வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான சுவர்கள் யாவை?

நம்முடைய வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வடிவமைப்பையும், பாதுகாப்பையும், அழகிய தோற்றத்தையும் வழங்கும் பல்வேறு சுவர் வகைகளை அறிவோம்.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • சுமை தாங்கும் சுவர்கள் கட்டிடத்தின் முழு எடையையும் தாங்கி, அதனை அஸ்திவாரத்திற்கு சமமாகப் பரப்புவதன் மூலம் கட்டிடத்திற்குத் தாங்கும் அமைப்பை உறுதிப்படுத்துகிறது.

     

  • ப்ரீகாஸ்ட் கான்கிரீட் சுவர்கள் எளிதில் மற்றும் துல்லியமாக நிறுவப்படுவதால், அவை அடிப்படை ஆதரவுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

     

  • தடுப்புச் சுவர்கள் மண் அல்லது தண்ணீரைத் தடுத்து நிறுத்துகின்றன, மேலும் சாய்வான நிலப்பரப்புகளில் நிலச்சரிவை தடுக்க உதவுகின்றன.

     

  • மோர்டார் பயன்படுத்தி செங்கற்கள் அல்லது கற்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு உருவாக்கப்படும் சுவர்களே மேசன்ரி சுவர்கள் எனப்படுகின்றன. இவை நீடித்து உழைக்கக் கூடியதாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்.

  •  

  • சுமை தாங்காத சுவர்கள் எந்தவொரு கட்டமைப்பு சுமையையும் சுமக்காமல் வெறும் ரூம்ஸ் போன்ற இடங்களை பிரிப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.

  •  

  • செங்கல், கான்கிரீட் மற்றும் கல் போன்ற பொருட்கள், அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் தன்மையின் காரணமாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.



சுவர்கள் என்பது கட்டிட அமைப்பின் முக்கியமான பகுதியாகும். இவை கட்டிடத்தின் எடையை தாங்குவதுடன், உள்ளமைப்பை அழகாக மாற்றுதல் போன்ற பல்வேறு வேலைகளை செய்கின்றன. அவை இடங்களைத் தெளிவாக பிரித்து, தனியுரிமையை வழங்குகின்றன. இவை கட்டிடத்தில் வெப்பமடைதல் கட்டுப்பாடு மற்றும் ஒலி தடுப்பு (சவுண்ட் ப்ரூபிங்) பண்புகளுக்கும் பங்களிக்கின்றன. கட்டுமானத் துறையில் பல்வேறு வகையான சுவர்கள் பயன்படுகின்றன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் நோக்கங்களைக் கொண்டுள்ளன. சில சுவர்கள் கட்டிடத்தை தாங்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன, மற்றவை வெறும் இடங்களைப் பிரிக்கும் சுமை தாங்காத சுவர்களாக அமைக்கப்படுகின்றன. கட்டுமான நிபுணர்கள், கட்டிட பராமரிப்பு அல்லது புதுப்பிப்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் ஆகிய இருவருக்கும் சுவர் வகைகள் குறித்து தெளிவாகத் தெரிந்திருப்பது மிக அவசியமாகும். இந்த பதிவில், கட்டுமானத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான சுவர் வகைகள் குறித்து அறிவோம். மேலும் அவற்றின் பண்புகள் மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகளில் அவை எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் விளக்குவோம்.

 

 


கட்டிடக் கட்டுமானத்தில் உள்ள சுவர்களின் வகைகள்

ஒரு கட்டிடத்தின் அமைப்பில் பலவகை சுவர்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு சுவரும் வெவ்வேறு காரணங்களுக்காக கட்டப்படும், சில கட்டமைப்பைத் தாங்குவதற்காக, சில சுவர்கள் அழகிய அம்சங்களுக்காக. கட்டிட துறையில் பயன்படுத்தப்படும் இந்த பல்வேறு கட்டுமான சுவர் வகைகளில் சிலவற்றை காண்போம்.

