இந்த வகையில் திடமான ஃப்ரேம்கள் (frames) மற்றும் செல்கள் (cells) ஒன்றோடு ஒன்று வரிசையாக அடுக்கப்பட்டு உருவாக்கப்படும். இது அதிக வலிமை மற்றும் ஆதரவை வழங்கும். இது பெரிய மற்றும் அதிக எடையுள்ள கட்டமைப்புகளுக்கு ஏற்றவை. மேலும், இவை லோடை சரிசமமாக பகிர்ந்து நிலைத்தன்மையையும் கொடுக்கும்.
ராஃப்ட் ஃபவுண்டேஷன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மெட்டீரியல்கள்
ராஃப்ட் ஃபவுண்டேஷனை கட்டுவதற்கு பல்வேறு மெட்டீரியல்களை ஒருங்கிணைக்க வேண்டும். இதனால் வலிமையான மற்றும் நீடித்து உழைக்கும் திறன் கொண்ட ஃபவுண்டேஷனை உருவாக்க முடியும். பொதுவாக பயன்படுத்தப்படும் முக்கியமான மெட்டீரியல்களை இப்போது பார்ப்போம்:
1) கான்கிரீட்
ஸ்டீல் ரீஇன்ஃபோர்ஸ்மண்ட் அல்லது ரீபார், கான்கிரீட் ஸ்லாப்களுக்குள் பொருத்தப்படும். இதனால் கூடுதல் வலிமையையும், நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும். கான்கிரீட்டால் தனியாக எதிர்கொள்ள முடியாத டெண்சைல் ஃபோர்ஸ் என்று சொல்லக்கூடிய இழுவவைச் சக்திகளை எதிர்கொள்ள இது உதவுகிறது. இது கூடுதல் வலிமையும், நெகிழ்வுத்தன்மையும் வழங்குகிறது. ஸ்லாபிற்குள் கட்டம் போன்ற கிரிட் பேட்டர்ன்களில் இந்த ஸ்டீல் பார்கள் வரிசைப்படுத்தப்படும். இதனால் கட்டிடத்தின் மேலிருந்து ஏற்படும் அழுத்தங்களை ஃபவுண்டேஷன்களால் தாங்க முடியும்.
2) ரீஇன்ஃபோர்ஸ்மண்ட் ஸ்டீல் (Rebar)
Steel reinforcement, or rebar, is embedded within the concrete slab to provide additional strength and flexibility. Rebar helps the foundation resist tensile forces, which concrete alone might not withstand. The steel bars are arranged in a grid pattern within the slab, ensuring that the foundation can handle the stresses imposed by the building above.
3) ஃபார்ம்வொர்க் (Formwork)
இந்த ஃபார்ம்வொர்க் ஒரு தற்காலிக மோல்ட் (அச்சு) ஆகும். இதனுள் தான் கான்கிரீட் ஊற்றப்படுகிறது. இதுதான் ராஃப்ட் ஃபவுண்டேஷனின் வடிவம் மற்றும் அளவை உருவாக்கும். மேலும், கான்கிரீட் நினைத்த வடிவத்தில் செட் ஆகிறதா என்பதையும் உறுதி செய்யும். அந்தந்த பிராஜெக்டின் தேவைகளுக்கு ஏற்ப, மரம், மெட்டல், அல்லது பிளாஸ்டிக்களால் இந்த ஃபார்ம்வொர்க் செய்யப்படுகிறது. ஈரமான கான்கிரீட்டின் எடையை தாங்கும் அளவிற்கும், கான்கிரீட் கிர்யூரிங் ஆகும் வரை அதே வடிவத்தில் இருப்பதற்கும் ஏற்றப்படி இது கவனமாக கட்டமைக்கப்படுகிறது.
4) வாட்டர்ப்ரூஃபிங் மெம்ப்ரேன்கள்
நீரின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் இந்த வாட்டர்ப்ரூஃபிங் மெம்பிரேன்கள் ராஃப்ட் ஃபவுண்டேஷனின் மேற்பரப்பில் பொருத்தப்படுகின்றன. நிலத்தடி நீர் அதிகம் உள்ள இடங்களில், மணல் ஈரத்தன்மையுடன் இருக்கும் சூழலில், ஃபவுண்டேஷன் இருக்கும்போது இது மிகவும் முக்கியமானதாகும். கான்கிரீட்டிற்குள் நீர் ஊடுருவினால், காலப்போக்கில் ஃபவுண்டேஷன்கள் பலவீனமடையும். அதனால் நீர் ஊடுருவலை தடுக்க இந்த மெம்ப்ரேன்கள் உதவுகின்றன.
