Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


கட்டுமானத்தில் கிரவுட்டிங் என்றால் என்ன மற்றும் பயன்படுத்தப்படும் கிரவுட்டிங் மெட்டீரியல்களின் வகைகள்

போல்ட்களை நிலைநிறுத்துவது, விரிசல்களைச் சரி செய்வது அல்லது ஃபவுண்டேஷன்களுக்கு வலுவூட்டுவது என்று எதுவாக இருந்தாலும், கிரவுட்டிங் என்பது நவீன கட்டுமான நடவடிக்கைகளில் ஒரு அவசியமான நுட்பமாக மாறியுள்ளது. இதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை என்றாலும், இது பல்வேறு திட்டங்களின் கட்டமைப்பு உறுதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கியமான செயல்முறையாக உள்ளது.

Share:


கிரவுட்டிங் என்பது பல்வேறு கட்டுமான கூறுகளின் கட்டமைப்பு உறுதி, நிலைத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை அதிகரிக்க உதவும் முக்கியமான கட்டுமான செயல்முறை ஆகும். இதில் மேற்பரப்புகளுக்கு இடையிலான இடைவெளிகள் அல்லது வெற்றிடங்கள் ஒரு திரவம் கொண்டு நிரப்பப்பட்டு, கட்டமைப்பின் ஒட்டுமொத்த வலிமை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் இறுக்கமான, நீடித்து உழைக்கும் பிணைப்பை உருவாக்குகிறது. இந்த ப்ளாகில், கட்டுமானத்தில் கிரவுட்டிங் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம் மற்றும் அதன் முக்கியத்தும், பயன்பாடு மற்றும் கட்டுமான திட்டங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கிரவுட் மெட்டீரியல்களின் வகைகளையும் நாம் காண்போம்.



கட்டுமானத்தில் கிரவுட்டிங் என்றால் என்ன?

கட்டுமானத்தில், கிரவுட்டிங் என்பது, கட்டமைப்புகளில் உள்ள இடைவெளிகள் அல்லது வெற்றிடங்களுக்குள் ஒரு திரவம் போன்ற மெட்டீரியலை உட்செலுத்தும் ஒரு சிறப்பு செயல்முறை ஆகும். கட்டுமான திட்டத்தின் பல்வேறு கூறுகளின் கட்டமைப்பு உறுதியை மேம்படுத்துவது, பாரம் தாங்கும் திறனை அதிகரிப்பது மற்றும் நிலைத்தன்மையை வழங்குவது இதன் நோக்கமாகும். இந்த இடைவெளிகளை நிரப்புவதன் மூலம், காலப்போக்கில் கட்டமைப்பைப் பலவீனமடையச் செய்யக்கூடிய தண்ணீர், காற்று அல்லது குப்பைகள் சேர்வதைக் கிரவுட்டிங் தடுக்கிறது.

 

கட்டுமான பொருட்களால் நிரப்ப முடியாத இடைவெளிகளை கிரவுட் நிரப்பி, அனைத்தையும் ஒன்று சேர்த்து பிணைக்கும் "பசை" போல் செயல்படுவது இதன் முக்கியமான அம்சமாகும். அசைவைத் தடுப்பதன் மூலம், கிரவுட்டைப் பயன்படுத்துவது காலப்போக்கில் கட்டுமானத்தின் செட்லிங், ஷிஃப்டிங் அல்லது சீரழியும் ஆபத்தைக் குறைக்கிறது. இது கட்டமைப்பின் ஆயுளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் குடியிருப்பவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தின் பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறது. கட்டுமானத்தில் சிறந்த தரத்தை அடைவதற்கும், கட்டுமான பொருட்களின் ஆயுளை அதிகரிக்கவும் இது உதவுகிறது.


கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் கிரவுட்டிங் மெட்டீரியலின் வகைகள்



கட்டுமானத்தில் பல வகையான கிரவுட்டிங் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட கட்டுமான பணியின் தேவை அடிப்படையில் மெட்டீரியல் தேர்வு செய்யப்படும். இங்கு, சில குறிப்பிடத்தக்க வகைகளை நாம் காண்போம்.

