வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



கட்டுமானத் துறையில் சென்ட்ரிங் வேலை என்றால் என்ன? – ஒரு எளிமையான வழிகாட்டி

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • சென்ட்ரிங் வேலை என்பது ஒரு தற்காலிகமான அமைப்பாகும். இது கட்டிடங்கள் மற்றும் அதன் முக்கிய கட்டமைப்புப் பகுதிகள் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்ளும் வரை அவற்றை தற்காலிகமாக ஆதரித்து நிறுத்தும் ஒரு அமைப்பு.

     

  • வளைந்த வடிவமைப்புகள், குறிப்பாக ஆர்ச்சுகள், வால்டுகள் மற்றும் டோம்கள் போன்றவற்றை கட்டும் போது, சென்ட்ரிங் வேலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

     

  • ஒரு கட்டிடத்தின் துல்லியத்தையும் பாதுகாப்பையும் பராமரிப்பதற்கு, சென்ட்ரிங் வேலை மிகவும் அவசியமானதாகும்.

     

  • டிம்பர் மரம், இரும்பு மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் போன்ற பல்வேறு விதமான பொருட்கள், கட்டுமான சென்ட்ரிங் வேலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.



கட்டுமானத் துறையில் சென்ட்ரிங் என்பது என்ன, அதன் முக்கியத்துவம், அதன் வகைகள் மற்றும் அது ஃபார்ம்வொர்க் மற்றும் ஷட்டரிங் ஆகியவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த எளிய வழிகாட்டி உதவும்.

 

 


கட்டுமானத் துறையில் சென்ட்ரிங் என்றால் என்ன



கட்டுமானத்தில் சென்ட்ரிங் என்பது கட்டுமான செயல்பாட்டின் போது கான்கிரீட்டை தாங்குவதற்கும், வடிவமைக்கவும் பயன்படுத்தப்படும் தற்காலிக கட்டமைப்புகளைக் குறிக்கிறது. ஆர்ச்சுகள், டோம்கள் மற்றும் வால்டுகள் போன்ற கட்டிட அம்சங்கள் தாங்களே தங்களை தாங்கிக்கொள்ளும் வரை, அவற்றின் வடிவத்தை உறுதியாக வைத்திருக்க இந்த சென்ட்ரிங் முக்கியமானதாக கருதப்படுகிறது. கட்டிட வேலைகளில் சென்ட்ரிங் மாதிரியான தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த ஃப்ரேம்கள், இறுதியில் கட்டிடம் சாயாமல், பாதுகாப்பாகவும் வலுவாகவும் நிலைத்து நிற்பதை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானவை.


கட்டுமானத்தில் சென்ட்ரிங்கின் முக்கியத்துவம்

கட்டிட வேலையில் சென்ட்ரிங் பணியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும். சரியான சென்ட்ரிங் இல்லையெனில், கட்டமைப்பின் முக்கிய கூறுகள் விரும்பிய வடிவத்தில் நிலைத்திருக்க முடியாமல் போகலாம், இதன் விளைவாக, கட்டிடம் இடிந்து விழுவதோ அல்லது கட்டிட சிதைவோ உருவாகலாம். இதனால் கட்டமைபில் தோல்வியும், திட்டத்தின் செலவுகள் உயர்வதோடு, திட்டம் தாமதமாகவும் முடிவடையும். ஆனால், சரியாக செய்யப்பட்ட சென்ட்ரிங், கட்டிட வடிவங்கள் துல்லியமாக உருவாகவும், கட்டிடம் நிலைத்து இருக்கவும் உதவுகிறது. மேலும் இது திட்டத்தை பாதுகாப்பாகவும், வெற்றியுடனும் முடிக்க உதவுகிறது.

 

 

கட்டிடத் துறையில் பயன்படுத்தப்படும் சென்ட்ரிங் வகைகள்

ஒவ்வொரு கட்டுமானத் திட்டத்தின் தேவையைப் பொருத்து, சென்ட்ரிங் பணிகளுக்கு வெவ்வேறு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான முக்கிய வகைகள் இவை:

 

டிம்பர் (மரம்) சென்ட்ரிங்

டிம்பர் சென்ட்ரிங்கில் தற்காலிக கட்டமைப்புகள் உருவாக்க மரப்பலகைகள் மற்றும் மரக்கம்பிகள் (பீம்ஸ்) பயன்படுத்தப்படுகின்றன. இதன் எளிதில் கிடைக்கும் தன்மை, தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யக்கூடிய தன்மை மற்றும் செலவு குறைவான தன்மை காரணமாக இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வடிவமைப்புகளுக்கு ஏற்றவாறு மரத்தை எளிதாக வெட்டப்படுவதும், வளைக்கப்படுவதும் முடியும் என்பதால், தனிப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் தனிப்பட்ட அளவுகள் தேவைப்படும் கட்டிட வேலைகளில் இந்த டிம்பர் சென்ட்ரிங் பயனுள்ளதாக உள்ளது.



ஸ்டீல் சென்ட்ரிங்

ஸ்டீல் சென்ட்ரிங் மரப்பொருட்களுக்கு பதிலாக உலோக கட்டமைப்புகளைப் பயன்படுத்துகிறது. இது அதிக நீடித்து உழைக்கும் திறனை கொண்டது மற்றும் பலமுறை மீண்டும் பயன்படுத்தக்கூடியது. இதனால், பெரிய வேலைகளுக்கும், நீண்ட நாள் திட்டங்களுக்கும் இது அதிக விருப்பத்துடன் தேர்வு செய்யப்படுகிறது. ஸ்டீல் சென்ட்ரிங் மரத்துடன் ஒப்பிடும்போது அதிகமான பாரங்களை தாங்கும் திறனைக் கொண்டது. மேலும், கட்டிடங்களை வடிவமைக்கும்போது மிகவும் துல்லியமான முடிவுகளை வழங்குகிறது.



