வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



மேற்கு நோக்கிய வீட்டிற்கான 10 சக்திவாய்ந்த வாஸ்து குறிப்புகள்

மேற்கு நோக்கிய வீடுகளில் பாசிடிவ் எனர்ஜி பரவலை அதிகரிக்கவும்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதி, செழிப்பு மற்றும்
சிறந்த வாழ்விடங்களை சமநிலையாக மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட
இந்த மேற்கு நோக்கிய வீட்டுத் திட்டத்தின் வாஸ்து சாஸ்திரத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • மேற்கு நோக்கிய வீடுகள் நன்மை தரும் வாஸ்து சீரமைக்கப்பட்ட வடிவமைப்புடன், செழிப்பு மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கின்றன.

     

  • வடமேற்கு அல்லது மேற்குப் பகுதியில் உள்ள நுழைவாயில் பாசிடிவிடியை (நேர்மறை ஆற்றல்) வரவேற்கிறது – நெகட்டிவான (எதிர்மறை) தென்மேற்கு பகுதியை தவிர்க்கவும்

     

  • வடமேற்கில் உள்ள லிவிங் ரூம் அமைப்பதால் குடும்பத்துடன் இனிமையான உரையாடல்கள் மேம்படுத்துவதுடன் மற்றும் பிராகசமற்ற வெளிச்சமும் கிடைக்கும்

     

  • தென்மேற்கு மூலையில் அமைந்த பெட் ரூம்கள் நிலைத்தன்மை மற்றும் அமைதியான தூக்கத்தை வழங்கும்

     

  • மேற்கு நோக்கிய வீடுகளுக்கான இந்த சிந்தனைமிக்க வீட்டு வடிவமைப்பு, இயற்கையின் ஓசையுடன் ஒத்திசைந்து, அங்கு குடியிருப்பவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் ஆரோக்கியமான இடத்தை உருவாக்குகிறது.



வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு திசையும் தனித்துவமான ஆற்றல்களைக் கொண்டுள்ளன. மேற்கு நோக்கிய வீடுகளைப் பற்றி சிலருக்கு தவறான கருத்துகள் இருக்கலாம், ஆனால் இவ்வீடுகள் சமநிலை கொண்டவையாகவும், எந்தவித சந்தேகங்களையும் எளிதில் கண்டறிந்து தீர்க்க கூடியவையாக இருக்கும். இங்கு, 30×60 அல்லது 40×50 அளவிலான மேற்கு நோக்கிய வீட்டு திட்டங்களுக்கு தேவையான முக்கியமான வாஸ்து குறிப்புகளை பார்க்கலாம். இது உங்கள் வீட்டை மேம்படுத்தவும், பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்த இடத்தை உருவாக்கவும் உதவும்.

 

 


வாஸ்து படி மேற்கு நோக்கிய வீடுகள் நன்மையளிப்பவையா?

வாஸ்துப்படி சரியாக மேற்கு நோக்கிய வீட்டினை வடிவமைத்து, கட்டமைக்கும்போது மேற்கு நோக்கிய வீடுகள் நன்மையும் அதிர்ஷ்டமும் கொண்டவையாக கருதப்படுகின்றன. வீடு சரியான முறையில் அமைந்தால், மேற்கு திசை உள்பட எந்த திசையிலும் செழிப்பும் நல்வாழ்வும் நிரம்பும் என இந்த வழிகாட்டி உணர்த்துகிறது. கதவுகள், ஜன்னல்கள் மற்றும் ரூம்களை வைப்பது போன்ற மேற்கு நோக்கிய வீடுகளுக்கான வாஸ்து அம்சங்கள், சரியான வாஸ்து சாஸ்திரத்திற்கேற்ப அமைந்திருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியமாகும்.

 

சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட மேற்கு நோக்கிய வீட்டு திட்டம், உங்கள் வீட்டில் உள்ள சக்திகளை சீராக்கி, நிதி நிலைத்தன்மை மற்றும் பாசிட்டிவ் வைப்ரேஷன்சையும் ஊக்குவிக்கும். எனவே, மேற்கு நோக்கிய ஒரு சொத்தை வைத்திருப்பது கவலைக்குரிய விஷயமல்ல – குறிப்பாக அந்த வீட்டின் திட்டம் வாஸ்துவிற்கு ஏற்ப அமைந்திருந்தால். வாஸ்துவின் அடிப்படையில் சரியாக திட்டமிடப்பட்டால், இத்தகைய வீடுகள் அதிர்ஷ்ட சக்திகளை கவர்ந்து, மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த வாழ்விடமாக வளறும்.


