியும்.

 

 

கான்கிரீட் கலவை விகிதத்தில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்

கான்கிரீட் கலவை விகிதத்தில் செய்யும் சின்ன தவறுகளால்தான் பல கட்டுமானப் பிரச்சனைகள் வருகின்றன. வேலை செய்ய சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கூடுதல் தண்ணீர் சேர்ப்பது ஒரு பொதுவான தவறு. இது கலவையைச் சுலபமாக்கினாலும், கான்கிரீட் கலவை விகிதத்தைப் பலவீனப்படுத்தி உலர்ந்த பிறகு வலிமையைக் குறைத்துவிடும்.

 

தரமான அளவைப் பெட்டிகளைப் பயன்படுத்தாமல் மண்வெட்டிகளால் அளப்பது போன்ற முறையற்ற முறைகளைப் பயன்படுத்துவது மற்றொரு தவறு. இது ஒவ்வொரு முறையும் தவறான கலவை விகிதத்திற்கே வழிவகுக்கும். 

 

பொருட்களைச் சரியாகச் சேமிக்காததும் ஒரு பிரச்சனைதான். ஈரப்பதம் பட்ட சிமெண்ட் அதன் பிணைப்புத் தன்மையை இழந்து, கலவையின் தரத்தைப் பாதிக்கும்.



நீண்ட கால உழைப்பிற்கு கான்கிரீட் கலவை விகிதத்தின் பங்கு

சரியான கான்கிரீட் கலவை வெறும் கட்டிடத்தை மட்டும் பிடித்துக் கொள்ளாது. இது விரிசல், கசிவு மற்றும் மேற்பரப்புச் சேதங்கள் போன்ற நீண்ட காலப் பிரச்சனைகளில் இருந்து கட்டிடத்தைப் பாதுகாக்கிறது. சரியான விகிதத்தில் கலப்பது கான்கிரீட் சுருங்குவதைக் குறைத்து, வானிலை மாற்றங்களைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கும்.

 

அதிக மழை அல்லது வெப்பநிலை மாற்றம் உள்ள இடங்களில், சரியான கான்கிரீட் கலவை விகிதங்கள் அடிக்கடி பழுதுபார்ப்புகள் இல்லாமல் கட்டிடம் நீண்ட காலம் நீடிக்க உதவும். இது குறிப்பாக அஸ்திவாரம், ஸ்லாப்புகள் மற்றும் வெளிச் சுவர்களுக்கு மிகவும் முக்கியமானது.

 

குறிப்பு: ஆரம்பத்திலேயே சரியான சிமெண்ட் கலவையைத் தேர்ந்தெடுப்பது பின்னாளில் வரும் பழுதுபார்ப்புச் செலவுகளை மிச்சப்படுத்தும்




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. கான்கிரீட்டிற்கான 1 2 3 கலவை என்றால் என்ன?

இதன் பொருள் 1 பங்கு சிமெண்ட், 2 பங்கு மணல் மற்றும் 3 பங்கு ஜல்லி. இது பொதுவாகச் சாதாரண வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

 

2. கான்கிரீட் கலக்கக் கடல் நீரைப் பயன்படுத்தலாமா?

வேண்டாம். கடல் நீர் வலுவூட்டும் கம்பிகளைப் பாதிக்கும் மற்றும் சிமெண்ட் கலவையின் ஆயுளைக் குறைக்கும்.

 

3. கான்கிரீட்டிற்குச் சரியான விகிதம் எது?

கான்கிரீட்டிற்கு என்று ஒரே ஒரு சரியான விகிதம் கிடையாது. அது எங்குப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் எவ்வளவு எடையைத் தாங்க வேண்டும் என்பதைப் பொறுத்தது.

 

4. மிகவும் வலிமையான கான்கிரீட் கலவை எது?

டிசைன் மிக்ஸ் கான்கிரீட் அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படலாம் என்பதால், கான்கிரீட் கலவை விகித வகைகளிலேயே மிக உயர்ந்த வலிமையை வழங்குகிறது.

 

5. கான்கிரீட் கலவையின் 'டார்கெட் மீன் ஸ்ட்ரெந்த்' என்றால் என்ன?

இது பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய, தேவைப்படும் தரம் அல்லது கிரேடை விடக் கூடுதல் சராசரி வலிமையைக் குறிக்கிறது.


தொடர்புடைய கட்டுரைகள்


பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....