1. படிக்கட்டு திசையமைவிற்கான வாஸ்து
படிக்கட்டானது கிழக்கிலிருந்து மேற்கு அல்லது வடக்கிலிருந்து தெற்காக கட்டப்பட வேண்டும். இந்த திசையமைவு சூரிய உதயத்துடன் ஒத்துப் போகிறது மற்றும் படிக்கட்டு பாசிடிவ் எனர்ஜியை திறம்பட காப்பதை உறுதிப்படுத்துகிறது.
2. படிக்கட்டுக்கான வாஸ்து, வீட்டின் மேற்கு அல்லது தெற்கில் படிக்கட்டுகளை வைக்க பரிந்துரைக்கிறது.
உங்கள் படிக்கட்டை வீட்டின் மேற்கு அல்லது தெற்கு பகுதிகளில் நிலை நிறுத்துங்கள். இந்த திசைகள் வலிமை மற்றும் நிலைத்தன்மைக்கு சுக்ஷமானவை மற்றும் வீட்டின் செழிப்பு மீதான நெகடிவ் பாதிப்பை குறைக்கின்றன.
3. வாஸ்துப்படி படிக்கட்டிற்கு ஸ்பைரல் வடிவத்தை தவிர்க்கவும்
ஸ்பைரல் படிக்கட்டுகள் நெகடிவ் ஆற்றல் சுழற்சிக்கு வழிவகுக்கும் என எண்ணப்படுகிறது. அதற்குப் பதிலாக பாசிடிவ் எனர்ஜியின் சீரான ஓட்டத்திற்கு உதவிகரமாக இருக்கும் நேரான படிக்கட்டுகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
4. படிகளின் எண்ணிக்கைக்கான வாஸ்து குறிப்பு
படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும், பூஜ்ஜியத்தில் முடியக்கூடாது என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். இந்த அமைப்பு நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் மற்றும் பாசிடிவ் எனர்ஜி சுழற்சியை பராமரிக்கும் என நம்பப்படுகிறது.
5. வாஸ்துப்படி படிக்கட்டின் நிலை
ஒருபோதும் படிக்கட்டை வீட்டின் மையப்பகுதியில் (பிரம்மஸ்தானம்) நிலைநிறுத்தாதீர்கள், இது காஸ்மிக் எனர்ஜிகளின் ஓட்டத்தை சீர்குலைக்கும். தென்மேற்கு பகுதி பெரும்பாலும் சிறந்த இடமாக கருதப்படுகிறது.
6. படிக்கட்டுக்கான வாஸ்துப்படி பிரம்மஸ்தானத்திலிருந்து விலகியே இருங்கள்.
வீடு முழுவதும் நன்மை பயக்கும் ஆற்றல்களின் ஓட்டம் தடைபடாமல் இருக்க பிரம்மஸ்தானம் என்று அறியப்படும் வீட்டின் மையப்பகுதியானது படிக்கட்டுகள் போன்ற கடினமான கட்டமைப்புகளின்றி இருக்க வேண்டும்.
7. வீட்டிற்கு வெளியே உள்ள படிக்கட்டுக்கான வாஸ்து
வெளிப்புற படிக்கட்டுகளுக்கு, தென்கிழக்கு மற்றும் வடமேற்கு திசைகள் பொருத்தமானவை. பாசிடிவ் எனர்ஜி உள்வருவதை ஊக்குவிக்க, படிகட்டுகள் வடகிழக்கு நோக்கி ஏறுவது சரியானதாகும்.
8. படிக்கட்டு சேமிப்பிற்கான வாஸ்து
படிக்கட்டிற்கு கீழே உள்ள இடைவெளியை சேமிப்பிற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் குழப்பங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் மற்றும் தடையில்லா ஆற்றல் ஓட்டத்திற்காக அவ்விடம் ஒழுங்காக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
9. வாஸ்துப்படி படிக்கட்டுகளுக்கு வெளிர் நிறங்கள் (லைட் கல்ர்ஸ்) நல்லது
வெளிர் நிறங்கள் அதிக ஒளி மற்றும் பாசிடிவ் எனர்ஜியை ஈர்க்கும், வெளிப்படைத்தன்மை மற்றும் அமைதியை உருவாக்கும் என நம்பப்படுவதால் அந்நிறங்கள் படிகட்டிற்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
10. படிக்கட்டிற்கு அருகில் உள்ள கதவுக்கான வாஸ்து குறிப்பு
எந்த கதவும் படிக்கட்டை நேராக நோக்கி இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாக வாசல் கதவு வாயில் படிக்கட்டை நேராக நோக்கி இருக்கக்கூடாது. அவ்வாறு செய்வது வீட்டிலிருந்து ஆற்றலை வெளியேற்றி வசிப்பவர்களின் நல்வாழ்வை பாதிக்கும்.
படிக்கட்டு கைப்பிடிகளுக்கான சில வாஸ்து குறிப்புகள் யாவை?