மேற்கு நோக்கிய வீட்டுத் திட்டத்திற்கு வாஸ்து சாஸ்திரத்தின்படி பின்பற்ற வேண்டிய 10 அம்சங்கள்.

உங்கள் மேற்கு நோக்கிய வீட்டின் வாஸ்துவை மேம்படுத்த உதவும் மேற்கு நோக்கிய அடுக்குமாடி அபார்ட்மெண்ட்களுக்கான 10 வாஸ்து சாஸ்திர வீட்டுத் திட்ட உதவிக்குறிப்புகளைப் காண்போம். 

 

1. வீட்டின் நுழைவு வாயிலை மேற்கே அல்லது வடமேற்கு திசையில் அமைக்கவும்



வாஸ்து சாஸ்திரத்தின் படி, மேற்கு நோக்கிய வீட்டின் நுழைவு வாயிலை மேற்கு அல்லது வடமேற்கு திசையில் அமைப்பது, பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும். இந்த திட்டமிடப்பட்ட இடம் செழிப்பையும் பாசிடிவிடியையும் அழைக்கின்றது மற்றும் துரதிர்ஷ்டத்தையும் தடைகளையும் ஈர்க்கும் தென்மேற்கு நுழைவாயிலுடன் தொடர்புடைய நெகட்டிவ் தாக்கங்களைத் தடுக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

2. வீட்டின் முன் பகுதியில் மரங்களை நடவும்.



மேற்கு நோக்கிய வீடுகளின் முன் பகுதியில் (மெயின் கேட்டின் அருகில் இல்லாமல்) பசுமையினை கொண்டு வருவது இரண்டு முக்கியக் காரணங்களை பூர்த்தி செய்கிறது. முதலில், கடுமையான சூரியக் கதிர்களின் அதீத வெப்பத்தை எதிர்த்து, குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, வீட்டைச் சுற்றியுள்ள அழகையும் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தையும் மேம்படுத்தி, ஒட்டுமொத்த நல்வாழ்வினை ஊக்குவிக்கிறது.

 

3. மேற்கு திசையில் பெரிய கண்ணாடி டிசைன்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

மேற்கு திசையில் அதிகளவு கண்ணாடி பரப்புகளுடன் கொண்ட பெரிய ஜன்னல்கள் அல்லது கதவுகள், கடுமையான சூரிய ஒளியை நுழையச்செய்து வீட்டின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. எனவே, மேற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து திட்டத்தில் இத்தகைய டிசைன்களை குறைத்தல் அல்லது சரியான முறையில் அமைத்தல், வீட்டின் உள் சூழலை வசதியாக வைத்திருக்கும் மற்றும் குளிரூட்டுவதற்கு தேவையான மின்சார செலவையும் குறைக்கும்.

 

4. வடமேற்குப் பகுதியில் ஒரு லிவிங் ரூம் அமைக்கவும்.

மேற்கு நோக்கிய வீட்டு வாஸ்துவின்படி, வீட்டின் வடமேற்கு பகுதியில் லிவிங் ரூமை அமைப்பது சமூக தொடர்புகளையும், குடும்ப உறவுகளையும் ஊக்குவிக்கின்றது. இதனால் ரூமிற்கு போதுமான மாலை நேர வெளிச்சம் கிடைப்பதுடன், ஓய்வு மற்றும் விருந்தினர்களின் பொழுதுபோக்கிற்கு ஏற்ற ஒரு அழகான இடமாக அமைகிறது.

 

5. தென்மேற்கு மூலையில் ஒரு பெட் ரூம் அமைக்கவும்.



தென்மேற்கு மூலை ஒரு நிலையான மற்றும் அமைதியான சூழலை ஏற்படுத்துகிறது, மேலும் இவை அமைதியான பெட் ரூம் சூழலுக்கு உதவுகிறது. மேலும், பெட் ரூமில் கண்ணாடிகளை மூடுவது உறக்கம் பாதிக்கப்படாமல் இருக்கவும், அமைதியான மற்றும் மனதிற்கிணிய ஓய்வு பகுதியை இருக்க உதவும் என வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.

