வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



மேலோட்டமான மற்றும் ஆழமான ஃபவுண்டேஷனிற்கு இடையேயான வித்தியாசம் என்ன?

மேலோட்டமான மற்றும் ஆழமான ஃபவுண்டேஷன்களுக்கு இடையேயான வித்தியாசங்களை அறிந்துக் கொள்வோம். அவற்றின் ஆழம், செலவுகள் மற்றும் கட்டுமான சிக்கல்களை பற்றி அறிந்துக் கொள்வோம். கட்டுமானத்தில் அடிப்படை பொறியியல் நிலப்பரப்பின் ( foundational engineering landscape) முக்கிய பங்கினை புரிந்துக் கொள்ள நாங்கள் உங்களை வழிநடத்துகின்றோம் எங்களுடன் இணையுங்கள்.

Share:


முக்கிய குறிப்புகள் 

 

  • சரியான ஃபவுண்டேஷனானது கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் திறனுக்கு மிகவும் முக்கியமானது.
 
  • மேலோட்டமான ஃபவுண்டேஷணானது ஆழமில்லாமல் மேற்பரப்பிற்கு அருகில் அமைபவை, குறைந்த லோட் மற்றும் நிலையான மண் வகைகளுக்கு இவை உகந்தவை.
 
  • ஆழமான ஃபவுண்டேஷன்கள் நிலையான மண் அடுக்குகளை சென்றடைகிறது, அதிக லோட் மற்றும் நிலையற்ற மண் வகைகளுக்கு இவை உகந்தவை.
 
  • மேலோட்டமான மற்றும் ஆழமான ஃபவுண்டேஷணிற்கு இடையேயான வித்தியாசம்: ஆழம், செலவு, சிக்கல்(காம்ப்ளக்ஸிட்டி) ஆகியவை மேலோட்டமான ஃபவுண்டேஷன் மற்றும் ஆழமான ஃபவுண்டேஷணிற்கு இடையே வேறுபடுகின்றன.

 

  • மண் பரிசோதனை, லோட் தேவை, செலவு மற்றும் சுற்றுச்சூழலின் தாக்கம் உள்ளிட்டவை முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

 

  • மேலோட்டமான பவுண்டேஷன் மற்றும் ஆழமான பவுண்டேஷன் பற்றிய தேர்வு பிராஜெக்டின் வெற்றி மற்றும் ஆயுள்தன்மையை பாதிக்கிறது.


ஃபவுண்டேஷன் தான், கட்டமைப்பின் நிலைத்து நிற்கும் தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் திறனை நிர்ணயிப்பதால், சரியான ஃபவுண்டேஷனை தேர்வு செய்வது முக்கியமானதாகும். ஆனால் மேலோட்டமான மற்றும் ஆழமான ஃபவுண்டேஷன்களில் எது சிறந்தது என எப்படி தெரிந்துகொள்வது? இன்று நாம் கட்டிடத்தின் அவசியமான கூறுகளை பற்றி காண்போம், மேலோட்டமான மற்றும் ஆழமான ஃபவுண்டேஷணிற்கு இடையேயான வித்தியாசங்களை அறிவோம். உங்களின் அடுத்த கட்டுமான பிராஜெக்டில் தகவல் அறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறோம். அவற்றின் ஆழம், லோட் தாங்கும் திறன் ஆகியவற்றை பொருத்து ஒவ்வொரு வகையையும் பிரிக்கலாம்.

 

 


மேலோட்டமான பவுண்டேஷன் என்றால் என்ன?



கட்டுமான பொறியியலின் முக்கிய அங்கமான மேலோட்டமான பவுண்டேஷன், பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் பொதுவாக அதன் அகலத்தை விட குறைவான தூரத்தில் அமைக்கப்படுகின்ற ஒரு வகையாகும். ஒரு கட்டமைப்பிற்கு அடியில் உள்ள நிலப்பரப்பு குறிப்பிட்ட அளவு தளர்வு அல்லது அசைவு இல்லாமல் லோடை தாங்கும் திறனுடையதாக இருக்கும் போது இவ்வகை பவுண்டேஷன் பயன்படுகிறது.

