தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



சாய்தளக் கூரைகளின் வகைகள் மற்றும் அவற்றின் அனுகூலங்கள் பற்றி புரிந்துகொள்ளுதல்

நீர் வழியும் வடிவங்கள் முக்கியமாக கூரையின் சாய்வு அமைப்பைச் சார்ந்து இருக்கிறது, அதனடிப்படையில் இரண்டு வகையான உட்பிரிவுகள் இருக்கின்றன: தட்டையான கூரைகள் மற்றும் சாய்வான கூரை அல்லது சாய்தள கூரை. இந்த கட்டுரையில் நாம் சாய்தளக் கூரை என்றால் என்ன மேலும் சாய்தளக் கூரையின் வகைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

Share:




Tநீங்கள் உங்கள் வீட்டைக் கட்டும்போது சில அடிப்படை விஷயங்களை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும் :

 

  1. உறுதியான சுவர்கள் அமைப்பை தாங்குகிறன
  2. காற்றோட்டத்திற்கு போதுமான அளவு ஜன்னல்கள் மற்றும் இயற்கையான வெளிச்சம் மற்றும் மிக முக்கியமானது மேலே ஒரு பாதுகாப்பான கூரை.
  3. ஒரு நீண்டகாலம் தாங்கும் கூரை இல்லாமல், உங்கள் வீடு வெளிப்புற காற்று நீர், மற்றும் சூரிய வெளிச்சத்திற்கு திறந்தவாறு இருக்கும் அது உங்கள் வீட்டின் ஆயுட்காலத்தை பொதுவாகக் குறைக்கும்.

 

நாகரீகம் ஆரம்ப காலம் முதல், கூரை ஒரு அவசியமான கட்டிட அமைப்பாக இருந்து வருகிறது. கட்டிடத்தில் வசிப்பவர்களின் பாதுகாப்பைத் தவிர்த்து ஒரு கூரையின் வடிவமைப்பு ஒரு திறமையான வடிகால் வசதியைக் கொடுக்கிறது. குறிப்பிட்ட கட்டமைப்பிற்கான வடிகால் திறனைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்னேறும் வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

 

சாய்தளக் கூரை என்றால் என்ன?

சில கூரைகள் ஒரு மையப் புள்ளியில் இருந்து பொதுவாக இரண்டு பாகங்களாக சாய்வுக் கோணத்தில் கீழ்நோக்கி சாய்ந்து வருகிறன. சில இடங்களில் அந்த சாய்வு ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் இருக்கலாம். இந்த வகையான கூரைகள் சாய்தளக் கூரைகள் என்று அழைக்கப்படுகிறன.

 

ஒரு கூரையின் சரிவை அதன் செங்குத்துத் தன்மையை அளந்து அதன் செங்குத்து உயரத்தை அதன் கிடைமட்ட இடைவெளியால் வகுப்பதன் மூலமாக கணக்கிடலாம்.

 

இந்த வகையான கூரைகள் மற்ற வகை கூரைகளோடு ஒப்பிடும்போது மலிவானவை. பாரம்பரியமாக இவை மரத்தின் மீது கட்டப்பட்டன. இருந்தபோதிலும் நவீன காலங்களில், கட்டுமான கான்கிரீட், வலுவூட்டப்பட்ட சிமண்ட் கான்கிரீட் மற்றும் அழுத்தப்பட்ட கான்கிரீட் ஆகியவைகள் கட்டுமானத்தில் பயன்படுத்தப் படுகின்றன.

 

இந்த கூரை வகைகளில் சிலவற்றில் மரத்திலான வடிவமைப்பு செய்யப்படுகிறன. சாய்தளக் கூரைகள் பெரும்பாலும் சேமிப்புக் கிடங்குகள், தொழிற்சாலை கட்டிடங்கள் மற்றும் பணிமனைகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றன. இவை மேலும் அதிகம் பனிப் பொழிவு மற்றும் மழை இருக்கும் இடங்களில் திறமையான வடிகால் வசதிக்காக பயன் படுத்தப்படுகின்றன.