மீண்டும் பயன்படுத்தக்கூடிய சென்ட்ரிங்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய சென்ட்ரிங் என்பது, மரம் மற்றும் ஸ்டீல் ஆகிய இரண்டின் பலன்களையும் ஒருங்கிணைத்ததாகும். இது, தேவைக்கு ஏற்ப பிரித்து, மறுபடியும் பொருத்தி வேறு கட்டிட திட்டங்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் செலவு குறைவாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பாகவும் இருக்கும். ஒரே மாதிரியான கட்டமைப்புகள் பல முறை மீண்டும் கட்டப்படும் வேளைகளில், இந்த மீண்டும் பயன்படுத்தக்கூடிய சென்ட்ரிங் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


ஃபார்ம்வொர்க், ஷட்டரிங் & சென்ட்ரிங் இடையே உள்ள வேறுபாடு

ஃபார்ம்வொர்க், ஷட்டரிங் மற்றும் சென்ட்ரிங் ஆகியவற்றின் வேறுபாட்டை புரிந்து கொள்வது, கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக அவசியமானதாகும்.

 

  • ஃபார்ம்வொர்க் என்பது கான்கிரீட்டை வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்க பயன்படுத்தப்படும் அனைத்து வகையான அச்சுகள் மற்றும் கட்டமைப்புகளைக் குறிக்கும் பெரும்பாலான சொல்.

     

  • ஷட்டரிங் என்பது, கான்கிரீட் கெட்டியாக உறுதியாகும் பொழுது அதன் வடிவத்தைப் சிதையாமல் பாதுகாக்க பலகைகள் அல்லது படுக்களை வைத்து ஒரு அச்சை உருவாக்கும் செயல்முறை ஆகும்.



  • சென்ட்ரிங் என்பது டோம்கள் அல்லது வால்ட்ஸ் போன்ற வளைந்த அல்லது ஆர்ச்சுகள் போன்றவற்றை வடிவமைக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை ஃபார்ம்வொர்க் ஆகும். இந்த தற்காலிக ஆதரவு கான்கிரீட் உறுதியாகும் வரை, அதை அதன் விரும்பிய வடிவத்தில் வைத்திருக்கும்.


சென்ட்ரிங் பணி, கட்டிடத் துறையில் அடிப்படை விஷயமாக கருதப்படுகிறது, குறிப்பாக வளைந்த வடிவங்களை உருவாக்க அல்லது டோம்கள், வால்ட்ஸ் போன்ற சிக்கலான கட்டிடங்களில் செயல்படுத்தும்போது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. சென்டரிங் பணி, தற்காலிக ஆதரவை வழங்கி, கட்டிடங்களின் வடிவத்தை மாறாமல் வைத்திருக்கும் செயலாகும், இதனால் இந்த கட்டமைப்புகள் சுய ஆதரவு பெறும் வரை நிலை பெறுகின்றன. டிம்பர், ஸ்டீல் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தினாலும், எந்தவொரு கட்டிடத் திட்டத்தையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு சென்ட்ரிங் பணி மி முக்கியமானதாக கருதப்படுகிறது.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. சென்ட்ரிங் பணியின் பெயர் என்ன?

சென்ட்ரிங் பணி பெரும்பாலும் 'தற்காலிக கட்டமைப்பு ஆதரவு' என அழைக்கப்படுகிறது, மேலும் இது கான்கிரீட் அல்லது கல் கட்டிடங்களை(மேசன்ரி), அவை தானாக நிலைத்து நிற்கும் நிலையை அடையும் வரை அவர்களின் வடிவங்களை பாதுகாக்கப் பயன்படுகிறது.

 

2. சென்ட்ரிங் செயல்முறை என்றால் என்ன?

சென்ட்ரிங் என்பது கட்டுமானத்தின் போது வளைவுகள் அல்லது டோம்கள் போன்ற கட்டமைப்புகளை வடிவமைக்கவும், அவற்றை தற்காலிகமாக ஆதரிக்கவும் பயன்படுத்தப்படும் கட்டமைப்புகளை உருவாக்கும் செயல்முறை ஆகும்.

 

3. சென்ட்ரிங் செயல்முறையின் கொள்கை என்ன?

கான்கிரீட் போன்ற கட்டுமானப் பொருள், முழுமையாக கடினமடைந்து, அந்த வடிவத்தைத் தக்கவைத்து பாதுகாக்கும் வரை கட்டிடக் கூறுகளுக்கு நிலைத்தன்மையும், சரியான வடிவமும் வழங்குவதே சென்ட்ரிங்கின் அடிப்படை கொள்கை ஆகும்.

 

4. சென்ட்ரிங் ஏன் செய்யப்படுகிறது?

கட்டுமான செயல்பாட்டின் போது, சிக்கலான கட்டமைப்புக் கூறுகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தையும், கட்டமைப்பு உறுதியையும் தக்கவைத்து கொள்ள சென்ட்ரிங் பணி மேற்கொள்ளப்படுகிறது.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....