பிளாஸ்டரிங்-ஐ ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு சில முக்கிய பொருட்கள் தேவை அவை:
1. சிமெண்ட்
இது பிளாஸ்டரில் பைண்டராக (binder) செயல்படுகிறது. பிளாஸ்டரில் பூர்த்தி செய்ய வேண்டிய பரப்பு மற்றும் தடிமனை பொறுத்து சிமெண்ட் தேவை மாறுபடும்.
2. மணல்
கலவைக்கு பருமன் மற்றும் வலிமையை சேர்க்கிறது. பிளாஸ்டரின் சுருக்கம் மற்றும் வெடிப்பை தவிர்ப்பதற்கு சுத்தமான மற்றும் சொரசொரப்பான (coarse) மணலை பயன்படுத்துவது முக்கியம்.
3. தண்ணீர்
சிமெண்ட் மற்றும் மணலை கலப்பதற்காக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டரை நிர்வகிக்கக்கூடியதாகவும் (manageable) மற்றும் செயலாற்றக் கூடியதாகவும் (workable) ஆக்குகிறது.
4. சுண்ணாம்பு
இதனை விருப்பமிருந்தால் பயன்படுத்தலாம். ஆனால் இது பிளாஸ்டரின் செயலாற்றும் தன்மை மற்றும் ஒருங்கிணைப்பு தன்மையை மேம்படுத்துகிறது.
5. ஜிப்சம்
இதுவும் விருப்பமிருந்தால் பயன்படுத்தலாம். இது இறுகும் காலத்தை மேம்படுத்தவும் காய்ந்த பிறகு பிளாஸ்டரின் கடினத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்த மெட்டீரியல்கள் ஒவ்வொன்றும் பிளாஸ்டரின் செயல்பாடு மற்றும் சிறந்த ஃபினிஷிங் கொடுப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. பிராஜெக்ட்-க்கு துல்லியமான பிளாஸ்டரிங் அளவு கணக்கீடுகளை உறுதி செய்ய இந்த மெட்டீரியல்களை சரியாக அடையாளப்படுத்துதல் மற்றும் விகிதப்படுத்துதல் அவசியமாகும்
பிளாஸ்டரிங்கிற்கு சிமெண்ட் மணல் விகிதத்தை கணக்கிடல்
பிளாஸ்டரிங்கிற்காக சிமெண்ட்-மணல் விகிதத்தை கணக்கிடுவதற்கு நீங்கள் முதலில் பிளாஸ்டர் அடுக்கின் (layer) தடிமன் மற்றும் நீங்கள் பூர்த்தி செய்ய திட்டமிட்ட பரப்பு ஆகியவற்றை தீர்மானிக்க வேண்டும். இங்கே நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறை:
1. பரப்பை அளவிடல்
பிளாஸ்டர் செய்யப்பட வேண்டிய மொத்த பரப்பை கணக்கிடுங்கள். (சதுர அடி அல்லது சதுர மீட்டரில்)
2. தடிமனை தீர்மானித்தல்
பிளாஸ்டருக்கான வழக்கமான தடிமன் 12 mm லிருந்து 15mm ஆக மாறுபடும்.
3. விகிதத்தை தேர்வு செய்தல்
சீலிங்களுக்கு சீலிங் பிளாஸ்டரிங் விகிதம் பொதுவாக 1:4 ( சிமெண்ட்: மணல்) அதே நேரத்தில் வெளிப்புற பிளாஸ்டரிங்கிற்காக பரிந்துரைக்கப்படும் விகிதம் 1:6
4. கொள்ளளவை கணக்கிடல்
இந்த ஃபார்முலாவை பயன்படுத்துங்கள்
கொள்ளளவு = பரப்பளவு X தடிமன் தேவைப்படும் பிளாஸ்டர் கொள்ளளவை தீர்மானிக்க இந்த ஃபார்முலா பயன்படுத்தப்படும்.
பின்னர், நீங்கள் தேர்ந்தெடுத்த விகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பொருட்களின் கொள்ளவை கண்டுபிடிக்க மொத்த கொள்ளளவை விகிதங்களில் கூட்டுத்தொகையால் வகுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, விகிதம் 1:4 என்றால் அதன் கூட்டுத்தொகை 5 ஆகும். மொத்த கொள்ளளவை 5 ஆல் வகுப்பதன் மூலம் ஒரு பகுதிக்கான தேவையான அளவை கண்டுபிடிக்க முடியும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது மூலம் உங்களின் பிளாஸ்டரிங் அளவு கணக்கீடு துல்லியமாக இருப்பதையும் மெட்டீரியல்கள் சரியான அளவில் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்வீர்கள்.
வெவ்வேறு பிளாஸ்டர் கலவை விகிதங்களில் சிமெண்ட், மணல் மற்றும் தண்ணீரின் அளவு