 

மேலோட்டமான ஃபவுண்டேஷன் வகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது

 

1. தனி (ஐசோலேட்டட்) ஃபூட்டிங்குகள்

2. கம்பைன்ட் ஃபூட்டிங்குகள்

3. ராஃப்ட் அல்லது மேட் ஃபவுண்டேஷன்கள்

4. ஸ்டிரிப் ஃபவுண்டேஷன்கள்

5. ஸ்லாப்-ஆன்-கிரேடு ஃபவுண்டேஷன்கள்

 

மேலோட்டமான ஃபவுண்டேஷனானது, கட்டுமானத்திற்கு அடியில் கட்டிட லோடை பெரிய நிலப்பரப்பிற்கு வழங்குகிறது. பொதுவான வகைகள் ஸ்லாப்-ஆன்-கிரேடு, மேட், ஸ்பிரட் ஃபூட்டிங் மற்றும் ஸ்ட்ரிப் ஃபூட்டிங் ஆகிவையை ஆகும். அவை ஆழமான ஃபவுண்டேஷனை விட சிக்கனமானது மற்றும் கட்டுவதற்கு குறைந்த சிக்கல் உடையது. இவை கனமான லோட் இல்லாத கட்டிடங்களுக்கு பொருத்தமானவை.

 

 

ஆழமான பவுண்டேஷன் என்றால் என்ன?



பலவீனமான மேற்பரப்பிற்கு அருகில் உள்ள மண் காரணமாக மேலோட்டமான ஃபவுண்டேஷன்கள் போதுமான ஆதரவை வழங்காத போது இந்த ஆழமான ஃபவுண்டேஷன்கள் பயன்படுகின்றன. இது பூமியின் ஆழம் வரை சென்று, வலிமையான மற்றும் மிகவும் நிலையான துணை மேற்பரப்பின் அடுக்கிற்கு கட்டுமான லோடை மாற்றுகிறது. உயரமான கட்டுமானங்கள், பெரிய கட்டிடங்கள் அல்லது நிலையற்ற மண் உள்ள பகுதிகளில் ஆழமான ஃபவுண்டேஷன்கள் பெரும்பாலும் தேவைப்படுகிறது.

 

ஆழமான ஃபவுண்டேஷன்களின் வகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது

 

1. பைல் ஃபவுண்டேஷன்கள்s

2. கைசன் ஃபவுண்டேஷன்கள்s

3. பேஸ்மன்ட் ஃபவுண்டேஷன்கள்

4. போயன்சி ராஃப்ட் (அல்லது மிதக்கும் ஃபவுண்டேஷன்கள்)

5. ஷாஃப்ட் ஃபவுண்டேஷன்கள் (shaft foundations)

 

ஆழமான ஃபவுண்டேஷன்கள், செலவு அதிகமாக மற்றும் சிக்கலாக இருந்தாலும் கூட, சவாலான தள சூழலில் விசைகளை மாற்றுவதற்கு முனை-தாங்கி(end-bearing) மற்றும் தோல் உராய்வை (skin friction) நம்பி இருக்கும் பட்சத்தில் ஆழமான ஃபவுண்டேஷன்கள் நிலைத்து நிற்கும் தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன.

 

 

மேலோட்டமான மற்றும் ஆழமான ஃபவுண்டேஷன்களுக்கிடையே உள்ள முக்கிய வித்தியாசங்கள்

மேலோட்டமான மற்றும் ஆழமான ஃபவுண்டேஷன்களில் எதை தேர்வு செய்யும்போது, தேர்வு செய்த அந்த வகை ஃபவுண்டேஷன்கள், பிராஜெக்ட்டின் தேவைகள், புவிதொழில்நுட்ப நிலைகள், மற்றும் வரவுசெலவு சிக்கல்களுக்கு உகந்ததா என்பதை உறுதி செய்ய பல்வேறு விதமான காரணிகளை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் கீழே அவை ஒப்பிடப்பட்டுள்ளன.