 

6. தென்கிழக்கு மூலையில் சமையலறை இருக்க வேண்டும்.

 

சமையலறையை தென்கிழக்கில் வைப்பது, நெருப்பு சக்திகளுடன் தொடர்புடைய பாசிட்டிவ் எனர்ஜியை பயன்படுத்துவதை குறிக்கிறது, இதனால் செழிப்பு மற்றும் ஆரோக்கியம் ஏற்படுகிறது. மேற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து திட்டத்தில், இந்த இடம் தென்மேற்கு சமையலறையின் நெகட்டிவ் தாக்கத்தைத் தவிர்த்து மற்றும் கிழக்கு நோக்கி அமர்ந்து உணவு எடுத்துக் கொள்ளும் நிறைவான அனுபவங்களை ஊக்குவிக்கின்றது.

 

7. வழிபாட்டு அறை/ பூஜை அறையை வடகிழக்கில் வைக்கலாம்.

 

மேற்கு நோக்கிய வீட்டிற்கு வாஸ்துப்படி, வடகிழக்கு மூலை ஆன்மீக ரீதியாக சக்தி வாய்ந்ததாகவும் தூய்மையானதாகவும் கருதப்படுகிறது, இதனால் அது ஒரு கோயில் அல்லது பூஜை அறை அமைப்பதற்கு ஏற்ற இடமாக அமைகிறது. வீட்டின் இந்த பகுதி தெய்வீக அதிர்வுகளை அழைத்து வந்து, குடியிருப்போர் அமைதியான சூழலில் தியானம் செய்யவோ அல்லது பிரார்த்தனை செய்யவோ உதவுகிறது.

 

8. கழிப்பறை அல்லது குளியலறையை வடமேற்கில் அமைப்பது சிறந்தது.



வடமேற்கு அல்லது கிழக்கு பகுதியில் கழிப்பறை அல்லது குளியலறையை அமைப்பது, வாஸ்து குறைகளை குறைத்து, நெகட்டிவ் எனர்ஜியை நீக்குகிறது. இந்த திட்டமிடல் வீட்டிற்குள் பாசிட்டிவ் பகுதிகள் மாசுபடுவதைத் தடுக்கிறது.

 

9. வீட்டில் சம எண்ணிக்கையிலான கதவுகளை அமைத்தல் நல்லது.

சம எண்ணிக்கையிலான கதவுகள் வீடு முழுவதும் சீரான ஆற்றல் ஓட்டத்தை எளிதாக்குகிறது. வாஸ்து விதிகளையும் சமநிலையையும் பின்பற்றுவது வீட்டிற்கு அமைதியையும் செல்வத்தையும் கொண்டு வருகிறது.

 

10. வீட்டின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜன்னல்களைத் தவிர்க்கவும்.

வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதிகளில் ஜன்னல்களை அமைப்பதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், வீட்டிற்கு சூரிய வெப்பத்தோடு பிரகாசம்மில்லாத இயற்கை ஒளி கிடைக்கும். இந்த அணுகுமுறை, பகல் வெளிச்சத்தை சிறப்பாக பயன்படுத்தி, வீட்டிற்குள் ஆரோக்கியமான வெப்பநிலையை நிலைநாட்டுகிறது.


மேற்கு நோக்கிய வீட்டுத் திட்டத்தில் வாஸ்து சாஸ்திரத்தின் நன்மைகள்

மேற்கு நோக்கிய வீட்டுத் திட்டத்தில், வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளை பின்பற்றுவதால் பல பலன்கள் கிடைக்கும், இது உங்கள் வீட்டின் அமைப்பை உலகளாவிய ஆற்றல் பரவலுடன் ஒருங்கிணைக்கின்றது. குறிப்பாக மேற்கு நோக்கிய சொத்துக்களில், வீட்டின் வடிவமைப்பில் இவற்றை கவனமாக பரிசீலனை செய்வது, இயற்கை கூறுகளின் தொடர்புக்காக வாசல் மற்றும் அறை இடங்களை மேம்படுத்துவதன் மூலம் உங்கள் வீடு செல்வம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை ஈர்க்கும் சக்தியைப் பெறும். 