சாய்தளக் கூரை வகைகள்

சுற்றுச் சூழல் நிலைகள், சாய்வுத் தள எண்ணிக்கைகள் மற்றும் அந்த சாய்வு மற்றும் அழகான தோற்றங்கள் போன்ற காரணிகள் சாய்தளக் கூரை வகைகளை வேறு படுத்திக் காட்ட உதவுகிறது.

 

1 ஒற்றை -சாய்தளக் கூரை



 

இந்த கூரை வகை பட்டியலில் மிகவும் எளிமையானதில் ஆரம்பித்தால் ஒரே ஒரு சரிவை மட்டும் கொண்ட ஒற்றை சாய்தளக் கூரை முதலில் வருகிறது. இந்த கூரையானது பொதுவாக ஒரு சமபக்க முக்கோணத்தின் தோற்றத்தை அளிக்கிறது, ஒரு முனை மத்தியமுகட்டை சந்திக்கும் மற்றும் மற்றொன்று தொங்கும்.

 

இந்த கூரை ஷெட் ரூஃப், சாய்ந்த கூரை, தாழ்வான கூரை என்றும் அழைக்கப்படும். ஒரு ஒற்றை சாய்தளக் கூரையை கட்ட அடிப்படை பொருட்களே தேவை, குறைந்த காலம் எடுக்கும் மற்றும் செலவு குறைவு, அதிக வடிவமைப்பு தேவையில்லை.

 

இது பெரும்பாலும் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சரக்கு வைப்பறைகளுக்கு பயன்படுத்தப்படும்.

 

இரட்டைசாய்தளக் கூரை



 

இங்கே இரண்டு சாய்வான தளங்கள் எதிர் எதிர் திசைகளில் இருக்கும். இது ஒரு நாற்கர முக்கோண தோற்றத்தைக் கொடுக்கும். இந்த இரட்டைசாய்தளக் கூரை கட்டமைப்பு குடியிருப்பு கட்டிடங்களில் அதன் தோற்றத்திற்காக, சிறந்த நீர் வடிதல் மற்றும் அதிக முயற்சி இல்லாமல் கட்டும் காரணத்திற்காக பயன்படுத்தப் படுகிறது.

 

3 .ஜோடி கூரை


 

ஒரு எளிய வடிவமான சாய்தளக் கூரை, ஒரு ஜோடி கூரை இரட்டைசாய்தளக் கூரையை ஒத்துள்ளது. இங்கே, வீட்டின் கூரை கட்டுவதற்கு எளிதானது மற்றும் சிக்கனமானது. இந்த வகை கூரைகளுக்கு மரம்தான் பிரதான பொருள்.

ஒஇவை மிகவும் எடை குறைவாக இருப்பதாலும் கட்டுவதற்கு எளிதாக இருப்பதாலும் இவை ஷெட்கள் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப் பயன்படுகிறது. இருந்தாலும், இவற்றின் திறமையான நீர் வடிக்கும் திறனுக்காக வீடுகளுக்கும் பயன்படுகிறது.

 

4.ஜோடி மூடிய கூரை



 

இது ஜோடிக் கூரையை ஒத்துள்ளது. ஒரே வித்தியாசம் கிடைமட்டமான பட்டை பொதுவான உத்திரம் கால்களை இணைக்கிறது. இந்த எடை அனைத்தையும் பீம் தாங்குகிறது இல்லையென்றால் ஜோடி கூரையின் பக்கச் சுவர்களுக்கு மாற்றப்படுகிறது

 

 

இந்த விதமான கூரைகள் அதிகப்படியான சேமிப்பு இடங்களை மேற்புறம் ஒரு முக்கோண வடிவ பரணைக் கொடுக்கிறது, மேலும் இதை முயற்சியில்லாமல் எளிதாக அமைக்க முடியும்.