 

1. சிமெண்ட் கிரவுட்டிங்



சிமெண்ட் என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் கிரவுட்டிங் மெட்டீரியல் ஆகும், மேலும் இது வழக்கமாக மண்ணை நிலைப்படுத்தவும், கட்டமைப்பு சமநிலைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும், மேலும் இதில் இடைவெளிகளுக்குள் சிமெண்ட், தண்ணீர் மற்றும் சில நேரங்களில் மணலின் கலவை உட்செலுத்தப்படும். இது காலப்போக்கில் கெட்டியாகி, வலுவான மற்றும் நிலையான பிணைப்பை உருவாக்குகிறது. இந்த மெட்டீரியல் கெட்டியான பிறது கட்டுமானத்திற்கு கூடுதல் சப்போர்ட் மற்றும் வலிமையை வழங்குகிறது. கான்கிரீட் கட்டமைப்புகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு (கான்கிரீட் கிரவுட்டிங் என்றும் அழைக்கப்படும்), விரிசல்களைச் சரி செய்வதற்கு மற்றும் ஃபவுண்டேஷன்களின் பாரம் தாங்கும் திறனை மேம்படுத்துவதற்கு இந்த வகை கிரவுட் ஏற்றதாகும்.

 

2. இரசாயன கிரவுட்டிங்

இதில் வெற்றிடங்களுக்குள், பாலியூரிதீன் அல்லது அக்ரிலேட் போன்ற குறிப்பிட்ட இரசாயன காம்பவுண்ட்கள் உட்செலுத்தப்படுகிறது. இந்த இரசாயனங்கள் தொடர்பு ஏற்படுத்தும்போது விரிவடைந்து, இடைவெளிகளை நிரப்பி, தண்ணீர் நுழைவதற்கு எதிராக சீல் செய்கிறது. இந்த வகை கிரவுட், குறிப்பாக வாட்டர்ப்ரூஃபிங், மண்ணை நிலைப்படுத்துதல் மற்றும் நிலத்தடி கட்டமைப்புகளைச் சரி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

 

3. கட்டமைப்பு சார்ந்த கிரவுட்டிங்



இந்த வகை கிரவுட்டிங், தூண்கள் மற்றும் பீம்கள் போன்ற கட்டமைப்பு கூறுகளை இடையிலான ஒரு திடமான இணைப்பை உருவாக்குகிறது. எபாக்ஸி கிரவுட் என்பது அதிக வலிமையையும் நீடித்து உழைக்கும் திறனையும் வழங்கும் ஒரு வகை கட்டமைப்பு கிரவுட் ஆகும். இது பொதுவாக போல்ட்களை நிலைநிறுத்துவதற்கு, அதிக அழுத்தம் உள்ள பகுதிகளில் கான்கிரீட் கூறுகளுக்கு வலுவூட்ட மற்றும் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளில் உள்ள விரிசல்கள் அல்லது இடைவெளிகளை நிரப்ப பயன்படுத்தப்படுகிறது.

 

4. பென்டோனைட் கிரவுட்டிங்

இந்த வகை மெட்டீரியல் ஒரு ஜெல் போன்ற பொருளாக மாறுவதற்காக பென்டோனைட் க்ளே மற்றும் தண்ணீரின் கலவையைப் பயன்படுத்துகிறது. இது தண்ணீருடன் சேரும்போது விரிவடையும் தன்மையைக் கொண்டிருப்பதால் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை சீல் செய்வதற்கான பிரபலமான தேர்வாக உள்ளது. இந்த வகை கிரவுட் பெரும்பாலும் சீல் செய்வதற்காக மற்றும் மண்ணை நிலைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது, தண்ணீர் ஊடுருவலைத் தடுக்கிறது மற்றும் நிலம் நகர்வதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

 

