வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



M10 கான்கிரீட் விகிதத்தை தீர்மானிப்பது எப்படி?

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • அதிக வலிமை தேவைப்படாத இலகுவான கட்டுமான பிராஜெக்ட்களுக்கு இந்த M10 கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது.

     

  • M10 கான்கிரீட் கலவை விகிதம், ஒரு பங்கு சிமெண்ட், மூன்று பங்கு மணல் மற்றும் ஆறு பங்கு அக்ரிகேட்டால் உருவாக்கப்பட்டது.

     

  • சரியான விகிதம் மற்றும் கலக்கும் செயல்முறையை புரிந்துகொள்ளும் போது, கான்கிரீட்டின் நீடித்து உழைக்கும் திறன் மற்றும் வலிமையை உறுதி செய்ய முடியும்.



கான்கிரீட் கட்டுமானத்தை பொறுத்தவரை, M10 கான்கிரீட் விகிதம் என்பது போதுமான வலிமை தேவைப்படும் பிராஜெக்ட்களில் பயன்படுத்தப்படும் பொதுவான கலவை விகிதம் ஆகும். சிறந்த வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் திறனை அடைய சரியான M10 விகிதத்தை புரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். M10 கான்கிரீட் விகிதத்தின் கலவை அதன் கூறுகள், அளவீட்டு செயல்முறை மற்றும் பொதுவான பயன்பாடுகள் ஆகியவற்றை இந்த வழிகாட்டி விரிவாக விளக்கும்.

 

 


M10 கான்கிரீட் - முன்னுரை

M10 கான்கிரீட், குறைவான வலிமை தேவைப்படும் பிராஜெக்ட்களுக்கு பயன்படுத்தப்படும். இது 28 நாட்கள் கியூரிங் செய்யப்பட பிறகு, 10 Mpa (மெகாபிக்சல்) என்ற அதிக வலிமை நிலையை அடையும். மற்ற கான்கிரீட் க்ரேட்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான வலிமையே. M10 கான்கிரீட் விகிதம் பொதுவாக பாதைகள், ஃப்ளோரிங் மற்றும் கான்கிரீட் ப்ளாக்குகள் (concrete blocks) போன்ற அதிக லோட் தேவைப்படாத, கட்டமைப்பு இல்லாத கூறுகளுக்கே பயன்படுத்தப்படும்.



M10 கான்கிரீட் க்ரேடின் அடிப்படை கூறுகள் என்ன?

M10 கான்கிரீட்டின் கூறுகள்:

 

1. சிமெண்ட்: கலவையை இறுக்கமாக கலக்கும் ஒரு பசையாக பைண்டராக இது வேலை செய்யும்.

2. மணல்: இது கான்கிரீட்டிற்கு பருமனை வழங்கி, கான்கிரீட்டின் வேலைத்திறனை அதிகரிக்கும்.

3. கரடுமுரடான அக்ரிகேட்ஸ்: ஜல்லி அல்லது நொறுக்கப்பட்ட கற்கள் கலவைக்கு கூடுதல் வலிமை மற்றும் நிலைத்தன்மையை கொடுக்கிறது.

4. தண்ணீர்: இது ஹைட்றேஷனுக்கு (நீரேற்றம்) மிக அவசியமாகும். இது கான்கிரீட்டை கனமாக்கும் கெமிக்கல் ரியாக்ஷனை தூண்டும்.

 

தரமான M10 கான்கிரீட் விகிதம் 1:3:6 ஆகும். அதாவது, ஒரு பங்கு சிமெண்ட், மூன்று பங்கு மணல் மற்றும் ஆறு பங்கு அக்ரிகேட். இந்த விகிதம், பயன்படுத்துவதற்கு ஏதுவான சமநிலை மற்றும் சீராக வேலை செய்யக்கூடிய கலவையை வழங்குகிறது.

 

 

M10 கான்கிரீட் கலவைக்கான அளவீட்டு செயல்முறை என்ன?

M10 கான்கிரீட் விகிதத்தை அளவீடு செய்ய, இந்த முறைகளை பின்பற்றுங்கள்:

 

1. மெட்டீரியல்களை அளவிடுங்கள்: ஒவ்வொரு சிமெண்ட் மூட்டைக்கும், மூன்று பங்கு மணல் மற்றும் ஆறு பங்கு மணல் அல்லது ஆக்ரிகேட்டை பயன்படுத்தவும்.