 

வாஸ்து வழிகாட்டியின் படி, முக்கிய பகுதிகளான சமையலறை, பெட்ரூம்கள் மற்றும் லிவிங் ஸ்பேஸ் சரியான இடத்தில் அமைப்பதால், வீடு மிகுந்த சமநிலையுடன் இருக்கும். இதனால் நிதி நிலை, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து திட்டத்தில் திசைகளின் ஆற்றல் பலன்களை பயன்படுத்துவதன் மூலம், வீட்டில் வசிப்பவர்கள் அமைதி நிறைந்த ஒரு சூழலை அனுபவிக்க முடியும், இது பாசிட்டிவான மற்றும் சமநிலையான சூழலை வளர்க்கும். மேற்கு நோக்கிய வீடுகளுக்கான இந்த ஒருங்கிணைந்த டிசைன்ஸ், செழிப்பான மற்றும் முழுமையான வாழ்விற்கு வழிகாட்டி ஆகும்.



இந்த வாஸ்து கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் மேற்கு நோக்கிய வீட்டை பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்த ஒரு இடமாக மாற்ற முடியும். இது, கடுமையான வெப்பத்தைத் தவிர்த்து, மதிய சூரியனின் வெப்பமில்லாத கதிர்களை அனுபவிக்கவும், மேலும் அமைதியான சூழலுடன் சமநிலையை உறுதி செய்யவும் உதவும். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மேற்கு நோக்கிய வீட்டு வாஸ்து திட்டம், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் செல்வம், நல்ல ஆரோக்கியம் மற்றும் சமநிலை உணர்வைக் கொண்டுவரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. 30x40 அளவிலான மேற்கு நோக்கிய வீட்டு வாஸ்து திட்டத்தை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல்கள் என்ன?

30x40 அளவிலான மேற்கு நோக்கிய வீட்டு வாஸ்து திட்டத்திற்கு, தலைவாசலை மேற்கு பகுதியில் (தென் மேற்கு பகுதியில் அல்ல) சரியாக அமைத்து, முக்கிய அறைகளையும் சரியான இடத்தில் வைத்து, மேலும் அறைகளின் அளவுகள் மற்றும் காற்றோட்டத்தையும் வாஸ்து கோட்பாடுகளுக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும்.

 

மேற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து திட்டத்தில் பரிந்துரைக்கப்படும் அறை அமைப்புகள் யாவை?

மேற்கு நோக்கிய வீட்டு வாஸ்து திட்டத்திற்கு, வடமேற்கில் லிவிங் ரூம், தென்கிழக்கில் சமையலறை, தென்மேற்கு அல்லது வடமேற்கில் பெட் ரூம்கள், மேற்கு அல்லது வடமேற்கில் குளியலறைகள் மற்றும் வடகிழக்கில் பூஜை அறை அமைக்க பரிந்துரைக்கப்படுகின்றன.

 

3. மேற்கு நோக்கிய வீட்டிற்கு எந்த ராசி சிறந்தது?

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் திசையை, ஒருவரின் ராசியுடன் (ராசி) நேரடியாக இணைப்பதில்லை. மேலும் அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதற்காக வாஸ்து விதிகளை முறையாக பின்பற்றினால் எந்த ராசிக்காரரும் மேற்கு நோக்கிய வீட்டில் வசிக்கலாம்.

 

4. தலைவாசலை மேற்கு நோக்கி வைக்கலாமா?

ஆம், தலைவாசலை மேற்கு நோக்கி வைக்கலாம்; வாஸ்து வழிகாட்டுதல்களின்படி, பாசிட்டிவ் எனர்ஜியை ஈர்க்க மேற்கு பக்கத்தின் வடமேற்குப் பகுதியில் அமைக்கலாம்.

 

5. 30×60 அளவிலான மேற்கு நோக்கிய வீட்டிற்கு சிறந்த வடிவமைப்பு என்ன?

ஒரு சிறந்த 30×60 மேற்கு நோக்கிய வீட்டு திட்டம், வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றி தலைவாசலை சரியான இடத்தில் அமைத்து, அறைகளை சமநிலையில் வைத்து, இடத்தை முழுமையாக பயன்படுத்தி, நல்ல ஆற்றலை அதிகரிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....