வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



சரியான ரூஃபிங் ஷீட்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டி.

உங்க வீட்டின் திட்டத்திற்கு ஏற்ற சிறந்த ரூஃபிங் தீர்வை கண்டறியுங்கள். நீடித்து உழைக்கும் தன்மை முதல் அழகிய தோற்றம் வரை உங்கள் கட்டிடத்திற்கு பாதுகாப்பையும் ஸ்டைலையும்ம் உறுதி செய்யும் வகையில், உங்களுக்கு ஏற்ற பல்வேறு வகையான ரூஃபிங் ஷீட்களை பற்றி ஆராய்ந்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • பல வகையான ரூஃபிங் ஷீட்கள் உள்ளன: மெட்டல், பாலிகார்பனேட், ஃபைபர் சிமண்ட் மற்றும் பிளாஸ்டிக். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைகளுக்கும் காலநிலைகளுக்கும் ஏற்றதாக இருக்கின்றன.

     

  • ஸ்டீல் மற்றும் அலுமினியம் போன்ற மெட்டல் ஷீட்கள் நீண்ட காலம் நீடித்து உழைக்கும் தன்மையை வழங்குகின்றன. இவை மோசமான வானிலைகளை சமாளிப்பதற்கு உகந்தவை.

     

  • பாலிகார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் ஷீட்கள் எடை குறைவானவை, எளிதில் பொருத்தக்கூடியவை. மற்றும் இவை நிறமில்லாமலும் மற்றும் பல்வேறு நிறங்களிலும் கிடைப்பதால், பேட்டியோஸ் அல்லது கிரீன் ஹவுஸ்களுக்கு ஏற்றவை.

     

  • ஃபைபர் சிமெண்ட் ஷீட்கள் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதனால் இவற்றின் பலம் குறையாமல் சுற்றுச்சூழலுக்கு மேன்மையான தேர்வாக அமைகின்றது. 

     

  • இவை பலவகையான நிறங்களிலும் தோற்றங்களிலும் வருவதால், பாரம்பரியம் முதல் நவீன வடிவமைப்புகள் வரை, உங்களின் கட்டிடத்தின் அமைப்பிற்கு ஏற்ற பொருத்தமான ரூஃபிங் ஷீட்களை தேர்வு செய்யலாம்.

     

  • வெவ்வேறு வகையான ரூஃபிங் ஷீட்கள் வெவ்வேறு விலையில் கிடைக்கின்றன. பாலிகார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் வகை தான் பொதுவாக மலிவான விலையில் கிடைக்கும். அதுவே மெட்டல் ஷீட்கள் நீடித்து நீண்ட காலம் உழைக்கும்.



ரூஃபிங் ஷீட்களின் வகைகள்

புதிய கட்டிடம் கட்டும்போதோ அல்லது புதுப்பிக்கும் போதோ, சரியான ரூஃபிங் ஷீட்டை தேர்வு செய்வது மிக முக்கியம். ரூஃபிங் ஷீட்கள் வானிலை சூழல்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன. கட்டிடத்தின் அழகை மேம்படுத்துகின்றன, ஆற்றல் திறனையும் அதிகப்படுத்துகின்றன. இன்று பல வகையான ரூஃபிங் ஷீட்களை பற்றியும், அவற்றின் பலன்கள் மற்றும் பயன்பாடுகளைப் பற்றியும் பார்ப்போம். நீங்கள் வீட்டு உரிமையாளராக இருந்தாலும், காண்ட்ராக்டராக அல்லது ஆர்கிடெக்ட்டாக இருந்தாலும், இந்த தகவல்கள் உங்களுக்கு சிறந்த முடிவுகளை எடுக்க உதவும். 

 

 


6 வகையான ரூஃபிங் ஷீட்கள்

வெவ்வேறு வகைகளை புரிந்துக்கொள்வதால், ரூஃபிங் மெட்டீரியல்ஸை தேர்ந்தெடுக்கும்போது சரியானவற்றை தேர்வு செய்ய முடியும்.. இப்போது 6 பொதுவான ரூஃபிங் ஷீட்களின் தனிச்சிறப்புகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி பார்ப்போம்.

 

1.  கொருகேட்டட் மெட்டல் ஷீட்கள்



கொருகேட்டட் (நெளிவான) மெட்டல் ரூஃபிங் ஷீட்கள் மிகவும் உறுதியானவை மற்றும் மோசமான வானிலையை தாங்கும் திறன் கொண்டவை. இதன் அலைப்போன்ற வடிவமைப்பு இதற்கு கூடுதல் வலிமையைக் கொடுக்கிறது. மற்றும் இது பல வருடங்கள் நீடித்து உழைக்கும் வல்லமை மிக்கது. இந்த ஷீட்கள் தொழிற்சாலைகள் மற்றும் நீண்ட காலம் நீடித்து நிலைத்திருக்கும் ரூஃபிங் தேவையுள்ள வீடுகளுக்கு சிறந்தவை.

