தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



கான்கிரீட் என்றால் என்ன? வகைகள், கலவை, பண்புகள் மற்றும் பயன்பாடுகள்

டிரைவ்வேகள், நடைபாதைகள் மற்றும் உயரமான கட்டிடங்களுக்குக் கான்கிரீட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள், மேலும் வலுவான மற்றும் நீடித்து உழைக்கும் கட்டமைப்புகளை உறுதிப்படுத்த அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராயுங்கள்.

Share:



கான்கிரீட் என்பது தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருளாகும், மேலும் அதற்கு ஒரு நல்ல காரணமும் உள்ளது. இது வலிமையானது, நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் பல்துறை திறன் கொண்டதாகும், மேலும் இது கட்டிடங்கள் முதல் பாலங்கள் வரை, சாலைகள் முதல் அணைகள் வரை பலவிதமான பயன்பாடுகளைக் கொண்டதுமாகும். ஆனால், கான்கிரீட் என்றால் என்ன? இந்த வலைப்பதிவில், எங்கும் நிறைந்திருக்கும் கான்கிரீட்டின் இயல்பை ஆராய்வோம் மற்றும் பல்வேறு வகையான கான்கிரீட், அவற்றின் கலவை, பண்புகள் மற்றும் இந்த அத்தியாவசியக் கட்டுமானப் பொருளின் பயன்பாடுகளைப் புரிந்துகொள்வோம்.


கான்கிரீட் என்றால் என்ன?

 

நீங்கள் எப்போதாவது நடைபாதையில் நடந்திருந்தால், சாலையில் வாகனம் ஓட்டியிருந்தால் அல்லது ஒரு கட்டிடத்தில் நின்றிருந்தால், நீங்கள் கான்கிரீட்டை எதிர்கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு. எளிமையாகச் சொன்னால், கான்கிரீட் என்பது சிமென்ட், தண்ணீர் மற்றும் கூட்டுப்பொருட்களின் (மணல் மற்றும் சரளை போன்றவை) கலவையாகும், இது காலப்போக்கில் கடினமாகி ஒரு திடமான, வலுவான பொருளை உருவாக்குகிறது. இது அனைத்து வகையான கட்டுமான திட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது மலிவானது, நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் இதை கிட்டத்தட்ட எந்த வடிவத்திலும் வடிவமைக்கலாம். இது சிமென்ட், கூட்டுப்பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை துல்லியமான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படும் ஒரு கட்டுமானப் பொருள் ஆகும்.



கான்கிரீட்டின் வகைகள்

 

1) ரீயின்ஃபோர்ஸ்டு கான்கிரீட்

இந்த வகை கான்கிரீட், அதன் இழு வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் திறனை அதிகரிக்க ஸ்டீல் கம்பிகள் அல்லது மெஷ் மூலம் வலுப்படுத்தப்படுகிறது. இது பொதுவாகக் கூடுதல் வலிமை மற்றும் நிலைத்தன்மை தேவைப்படும் உயரமான கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

 

2) எடை குறைவான கான்கிரீட்

பெயரில் குறிப்பிட்டுள்ளது போல, இந்த வகை கான்கிரீட் சாதாரணக் கான்கிரீட்டை விட எடை குறைவாக இருக்கும், இது எடையைக் கருத்தில் கொள்ளும் கட்டுமானத் திட்டங்களுக்கு ஏற்றதாகும். இது பொதுவாகச் சுவர் பேனல்கள், கூறை ஸ்லாப்கள் மற்றும் பேவிங் ப்ளாக்குகள் போன்ற ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கூறுகளின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

 

3) அதிக வலிமையுள்ள கான்கிரீட்

இந்த வகை கான்கிரீட் 40 MPa-க்கும் அதிகமான இறுக்க வலிமையைக் கொண்டுள்ளதால் உயரமான கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் அணைகள் போன்ற கூடுதல் வலிமை தேவைப்படும் கட்டமைப்புகளின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

 

4) அதிக செயல்திறன் கொண்ட கான்கிரீட்

இது அதிகம் நீடித்து உழைக்கும் தன்மை, அதிகரித்த வலிமை மற்றும் தீவிர வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைத் தாங்குவது போன்ற மேம்பட்ட பண்புகளைக் கொண்டிருக்கும் ஒரு சிறப்பு வகை கான்கிரீட் ஆகும். இது பொதுவாக அணு மின் நிலையங்கள், கடற்கறை கட்டமைப்புகள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப திட்டங்களின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

