தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்

hgfghj


கான்கிரீட்டில் ஏற்படும் விரிசல்களின் வகைகளைப் புரிந்துகொள்வது

கான்கிரீட் என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களில் ஒன்றாகும், ஆனால் அதில் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கான்கிரீட்டில் ஏற்படக்கூடிய விரிசல்களின் வகைகளை ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்.

Share:





கான்கிரீட்டில் ஏற்படும் விரிசல்களின் வகைகள்

கான்கிரீட் என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களில் ஒன்றாகும், நடைபாதைகள் மற்றும் டிரைவ்வேகள் முதல் உயரமான கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் வரை அனைத்திற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. எனினும், மற்ற எந்தவொரு பொருளைப் போலவும், கான்கிரீட்டிலும் விரிசல்கள் ஏற்படக்கூடும். உண்மையில், விரிசல் விடுவதென்பது கான்கிரீட் கட்டுமானங்களின் தவிர்க்க முடியாத அம்சமாகும், மேலும் பல்வேறு காரணங்களால் இது ஏற்படக்கூடும் மற்றும் அவை வெவ்வேறு அளவு தீவிரத்தைக் கொண்டிருக்கலாம்.

 

கான்கிரீட்டில் உள்ள விரிசல்களின் வகைகள் இதோ:

 

அ) கட்டமைப்பு அல்லாத விரிசல்கள்

இவ்வகை விரிசல்கள், கான்கிரீட் கட்டமைப்பின் உறுதிக்கு எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. அவை பொதுவாக ஹேர்லைன் விரிசல்களாகும், மேலும் அவை முக்கியமாகக் கான்கிரீட்டின் இயற்கையான உலர்தல் செயல்முறை, வெப்பநிலை மாற்றங்கள் அல்லது சிறிய அழுத்தத்தால் ஏற்படுகின்றன. எனினும், இந்த வகை விரிசல்களைப் பழுது பார்க்க வேண்டியதில்லை, அது அந்த விரிசல்களின் செயல்திறன் காரணமாக அல்ல, மாறாகக் கான்கிரீட் கட்டமைப்பின் ஒட்டுமொத்தச் செயல்திறன் காரணமாக ஆகும்.

 

 

ஆ) கட்டமைப்பு சார்ந்த விரிசல்கள்

கட்டமைப்பு சார்ந்த விரிசல்கள் மிகவும் கடுமையானவையாகும், மேலும் அவற்றில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும். இந்த விரிசல்கள் கான்கிரீட் கட்டமைப்பின் உறுதியைப் பாதிக்கலாம், மேலும், உடனடியாகக் கவனிக்கப்படாவிட்டால் கட்டமைப்பின் இடிவதற்கு வழிவகுக்கக்கூடும். கான்கிரீட்டில் முக்கியமான ஏழு வகை கட்டமைப்பு சார்ந்த விரிசல்கள் உள்ளன, அவற்றைக் குறித்து நாம் விரிவாகக் காண்போம்.

 

 


1) பிளாஸ்டிக் சுருக்க விரிசல்கள்

கான்கிரீட்டின் மேற்பரப்பு சரியாகப் பதப்படுவதற்கு முன் விரைவாக உலர்த்தப்படுவதால் இந்த வகை விரிசல்கள் ஏற்படுகின்றன. சூடான மற்றும் வறண்ட வானிலை அல்லது கான்கிரீட் கலவையில் ஈரப்பதம் இல்லாததால் இது ஏற்படலாம். கான்கிரீட்டின் மேற்பரப்பு மிகவும் விரைவாக உலர்ந்து, ஆழமற்ற, சீரற்ற விரிசல்களை விட்டுச்செல்லும் போது இந்த விரிசல்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாகக் கான்கிரீட்டின் தோற்றத்தையும் ஆயுளையும் பாதிக்கும் தொடர்ச்சியான ஆழமற்ற, சீரற்ற விரிசல்கள் ஏற்படும்.

2) கான்கிரீட்டில் ஏற்படும் வெடிப்பு மற்றும் கிரஸ்டிங்

அ) வெடிப்பு

வெடிப்புகள் என்பது கான்கிரீட் மேற்பரப்பில் வலை போன்று ஏற்படும் மெல்லிய, ஆழமற்ற விரிசல்கள் ஆகும். பதப்படுத்தும் ஆரம்பக் கட்டங்களில் கான்கிரீட் மேற்பரப்பில் இருந்து ஈரப்பதம் விரைவாக ஆவியாக்குவதால் இவை ஏற்படுகின்றன. அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம் மற்றும் காற்று அல்லது நேரடி சூரிய ஒளிக்கு வெளிப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இது ஏற்படலாம். கான்கிரீட்டில் ஏற்படும் வெடிப்புகள் பெரும்பாலும் ஒரு அழகு சார்ந்த பிரச்சினையாகக் கருதப்படுகிறது மற்றும் பொதுவாக இது கான்கிரீட்டின் கட்டமைப்பு உறுதியைப் பாதிக்காது.