 

1. சுமை தாங்கும் சுவர்கள்



கட்டிடத் துறையில், பாரம் தாங்கும் சுவர்கள் மிக முக்கியமானவை. இவைகள் இல்லாமல் கட்டிடத்தின் மேலடுக்கு அமைப்புகள் நிலைத்து நிற்க முடியாது. இந்த உறுதியான சுவர்கள், கட்டிடத்தின் முழு பாரத்தையும் தாங்குறது. பீம்ஸ், ஸ்லாப்ஸ் மற்றும் சுவர்களின் சொந்த எடையும் சேர்த்து உருவாக்கும் அழுத்தங்களையும் இவை தாங்கி, கீழ் அடித்தளத்திற்கு மாற்றுகின்றன. இந்த சுவர்கள் செயல்பாட்டுப் பயனுக்கு மட்டும் இல்லாமல், டிசைன்கும் முக்கியம். இவை உள்புறமாகவோ வெளிப்புறமாகவோ அமைந்து, தரை மாடியிலிருந்து கூரை வரை உள்ள கட்டிடத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் அதன் அமைப்பு உறுதியாக இருக்க இவை மிகவும் தேவையானவை.

 

2. ப்ரீகாஸ்ட் கான்கிரீட் சுவர்கள்



ப்ரீகாஸ்ட் கான்கிரீட்டால் உருவாக்கப்பட்ட இந்த சுவர்கள், தங்களின் வலிமை, துல்லியம், மற்றும் வேகமான நிறுவல் முறைக்கு பாராட்டப்படுகின்றன. இவை ஒரு கட்டிடத்தின் அடிப்படை ஆதாரமாக செயல்படுகின்றன.

 

3. தடுப்புச் சுவர்கள்



இந்த வகை சுவர்கள் மண்ணை அல்லது நீரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டவை. இயற்கை நில அமைப்புகளில் நிலச்சரிவு ஏற்படாதபடி பாதுகாக்கவும், சரிவான நிலங்களில் மெட்டுகள் உருவாக்கவும் பயன்படுகின்றன.

 

4. மேசனரி சுவர்கள்



மேசன்ரி சுவர்கள் என்பது செங்கல் அல்லது கல் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, அவை மோர்டார் மூலம் இணைக்கப்பட்டு கட்டப்படும் சுவர் வகையாகும். இவை நீடித்து உழைக்கக் கூடியதாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்.

 

5. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பாரம் தாங்கும் உலோக கம்பி சுவர்கள்

இந்த வகை சுவர்கள் முன் தயாரிக்கப்பட்டவை, அதாவது கட்டிட இடத்தில் கட்டப்படாமல், தொழிற்சாலை போன்ற வேறு இடத்தில் உலோகக் கம்பிகளால் உருவாக்கப்படுகின்றன. இவை பாரம் தாங்கும் பயன்பாடுகளுக்குத் தேவையான நிலைத்தன்மையும், எளிய நிறுவல் வசதியும் வழங்குகின்றன.

 

6. எஞ்சினியரிங் செங்கல் சுவர்



பொறியியல் செங்கற்கள் எனப்படுவது, ஈரப்பதத்தை குறைவாக உறிஞ்சும் தன்மை( குறைந்த போரோசிட்டி) மற்றும் அதிக அழுத்த வலிமை கொண்ட செங்கற்கள். இவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டப்படும் சுவர்கள், வலுவான பாரம் தாங்கும் திறனுடன் அமைக்கப்படும்.

 

7. கல் சுவர்



கல் சுவர்கள் என்பது இயற்கையில் கிடைக்கும் கற்களை வெட்டி வடிவமைத்து கட்டப்படும் சுவர்களாகும். அவை ஒவ்வொரு கட்டிடத்திற்கும் காலத்தை கடந்த அழகையும் சுமை தாங்கும் வலிமையையும் வழங்குகின்றன.

கட்டிடங்கள் அதிக உயரத்திற்கு செல்லும்போது, அவற்றின் பாரத்தை தாங்க சுவர்களின் தடிப்பும் அதிகரிக்கும். இதனால் அஸ்திவாரத்திற்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, கட்டுமான செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில், திட்டமிடுதல் மிகவும் அவசியம்.