 

மேலோட்டமான மற்றும் ஆழமான ஃபவுண்டேஷன்களுக்கிடையே உள்ள வித்தியாசங்கள்

ஷேலோ ஃபவுண்டேஷன்

Deep Foundation

வரையறை

தரை தளத்தின் அருகாமையில் வைத்து ஷோலோ ஆழத்தில் பளுவை பரிமாற்றுதல்

Located at a greater depth, transferring loads to deep strata

ஆழம்

பொதுவாக 3 மீட்டர் அல்லது அதற்கும் குறைவாக

More than 3 metres, exceeding the depth of shallow foundations

செலவு

எளிதான கட்டுமானம் என்பதால் செலவு குறைவு மற்றும் குறைவான பணியாளர்களே போதுமானது

More expensive due to complex construction and skilled labour

கட்டுமான செயல்முறை

எளிதானது, சிறு குழிகளாக தோண்டி ரீயின்ஃபோர்ஸ்டு கான்கிரீட் ஃபூட்டிங்கை நிரவப்படாத மண் மீது அமைத்தால் போதும்.

May involve complex processes like drilling or driving piles, requiring large machinery

லோட் மாற்றம்

எண்ட்-பியரிங்க் வாயிலாக

Utilises both end-bearing and skin friction

நன்மைகள்

குறைவான பணியாளர்கள் போதும், எளிதான கட்டுமானம், குறைந்த செலவு

Suitable for heavy loads, provides lateral support, resists uplift

தீமைகள்

செட்டில்மெண்ட் பொதுவாக இலகுவான கட்டமைப்புகளுக்குட்பட்டது, லேட்ரல் லோட்களில் வலிமையிழந்துவிடும்

More expensive, requires skilled labour, construction complexity


சரியான ஃபவுண்டேஷனைத் தேர்வு செய்வதற்கான 7 முக்கிய காரணிகள்



இந்தியாவில் கட்டிடத் திட்டங்களுக்காக மேலோட்டமான ஃபவுண்டேஷன் (Shallow Foundation) மற்றும் ஆழ ஃபவுண்டேஷன் (Deep Foundation) ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்போது, கீழ்கண்ட முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும்:

 

1.மண் பகுப்பாய்வு:
மண் அமைப்பு மற்றும் அதன் சுமை தாங்கும் திறனை (bearing capacity) அறிந்து, ஏற்ற ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

 

2.பிராஜெக்ட் லோட் தேவைகள்:
கட்டிடத்தில் எதிர்பார்க்கப்படும் லோட்களை மதிப்பீடு செய்து, ஆழமான ஃபவுண்டேஷன் தேவையா என்பதைக் கணிக்க வேண்டும்.

 

3. செலவுகள்:
இரண்டு வகை ஃபவுண்டேஷன்களுக்கும் தேவையான பொருட்கள், லேபர் கூலிகள், உபகரணங்கள் மற்றும் கட்டுமான நேரம் போன்றவை அடிப்படையில் செலவுகளை ஒப்பிட வேண்டும்.

 

4. சுற்றுச்சூழல் தாக்கம்:
அகழ்வுப் பணிகள் மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.

 

5.கட்டிட வடிவமைப்பு (Structural Design):
கட்டுமானம் தாங்க வேண்டிய லோட்கள் மற்றும் வடிவமைப்பின் தன்மையும், ஃபவுண்டேஷனின் தேர்வை தீர்மானிக்கும்.

 

6. ஒழுங்குமுறை அனுமதி:
உள்ளூர் கட்டிட நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

 

7. நிபுணரின் ஆலோசனை:
மண் விஞ்ஞான நிபுணர்கள் மற்றும் ஃபவுண்டேஷன் பற்றி நன்கு அறிந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெரும்பொழுது, இடத்தின் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறந்த ஃபவுண்டேஷனைத் தேர்வு செய்ய உதவும்.