 

2. பாலிகார்பனேட் ரூஃபிங் ஷீட்கள்



பாலிகார்பனேட் ரூஃபிங் ஷீட்கள் எடை குறைவானவை மற்றும் அதிக தாக்கங்களை தாங்கும் திறன் உள்ளவை. இவை நிறம்மற்ற தன்மை அல்லது ஒளிப்புகும் தன்மை கொண்டவை என்பதால், இயற்கை ஒளி நேரடியாக ஊடுருவ உதவும். இதனால் இவை கிரீன் ஹவுஸ்கள் பேட்டியோக்கள் மற்றும் கன்சர்வேட்டரிகள் (கண்ணாடி கூரை) ஆகியவற்றிற்கு சிறந்த தேர்வாகும். இந்த ஷீட்கள் UV கதிர்களிலிருந்து பாதுகாக்கும் மற்றும் வெப்ப காப்பாற்று திறனும் கொண்டது.

 

3. பிளாஸ்டிக் ரூஃபிங் ஷீட்கள்



பிளாஸ்டிக் ரூஃபிங் ஷீட்கள் மலிவானவை. பல்வேறு தேவைகளுக்கேற்ப பயன்படுத்தக்கூடியவையாகவும் இருக்கின்றன. இவை பலவகை நிறங்களில் கிடைக்கின்றன மற்றும் ஸ்லேட் அல்லது டைல் போன்று தோற்றமளிக்கின்றன. பிளாஸ்டிக் ஷீட்கள் வாட்டர்ப்ரூஃப் தன்மைக் கொண்டவை மற்றும் எளிதில் பொருந்தக்கூடியவை. ஷெட்கள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற சிறிய கட்டமைப்புகளுக்கு ஏற்றவை.

 

4. ஆஸ்பால்ட் ரூஃபிங் ஷீட்கள்



ஆஸ்பால்ட் ரூஃபிங் ஷீட்கள் அல்லது ஷிங்கில்ஸ், வீடுகளில் பயன்படுத்தப்படும் ரூஃபிங் மெட்டீரியல்ஸில் பொதுவான ஒன்று. இவை ஃபைபர்க்ளாஸை அடித்தளமாக கொண்டு, மேலே ஆஸ்பால்ட் மற்றும் மினரல் கலந்த கிராநியூல்கள் வைத்து உருவாக்கப்பட்டவை. இவை மோசமன வானிலையை தாங்கும் எதிர்ப்பு திறனைத் தருகிறது. மேலும், பலவகை நிறங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன.

 

5. ஸ்லேட் ரூஃபிங் ஷீட்கள்



ஸ்லேட் ரூஃபிங் ஷீட்கள் இயற்கையான ஸ்லேட் தோற்றத்தைத் தருவதுடன், குறைந்த செலவும், எடையும் கொண்டவை. இவை செயற்கை பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன. இவை ஸ்லேட்டின் அழகைத் தரும். மேலும் நீண்ட காலம் உழைக்கும் தன்மை மற்றும் எளிதில் பொருந்தக்கூடிய தன்மை கொண்டவை. அதிக செலவுகளும் பராமரிப்பும் இல்லாமல் பாரம்பரிய அழகு வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

 

6. பிட்டுமென் ரூஃபிங் ஷீட்கள்



பிட்டுமென் ரூஃபிங் ஷீட்கள் மாற்றியமைக்கப்பட்ட பிட்டுமென் இருந்து உருவாக்கப்படுகின்றன. ஃபைபர்க்ளாஸ் அல்லது பாலிஸ்டர் போன்ற பொருள்களால் உறுதிபடுத்தப்பட்டவை. இவை உறுதியானவை, வாட்டர்ப்ரூஃப் தன்மைக் கொண்டவை மற்றும் இவற்றில் கீறல்கள் உண்டாகாது. இதன் சிறந்த வாட்டர்ப்ரூஃபிங் தன்மை மற்றும் நீண்ட காலம் உழைக்கும் திறன் காரணமாக, இவை பொதுவாக சமதளமான அல்லது குறைந்த சாய்வு கொண்ட ரூஃப்களில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வணிக கட்டிடங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

 

 

வெவ்வேறு வகையான ரூஃபிங் ஷீட்கள் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

சரியான ரூஃபிங் ஷீட்டை தேர்ந்தெடுக்க பல அம்சங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்த அம்சங்களைப் புரிந்துகொள்வதனால், நீடித்துழைக்கும் திறன், குறைந்த செலவு , காலநிலை மற்றும் அழகு தோற்ற தேவைகளுக்கு ஏற்ப உங்கள் ப்ராஜெக்டிற்கான சிறந்த மெட்டீரியலை தேர்வுசெய்ய இது உதவும்.