 

8. பாரம் தாங்காத சுவர்கள்

பாரம் தாங்காத சுவர்களின் பணி முற்றிலும் வேறுபட்டதாகும். அவைகளின் பொறுப்பு, தங்கள் சொந்த எடையை மட்டும் தாங்குவது ஆகும். ரூம்கள் அல்லது உள்நிலை இடவெளிகளை பிரிக்க உதவுகின்றன. பீம்ஸ், ஸ்லாப்ஸ் போன்ற அமைப்புகளின் பாரத்தைத் தாங்கும் அவசியம் இல்லை.

 

9. ஹாலோ கான்கிரீட் பிளாக்



இந்த சுவர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான காரணம், அவை மிக குறைந்த எடையுடன் இருக்கின்றன. மேலும் இவை வெப்பத்தை தடுக்கக்கூடிய பண்புகளை கொண்டுள்ளதால், இது கட்டிடத்தின் உள்நிலை சூழலை (குளிர்ச்சி அல்லது வெப்பநிலை) சீராக வைத்திருக்க உதவுகிறது.

 

10. முகப்பு செங்கற்கள்

முகப்பு செங்கற்கள் கட்டிடங்களுக்கு ஓர் அழகிய வெளிப்புற முகத்தை வழங்குகின்றன. இவை கட்டமைப்புக்கு எந்தவித ஆதரவையும் வழங்காமல், வெளிப்புற அழகை மட்டும் மேம்படுத்துகின்றன.

 

11. ஹாலோ செங்கற்கள்



வெற்று குழாய் போனற அமைப்பை கொண்ட இச்செங்கற்கள் வெப்பத்தையும் ஒலியையும் தடுக்கின்றன, அதேசமயம் இவை மிக எளிதாக நகர்த்தக்கூடிய, பாரம் தாங்காத இடைச்சுவர்களை உருவாக்கும் வேலைக்கு மிகவும் ஏற்றவை.

 

12. மெல்லிய செங்கல் சுவர்கள்



கட்டிடத்தின் அமைப்பு பாதிக்காமல் உட்புற இடங்களை பிரிக்க மெல்லிய செங்கல் சுவர்கள் உதவுகின்றன. இது இடம் மற்றும் செலவை ஒரே நேரத்தில் சிக்கனமாக்கும் ஒரு அற்புதமான தீர்வாகும்.

 

இன்று பலவகை சுவர் வகைகள் கிடைப்பதால், கட்டுமான நிபுணர்கள் ஒவ்வொரு திட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் தேர்வுகளை சரிசெய்து கொள்ள முடியும். கட்டிடத்திற்கு அவசியமான ஆதரவினை வழங்குவதிலிருந்து, அழகான வடிவமைப்புகளுடன் கூடிய வரவேற்கும் இடங்களை உருவாக்குவது வரை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் சுவர்கள் ஒரு சிறந்த கட்டிட வடிவமைப்பின் அடித்தளமாக அமைகின்றன.

 

 

கட்டுமானத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான சுவர் பொருட்கள்

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் சுவர் பொருட்கள், கட்டிடத்தின் பல்வேறு அம்சங்களை தீர்மானிக்கின்றன. ஒரு கட்டிடத்தின் நிலைத்தன்மை, அழகு, வெப்ப மற்றும் ஒலி தனிமைப்படுத்தல், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் ஆகியவை அனைத்தும் சுவர் பொருட்களின் தன்மையைப் பொறுத்தே அமைகின்றன. அதிகமாகப் பயன்படுத்தப்படும் சில சுவர் பொருட்கள் பற்றிய சுருக்கமான விளக்கம் இங்கே:

 

1. செங்கல்:



மிகப் பழமையான மற்றும் மரபு வாய்ந்த கட்டுமானப் பொருட்களில் ஒன்று எனப்படும் செங்கல், அதன் நீடித்த தன்மை, தீ தடுப்பு, மற்றும் வெப்பத்தை தாங்கும் தன்மைகளால் பரவலாக விரும்பப்படுகிறது. இது ஆற்றல் திறனைக் கூட அதிகரிக்க உதவுகின்றது.