5. பிட்டுமினஸ் கிரவுட்டிங்

இதில் பிட்டுமினஸ் காம்பவுண்ட் பயன்படுத்தப்படுகிறது, இது ரூஃப்கள், ஃபவுண்டேஷன்கள், மற்றும் பேஸ்மெண்ட் கட்டமைப்புகளை சீல் செய்ய உதவி சிறப்பான நீர் எதிர்ப்புத்திறனை வழங்குகிறது. இது UV கதிர்வீச்சு மற்றும் மோசமான காலநிலைக்கு எதிராக அற்புதமான நீடித்து உழைக்கும் தன்மையையும் எதிர்ப்புத்திறனையும் வழங்குகிறது. டனல்கள் மற்றும் நிலத்தடி கட்டமைப்புகள் போன்ற நீர் ஊடுருவல் குறைக்கப்பட வேண்டிய சூழ்நிலைகளில் இந்த வகை கிரவுட் பயன்படுத்தப்படுகிறது.

 

6. ரெசின் கிரவுட்டிங்

இந்த வகை மெட்டீரியல் கியூர் செய்யும்போது உறுதியான பிணைப்பாக மாறும் வகையில் கெட்டியாகக்கூடிய எபாக்ஸி, பாலியூரிதீன் அல்லது மற்ற திரவ நிலை ரெசினைப் பயன்படுத்துகிறது. இந்த ரெசின்கள் அதிக டென்சில் மற்றும் இறுக்க வலிமையைத் தருவதால், பல வகை பயன்பாடுகளுக்கு ஏற்றதாகிறது. இது பெரும்பாலும் இதன் அற்புதமான ஒட்டும் தன்மை மற்றும் வலிமை காரணமாகக் கான்கிரீட்டில் உள்ள விரிசல்களைச் சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.


கட்டுமானத்தில் கிரவுட்டிங்கின் நன்மைகள்

கட்டுமானத்தில் கிரவுட்டிங் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளும்போது அதன் பல பயன்களைப் புரிந்துகொள்வதும் முக்கியமாகும். அதன் முக்கியமான சில நன்மைகள் இதோ:

 

1. மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு நிலைத்தன்மை

கட்டுமான பொருட்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பி, ஒட்டுமொத்த கட்டமைப்பு நிலைத்தன்மையை அதிகரிக்கும் திறன் கிரவுட்டிற்கு உண்டு.

 

2. கசிவைத் தடுத்தல்

தண்ணீர் மற்றும் மற்ற திரவ கசிவுகளைத் தடுக்கும் ஒரு அரணாகக் கிரவுட் செயல்படுகிறது.

 

3. பாரம் தாங்கும் திறன் அதிகரிப்பு

சிமெண்ட் கிரவுட்டிங் மெட்டீரியல்கள் போன்ற கிரவுட்கள் அதிக வலிமை மற்றும் சப்போர்ட்டை வழங்கி கட்டமைப்பின் பாரம் தாங்கும் திறனை அதிகரிக்கிறது.

 

4. அரிமான எதிர்ப்புத்திறன்

எபாக்ஸி கிரவுட் போன்ற சில மெட்டீரியல்கள், அரிமான எதிர்ப்புத்திறனை வழங்கி, கட்டுமானத்தின் ஆயுளை அதிகரிக்கிறது.

 

5. மண்ணை நிலைப்படுத்துதல்

கிரவுட்கள் மண்ணை நிலைப்படுத்துவதில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது, அதுவும் குறிப்பாக ஃபவுண்டேஷன்கள் அல்லது நிலத்தடி கட்டமைப்புகளின் கட்டுமானத்தில்.

 

6. குழிகளை மூடுதல்

கிரவுட், குழிகளையும் இடைவெளிகளையும் திறம்பட மூடி, தண்ணீர் நுழைவதை அல்லது மண் ஊடுருவலைத் தடுக்கிறது.