ஆ) கிரஸ்டிங்

கிரஸ்டிங் விரிசல்கள் என்பது, வெடிப்பு விரிசல்களை விட ஆழமானதும் அகலமானதுமாகும், மேலும் அவை கான்கிரீட்டைப் பதப்படுத்துவதின் பிந்தைய கட்டங்களில் தோன்றும். கான்கிரீட்டின் மேற்பரப்பு மிகவும் விரைவாக உலர்ந்து, கான்கிரீட்டிற்குள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் கடினமான கிரஸ்ட் உருவாகும்போது இது தோன்றும். பிறகு இந்த ஈரப்பதம் வெளியேற முயற்சிக்கும்போது கான்கிரீட்டின் மேற்பரப்பில் விரிசல் ஏற்படும். கான்கிரீட்டில் அதிகமாக வேலை செய்வது, அதைச் சரியாகப் பதப்படுத்தாதது அல்லது கலவையில் தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்துவதால் கிரஸ்டிங் விரிசல்கள் ஏற்படுகின்றன.

 

3) செட்லிங் விரிசல்கள்

கான்கிரீட்டின் அடியில் உள்ள மண் நகரும்போது செட்லிங் விரிசல்கள் ஏற்படுகிறது, இதனால் கான்கிரீட் செட்டில் ஆகி விரிசல் அடைகிறது. போதிய மண் தயாரிப்பு இல்லாதது மற்றும் மண் அரிப்பு ஆகியவை விரிசல்களுக்கான பொதுவான காரணங்களாகும். இந்த வகை விரிசல்கள் சமச்சீரற்ற தன்மையையும் மற்றும் இடறி விழும் அபாயங்களை ஏற்படுத்தலாம், அத்துடன் மற்ற வகை விரிசல்களுக்கும் வழிவகுக்கலாம். முறையான மண் தயாரிப்பு, வடிகால் மற்றும் இன்ஸ்டால் செய்யும் நுட்பங்கள் உள்ளிட்டவை செட்லிங் விரிசல்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.

 



4) விரிவடையும் விரிசல்கள்


வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகக் கான்கிரீட் விரிவடைந்து சுருங்கும்போது விரிவடையும் விரிசல் ஏற்படுகிறது. இந்த வகை விரிசல்கள் பெரும்பாலும் கான்கிரீட் மேற்பரப்பில் ஒரு நேர் கோட்டில் இருப்பது போது தோன்றும். தீவிரமான வானிலைகள் மற்றும் முறையற்ற இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் விரிவடையும் விரிசல் ஏற்படலாம். வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக விரிசல்கள் ஏற்படுகிறது மற்றும் பொதுவாக இவை வெப்ப விரிசல்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக ஒரு கட்டமைப்பு பிரச்சனை இல்லை என்றாலும், விரிவடையும் விரிசல்கள் தண்ணீரைக் கான்கிரீட்டிற்குள் ஊடுருவ அனுமதிக்கும், இது மற்ற வகை விரிசல்கள் மற்றும் சேதத்திற்கு வழிவகுக்கும். சரியான இன்ஸ்டால் செய்யும் நுட்பங்கள் மற்றும் விரிவடையும் இணைப்புகளைப் பயன்படுத்துவது விரிவடையும் விரிசல்களை உருவாவதைத் தடுக்க உதவும்.

5) ஹீவிங் விரிசல்கள்

கான்கிரீட்டின் அடியில் உள்ள நிலம் வீங்கும்போது அல்லது நகரும்போது ஹீவிங் விரிசல் ஏற்படுகிறது, இதனால் கான்கிரீட் மேல்நோக்கி உயரும். பெரும்பாலும் தீவிரமான வெப்பநிலை மாற்றங்கள், ஈரப்பத மாற்றங்கள் அல்லது உறைதல்-உருகுதல் சுழற்சிகளால் இந்த வகை விரிசல் ஏற்படுகிறது. ஹீவிங் விரிசல்கள் கான்கிரீட்டிலும், சுவர்கள் அல்லது அடித்தளங்கள் போன்ற சுற்றியுள்ள கட்டமைப்புகளிலும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தலாம். முறையான வடிகால், மண் செறிவாக்கம் மற்றும் இன்ஸ்டால் செய்யும் நுட்பங்கள் உள்ளிட்டவை ஹீவிங் விரிசல்கள் உருவாகுவதைத் தடுக்க உதவும். ஏற்கனவே ஹீவிங் விரிசல்கள் ஏற்பட்டிருந்தால், மேலும் சேதத்தைத் தடுக்க உடனடியாகப் பிரச்சனையைத் தீர்ப்பது முக்கியமாகும்.