 

5 சாய்வான கூரை



 

இந்தக் கூரையில் கூரை செங்குத்தாக இருக்கும் இடங்களில் சாய்வான ஓரங்களைக் கொண்டு உள்ளது. இதில் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டுவித சாய்வுகள் இருக்கும் இதில் கீழே உள்ளது மேலே உள்ளதைக் காட்டிலும் செங்குத்தாக இருக்கும். இந்த சாய்வான கூரை மேலே ஒரு பரண் ஏற்படுத்த அதிகப்படி இடம் கொடுக்கிறது. அதோடுகூட, இது பனி மற்றும் அதிகப்படியாக சேர்வதை தாமதமாக்குகிறது மேலும் நீரை உங்களது வாய்க்காலுக்கு நன்றாக திருப்புகிறது.

 

6. பர்லின் கூரை.



 

பர்லின்கள் ஒரு கூரையில் கிடைமட்ட, கட்டமைப்பு. மரத்தால் செய்யப்பட்ட கூரையில் 3 வகையான பர்லின்கள் உள்ளன: பர்லின் தட்டு, முதன்மை பர்லின் மற்றும் பொதுவான பர்லின். எஃகு-கட்டமைக்கப்பட்ட கூரைகளில் உள்ளவை பொதுவாக சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க வர்ணம் பூசப்படுகின்றன அல்லது கிரீஸ் செய்யப்படுகின்றன.

 

ஒரு பர்லின் கூரை உங்களது கூரைக்கு வெவ்வேறு வடிவம் அல்லது அமைப்பை கொடுப்பதை உறுதி செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவை வடிவமைப்பதில் உங்களுக்கு நெகிழ்ந்து கொடுக்கு.

 

7. கிங் போஸ்ட் கூரை



 

 கிங் போஸ்ட் என்பது ஒரு மைய செங்குத்தான ஆதார தூண் ஆகிய இது பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் விமானங்கள் வடிவமைக்கும்போது பயன்படுத்தப் படுகிறது. ஒரு குறுக்கு பீமில் இருந்து கிங் பீம் செங்குத்தாக மேலே முக்கொண்ட ட்ரஸ் க்கு எழுகிறது.

 

ட்ரஸ்க்கு கீழே இருக்கும் டை பீம் கிங் போஸ்ட் மூலம் ஆதரவாக இருகிறது, இது டிரஸ்ஸின் உச்சியை அடியோடு சேர்க்கிறது. கிங் போஸ்ட் அமைப்பு அமைக்கப்படும்போது அது கூரை ட்ரஸ்சை அடையும் முன்னர் மைய போஸ்ட் துண்டிக்கப்படுகிறது

 

மாறாக, பீமுக்கு இணையாக செல்லும் ஒரு காலர் பீம் கிங் போஸ்டை அதன் இடத்திலேயே வைத்திருக்கிறது.

 

எளிதான கூரை ட்ரஸ்களுக்கு கிங் போஸ்ட் உபயோகப்படுத்தப் படுகிறது. இவை மற்ற தக்கவைக்கும் அமைப்புகளில் மலிவாவனை மேலும் வேகமாக கட்டமைக்க முடியும். இந்த கட்டமைப்பு பல்வகையானது மேலும் எந்த ஒரு மாற்றத்தையும் எளிதில் செய்ய முடியும்.

 

8 காலர் பீம் கூரை



காலர் டை என்பது ஒரு கிடைமட்ட கட்டமைப்பு ஆதரவு உத்திரத்திற்கும் அமைப்பின் கீழே இருந்து எழுந்து மையத்திற்கு வரும் அமைப்புக்கும் இடையே உள்ள ஒரு அமைப்பு.