 

7. கட்டமைப்பு சார்ந்த பழுது பார்த்தல்

கான்கிரீட்டில் உள்ள விரிசல்கள் மற்றும் சேதங்களைச் சரி செய்வதில் பெரும்பாலும் ரெசின் மற்றும் எபாக்ஸி கிரவுட் பயன்படுத்தப்படுகிறது.



இறுதியில், கட்டுமானத்தில் கிரவுட்டிங் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், கட்டுமானத்தில் கட்டமைப்புகளின் நிலைத்தன்மை, வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை அதிகரிப்பதன் காரணமாக இது முக்கியமானது என்பதை நாம் உணர்கிறோம். கட்டுமான தொழில் செய்பவர்கள் தொடர்ந்து சிக்கனமான மற்றும் நீடித்து உழைக்கும் கட்டுமான தீர்வுகளைத் தேடிக்கொண்டிருப்பதால், சரியான கிரவுட்டிங் நுட்பத்தைப் புரிந்துகொண்டு செயல்படுத்துவது மிகவும் வெற்றிகரமான மற்றும் நீடித்து நிலைக்கும் திட்டங்களுக்கு வழிவகுக்கலாம்.



அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1) மீண்டும் கிரவுட்டிங் செய்வதற்கு முன் பழைய கிரவுட்டை நான் நீக்க வேண்டுமா?

ஆம், மீண்டும் கிரவுட்டிங் செய்வதற்கு முன் பழைய கிரவுட்டை நீக்க பரிந்துரைக்கப்படுகிறது. சரியான பிணைப்பை உறுதி செய்ய, பழைய கிரவுட்டை நீக்குவது அவசியமாகும், ஏனெனில் அதில் பூஞ்சை அல்லது அழுக்கு இருக்கலாம். பழைய அல்லது சேதமடைந்த கிரவுட்டை அப்படியே விடுவது புதிய கிரவுட் லேயர் தோல்விக்கு வழிவகுக்கலாம்.

 

2) அதிக நேரத்திற்கு கிரவுட்டை அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்?

கிரவுட்டை நீண்ட நேரத்திற்கு சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், அது டைல் மேற்பரப்பில் கெட்டியாகி, அதை அகற்றுவதைச் சவாலானதாக்குகிறது. இது அழகற்ற தோற்றத்திற்கும், சுத்தம் செய்வதற்கான கூடுதல் செலவிற்கும் வழிவகுக்கலாம்.

 

3) கிரவுட் செட் ஆவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

பெரும்பாலான வழக்கமான கிரவுட்கள் கியூர் ஆகி முழுமையாகச் செட் ஆவதற்கு 24 முதல் 48 மணிநேரங்கள் வரை எடுக்கும். எனினும் அது, கிரவுட் வகை, உற்பத்தியாளரின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஈரப்பதத்தின் அளவு மற்றும் வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளைச் சார்ந்ததாகும்.

 

4) கிரவுட்டிங்கிற்கு முன் டைல்ஸை நனைக்க வேண்டுமா?

வழக்கமான நிலைமைகளின் கீழ் கிரவுட்டிங்கிற்கு முன் டைல்ஸை நனைக்க வேண்டியதில்லை. எனினும், அதிகமான வெப்பம் அல்லது குறைவான ஈரப்பதம் உள்ள சுற்றுச்சூழல்களில், டைல்ஸை ஈரமாக்குவது கிரவுட்டிலிருந்து ஈரப்பதத்தை டைல்ஸ் விரைவாக எடுத்துக்கொள்வதைத் தடுக்கிறது.

 

5) கிரவுட்டிங்கிற்கு எந்த சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது?

வழக்கமாக, சுருங்காத கிரவுட், அதிக வலிமை கொண்ட, திரவ சிமெண்ட் கிரவுட், அதன் தனித்துவமான சுருங்காதத் தன்மை மற்றும் அதிகமாக ஃப்ளோ ஆகும் தன்மை காரணமாக கிரவுட்டிங்கிற்காகப் பயன்படுத்தப்படுகிறது.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....