 

 

1. நீடித்துழைக்கும் தன்மை மற்றும் ஆயுள்

ஒவ்வொரு வகையான ரூஃபிங் ஷீட்களும் வெவ்வேறு கால அளவில் உழைக்கும் திறன் கொண்டவை. மெட்டல் மற்றும் பாலிகார்பனேட் ஷீட்கள் சரியாக பராமரிக்கப்பட்டால் பல வருடங்கள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை. உங்கள் ரூஃப் எவ்வளவு வருடங்கள் நீடிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அதை வைத்து இதை தேர்ந்தெடுக்கலாம்.

 

2. வானிலை தாங்கும் திறன்



நீங்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் வானிலை சூழல்களை தாங்கும் திறன் என்பது மிக முக்கியமான அம்சம் ஆகும். அதிக மழை, பனி அல்லது அதிக காற்று போன்ற கடுமையான வானிலைகள் கொண்ட இடங்களுக்கு ஏற்ற கொருகேட்டட் மெட்டல் போன்ற வலுவான ரூஃபிங் மெட்டீரியலைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு மெட்டீரியலும் வானிலை தாங்கும் திறன் கொண்டதாக, உங்கள் பகுதியின் சூழ்நிலை அழுத்தங்களைத் தாங்க கூடிய வகையில் இருக்கிறதா என்று நீங்கள் மதிப்பிட வேண்டும்.

 

3. பொருத்துதல் மற்றும் பராமரித்தல்

மற்றவைகளை விட சில ரூஃபிங் மெட்டீரியல்களுக்கு சிக்கலான பொருத்தும் முறைகளும் பராமரிப்புகளும் தேவைப்படும். உதாரணமான, மெட்டல் ஷீட்கள் எளிதாக பொருந்தக்கூடியவை. ஆனால் துருப்பிடித்தல் மற்றும் சேதங்களை அடிக்கடி பரிசோதிக்க வேண்டியிருக்கும். அதுவே பிட்டுமென் ஷீட்களுக்கு குறைவான பராமரிப்பு தேவைப்படலாம், ஆனால் இவற்றை பொருத்துவது சிக்கலானது. உங்கள் ரூஃபின் பராமரிப்பு திறனையும் பொருத்தும் செலவையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்யுங்கள்.

 

4. ஆற்றல் திறன்

ஆற்றல் திறன் இப்போது மிக முக்கியமான அம்சமாகியுள்ளது. பாலிகார்பனேட் மற்றும் சில மெட்டல் மெட்டெரியல்கள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதால், வெப்ப காலங்களில் கட்டிடத்தை குளிர்வித்து ஏர் கண்டிஷனிங் செலவைக் குறைக்கும். எனவே, ஆற்றல் திறன் முக்கியமெனில், சிறந்த வெப்ப காப்பு மற்றும் பிரதிபலிப்பு தன்மைக் கொண்ட ரூஃபிங் ஷீட்களை தேர்வு செய்யுங்கள்.

 

5. அழகு தோற்றம்



உங்கள் ரூஃபின் தோற்றம், உங்கள் மொத்த கட்டிடத்தின் முழுமையான தோற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும். ரூஃபிங் ஷீட்கள் பல நிறங்களிலும், ஸ்டைல்களிலும் கிடைக்கின்றன. ஸ்லேட் அல்லது டைல் போன்று நல்ல ஸ்டைல் மற்றும் செயல்திறன் அளிக்கும் பாரம்பரிய வடிவங்களை சில ரூஃப்கள் கொடுக்கின்றன. உங்கள் கட்டிடத்திற்குப் பொருத்தமான அழகு மற்றும் ஸ்டைலை வழங்கும் ஷீட்டைத் தேர்ந்தெடுங்கள்.

 

6. செலவு

செலவு எப்போதும் முக்கியமான அம்சம். பிளாஸ்டிக் அல்லது பிட்டுமென் ஷீட்டுகள் போன்றவை குறைந்த விலைக்குக் கிடைக்கும். ஆனால் உயர் தர மெட்டல் அல்லது செயற்கை ஸ்லேட் வகைகள் அதிகமான விலையில் மட்டுமே கிடைக்கும். உங்கள் பட்ஜெட்டை,  நீண்ட காலம் உழைக்கும் திறன் மற்றும் பராமரிப்பு போன்ற மற்ற அம்சங்களுடன் மதிப்பீடு செய்து, காலத்திற்கும் நீடிக்கும் சிறந்த பொருளை தேர்வு செய்ய வேண்டும்.



