மின்சாரம் சார்ந்த வேலையின் போதுப் பாதுகாப்பு இடையூறுகளைத் தவிர்க்க வேண்டுமா?

ஆகஸ்ட் 25, 2020

மின்சாரம் சார்ந்த வேலை என்பது உங்கள் வீட்டின் கட்டுமானத்தில் இறுதி கட்டங்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தக் கட்டத்தின் போது நீங்கள் சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் விபத்துகள் தீவிரமான பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பு இடையூறுகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

சில முக்கியமான மின் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் இதோ.

  • நீங்கள் உங்கள் வீட்டைக் கட்டத் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து வயரிங் மற்றும் மின்சார அவுட்லெட்கள் இருக்க வேண்டிய இடத்தை நீங்கள் திட்டமிட்டிருப்பதை உறுதி செய்யவும்.
  • உங்களின் அனைத்து மின்சாரம் சார்ந்த வேலைகளுக்கும் ஒரு சான்றளிக்கப்பட்ட மின் ஒப்பந்தக்காரரிடம் கலந்தாலோசிப்பது ஒரு நல்ல யோசனை ஆகும்.
  • உங்கள் வீட்டுக்குச் சரியான முறையில் எர்திங் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இதை உறுதி செய்ய உங்கள் பொறியாளர் உதவி செய்வார்.
  • தரமான மின்சாரப் பொருட்களைப் பெறுவதற்கு, வாங்குவதற்கு முன்னர் ISI குறியீடு உள்ளதா என்று சரிபார்க்கவும்.
  • ஒற்றை மின்சாரப் புள்ளியில் மிக அதிகமான இணைப்புகளை வைத்திருப்பதைத் தவிர்க்கவும், மேலும் உங்களின் அனைத்து மின்சாதனங்களுக்கும் ஃப்யூஸைப் பயன்படுத்தவும்.
  • அனைத்து மின் இணைப்புகள் மற்றும் புள்ளிகளை எந்தவொரு நீர் ஆதாரத்திடமிருந்தும் தள்ளி வைக்கவும்.
  • இறுதியாக, முழுவதுமாகச் சரிபார்த்து, கவனிக்கப்படாமல் இருக்கும் மின்னோட்டம் உள்ள வயர்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யவும்.

உங்கள் வீட்டில் மின்சாரம் சார்ந்த வேலையை மேற்கொள்ளும் போது ஏதேனும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு இந்தப் பாதுகாப்பு உதவி குறிப்புகளை மனதில் கொள்ளவும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்