 

2. கான்கிரீட் ப்ளாக்ஸ்:



இவை செலவு குறைந்தவை மற்றும் அதிக செயல்த்திறன் கொண்டவை, தீயை தடுக்கக்கூடியவை மற்றும் வெப்பம், ஒலியிலிருந்து பாதுகாப்பும் அளிக்கக்கூடியவை.

 

3. கல்:



இயற்கை கல் (இயற்கையாக உருவாகும் ஒரு கட்டுமானப் பொருள்) ஒப்பற்ற அழகையும் தனித்துவத்தையும் வழங்குவதுடன், மிகச்சிறந்த நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் தீ எதிர்ப்பையும் கொண்டுள்ளது. இதன் வெப்பநிலையை கட்டுப்படுத்தி , கட்டிடத்தின் ஆற்றல் திறனைக் மேம்படுத்த உதவுகிறது.

 

4. மரம்:



மரச் சுவர்கள் கட்டிடங்களுக்கு இயற்கை அழகு மற்றும் ஒளிரும் வெப்பத்தைக் கொண்டுவருகின்றன. இவை எடைக்குறைவாக இருப்பதோடு, வெப்ப மற்றும் ஒலி தடுப்பு அம்சங்களும் கொண்டுள்ளன. ஆனால், தீ எதிர்ப்பு மற்றும் நீடித்த தன்மைக்காக சரியான பாதுகாப்பு தேவைப்படுகிறது.

 

5. உலோக பலகைகள் (மெட்டல் பேனல்ஸ்):



நவீன தொழில்துறை மற்றும் வணிக கட்டிடங்களில் உலோக பலகைகள்(மெட்டல் பனெல்ஸ்) அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை நீடித்து உழைக்கும் தன்மை, தீயை எதிர்க்கும் திறன் உள்ளவை, மேலும் அழகான வடிவமைப்பிற்காக பலவகை டிசைன்களில் கிடைக்கின்றன.

 

6. கண்ணாடி:



கண்ணாடி சுவர்கள் இயற்கை ஒளியை அதிகரித்து, உட்புறத்தை பெரிதாகவும் வெளிச்சமாகவும் காட்டுகின்றன. இருப்பினும், சிக்கனமான ஆற்றல் திறன் மற்றும் தனியுரிமைக்கான பாதுகாப்பு குறித்த கவனிப்பும் அவசியம்.

 

7. அடோப் (மண் செங்கல்) மற்றும் ரேம்ட் எர்த் (தட்டிய மண் சுவர்):

இந்த நிலையான பொருட்கள் அவற்றின் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் சிறந்த வெப்பத் தளர்வு காரணமாக மீண்டும் பிரபலமடைந்து வருகின்றன, மேலும் இது ஆற்றல் திறன் கொண்ட வடிவமைப்புகளுக்கு ஏற்றது.



கட்டுமானத் துறையில் பலவகையான சுவர் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பயன்களும் சிறப்பம்சங்களும் உள்ளன. செங்கல், கான்கிரீட் ப்ளாக்ஸ் மற்றும் கல் போன்ற பொருட்கள் நீடித்த தன்மை மற்றும் தீ தடுப்பு ஆகியவற்றை வழங்குகின்றன, எனவே இவை சுமைத் தாங்கும் பயன்பாடுகளுக்கு ஏற்றதாகும். மரம் மற்றும் மெட்டல் பேனல்கள் தனித்துவமான அழகியல் மற்றும் செயல்பாடு நன்மைகளை வழங்குகின்றன. அதே சமயம், கண்ணாடி இயற்கை ஒளியை உள்ளே கொண்டு வந்து, திறந்த வெளித் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அடோப் மற்றும் ரேம்ட் எர்த் போன்ற இயற்கை மாற்றுப்பொருட்கள் இன்றுள்ள கட்டுமானத்திற்கு மிகச் சிறந்தவை. ஒவ்வொரு கட்டுமானப் பொருளின் பண்புகளை நன்கு அறிந்து கொண்டால், கட்டிடத்தின் வலிமை,தோற்றம், வெப்பம் அல்லது ஒளியை தனிமைப்படுத்தும் திறன் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகிய அம்சங்களை சமநிலைப்படுத்தி சரியானவையை தேர்ந்தெடுக்க முடியும்.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. சிறந்த சுவர் வகை எது?

