கம்பைண்ட் ஃபூட்டிங் என்பது முக்கியமாக இரண்டு காலமண்கள் ஒன்றுக்கொன்று அருகில் இருக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு காலமண்னிற்கும் தனிப்பட்ட ஃபூட்டிங் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், கம்பைண்ட் ஃபூட்டிங் ஒரு சிறந்த தீர்வாகும். இது பொதுவாக இடம் குறைவாக இருக்கும் கட்டிடங்களில் அல்லது மண் தாங்கும் திறன் (soil bearing capacity) குறைவாக இருக்கும் இடங்களில் தேவைப்படும். நிலத்தில் ஏற்படும் குழிவையும் (sinking) இடிபாடையும் (settlement) தவிர்க்க எடையை பரப்பி பகிர்வது அவசியம். காலமண்கள் நிலத்தின் எல்லைகளுக்கு (property boundaries) அருகில் இருக்கும்போதும், அனுமதிக்கப்பட்ட கட்டிடக் கோட்டைத் தாண்டி ஸ்டாண்டர்ட் ஃபூட்டிங்கள் நீட்டிக்கப்படும்போதும் இந்த கம்பைண்ட் ஃபூட்டிங் பயன்படுத்தப்படுகின்றது.
1. குறைந்த இட வசதிக்காக இவை பயன்படுத்தப்படும்
இடம் குறைவாக இருக்கும் கட்டிட வேலைகளில், கம்பைண்ட் ஃபூட்டிங் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அருகிலுள்ள காலமண்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும்போதும், தனிப்பட்ட ஃபூட்டிங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும்போதும், இவற்றை இந்த கம்பைண்ட் ஃபூட்டிங் ஒரே கட்டமைப்பாக ஒருங்கிணைத்து நல்ல நடைமுறை தீர்வை வழங்குகிறது.
2 . எடைப் பகிர்வு மற்றும் மோசமான மண் நிலங்களில் இவை பயன்படுத்தப்படும்
மண்ணின் தாங்கும் திறன் குறைவாக இருக்கும் இடங்களில், எடைச் சுமையை சரியாகப் பகிர்ந்தளிக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. அதனால் கம்பைண்ட் ஃபூட்டிங், பல காலமண்களின் சுமை பரப்பை விரிவுபடுத்தி பகிர்ந்து, மண்ணில் விழும் அழுத்தத்தை குறைத்து, அதிகப்படியாக இடிபாடுகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
3. நிலத்தின் எல்லைகளின் அருகில் கட்டிட வேலைக்காக இவை பயன்படுத்தப்படும்
பெரும்பாலும் , நிலத்தின் எல்லைகளுக்கு அருகிலுள்ள கட்டுமானத்திற்கு, அடித்தளங்கள் எவ்வளவு தூரம் வெளிப்புறமாக நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அதிகம் வரும். இந்த இடம்சார்ந்த கட்டுப்பாடுகளுக்குள் பொருந்தும் வகையில் கம்பைண்ட் ஃபூட்டிங்களை வடிவமைக்க முடியும். அதே சமயம் தேவையான சுமைகளையும் ஆதரிக்கிறது. இது நகர்ப்புற கட்டுமானங்களில் அவசியமான கருவியாக இருக்கிறது.
4. வேறுபட்ட சுமைகளைக் கொண்ட கட்டிடங்களில் இவைப் பயன்படுத்தப்படும்
ஒரே கட்டிடத்தில் உள்ள பல காலமண்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான எடையை தாங்கும் திறன் கொண்டிருக்கலாம். இத்தகைய கட்டிடங்களில், கம்பைண்ட் ஃபூட்டிங் அமைப்பது சிறந்த பலனை தருகிறது. இந்த ஃபூட்டிங் வகைகள், ஒவ்வொரு காலமணிலிருந்து வரும் சுமையின் மாறுபாடுகளை சமநிலைப்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. இதன் மூலம், காலமண்கள் எவ்வளவு எடையை சுமந்தாலும், கட்டிடம் உறுதியோடு நிலைத்திருக்க உதவுகிறது.
5. பல காலமண்களுக்கு செலவைக் குறைக்கும் சிறந்த தீர்வு:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலமண்கள் அருகருகே இருந்தால், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ஃபூட்டிங் அமைப்பதைவிட, ஒரு பெரிய கம்பைண்ட் ஃபூட்டிங் அமைப்பது செலவில் அதிக சிக்கனத்தை அளிக்கும். இது கூடுதல் குழி வெட்டல் (excavation), வடிவமைப்பு பொருட்கள் (formwork), மற்றும் கான்கிரீட் (concrete) பயன்பாட்டை குறைக்கும். இதனால், பொருட்செலவையும், வேலைச்செலவையும் மிச்சப்படுத்தி கட்டுமான செலவை குறைக்க முடிகிறது.
இந்த ஒவ்வொரு பயன்பாடுகளும் கம்பைண்ட் ஃபூட்டிங்கின் பயன்பாட்டுத்திறன் மற்றும் செயல்திறனை காட்டுகின்றன. இவை சவாலான சூழல்களில் கூட நவீன கட்டிடத் துறையின் முக்கியமான கூறாக விளங்குகின்றன.