தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்

hgfghj


கசியும் கூரையை சரி செய்வதற்கு ஒரு வழிகாட்டி: படிகள் மற்றும் காரணங்கள்

கூரைக் கசிவிற்கான காரணங்களை அடையாளம் கண்டுகொள்வதில் இருந்து கூரைக் கசிவை நிறுத்துவதற்கான பல்வேறு வழிகளை விவரிப்பது வரை இந்த வலைப் பதிவுகள் உங்கள் கூரையை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கும் உங்கள் வீட்டை மிக அதிக செலவாகும் தண்ணீர் சேதத்தில் இருந்து காக்கவும் ஒரு கசியும் கூரையை சரிசெய்வது பற்றியும் செய்முறை வழிகளை கொடுக்கிறது.

Share:


ஒரு கசியும் கூரை வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு கெட்ட கனவாகும். அதை சோதிக்காமல் விட்டுவிட்டால் அது ஒரு எரிச்சலூட்டும் அசௌகரியமாக இருப்பதோடு இல்லாமல் உங்கள் வீட்டிற்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு கூரைக் கசிவு சரியானமுறையில் சரி செய்யப்படா விட்டால் தண்ணீர் சேதத்திற்கும் பூஞ்சை வளர்வதற்கும் கட்டுமானப் பிரச்சனைகள் ஏற்படவும் கூடும். இந்த வலைப்பதிவில் கூரைக் கசிவு என்றால் என்ன, அது ஏற்படுத்தக்கூடிய சேதம் என்ன, மேலும் முக்கியமாக எப்படி ஒரு கூரைக் கசிவை சரி செய்வது என்று விவாதிக்கலாம். நீங்கள் ஒரு நீங்களே செய்துகொள்ளுங்கள் "Do It Yourself-DIY) ஆர்வலர் அல்லது ஒரு நிபுணரை அமர்த்துபவராக இருந்தாலும் இந்த வழிகாட்டி உங்களுக்கு அறிவையும் இதை சமாளிப்பதற்கு உங்களுக்குத் தேவையான கருவிகள் பற்றியும் கொடுத்து உங்கள் வீட்டை எதிர்கால சேதங்களில் இருந்து காக்க வழிகாட்டும்.
கூரைக் கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

 

1) கூரை விரிசல்கள்

கூரைக் கசிவிற்கு கூரை விரிசல்களே பொதுவான காரணம். இந்த விரிசல்கள் வயது, காலநிலை அல்லது மோசமான கட்டுமானம் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடும், காலம் செல்லச் செல்ல சூரிய வெயில் படுவது, காற்று மற்றும் மழை போன்றவை கூரைப் பொருட்களை சிதைய அல்லது கீறல் விழச்செய்கிறது அதோடுகூட, ஒரு கூரையை கட்டவேண்டிய நேரத்தில் சரியான முறையில் கட்டப்படாவிட்டால் எதிர்பார்த்ததைவிட விரைவில் விரிசல்கள் ஏற்பட ஆரம்பிக்கும். கூரைக் கசிவுகள் தண்ணீர்கூரை அமைப்பில் உட்புக அனுமதிக்கும் அதனால் தண்ணீர் சேதம் ஏற்பட்டு பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும். இதைக் கவனிக்காமலே விட்டுவிட்டால், சிறிய கீறல்கள் பெரிய விரிசல்கள் ஆகி இன்னும் அதிகமான குறிப்பிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். வழக்கமான கூரைச் சோதனைகள் கீறல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் காண உதவும் மேலும் கூரை கசிவு சரி செய்தலை நடத்தமுடியும்

 

2) முறையில்லாத கூரையின் சரிவு.

ஒரு முறையற்ற கூரைச் சரிவு கசிவை ஏற்பத்தக் கூடும். கூரையின் சரிவு மிக முக்கியமானது, ஏனென்றால் அது மழைநீர் அல்லது பனி கூரைத் தளத்திலிருந்து வழிந்து நீர்தூம்புக்கு அல்லது வாய்க்காலுக்கு போவதை உறுதிப்படுத்துகிறது. சரிவு ஆழமில்லாமல் அல்லது மட்டமாக இருந்தால் தண்ணீர் கூரையில் தேங்கி கசிவிற்கும் தண்ணீர் சேதத்திற்கும் வழிவகுக்கும். இது மிக முக்கியமாக அதிக மழை அல்லது அதிக பனிப்பொழிவு இருக்கும் இடங்களில் உண்மையாகும். அதேபோல், சரிவு அதிக செங்குத்தாக இருந்தால், அது தண்ணீர் வேகமாக வழிந்தோடச் செய்யும், அதனால் வாய்க்கால் நிரம்பி தண்ணீர் சேதம் ஏற்படலாம். உங்கள் கூரையின் சரிவு சரியான சரிவில் இருக்கிறதா என்பதை நிறுவும்போது உறுதி செய்துகொள்ள வேண்டும் இல்லையென்றால் கசிவை சரி செய்வது நெருக்கடியாக இருக்கும்.

