வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



சிமெண்ட் ஹைட்ரேஸன் பற்றி புரிந்துகொள்வதற்கான சிறந்த வழிகாட்டி

சிமெண்ட் ஹைட்ரேஸன் என்பது ஓர் வேதியியல் மாற்றம் (கெமிக்கல் ரியாக்ஷன்) இதில் சிமெண்ட் மற்றும் நீர் ஒன்று சேர்ந்து வெப்பத்தை உண்டாக்கி கடினமான, திடமான மேட்ரிக்ஸ்-ஐ உருவாக்கி மெட்டீரியல்களை ஒன்றோடு ஒன்று பிணைக்கிறது. இந்தப் பதிவு ஹைட்ரேஸனின் முக்கியத்துவம் மற்றும் இது எவ்வாறு கான்கிரீடின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு மற்றும் நீடித்த உழைக்கும் திறனை தீர்மானிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள உதவும்.

Share:


முக்கியக் குறிப்புகள்

 

  • கான்கிரீட்டின் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் திறனுக்கு சிமெண்ட் ஹைட்ரேஸன் மிக முக்கியமானதாகும் இது ஆரம்ப கலவை (mixing) மற்றும் நிலையான முன்னேற்றம் போன்ற படிநிலைகளில் நடக்கிறது.

     

  • பல்வேறு கட்டுமான பயன்பாட்டில் கான்கிரீட்டின் செயல்திறனை உகந்ததாக்கவும் மற்றும் மீள் தன்மையை (resilience) உறுதிப்படுத்தவும் சிமெண்ட் ஹைட்ரேஸன் பற்றி புரிந்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

     

  • கட்டுமான திட்டங்களில் ஹைட்ரேஸனனுடைய முக்கியத்துவமானது வலிமை முன்னேற்றம், பிணைப்பு (பைன்டிங்) பண்புகள், நீடித்து உழைக்கும் திறன், மேம்படுத்தப்பட்ட வேலைத்திறன் என நீண்டுகொண்டே போகும்‌.



சிமெண்டானது கான்கிரீட் மற்றும் மோர்டரில் (காரை) பசை போன்று வேலை செய்கிறது. ஆனால் அது சரியாக ஒட்டுவதற்கு ஈரமாக இருக்க வேண்டும். இது சிமெண்ட் ஹைட்ரேஸன் செயல்முறையின் போது நிகழ்கிறது, நீங்கள் சிமெண்ட் உடன் தண்ணீரை கலக்கும் போது சிமெண்ட் ஹைட்ரேஸன் ஆரம்பமாகிறது. தண்ணீர் மற்றும் சிமெண்ட்-ஐ கலக்கும் போது வெப்ப-உமிழ் வினைகள் (ஹீட் ரிலீஸிங் ரியாக்ஷன்ஸ்) நடக்கிறது. அது சிமெண்ட் பிணைப்பிற்கு தேவையான படிகங்கள் (கிரிஸ்டல்) மற்றும் பிற பொருட்களை உருவாக்குகிறது. இந்த செயல்முறை படிப்படியாக நிகழ்கிறது மற்றும் பலவிதமான விளைவுகளை உருவாக்குகிறது. சிமெண்ட் ஹைட்ரேஸன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய தொடர்ந்து படிக்கவும்.

 

 


சிமெண்ட் ஹைட்ரேஸன் என்றால் என்ன? 