 

உத்திரங்கள் அதிக பாரத்தினால் அல்லது கூரையின் அதிகப்படியான தூண் இடைவெளியினால் வளையக் கூடிய ஒரு குணத்தைக் கொண்டுள்ளன. கொடுக்கப்படும் காலர் டை அதிகப்படியான சுமை அல்லது அதிகப்படியான தூண் இடைவெளியினால் வளையாது.

 

காலர் பீம் கூரை அதிகமான தூண் இடைவெளி உள்ள கட்டமைப்புகளுக்கு மிகவும் பாதுகாப்பானது.

 

சாய்தளக் கூரைகள் கட்டுவதனால் உள்ள அனுகூலங்கள் யாவை?



1. பாங்கு : வடிவம் மற்றும் அளவுகள்

சாய்தளக் கூரை பல வடிவம் அளவு மற்றும் கூரையில் அளவுகளில் அதிக இடம் கொடுக்கிறன. கட்டிடக் கலைஞர் சிக்கலான வடிவங்களைத் தேர்வுசெய்து, பின்வாங்காமல் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் அதிக விருப்பத் தேர்வுகள் உள்ளன இது விருப்பத்திற்கு ஏற்ப கூரையின் மிகவும் குறைபாடற்ற வடிவம் மற்றும் அளவைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

 

2. சக்தி சேமிப்பு

சாய்தளக் கூரை கட்டுமானத்திற்கும் வெளிப் புறத்திற்கும் இடையே இயற்கையான காற்றோட்டத்திற்கு அனுமதிக்கிறது இந்த கட்டிட அமைப்பினால் மின் சக்தி சுமார் 25% -30% சேமிக்கப்படுகிறது.

 

3. சுற்றுச் சூழல் அபாயங்களில் இருந்து பாதுகாக்கிறது

சாய்தளக் கூரை ஒரு முக்கோண வடிவம் பெற்று இருப்பதால் அது உறுதியானது மற்றும் பாதுகாப்பானது. அவை அதீத பனிப்பொழிவு, மலை, மற்றும் காற்று நேரங்களில் சுற்றுச் சூழல் விளைவுகளுக்கு எதிராக ஒரு சிறந்த பொருத்தமாக இருக்கிறது.

அதோடு கூட, நீங்கள் அதிகப்படியான பாதுகாப்பு ம்னற்றும் நீடித்த உழைப்புக்கு சுவர்கள் மற்றும் கூரைக்கு காப்பு கொடுக்கலாம்.

 

4. மிகச் சிக்கனமான அதிகப்படியான இடம்

சாய்வான ஜோடி மூடிய சாய்தளக் கூரைகள் உதவியால் நீங்கள் உங்கள் வீட்டில் அதிகப் பணம் செலவில்லாமலும் தளத்தை நீட்டிக்காமலும் அதிகப் படியான இடத்தை அனுபவிக்க முடியும்.

 

5. மழை நீர் மறு பயன்பாடு

சாய்தளக் கூரைகள், பல்வேறு விதமான மழைநீர் சேகரிப்பை எளிதாகவும் திறமையாகவும் ஏற்படுத்த உதவுகின்றன. அது, அந்த கூரைகளில் உள்ள வெளிப்புற நீரோடும் முறைமைகள் எளிதாக பாதை மாற்றவும் மாற்றி அமைக்கவும் உதவுவதால்.



சாய்தளக் கூரைகளின் பல்வேறு வகைகள், கட்டிட அமைப்பு, செலவு , கால சேமிப்பு மற்றும் அழகான சிறப்பியல்புகளை ஒன்றிணைத்து, ஒருவர் இது போட்டிபோட முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதை எளிதாக சொல்ல முடியும். இப்போது நீங்கள் சாய்தளக் கூரை என்றால் என்ன அவற்றின் வகைகளையும் தெரிந்துகொண்டீர்கள் அதிகப்படியான பாதுகாப்பு மற்றும் அழகான தோற்றத்தை கொடுக்கின்றதை நீங்கள் உங்களுக்கு தேவையான சரியான ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும்! /b>



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....