 

3) ஃப்லாஷிங் சேதங்கள்

ஃப்லாஷிங் என்பது ஒரு மெல்லிய பொருள், உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. இது கூரையின் இணைப்புகளையும் ஓரங்களையும் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. ஃப்லாஷிங்கை புகைபோக்கிகளை, காற்றுப் பாதைகளை, மேலும் எந்த ஒரு அமைப்பு கூரையிலிருந்து நீட்டிக்கொண்டு இருக்கின்றதோ அவைகளைச் சுற்றி காணப்படும். ஃப்லாஷிங் சேதமானால் அல்லது சரியான முறையில் அமைக்கப்படாவிட்டால், அது தண்ணீரை கூரையின் அமைப்புக்குள் கசிய வழிவகுக்கும். காலப்போக்கில், அவை ஃப்லாஷிங்கை சேதமடையச் செய்யும் அதனால் விரிசல்களும் இடைவெளியும் உண்டாகும். அதோடு கூட, சரியான முறையில் அமைக்காதது ஃப்லாஷிங் தளர்வாவதோடு கூரையில் இருந்து விலகலாம் அதனால் தண்ணீர் கூரை அமைப்பில் ஊடுருவும். வழக்கமான ஃப்லாஷிங் பரிசோதனை மற்றும் பராமரிப்பு எந்த பிரச்சனையையும் அடையாளம் கண்டு எதிர் காலத்தில் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

 

4) ஓடுகள் சேதங்கள்

ஓடுகள் மிகப் பிரபலமான கூரை பொருட்கள், இவை பல ஆண்டுகள் நீடித்து இருக்கும். இருந்தாலும், காலப் போக்கில், ஓடுகள் கால நிலை மற்றும் சரியான முறையில் பாதிக்காதது போன்ற காரணங்களால் சேதமடையலாம். ஓடுகள் சேதமடைந்தால் அல்லது உடைந்தால் அவை கூரை அமைப்பில் தண்ணீரை ஊடுருவச் செய்யும். அது தண்ணீர் சேதத்தையும் பூஞ்சை பாதிப்பையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் இல்லாத அல்லது உடைந்த ஓடுகளை எளிதாக மாற்றிவிடலாம், ஆனால் சில நேரங்களில் முழு கூரையையும் மாற்றி அமைக்க வேண்டியது இருக்கும்.

 

5)ஒழுங்கற்ற பராமரிப்பு

கூரைக்கசிவுகளுக்கு ஒழுங்கற்ற பராமரிப்பும் ஒரு காரணமாக இருக்கிறது. முறையான கூரை பராமரிப்பு, அதாவது நீர்ப்பாதைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை நீக்குவது, மற்றும் சேதங்களை மறுபார்வையிடுவது கூரையை நல்ல முறையில் வைத்திருப்பது அவசியமாகும். முறையான பராமரிப்பை செய்யத் தவறுவது குப்பை சேர அனுமதிக்கும், மேலும் தண்ணீர் கூரையில் தேங்கும் அது சேதத்தையும் கசிவையும் ஏற்படுத்தும். அதோடு கூட, சிறு பிரச்சனைகளைக் கூட சரியாகக் கவனிக்கத் தவறுவது மிகத் தீவிரமான பிரச்சனைகளை காலப்போக்கில் ஏற்படுத்தும்.

 

6). அதிகப்படியான கூரை ஈரம்

மோசமான வீட்டு காற்றோட்ட அமைப்பு, கால நிலை அல்லது கூரை அமைப்புகளில் கசிவு காரணங்களால் ஈரப்பதம் கூரையில் சேரலாம். காலப் போக்கில் அதிகப்படியான ஈரப்பதம் பூஞ்சை வளர காரணமாகலாம், அதனால் கூரை அமைப்பை சேதப்படுத்தலாம் மேலும் கசிவு ஏற்படலாம். அதோடு கூட, ஈரப்பதம் கூரையில் உள்ள உலோக சாதனங்களில் அரிப்பை ஏற்படுத்தலாம் மேலும் சேதங்கள் ஏற்படலாம். அனேக நேரங்களில், அந்தப் பகுதியை வாட்டர் ப்ரூஃப் செய்வது பிரச்னையை தீர்க்க உதவலாம் வாட்டர் ப்ரூஃபிங்கின் பல்வேறு அனுகூலங்களால்.