"சிறந்த" ஒரு கட்டிடத்திற்கு உகந்த சுவர் வகை, அதன் பயன்பாட்டு நோக்கம், அமைவிடம், காலநிலை மற்றும் அழகியல் தேவைகள் போன்ற பல காரணங்களின் அடிப்படையில் அமையும். கட்டிடத்திற்குத் தேவையான உறுதியையும், தீ பாதுகாப்பையும் வழங்குவதில் செங்கல் மற்றும் கான்கிரீட் சிறந்தவை. அதேசமயம் கண்ணாடி மற்றும் மெட்டல் பேனல்கள் இயற்கை ஒளியை அதிகரிக்கும் நவீன வடிவமைப்புகளுக்கு ஏற்றவையாக உள்ளன. மரம் இயற்கையான தோற்றத்தையும், வெப்பத்தை பராமரிக்கும் தன்மையையும் வழங்குகிறது. நிலையான கட்டுமானத்திற்கு, அடோப் மற்றும் ரேம்ட் எர்த் போன்ற பொருட்கள் மிகவும் பொருத்தமானவை. இறுதியில், சிறந்த கட்டுமானத் தீர்வு என்பது செயல்பாடு, வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவற்றிற்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவதில் தான் உள்ளது.

 

2. RCC சுவரின் மற்றொரு பெயர் என்ன?

RCC என்பதன் விரிவாக்கம் (ரீயின்ஃபோர்ஸ்டு சிமெண்ட் கான்கிரீட்) ஆகும். இதன் மற்றொரு பெயர் ரீயின்ஃபோர்ஸ்டு கான்கிரீட் சுவர். இது கான்கிரீட் அழுத்தத்தைத் தாங்கும் திறனையும், ஸ்டீல் ரீயின்ஃபோர்ஸ்மென்ட் பார்ஸ் எனப்படும் கம்பிகளின் இழுவை சக்தியையும் இணைந்து, கட்டிடத்துக்கு தேவையான வலிமையை வழங்குகின்றன. இதன் விளைவாக, கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பற்ற பயன்பாடுகளுக்கு பொருத்தமான ஒரு வலிமை மற்றும் நீடித்த தன்மை கொண்ட சுவர் உருவாகிறது.

 

3. கட்டமைக்கப்பட்ட சுவர் என்றால் என்ன?

ஒரு கட்டமைக்கப்பட்ட சுவர் என்பது சாதாரண சுவர் அல்ல. இதில் ரீயின்ஃபோர்ஸ்மென்ட் கம்பிகள் (ஸ்டீல் ரீபார்ஸ் ) போன்ற பலப்படுத்தல்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இது சுமைதாங்கும் திறன், நீடித்த தன்மை மற்றும் அழுத்தங்களை எதிர்க்கும் தன்மையை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட ஒரு சுவர் அமைப்பாகும். இந்தச் சுவர்கள் ஒரு கட்டிடத்தின் எடையைத் தாங்கவும், மற்றும் புயல், நிலநடுக்கம் போன்ற சுற்றுச்சூழல் சக்திகளை எதிர்க்கவும், கட்டமைப்பு ஒருங்கிணைப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

 

4. ஈர்ப்புச் சுவர் (கிராவிட்டி சுவர்) என்றால் என்ன?

கிராவிட்டி (ஈர்ப்பு) சுவர் என்பது மண் அல்லது தண்ணீரை தடுக்க அதன் எடையை பயன்படுத்தும் தடுப்புச் சுவர் ஆகும். இது பொதுவாக கல், கான்கிரீட் அல்லது மேசன்ரி போன்ற கனமான பொருட்களால் கட்டப்பட்டிருக்கும். ஈர்ப்புச் சுவர்கள், அவற்றின் எடையின் மூலம் பின்னால் இருந்து வரும் அழுத்தத்தைத் தாங்கி, சரிவுகளை நிலைப்படுத்துவதற்கும், மண் அரிப்பைத் தடுப்பதற்கும் ஏற்றதாக அமைகின்றன.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....