2. காய்ந்த கூறுகளை கலக்கவும்: சிமெண்ட், மணல் மற்றும் அக்ரிகேட்டை சீரான நிறத்தை அடையும் வரை நன்கு கலக்கவும்.

3. காய்ந்த கலவையில் தண்ணீர் சேர்க்கவும். சிமெண்ட் எடையில் சுமார் 50% அளவு தண்ணீரை சேர்த்து, கான்கிரீட் பதத்தை அடையும் வரை கலக்கவும்.

4. பதத்தை டெஸ்ட் செய்யவும்: கலவை வேலை செய்வதற்கு வசதியாக இருக்க வேண்டும். ஆனால் அதிகமாக ஈரமாக இருக்கக்கூடாது. அதை நன்கு காம்பேக்ட் செய்த பிறகு, அதன் வடிவத்தை அது நிலைநிறுத்த வேண்டும்.

 

M10 கான்கிரீட்டின் சரியான வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் திறனை அடைய, சரியான அளவீடுகளைப் பின்பற்றி அதனை நன்கு கலக்குவது மிகவும் முக்கியமானதாகும்.

 

 

M10 கிரேட் கான்கிரீட்டின் பயன்பாடுகள்



M10 க்ரேட் கான்கிரீட் பொதுவாக இவற்றில் பயன்படுத்தப்படும்:

 

  • சப்ஃப்ளோரிங் (subflooring): இது ஃப்ளோரிங் மெட்டீரியல்களில் நிலையான அடித்தளத்தை உருவாக்கும்.

  • நடைப்பாதைகள் (pavements): அதிக வலிமை தேவைப்படாத, பாதைகள் மற்றும் பேஷியோக்களுக்கு (patio) இவை ஏற்றவை.

  • ஃபில்லிங் (filling) மற்றும் லெவல்லிங் (levelling): இது ஃபில் மெட்டீரியாலாக பயன்படுத்தப்படுகிறது. அல்லது வலுவான கான்கிரீட் லேயரை போடுவதற்கு முன் மேற்பரப்புகளை லெவல் செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

  • லோட் தாங்கும் திறன் அதிகம் தேவைப்படாத சுவர்கள்: கட்டமைப்புக்கான லோட்களை சுமக்காத சுவர்கள் கட்டுமானத்திற்கு இவை சிறந்தவை.

     

இதன் பல்துறை பயன்பாடுகள் M10 கான்கிரீட்டை பல்வேறு கட்டுமான பிராஜெக்ட்களுக்கு சிறந்த தேர்வாக ஆக்குகிறது.




இந்த M10 கான்கிரீட் விகிதத்தை புரிந்துக்கொண்டு இதனை சரியாக பயன்படுத்துவது, கட்டுமானத்தில் விரும்பிய முடிவுகளை அடைய மிகவும் அவசியமாகும். தரமான கலவையான 1:3:6 விகிதத்தை வைத்து, இந்த M10 கான்கிரீட் இலகுவான பிராஜெக்ட்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. சரியான கலவையையும் அளவீட்டையும் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கான்கிரீட் அதன் நோக்கத்திற்கேற்ப உறுதியும் செயல்திறனும் வாய்ந்ததாக அமையும்.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. M10 கான்கிரீட்டில் எத்தனை சிமெண்ட் மூட்டைகள் இருக்கும்?

M10 கான்கிரீட்டிற்கு, ஒரு கன மீட்டருக்கு (cubic meter) சுமார் 8 சிமெண்ட் பைகள் தேவைப்படும்.

 

2. M10 கான்கிரீட் விகிதத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்?

ஒரு கன மீட்டர் கான்கிரீட்டிற்கு அதன் வேலை செய்யும் திறனிற்கு ஏற்ப, 160 லிருந்து 180 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும்.

 

3. M10 -இன் விகிதம் என்ன?

தரமான M10 கான்கிரீட் கலவை விகிதம் 1:3:6 ஆகும். அதாவது, 1 பங்கு சிமெண்ட், மூன்று பங்கு மணல் மற்றும் 6 பங்கு அக்ரிகேட்.

 

4. 7 நாட்களில் M10 கான்கிரீட்டின் வலிமை அளவு என்ன?

7 நாட்கள் கழித்து M10 கான்கிரீட்டின் வலிமை சுமார் 7 MPa (மெகாபாஸ்கல்) இருக்கும். மேலும் 28 நாட்களில் கழித்து, 10 MPa என்ற அளவில் அதன் முழு வலிமையை அடையும்.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....