6) ஓவர்லோடிங் விரிசல்கள்


கான்கிரீட் மீது வைக்கப்படும் எடை, அதன் தாங்கும் திறனை விட அதிகமாக இருக்கும் போது ஓவர்லோடிங் விரிசல்கள் ஏற்படுகின்றன. இது கனரக இயந்திரங்கள் அல்லது வாகனங்கள் அல்லது அதிகமாக நடப்பதன் காரணமாக ஏற்படலாம். ஓவர்லோடிங் விரிசல்கள் குறிப்பாக ஆபத்தானதாக இருக்கலாம், ஏனெனில் இது கான்கிரீட் மற்றும் சுற்றியுள்ள கட்டமைப்புகளின் கட்டமைப்பு உறுதியைப் பாதிக்கலாம். சரியான எடை பரவல், ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் மற்றும் பராமரிப்பு ஆகியவை ஓவர்லோடிங் விரிசல்கள் உருவாக்குவதைத் தடுக்க உதவும். ஓவர்லோடிங் விரிசல்கள் ஏற்பட்டிருந்தால், மேலும் சேதத்தைத் தடுக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உடனடியாகப் பிரச்சனையைத் தீர்ப்பது முக்கியமாகும்.

7) ரீயின்ஃபோர்ஸ்மெண்ட்டின் அரிமானம்

கான்கிரீட்டிற்குள் இருக்கும் ஸ்டீல் ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் துரு பிடிக்கத் தொடங்கி, அதனால் கான்கிரீட் விரிவடைந்து விரிசல் விடும்போது ரீயின்ஃபோர்ஸ்மெண்ட்டின் அரிமானம் ஏற்படும். இவ்வகை விரிசல் பெரும்பாலும் ஈரப்பதம், உப்பு அல்லது பிற அரிக்கும் பொருட்களுக்கு வெளிப்படுவதால் ஏற்படுகிறது. ரீயின்ஃபோர்ஸ்மெண்ட்டின் அரிமானம் ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கலாம், ஏனெனில் இது கான்கிரீட் மற்றும் சுற்றியுள்ள கட்டமைப்புகளின் கட்டமைப்பு உறுதியைப் பாதிக்கலாம். சரியான கான்கிரீட் கலவை வடிவமைப்பு, வைக்கும் இடம் மற்றும் பராமரிப்பு ஆகியவை ரீயின்ஃபோர்ஸ்மெண்ட்டின் அரிமானம் ஏற்படுவதைத் தடுக்க உதவும். ரீயின்ஃபோர்ஸ்மெண்ட்டின் அரிமானம் ஏற்பட்டிருந்தால், மேலும் சேதத்தைத் தடுக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உடனடியாகப் பிரச்சனையைத் தீர்ப்பது முக்கியமாகும்.

 

மேலும் படிக்கவும்: கான்கிரீட்டை எப்படிப் பதப்படுத்துவது மற்றும் வெவ்வேறு பதப்படுத்தல் முறைகள் என்ன





இறுதியில், கட்டமைப்பு சார்ந்த மற்றும் கட்டமைப்பு சாராத பல்வேறு காரணிகளால் கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கான்கிரீட்டில் ஏற்படும் சில வகை விரிசல்கள் பெரிய பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை என்றாலும், மற்றவை ஆபத்தானவை மற்றும் கான்கிரீட் மற்றும் சுற்றியுள்ள கட்டமைப்புகளின் உறுதியையும் பாதிக்கலாம். விரிசல் ஏற்படுவதைத் தடுக்க, தளத்தைச் சரியாகத் தயார்படுத்துவது, சரியான கலவை வடிவமைப்பைப் பயன்படுத்துவது மற்றும் விரிசல் ஏற்படுவதைத் தடுக்க இன்ஸ்டால் செய்வது மற்றும் பராமரிப்பதற்கான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியமாகும்.



விரிசல்கள் ஏற்பட்டால், மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகச் சுருக்க விரிசல்களைத் தவிர்ப்பதற்கான கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு, கான்கிரீட்டில் சுருக்க விரிசல்களைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த இந்த விளக்கமான வீடியோவைப் பார்க்கவும்



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....