மேலோட்டமான மற்றும் ஆழமான ஃபவுண்டேஷனில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது, எந்தவொரு கட்டிடத் திட்டத்திற்கும் மிக முக்கியமானது.மேலோட்டமான ஃபவுண்டேஷன் என்பது, கட்டிடங்களின் சுமைகள் அதிகம் இல்லாத போதும், மண் மேற்பரப்பு வலிமையாக இருக்கும்போதும் சிறப்பாக வேலை செய்யும்.ஆழமான ஃபவுண்டேஷன் என்பது, மண் நிலைத்தன்மை குறைவாக இருக்கும்போது அல்லது கட்டிடத்தின் சுமை அதிகமாக இருக்கும்போது தேவைப்படும்.உங்கள் கட்டிடம் வலிமையுடன் நிலைத்தும், பாதுகாப்புடனும் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய சரியான ஃபவுண்டேஷன் வகையைத் தேர்வு செய்வதே முதல் பெரிய படியாகும்.





அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. மேலோட்டமான ஃபவுண்டேஷனின் அதிகபட்ச ஆழம் என்ன?

மேலோட்டமான ஃபவுண்டேஷனின் அதிகபட்ச ஆழம் பொதுவாக 3 மீட்டர் (சுமார் 10 அடி) வரை இருக்கலாம். இது மண் வகை மற்றும் கட்டிட லோட்கள் போன்ற நிலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இது நீடித்து நிலைக்கும் ஆதரவை குறைந்த அகழ்வு செய்தாலே வழங்கும்.

 

2. மேலோட்டமான ஃபவுண்டேஷனின் 2 முக்கியமான வகைகள் யாவை?

மேலோட்டமான ஃபவுண்டேஷன்களின் இரண்டு அடிப்படை வகைகள் - ஃஸ்ப்ரெட் ஃபூட்டிங்குகள். இவை கட்டிடத்தின் சுமையை பரந்த பரப்பில் பரப்புகிறது. இதில் தனி ஃபூட்டிங் மற்றும் ஸ்ட்ரிப் ஃபூட்டிங் ஆகியவை அடங்கும். மேட் ஃபவுண்டேஷன்கள், இவை முழு கட்டிடத்திற்கும் ஆதரவை கொடுக்கும் வகையில் ஒரே பெரிய ஃபவுண்டேஷனாக அமைக்கப்படுகிறது.

 

3. ஆழமான ஃபவுண்டேஷனின் ஆழம் என்ன?

ஒரு ஆழக் ஃபவுண்டேஷனின் (Deep Foundation) ஆழம் நிலத்தடியில் இருந்து 20 அடி முதல் 65 அடி அல்லது அதற்கு மேல் வரை இருக்கும். இது உறுதியான அடிநில மண் அல்லது பாரையினை அடையை அடையும் வரை ஆழமாக இருக்கிறது. மேலும் பெரும் சுமைகளை தாங்கக்கூடிய வலிமையான ஆதரவை வழங்குகிறது.

 

4. ஆழமான ஃபவுண்டேஷனுக்கான உதாரணம் என்ன?

ஆழமான ஃபவுண்டேஷனுக்கான சாதாரண உதாரணம் பைல் ஃபவுண்டேஷன் (Pile Foundation) ஆகும். இது கான்கிரீட் அல்லது ஸ்டீல் கொண்டு செய்யப்பட்ட நீளமான, மெல்லிய காலமண்கள் ஆகும். மண்ணின் வலிமையான அடுக்குகள் அல்லது பாறைகளை அடையும் வரை, ட்ரில்லிங் அல்லது ட்ரைவிங் மூலம் இவ்வகை ஃபவுண்டேஷன்கள் பூமியின் ஆழத்திற்குள் பொருத்தப்படும்.


தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....