ரூஃபிங் ஷீட்களின் பல்வேறு வகைகளை தெரிந்துக் கொள்வது உங்கள் கட்டிட தேவைகளுக்கு ஏற்ற சிறந்த தேர்வுகளை புரிந்துகொள்ள உதவுகிறது. ஒவ்வொரு வகையும் தனித்துவமான வலிமை மற்றும் பயன்பாடுகள் கொண்டவை. குறிப்பாக வெவ்வேறு வானிலை சூழ்நிலைகள் மற்றும் கட்டிட ஸ்டைலுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டியில் 6 வகையான ரூஃபிங் ஷீட்கள் பற்றியும் அதன் தனித்துவ பலன்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

 




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. எந்த ரூஃபிங் ஷீட் சிறந்தது?

உங்களின் தேவைகளுக்கேற்ப சிறந்த ரூஃபிங் ஷீட் மாறுபடும். நீடித்த உழைக்கும் திறன் மற்றும் ஆயுள் முக்கியமெனில், மெட்டல் ரூஃபிங் ஷீட்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இவை மோசமான வானிலையைத் தாங்கும் திறன் கொண்டவை. மற்றும் குறைந்த பராமரிப்பு தேவை உடையவை. அழகு முக்கியமெனில், உயர் தரத்தில் தயாரிக்கப்படும் ஆர்கிடெக்சுரல் சிங்கிள்ஸ்  சிறந்த தேர்வாக இருக்கும்.

 

2. ஒரு ரூஃபிங் ஷீட்டின் சிறந்த தடிமன் என்ன?

Tரூஃபிங் ஷீட்டின் தடிமன், அது தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சுற்றுசூழலின் வலிமையின் அடிப்படையில் மாறுபடும். பொதுவாக, மெட்டல் ரூஃபிங் ஷீட்கள் குறைந்தபட்சம் 0.5 மிமீ தடிமனாக இருக்க வேண்டும். அதுவே நீடித்து உழைக்கும் திறன் மற்றும் சுற்றுசூழலிடமிருந்து பாதுகாப்பை வழங்கும்.

 

3. வெப்பமான இடங்களுக்கு ஏற்ற ரூஃபிங் ஷீட் எது?

அலுமினியம் போன்ற பொருட்களில் தயாரிக்கப்படும் பிரதிபலிக்கும் திறன் கொண்ட ரூஃபிங் ஷீட்கள் வெப்பமான இடங்களுக்கு ஏற்றவை. இவை சூரிய ஒளியையும் வெப்பத்தையும் கட்டிடத்திலிருந்து விலக்குவதால், வீட்டின் உள்ளே வெப்பநிலையை குறைத்து குளிரூட்டி செலவையும் குறைக்கும்.

 

4. மொட்டை மாடிக்கு சிறந்த ஷீட் எது?

பாலிகார்பனேட் அல்லது ஃபைபர்கிளாஸ் ஷீட்கள் மொட்டை மாடிகளுக்கு சிறந்தவை. இவை வெளிச்சம் ஊடுருவும் தன்மையுடையவை என்பதால் பிரகாசமான, காற்றோட்டமான சூழலை வழங்குகின்றன. மேலும், இவை நீடித்த உழைக்கும் திறன், மோசமான வானிலை எதிர்ப்பிலும் சிறப்பாக செயல்படும். அதனால், இவை மொட்டை மாடி பகுதிகளுக்கு சிறந்தவை.

 

5. அதிக மழை வரும் இடங்களுக்கு ஏற்ற ரூஃப் எது?

மழைக்கால சூழ்நிலையில் வாட்டர்ப்ரூஃபிங்க் தன்மை கொண்ட ரூஃபிங் ஷீட்டைப் பயன்படுத்துவது மிகவும் அவசியமானது. லீக் ஆகும் ரூஃபிங்கை சரி செய்யும்போது, கட்டிடம் ஈரமின்றியும் சேதமின்றியும் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கொருகேட்டட் ஃபைபர்கிளாஸ் அல்லது கோட்டட் ஸ்டீல் ஷீட்கள் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில், இவை நீர் தேங்குவதை தடுக்கும் மற்றும் லீக்குகளிலிருந்து (நீர் கசிவு) பாதுகாக்கும்.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....