5) அட்மிக்சர்கள் (Admixtures)
அட்மிக்சர்கள் என்பவை கான்கிரீட்டின் பண்புகளை மேம்படுத்துவதற்காக அதனுடன் கலக்கப்படும் ரசாயன கலவைகள் ஆகும். வேலைசெய்யும் திறனை அதிகரிக்கவும், வலிமையை உயர்த்தவும், செட் ஆகும் நேரத்தை குறைக்கவும், சுற்றுசூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு வழங்கவும் இவை பெரிதும் பயன்படுகின்றன. ராஃப்ட் ஃபவுண்டேஷன்களுக்கு நீடித்து உழைக்கும் திறனையும், நீர் எதிர்ப்பு தன்மையையும் அதிகரிக்கவே இந்த அட்மிக்சர்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஃபவுண்டேஷன்கள் நீண்ட காலம் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும்.
ராஃப்ட் ஃபவுண்டேஷனின் கட்டுமான செயல்முறை
1) சைட்டை தயார் செய்தல்
முதலில், கட்டிடம் கட்டப்போகும் சைட் சுத்தம் செய்யப்படுகிறது மற்றும் மண் சமமாக்கப்படுகிறது. பிறகு தேவையான ஆழத்திற்கு மண் தோண்டப்படுகிறது. மண் பலவீனமாக இருந்தால், அதனை ஜல்லிகளைக் (gravel) கொண்டு காம்பேக்ட் செய்ய வேண்டும் அல்லது உறுதிப்படுத்த வேண்டும். இதனால் ஃபவுண்டேஷன் திடமாக்கப்படும்.
2) ஃபார்ம்வொர்க் அமைத்தல்
இந்த ஃபார்ம்வொர்க், கான்கிரீட்டிற்கு ஒரு மோல்ட் போன்று செயல்படும். இவை ஃபவுண்டேஷன் அமைக்கும் இடத்தில் வைக்கப்படும். கான்கிரீட் ஒரே இடத்தில் நிலையாக இருக்கிறதா, சரியான வடிவத்தை உருவாக்குகிறதா என்பது இந்த ஸ்டெப்பின் மூலம் உறுதி செய்யப்படும். ஃபார்ம்வொர்க் சீராகவும் பாதுகாப்பாகவும் அமைக்கப்பட வேண்டும்.
3) ரீஇன்ஃபோர்ஸ்மண்ட ஸ்டீலை (Rebar) அமைத்தல்
ரீபார்கள் எனப்படும் ஸ்டீல் பார்கள், ஃபார்ம்வொர்க்கிற்குள் கட்டமான கிரிட் போன்ற பேட்டர்னில் அமைக்கப்படுகின்றன. இந்த பார்கள் ஃபவுண்டேஷனிற்கு கூடுதல் வலிமையைக் கொடுத்து, விரிசல்களை தடுக்க உதவுகின்றன. கான்கிரீட்டை ஊற்றும்போது அசையாமல் ஒரே நிலையில் வைக்க, இந்த ரீபார்கள் ஒன்றோடு ஒன்று கட்டப்படுகின்றன.
4) கான்கிரீட்டை ஊற்றுதல்
ஃபவுண்டேஷனை முழுமையாக நிரப்பும் விதத்தில், கான்கிரீட் ஃபார்ம்வொர்க்கினுள் ஊற்றப்படுகிறது. கான்கிரீட்டை சமமாக ஊற்ற அதிக கவனம் செலுத்தப்படுகிறது. காற்றுகள் வெளியேற்ற வைப்ரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், ரீபார்கள் முழுவதிலும் கான்கிரீட் நிரப்பப்படுகிறதா என்பதை உறுதி செய்ய முடியும்.
5) கான்கிரீட்டை கியூரிங் (Curing) செய்தல்
கான்கிரீட்டை ஊற்றிய பிறகு, அது இறுக்கமாகி உறுதி அடைய அல்லது கியூரிங் செய்யப்பட சில நாட்கள் ஆகும். இந்த நேரத்தில், கான்கிரீட்டை விரிசல்களில் இருந்து பாதுகாக்க, ஈரமான நிலையில் வைக்கப்படுகின்றன. ஃபவுண்டேஷன் தேவையான வலிமையினை அடையும் வரை, கியூரிங் சில நாட்களுக்கு செய்யப்படும்.
6) ஃபார்ம்வொர்க்கை அகற்றுதல் மற்றும் ஃபினிஷிங்
கான்கிரீட்டின் கியூரிங் முடிந்த பிறகு, ஃபார்ம்வொர்க் அகற்றப்படுகிறது. பின்னர் ஃபவுண்டேஷன் சீராக மென்மையாக்கப்பட்டு, தேவையான மற்ற ஃபினிஷிங் டச்கள் செய்யப்படுகின்றன. சில சமயங்களில், கூடுதல் பாதுகாப்புக்காக வாட்டர்ப்ரூஃபிங்கிற்கான அடுக்கு பொருத்தப்படுகிறது.
7) இறுதி சோதனை
கட்டுமான தரத்திற்கேற்ப ஃபவுண்டேஷன்கள் அமைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த இறுதி சோதனை செய்யப்படுகிறது. தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே கட்டிடப்பணி தொடரப்படும்.