அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. எந்த வகையான ஸ்டீல், வீடுகளின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது?
குடியிருப்பு கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான ஸ்டீல் வகைகள் கட்டமைப்பு ஸ்டீல், ரீஇன்ஃபோர்ஸ்மண்ட் (ரீபார்) மற்றும் ஸ்டீல் ஷீட்கள் போன்றவை ஆகும். ஃப்ரேமிங்கிற்காக கட்டமைப்பு ஸ்டீலும் , கான்கிரீட்டை ரீஇன்ஃபோர்ஸ் செய்வதற்காக ரீபர்களும், ரூஃப்பிங் மற்றும் க்ளாடிங்கிற்காக ஸ்டீல் ஷீட்களும் பயன்படுகின்றன.
2. கட்டுமானத்தில் ஸ்டீல் ஏன் சிறந்தது?
அதன் அதிக வலிமை, நீடித்து உழைக்கும் திறன், நெகிழ்வு தன்மை மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய தன்மை போன்ற காரணங்களால் ஸ்டீலானது கட்டுமானத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இவை மோசமான சுற்றுச்சூழல் நிலைகளை தாங்கி நிற்கும் மற்றும் கட்டிட பிராஜெக்ட்களில் நீண்ட ஆயுள் மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குகிறது.
3. ஸ்டீல் கட்டமைப்புகளின் பயன்கள் என்ன?
பாலங்கள், சேமிப்பு கிடங்குகள், தொழில்துறை வசதிகள் மற்றும் கட்டிடங்களின் ஃப்ரேம்வொர்க் உட்பட பல்வேறு பயன்பாடுகளில் ஸ்டீல் கட்டமைப்புகள் பயன்படுகின்றன. இவை அவசியமான ஆதரவு மற்றும் நிலைத்தன்மையை வழங்கி, உயரமான மற்றும் சிக்கலான கட்டமைப்புகளை கட்டுவதற்கு உதவுகின்றன.
4. கட்டிட கட்டமைப்புகளுக்கு என்ன ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது?
மைல்ட்(இலகுவான) ஸ்டீல், கார்பன் ஸ்டீல் மற்றும் அல்லாய் ஸ்டீல் உட்பட பொதுவான ஸ்டீல் வகைகள் கட்டிட கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. மைல்ட் ஸ்டீலானது அதன் வளையும் தன்மைக்கு பெயர்போனவை. கட்டுமானத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கார்பன் ஸ்டீல் அதிக வலிமையை வழங்குகிறது, அல்லாய் ஸ்டீலானது அரிப்பு மற்றும் தேய்மான எதிர்ப்பு போன்ற கூடுதல் பண்புகளை வழங்குகிறது. கட்டுமானத்தில் புதுமைகளை இயக்குதல் மற்றும் கட்டிடத்துறையில் நிலைத்தன்மையை வழங்குதல் போன்ற ஸ்டீலின் பயன்பாடுகள் வளர்ந்துக் கொண்டே வருகிறது,