பைல் ஃபவுண்டேஷன்களின் பலன்கள் என்ன?
கட்டுமானத்தில் பைல் ஃபவுண்டேஷன்களை பயன்படுத்துவதால் கிடைக்கும் முக்கிய பலன்களை புரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்..
1. வலிமைக்காக ஆழமாக செல்கிறது.
மேற்பரப்பு மண் கடினமான கட்டமைப்புகளை ஆதரிப்பதற்கு பலவீனமாக அல்லது மிகவும் இலகுவாக இருக்கும் போதும் பைல் ஃபவுண்டேஷன்கள் பூமிக்கடியில் ஆழமாக, பலமான மண் அடுக்குகளை சென்றடைந்து கட்டிடங்களை நிலையாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறது.
2. தண்ணீர் தேங்கும் கட்டுமான தளங்களுக்கு நல்லது
மண் மிகவும் ஈரமாக உள்ள இடங்களில், அதாவது கடலோரம் அல்லது ஆறருகில் இருக்கும் இடங்களில், மண்ணின் கீழுள்ள உறுதியான அடித்தளத்தை இந்த பைல் ஃபவுண்டேஷன்களால் அடைய முடியும். இவை திடமான அடித்தளத்தை எட்டுவதால், மண் திடீரென சரிவதையோ நகர்வதையோ தடுக்கும்.
3. குறைந்த அதிர்வு (வைப்ரேஸன்)
போர்ட் பைல்கள் போன்ற சில பைல் வகைகள் நிலத்தை அதிகமாக குலுக்காமல் நிறுவப்படுகின்றன, இது ஏற்கனவே உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு அருகில் அவற்றிற்கு எந்தவொரு சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.
4. பன்முகத்தன்மை மற்றும் நெகிழ்வானது
சைட்டில் இடம் குறைவாக இருந்தாலும் சரி, நிலம் பாறை போன்று இருந்தாலும் சரி, மண்ணில் அதிக தண்ணீர் இருந்தாலும் சரி கிட்டத்தட்ட ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற பைல் வகைகள் இருக்கின்றன. இதனால், பல்வேறு கட்டுமான பிராஜெக்ட்களுக்கு இந்த பைல் ஃபவுண்டேஷன்கள் சிறந்த தேர்வாக இருக்கிறது.
5. சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்வுகள் (eco-friendly)
ஸ்க்ரூ பைலிங் போன்ற முறைகள் குறைந்த கழிவுகளை உருவாக்கின்றன. மற்றும் அவற்றிற்கு அதிக மண்ணை தோண்ட தேவையில்லை என்பதால் சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது அவற்றை மிகவும் நிலையான தேர்வாக ஆக்குகிறது.
பைல் ஃபவுண்டேஷன்களில் பயன்படுத்தப்படும் மெட்டீரியல்கள்
பைல் ஃபவுண்டேஷனின் பலன்களை நாம் புரிந்து கொண்டோம்; இப்போது, இதில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு மெட்டீரியல்கள் மற்றும் அவற்றின் சிறப்பு பயன்பாடுகளையும் பார்ப்போம்.
1. டிம்பர் பைல்ஸ் (Timber Piles)
மிகவும் கடினமான கட்டிடங்களைத் தாங்க வேண்டிய தேவையில்லாத ப்ராஜெக்ட்களுக்கு, அல்லது குறைந்த பட்ஜெட்டில் நீங்கள் வேலை செய்யும் சந்தர்ப்பங்களில் டிமப்ர் பைல்ஸ் சிறந்த தேர்வாகும். இது பியர்கள் அல்லது டாக்கள் போன்ற, நீரின் அருகாமையில் இருக்கும் ப்ராஜெக்ட்களுக்கு சிறந்ததாகும். ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். மரம் அழுகக்கூடியது என்பதால், இது நிலத்தடி நீர் மட்டத்திற்கு மேல் அல்லது குடிநீர் பகுதிகளில் தான் சிறப்பாக செயல்படும்.
2. கான்கிரீட் பைல்ஸ் (Concrete Piles)
கான்கிரீட் என்பது கட்டுமான மெட்டீரியல்ஸின் ஒரு சூப்பர்ஹீரோ ஆகும். இது வலிமையானது மற்றும் நீடித்து உழைக்ககூடிய தன்மை கொண்டது. இதில் இரண்டு வகைகள் உள்ளன: ப்ரீகாஸ்ட் (Precast ), தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பின்னர் கட்டிட இடத்திற்கு கொண்டு வரப்படும். காஸ்ட்-இன்-ப்ளேஸ் (Cast-in-place0, இடத்தின் நிலத்தில் குழி தோண்டி அதில் நேரடியாக கான்கிரீட் ஊற்றுவது. இந்த கான்கிரீட் பைல்ஸ் உயரமான கட்டிடங்கள் அல்லது பெரிய பாலங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், இவற்றால் அதிக சுமைகளை (லோட்) தாங்க முடியும் மற்றும் இது துருப்பிடிக்கவோ நீரில் மோசமடைய்வோ செய்யாது.
3. ஸ்டீல் பைல்ஸ் (Steel Piles)
ஸ்டீல் பைல்ஸ் மிகவும் வலிமையானவை மற்றும் கடினமான மண் அல்லது கற்கள் அடங்கிய நிலத்திற்குள் இதை பயன்படுத்த முடியும். கட்டிடம் மிகவும் பருமனாக இருந்தால் அல்லது நிலம் கடினமாக இருந்தால் இவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இவை அகற்றப்பட்டால் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றை மறுசுழற்சி செய்யவும் முடியும். அதனால் இவை சுற்றுச்சூழலுக்கு பலனளிக்கும் வகையில் இருக்கின்றன.
4. காம்போசிட் பைல்ஸ் (Composite Piles)
இவை கீழ் பகுதியில் ஸ்டீல் கொண்டு செய்யப்பட்டு நிலத்தில் துளையிடுவதற்கு வலிமை அளிக்கின்றன. மேல் பகுதியில் கான்கிரீட் கொண்டு செய்யப்பட்டு சுமைகளை தாங்குவதற்கும் அழுகலுக்கு எதிரான பாதுகாப்பிற்கும் பயன்படுகின்றன. ஒரு பொருள் மட்டும் போதுமாதாக இல்லாத சிக்கலான ப்ராஜெக்ட்களில், இரு மெட்டீரியல்களின் வலிமைகளை ஒரே பைலில் இணைத்து, இஞ்சினியர்கள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இவை பயன்படுத்தப்படுகின்றன.