 

5) ப்ரீகாஸ்ட் கான்கிரீட்

இந்த வகை கான்கிரீட், கட்டுமான தளத்திற்கு வெளியே உற்பத்தி செய்யப்பட்டு, கட்டுமானம் நடக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இது பொதுவாகச் சுவர் பேனல்கள், தூண்கள், பீம்கள் மற்றும் படிக்கட்டுகள் போன்ற ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கூறுகளின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. ப்ரீகாஸ்ட் கான்கிரீட் பாரம்பரியமான காஸ்ட்-இன்-பிளேஸ் கான்கிரீட்டை விட அதிகமான நன்மைகளை வழங்குகிறது, இதில் குறைவான கட்டுமான நேரம் மற்றும் அதிகரித்த தரக் கட்டுப்பாடு அடங்கும்.


கான்கிரீட்டின் கலவை



கான்கிரீட் மூன்று முக்கிய பொருட்களால் ஆனது - சிமெண்ட், கூட்டுப்பொருட்கள் மற்றும் தண்ணீர். சிமென்ட் என்பது கான்கிரீட்டை ஒன்றாக பிடித்து வைக்கும் ஒரு பிணைப்பு பொருள் அகும், அதே சமயம் மணல் மற்றும் சரளை போன்றவை வலிமையையும் அடர்த்தியையும் வழங்குகிறன.

 

சிமென்டை ஹைட்ரேட் செய்யவும், கான்கிரீட்டை கடினப்படுத்தும் வேதியியல் செயல்முறையை செயல்படுத்தவும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான், கான்கிரீட்டின் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை தீர்மானிப்பதில் சிமென்ட்டுக்கும் தண்ணீருக்கும் இடையிலான விகிதம் இன்றியமையாத காரணியாக உள்ளது. சரியான தண்ணீர் சிமென்ட் விகிதத்தை முதலில் கணக்கிட வேண்டும், ஏனெனில் அதிகமான தண்ணீர்-சிமென்ட் விகிதத்தின் விளைவாக விரிசல் மற்றும் அரிப்புக்கு அதிக வாய்ப்புள்ள பலவீனமான, குறைவாக நீடித்து உழைக்கும் கான்கிரீட் உருவாகக்கூடும்.

 

மூன்று முக்கியமான பொருட்களுடன் சேர்த்து, அட்மிக்ஸ்சர்ஸ் போன்ற சேர்மானப் பொருட்களையும் கான்கிரீட் கொண்டிருக்கலாம், இது வேலைத்திறன், வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் திறன் போன்ற சில பண்புகளை மேம்படுத்தும். இந்த சேர்மானப் பொருட்களில் உலைச் சாம்பல், சிலிக்கா ஃப்யூம் மற்றும் பிளாஸ்டிஸைஸர்ஸுடன் மற்றவையும் அடங்கும்.


கான்கிரீட்டின் பண்புகள்



கான்கிரீட் பல பண்புகளைக் கொண்டுள்ளது, அதனால் இது பரவலான பயன்பாடுகளுக்குச் சிறந்த கட்டுமானப் பொருளாக அமைகிறது. கான்கிரீட்டின் மிக முக்கியமான சில பண்புகள் இதோ :


1. வேலைத்திறன் -

இது கான்கிரீட்டைக் கலப்பது, கொண்டு செல்வது மற்றும் அதன் இறுதி நிலையில் வைப்பது உள்ளிட்டவை எளிதாக இருப்பதைக் குறிக்கிறது. கான்கிரீட்டில் விரும்பிய வடிவம் மற்றும் முடிவை அடைவதற்கு அதிக அளவு வேலைத்திறன் அவசியமாகும்.

 

2. வலிமை -

கான்கிரீட் அதன் வலிமைக்காக அறியப்படுகிறது மற்றும் இது அதிக சுமைகளையும் அழுத்தங்களையும் தாங்கும். கான்கிரீட்டின் சுருக்க வலிமையானது அதன் கலவை மற்றும் பதப்படுத்தும் நேரத்தைப் பொறுத்துப் பரவலாக மாறுபடும்.