சிமெண்ட் ஹைட்ரேஸன் என்பது சிமெண்ட்டில் தண்ணீரை சேர்க்கும் போது நடக்கும் முக்கியமான வேதியியல் நிகழ்வு (கெமிக்கல் ரியாக்ஷன்) ஆகும். இது கடினமாதல் மற்றும் இறுக்கத்திற்கு வழிவகுக்கிறது. வீட்டின் நீடித்து உழைக்கும் திறன் மற்றும் நிலைத்து நிற்கும் தன்மையை உறுதி செய்ய வீடுகட்டும் அனைவரும் இந்த சிமெண்ட் ஹைட்ரேஸன் பற்றி புரிந்துக்கொள்வது அவசியம் ஆகும். சிமெண்ட் ஹைட்ரேஸன் என்பது சிமெண்டை திடமாக்குவதற்காக நிகழக்கூடிய சிக்கலான கெமிக்கல் ரியாக்ஷன்களை உள்ளடக்கியது. இது கான்கிரீட் கட்டமைப்பிற்கு முதுகெலும்பாக அமைந்து வெப்பத்தை உண்டாக்குகிறது ( சிமெண்ட் ஹைட்ரேஸனின் வெப்பம் என அறியப்படுகிறது). இதனால் கியூரிங் காலம் மற்றும் வலிமையானது பாதிக்கப்படுகிறது. நீடித்து உழைக்ககூடிய மற்றும் பலமான வீடுகளை உருவாக்க சிமெண்ட் ஹைட்ரேஸனின் இந்த நுணுக்கங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுதல் மிகவும் உதவியாக இருக்கும்.

 

 

சிமெண்ட் ஹைட்ரேஸன் செயல்முறையின் 5 படிநிலைகள்



நீடித்த மற்றும் நிலைத்து நிற்கும் வீடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஹோம் பில்டர்ஸ் சிமெண்ட் ஹைட்ரேஸனின் பல்வேறு படிநிலைகளைப் பற்றி புரிந்துக்கொள்வது அவசியம் ஆகும். சிமெண்ட் ஹைட்ரேஸனின் ஒவ்வொரு படிநிலையையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

 

1. ஆரம்ப கலவை ரியாக்ஷன்

சிமெண்டில் தண்ணீரை கலக்கும் போது உடனடியாக ரியாக்ஷன் நடக்கிறது. இதனால் சிமெண்ட் துகள்கள் தண்ணீரில் கலந்து அயனிகளை (ions) வெளியிடுகிறது. இந்த ஆரம்ப நிலையானது கெமிக்கல் பயணத்தை தொடக்கி அதைத் தொடர்ந்து சிக்கலான ஹைட்ரேஷன் செயல்முறைக்கு அடித்தளமிடுகிறது. இது குறுகிய காலமாக இருந்தாலும் கான்கிரீடின் அழுத்தமான வலிமைக்கு கெமிக்கல் இணைவை தொடங்க மிக முக்கியமான காலக்கட்டமாகும்.

 

2. செயலற்ற நிலை (Dormancy)

சிமெண்ட் ஹைட்ரேஸன் செயல்முறையானது ஆரம்பக்கட்ட ரியாக்ஷனுக்கு பிறகு சிறிது செயலற்ற நிலைக்கு செல்கிறது. இந்நிலையில் செயல்முறைகள் நிறுத்தப்பட்டாலும் தரைக்கு அடியில் மெதுவான மற்றும் முக்கியமான கெமிக்கல் ரியாக்ஷன்கள் நடக்கிறன. இந்த காலம், கான்கிரீட் இறுக ஆரம்பிப்பதற்கு முன் வேலையாட்கள் கலவையை கலக்கவும், எடுத்துச்செல்லவும், கான்கிரீட் போடுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.

 

3. வலிமை அதிகரிப்பு

இந்த படிநிலையில் கான்கிரீடின் வலிமை முன்னேற்றத்தின் வேகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுகிறது. கால்சியம் சிலிக்கேட் ஹைட்ரேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு போன்ற ஹைட்ரேஸன் பொருட்களின் உருவாக்கம் கான்கிரீடின் உள்ளமைப்பு திடமாகுவதை அதிகப்படுத்துகிறது. இதுவே கலவை வலிமையை பெறுவதற்கும் மாறுவதற்குமான முக்கிய தருணம், ஒருங்கிணைந்த கட்டமைப்பிற்கு இது அவசியமாகும்.

 

4. வேகத்தை குறைத்தல்

வலிமை அதிகரிப்பிற்கு பின் சிமெண்ட் ஹைட்ரேஸன் செயல்முறையானது மெதுவாகிறது. ரியாக்ஷன் தொடர்ந்தாலும் வலிமை அதிகரிப்பானது விரைவான நிலையிலிருந்து படிப்படியான நிலைக்கு மாறுகிறது. கான்கிரீட் தனது கடினமாதலை இன்னும் முடிக்கவில்லை என்றாலும், இது அதன் முதிர்ச்சி பயணத்தில் குறிப்பிட்ட மைல்ஸ்டோனை அடைந்ததை உணர்த்துகிறது.