 

3. நீடித்து உழைக்கும் தன்மை -

கான்கிரீட் அதிகம் நீடித்து உழைக்கக்கூடியதாகும், மேலும், தண்ணீர், காற்று மற்றும் தீவிர வெப்பநிலை உள்ளிட்டவற்றைத் தாங்கக்கூடியதுமாகும். முறையாகப் பதப்படுத்திப் பராமரிப்பது கான்கிரீட் கட்டமைப்புகளின் ஆயுளை நீட்டிக்கும்.

 

4. கிரீப் -

இது காலப்போக்கில் தொடர்ச்சியான சுமைகளின் கீழ்க் கான்கிரீட் படிப்படியாக உருக்குலைவதைக் குறிக்கிறது. வடிவமைப்பு மற்றும் கட்டுமானச் செயல்முறையின்போது கவனிக்கப்படவில்லை என்றால் கிரீப் கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தும்.

 

5. சுருங்குதல் -

கான்கிரீட் உலர்ந்தவுடன் சுருங்குவதால் விரிசல் மற்றும் பிற சேதம் ஏற்படலாம். முறையான வலுவூட்டல் மற்றும் பதப்படுத்தல் சுருக்கத்தின் விளைவுகளைக் குறைக்க உதவும்.

 

6. யூனிட் வெயிட் -

கான்கிரீட்டின் யூனிட் வெயிட் என்பது அதன் அடர்த்தியைக் குறிக்கிறது, மேலும் அதன் கலவை மற்றும் வலிமையைப் பொறுத்து அது மாறுபடும். அதிகமான யூனிட் வெயிட் கான்கிரீட்டை வலுவானதாகவும் அதிகம் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் ஆக்கும்.

 

7. மாடுலர் விகிதம் -

இது கான்கிரீட்டின் எலாஸ்டிக் மாடுலிக்கும் அதை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஸ்டீல் ரீயின்ஃபோர்ஸ்மெண்ட்டுக்கும் இடையிலான தொடர்பைக் குறிக்கிறது. அதிகமான மாடுலர் விகிதத்தின் விளைவாக, கட்டமைப்புகள் வலுவானதாகவும் அதிகம் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்கும்.

8. பாய்சான் விகிதம் -

இது ஒரு பொருள் நீட்டப்படும்போது அல்லது சுருக்கப்படும்போது பக்கவாட்டுத் திரிபு மற்றும் அச்சு திரிபு விகிதத்தின் அளவீடாகும். பாய்சான் விகிதம் கான்கிரீட் கட்டமைப்புகளின் ஒட்டுமொத்த வலிமையையும் நிலைத்தன்மையும் பாதிக்கும்.


கான்கிரீட்டின் பயன்பாடுகள்

1. டிரைவ்வேக்கள் மற்றும் பாட்டியோக்கள் -

கான்கிரீட் அதன் நீடித்து உழைக்கும் திறன், குறைந்த பராமரிப்பு மற்றும் பல்துறைத்திறன் காரணமாக டிரைவ்வேகள் மற்றும் பாட்டியோக்களுக்கான ஒரு சிறந்த கட்டுமானப் பொருளாகும். சுற்றியுள்ள பகுதியின் அழகியலுடன் பொருந்தக்கூடிய வகையில் கான்கிரீட் முத்திரையிடலாம் அல்லது வண்ணம் பூசலாம் என்பதால், இது வீட்டு உரிமையாளர்களுக்கான ஒரு கவர்ச்சிகரமான ஆப்ஷனாக அமைகிறது. கூடுதலாக, கான்கிரீட் அதிகப் பாரத்தைத் தாங்கும் மற்றும் விரிசல்களை எதிர்க்கும் திறன் கொண்டது என்பதால், இது நீண்ட காலத்திற்கான நம்பகமான தேர்வாக அமைகிறது.

 

2. நடைபாதைகள் -

கான்கிரீட் வலிமையானது, மலிவானது மற்றும் எளிதாக இன்ஸ்டால் செய்யக்கூடியது என்பதால் நடைபாதைகளுக்கான ஒரு பிரபலமான தேர்வாக உள்ளது. கான்கிரீட் நடைபாதைகளால் அதிகமான கால் போக்குவரத்தைத் தாங்க முடியும் மற்றும் அது சேதமடைந்தால் எளிதாகச் சரிசெய்ய முடியும். அவற்றுக்குக் குறைந்த பராமரிப்பே தேவைப்படும் மற்றும் வானிலை மற்றும் அரிப்பை எதிர்க்கும் தன்மையைக் கொண்டது.

 

3. வாகன நிறுத்தம் -

கான்கிரீட் அதன் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் திறன் காரணமாக வாகன நிறுத்தங்களின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான கட்டுமானப் பொருளாகும். கான்கிரீட் பயன்படுத்திக் கட்டப்பட்ட வாகனப் நிறுத்தங்களால், கடுமையான வாகன போக்குவரத்தைத் தாங்கி, சரியான பராமரிப்பின் மூலம் பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்க முடியும். மேலும், கான்கிரீட் வழிக்காது மற்றும் பாதுகாப்பிற்காகக் கண்ணுக்குத் தெரியும் அடையாளங்களை இதில் வரையலாம்.

 

4. தெருக்கள் -

கான்கிரீட் அதன் நீடித்து உழைக்கும் திறன், வழுக்காமல் இருக்கும் திறன் மற்றும் அதிகப் பாரத்தைத் தாங்கும் திறன் காரணமாகத் தெருக்களை அமைப்பதற்கான ஒரு சிறந்த கட்டுமானப் பொருளாகும். கான்கிரீட் தெருக்களுக்குக் குறைவான பராமரிப்பே தேவைப்படும், இது முறையான பராமரிப்புடன் பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். இவை எண்ணெய் மற்றும் எரிபொருள் சிந்துவதால் பாதிக்கப்படாது என்பதால், அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளுக்கு இது சரியான தேர்வாகும்.

 

5. அடிமானங்கள்/அஸ்திவாரம் -

கான்கிரீட் அதன் வலிமை, நீடித்து உழைக்கும் திறன் மற்றும் நீர் எதிர்ப்பு திறன் காரணமாக அஸ்திவாரம் மற்றும் அடிமானக் கட்டுமானத்திற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் அஸ்திவாரங்கள் ஒரு கட்டிடத்தின் எடையைத் தாங்கி, அதை ஈரப்பதம் மற்றும் நீர் சேதத்திலிருந்து பாதுகாக்கும். மேலும், கான்கிரீட்டின் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் திறனை மேலும் அதிகரிக்க ஸ்டீல் கம்பிகளைப் பயன்படுத்தி அதை வலுவூட்டலாம்.

 

6. நடுத்தர உயரம் உள்ள மற்றும் அதிக உயரம் உள்ள கட்டிடங்கள் -

கான்கிரீட் அதன் வலிமை, நீடித்து உழைக்கும் திறன் மற்றும் நில நடுக்கம் மற்றும் சூறாவளிகள் போன்ற இயற்கை பேரிடர்கள் எதிர்ப்பு திறன் காரணமாக நடுத்தர உயரம் உள்ள மற்றும் அதிக உயரம் உள்ள கட்டிடங்களின் கட்டுமானத்திற்கு ஏற்ற கட்டுமானப் பொருளாகும். ரீயின்ஃபோர்ஸ்டு கான்கிரீட் கட்டமைப்புகளால் அதிகமான காற்று மற்றும் நில அதிர்வுகளைத் தாங்க முடியும் என்பதால், அவை உயரமான கட்டிடங்களுக்கான ஒரு நம்பகமான தேர்வாக அமைகின்றன. மேலும், கான்கிரீட் கட்டிடங்களை ஆற்றல் திறன் கொண்டதாக வடிவமைக்கலாம் மற்றும் அது சரியான பராமரிப்புடன் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும்.



சுருக்கமாகக் கூறினால், கான்கிரீட் என்பது பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு பல்துறை சார்ந்த மற்றும் நீடித்து உழைக்கும் கட்டுமானப் பொருள் ஆகும். முடிக்கப்பட்ட தயாரிப்பிற்குத் தேவையான வலிமை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறனை அடைவதற்குக் கான்கிரீட் என்றால் என்ன, கான்கிரீட்டின் வகைகள், அதன் கலவை மற்றும் கான்கிரீட்டின் பண்புகளைப் புரிந்துகொள்வது அவசியமாகும். வழக்கமான கான்கிரீட் சோதனை முறைகள் கான்கிரீட் தேவையான தரநிலைகள் மற்றும் தரவரைவுகளை பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. கான்கிரீட் சோதனை முறைகள் குறித்து மேலும் அறிய, கான்கிரீட் சோதனை பற்றிய இந்தப் பயனுள்ள வீடியோவைப் பார்க்கவும்.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....