 

5. நிலையான முன்னேற்றம்

கடைசி படிநிலையில் நுழையும் போது, ஹைட்ரேஸன் செயல்முறையானது நிலையாக மற்றும் முன்னேற்றம் நிகழக்கூடிய காலத்திற்கு செல்கிறது. ரியாக்ஷன் விகிதம் மேலும் குறைந்தாலும் தொடர்ச்சியான ஹைட்ரேஸன் கான்கிரீடின் பண்புகளை படிப்படியாக உயர்த்துகிறது. இந்த படிநிலையானது தொடர்ச்சியான கெமிக்கல் ரியாக்ஷன்கள் மூலம் மெட்டீரியல்களின் நீடித்து உழைக்கும் திறன் மற்றும் நீண்ட ஆயுளை உறுதி செய்து சிமெண்ட் ஹைட்ரேஸனின் நீண்டகால இயல்பினை குறிப்பிட்டு காண்பிக்கிறது.


சிமெண்ட் ஹைட்ரேஸனின் முக்கியத்துவம்



கான்கிரீட் கட்டமைப்புகளின் செயல்பாடு மற்றும் நீண்டகால தன்மைக்கு அடித்தளமாக இருப்பதனால், சிமெண்ட் ஹைட்ரேஸனின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தி கூற முடியாது. இந்த கெமிக்கல் மாற்றத்தின் முக்கியத்துவத்தை கூறக்கூடிய முக்கிய பலன்களை காண்போம்

 

1. வலிமை முன்னேற்றம்

சிமெண்ட் ஹைட்ரேஸன்-ஆனது சிமெண்டை தூளான கலவையிலிருந்து திடமான லோட் தாங்கும் மெட்டீரியலாக மாற்றுகிறது. கான்கிரீட் அதன் வலிமையை பெறுவதற்கு இது சிக்கலான மேட்ரிக்ஸ்-ஐ உருவாக்கிறது. இது கட்டுமானத்தின் எடை மற்றும் அழுத்தத்தை பாதுகாப்பாக சப்போர்ட் செய்ய அவசியமாகும்.

 

2. பிணைப்பு காரணி (பைண்டிங் ஏஜெண்ட்)

சிமெண்ட் ஹைட்ரேஸநின் போது சிமெண்டானது பசை போல செயல்படுகிறது. இது துகள்களை பிணைத்து ஒன்றாக்கிறது. இந்த ரியாக்ஷன், பல்வேறு வகையான கற்கள் மற்றும் மணல், கான்கிரீட்டுக்குள் ஒட்டி இருப்பதை உறுதிப்படுத்துகிறது இது கட்டுமான திட்டத்தின் அளவு மற்றும் கடினத்தன்மையிநைப் பொருட்படுத்தாமல் கட்டுமானத்தின் வடிவம் மற்றும் ஒருங்கிணைப்பை பராமரிக்க முக்கியமாகும்.

 

3. நீடித்து உழைக்கும் திறன் மற்றும் தாங்கும் திறன்

கான்கிரீடின் வலிமையானது, சிமெண்ட் தண்ணீருடன் நன்றாக கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதை சார்ந்தே இருக்கும். சரியாக கலக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் சிமெண்டானது மோசமான வானிலை, கெமிக்கல்ஸ் மற்றும் தேய்மான சேதாரத்திற்கு எதிராக தாங்கி நிற்க முடிகிறது. இதன் மூலம் கட்டிடம் அல்லது கட்டுமானம் இடிக்கப்படாத வரை நிலைத்து நிற்கும் என புரிந்துக் கொள்ள முடிகிறது.

 

4. செயல்திறன் மற்றும் கட்டுமானத்திறன்

கான்கிரீட்டை கலக்க, வைக்க மற்றும் முடிக்க எவ்வளவு எளிது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த ஹைட்ரேஸன் கான்கிரீடின் செயல்திறனை பாதிக்கிறது. முறையாக ஹைட்ரேட் செய்யப்பட்ட சிமெண்ட் கட்டுமான தளத்தில் சுமூகமான செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இதனால் சிமெண்ட் இறுக்கமாவதற்கு முன் வடிவமைத்தல் மற்றும் மோல்டிங் செய்தலை திறமையாக கையாள முடிகிறது. இது கட்டுமான காலக்கெடுவை சந்திக்கும் பொருட்டு கட்டுமான தளத்தில் உள்ள தொழிளாலர்களே போடுவதற்கு உகந்ததாகிறது.



இறுதியாக, சிமெண்ட் உடன் தண்ணீரை சேர்த்து கலப்பது கான்கிரீடின் வலிமைக்கு முக்கிய காரணியாகும். இது கெமிக்கல் ரியாக்ஷனைத் தூண்டி, சிறிய துகள்களை ஒன்றாக பிணைத்து பாறை போன்ற பொருளை உருவாக்கிறது. ஹைட்ரேஸனின் பல படிநிலைகளை புரிந்துக் கொள்ளுதல் மூலம் கான்கிரீடின் சிறந்த செயல் திறன் மற்றும் நீடித்து உழைக்கும் திறனை உறுதிப்படுத்தலாம்.

 




அடிக்கடி கேட்கப்பட்டும் கேள்விகள்

 

1. சிமெண்ட் ஹைட்ரேஸனை கணக்கிடுவது எப்படி?

சிமெண்டின் கெமிக்கல் கம்போசிசன்-ஐ புரிந்துக் கொள்ளுதல் மற்றும் கலவையில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் அளவை மதிப்பிடுதல் மூலம் சிமெண்ட் ஹைட்ரேஸன் அளவை கணக்கிடலாம்.

 

2. சிமெண்ட் ஹைட்ரேஸன் எதனால் ஏற்படுகிறது?

சிமெண்டை தண்ணீருடன் கலப்பதால் சிமெண்ட் ஹைட்ரேஸன் ஏற்படுகிறது. இது சிமெண்ட் கலவையை கடினமாக்கும் கெமிக்கல் ரியாக்ஷனை ஆரம்பிக்கிறது.

 

3. சிமெண்ட் ஹைட்ரேஸன் எதனை சார்ந்து இருக்கிறது? 

சிமெண்ட் ஹைட்ரேஸன் பல்வேறு காரணிகளை சார்ந்தது. அவை: தண்ணீர்-சிமெண்ட் விகிதம், சுற்றுப்புற வெப்பநிலை, சிமெண்டின் கெமிக்கல் மற்றும் இயற்பியல் பண்புகள் (physical properties), துகள்களின் அளவு மற்றும் சேர்க்கைகள் (அடிடிவ்ஸ்) மற்றும் துணை (சப்ளிமேண்ட்ரி) மெட்டீரியல்களின் பயன்பாடு. இவை அனைத்தும் அடங்கும்.

 

4. சிமெண்டில் ஹைட்ரேஸன் வெப்பம் என்றால் என்ன?

சிமெண்ட் ஹைட்ரேஸனின் வெப்பம் எனப்படுவது சிமெண்டுடன் தண்ணீரை கலக்கும் போது வெளிப்படக்கூடிய வெப்பமாகும். இது கான்கிரீட்டில் வெப்பத்தை அதிகரித்து அதன் இறுகும் தன்மை மற்றும் வலிமை முன்னேற்றத்தை பாதிக்கிறது.

 

5. சிமெண்ட் ஹைட்ரேஸனால் எவ்வகையான சுருக்கம் ஏற்படுகிறது?

தன்னியக்க (ஆட்டோஜீனஸ்) வகையான சுருக்கம் சிமெண்ட் ஹைட்ரேஸனால் ஏற்படுகிறது. தொடர்ச்சியான ஹைட்ரேஸனால் சிமெண்ட் பேஸ்ட் உட்புறமாக உலர்கிறது. இதுவே ஆட்டோஜீனஸ் சுருக்கம் ஆகும். பெரும்பாலும் இது அதிக வலிமை கொண்ட கான்கிரீட் அல்லது குறைந்த தண்ணீர் மற்றும் சிமெண்ட் விகிதம் கொண்ட கலவைகளில் பொதுவானதாகும்.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....