 

7) அரிப்பு

அரிப்பு என்பது கசிவுக்கு மற்றொரு காரணமாகும், முக்கியமாக உலோக கூரைகளில். உலோக கூரைகள் காலப்போக்கில் அரிக்கப்படும், மழை, காற்று மற்றும் சூரிய ஒளி போன்ற காரணிகள் அதன்மீது படுவதால். அரித்தல் கூரை பொருட்களை பலவீனப்படுத்தி அவை உடையக்கூடியவை ஆக்கும், அதனால் விரிசல்கள் மற்றும் துளைகள் ஏற்பட்டு அதனால் கூரை அமைப்புக்குள் தண்ணீர் புக ஆரம்பிக்கும். அதோடு கூட, அரிப்பு இணைக்கும் பொருட்கள் மற்றும் இதர உலோக சாதனங்களை தளர்வாக்கி அதனால் மேலும் சேதமும் கசிவும் ஏற்படும்.

 

8)வயது

வயது ஒரு கசிவுக்கு ஒரு இயற்கையான காரணம். காலப்போக்கில் கூரைப் பொருட்கள் இயற்கையை தாங்கி இருப்பது மற்றும் பயன்பாட்டினால் சேதமடைவது மற்றும் பல காரணங்களால் சேதமடையலாம். வயதாவது கூரைப் பொருட்கள் நொறுங்க அல்லது கீறல்விழ அல்லது அவற்றின் பாதுகாப்பு பூச்சு சேதமடையலாம் அது கசிவுக்கும் தண்ணீர் சேதத்திற்கும் காரணமாகும். அதோடு கூட வயதாவது கூரைப் பொருட்கள் திறமை குறைந்து தண்ணீரை விலக்கும் சக்தி குறையலாம் அதனால் கூரையில் தண்ணீர் தேங்கி கசிவை ஏற்படுத்தலாம். தொடர்ந்த சோதனை மற்றும் பராமரிப்பு வயதாவதின் அறிகுறிகளை அடையாளம் கண்டு அவை பெரிய அளவில் சேதம் ஏற்படுவதற்கு முன்னர் தீர்த்துவிடலாம்.
கூரையில் இருந்து கசிவை எப்படி நிறுத்துவது?

 

1) அஸ்ஃபாலட் ஷிங்கில்ஸ்

கூரைக் கசிவை நிறுத்துவதற்கு ஒரு வழி காப்பிடுவது (இன்சுலேட்) அல்லது அஸ்ஃபாலட் ஷிங்கில்ஸ் நிறுவுவது. அஸ்ஃபாலட் ஷிங்கில்ஸ் ஒரு பிரபலமான கூரை அமைக்கும் பொருள் இது நீடித்து உழைக்கக் கூடியது மேலும் மலிவானது. இவர் நிறுவுவதற்கு மற்றும் பராமரிக்க எளிதானது இது இதை பிரபலப் படுத்தி இருக்கிறது வீட்டு உரிமையாளர்களின் தேர்வாக இருக்கிறது. உங்கள் கூரையை சரி செய்ய வேண்டிய சில படிகள் இதோ:

 • முதலில், கூரையின் பயன்பாட்டினால் ஏற்படும் சேதத்தை சோதியுங்கள்

 • அடுத்து, சுருண்டு இருக்கும் ஷிங்கில்ஸ்ஐ நீட்டி மீண்டும் பொருத்துங்கள்

 • நீங்கள் புதியதாக ஒரு விரிசலைக் கண்ணுற்றால் அதை சரி செய்ய லீலன்ட் ஐ பயன்படுத்துங்கள்

 • உடைந்த அல்லது தொலைந்த ஷிங்கில்ஸ்ஐ மாற்றுங்கள்

   

2) ரோல் (சுருள்) ரூஃபிங்

ரோல் (சுருள்) ரூஃபிங் ஒரு கூரை அமைக்கும் சாதனம் அது அஸ்ஃபாலட் கொண்டு தயாரிக்கப்பட்டது மேலும் அது அஸ்ஃபாலட் ஷிங்கில்ஸ் போன்றது. பெரிய சுருள்களாக வரும் இவற்றை விரைவாக குறைந்த சாய்வுள்ள கூரைகளுக்கு மாற்றாக நிறுவலாம். பின்பற்ற வேண்டிய சில படிகள்:

 • கூரையை விரிசல் மற்றும் கொப்புளங்களுக்காக சோதிக்கவும்

 • நீங்கள் ஏதேனும் கொப்புளங்களை பார்த்ததால் அதை திறந்து உள்ளே அடைந்துள்ள காற்றை வெளியேற்றுங்கள்

 • பிளவுக்குக் கீழே போதுமான அளவு ரூஃபிங் சிமண்ட் பூசுங்கள்

 • தேவை என்றால், கூரையின் அடித்தளத்தை மாற்றுங்கள்

 • அந்த பகுதியை ரோல் ரூஃபிங் துண்டு கொண்டு மூடுங்கள்

 • நீர் புகாத ஓட்டை உறுதி செய்ய இறுதி படல ரூஃபிங் சிமண்ட் பூசுங்கள்

   

 

3) வுட் ஷேக்ஸ்

வுட் ஷேக்ஸ் என்பது ஒரு குறிப்பிட்ட வகை கூரை அமைக்கும் பொருள் செடார் அல்லது செம்மரம் போன்றதால் தயாரிக்கப் படுவது. அவை பொதுவாக செங்குத்து சரிவு கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது, அவை ஒரு இயற்கையான கிராமிய பார்வையை வீட்டுக்குக் கொடுக்கிறது. வுட் ஷேக்ஸ்ஐ சரி செய்வதற்கான படிகள் இதோ:

 • உங்கள் கூரையில் ஏதேனும் சேதங்கள் இருக்கின்றனவா என்று சோதிக்கவும்

 • கீறிய ஷேக்ஸ் ஏதேனும் இருந்தால் அவற்றை சுத்தியல் அல்லது உளி கொண்டு பிளக்கவும்

 • உடைந்த ஷேக்ஸ்ஐ பிணைத்து இருக்கும் ஆணிகளை ஹாக் சா ரம்பம் கொண்டு வெட்டவும்

 • ஒரு புதிய ஷேக்ஸ் ஒன்று இடைவெளியில் பொருந்தும் அளவுக்கு வெட்டி அந்த இடத்தில் தள்ளவும்

 • புதிய ஷேக்ஸ்ஐ துருப்பிடிக்காத ஆணிகள் கொண்டு பொருத்தவும்.

 • ரூஃபிங் சிமண்ட் பயன்படுத்தி வெளியே தென்படும் ஆணிகளை மூடவும்

   

4) கசியும் இணைப்புகள்

கசியும் இணைப்புகள் இரண்டு வெவ்வேறு பாக கூரைகள் சந்திக்கும் இடத்தில் ஏற்படலாம், அதாவது கூரை புகை போக்கியை அல்லது இரண்டு வேறு வேறு பகுதிகள் கூரையில் சந்திக்கும் இடத்தில். நீங்கள் கசியும் இணைப்புகளுக்கு பின் வரும் படிகளை பின்பற்றுங்கள்

 • புகை போக்கிகள் அல்லது நீரோடும் தாரைகள் சந்திக்கும் இடங்களை சோதனை செய்யுங்கள்

 • பட்டி பார்க்கும் கத்தி கொண்டு அந்தப் பகுதியில் ஒரு படலம் சீலன்ட் பூசுங்கள்

 • கூரை ஆணிகள் கொண்டு ஒரு உலோக தகடு கொண்டு அந்தப் பகுதியை மூடுங்கள்

 • அடுத்து கூரைக் கசிவை அடைக்கவும் ஒரு நீர் புகாத அடைப்புக்கு இன்னொரு படல ரூஃபிங் சிமண்ட் பூச்சு கொடுங்கள்

   

5) கான்கிரீட் கூரை

கான்கிரீட் கூரைகள் சரியாகப் பராமரிக்கப்படாவிட்டால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய மற்றொரு வரை கூரைப் பொருளாகும். கான்கிரீட் கூரைகள் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கொண்டு தயாரிக்கப்பட இவை அவற்றின் நீண்டஆயுள் மற்றும் உழைப்புக்காக அறியப்படுகின்றன. இருந்த போதிலும், அவை பல்வேறு காரணங்களால் அதாவது கீறல், முறையில்லாத முறையில் அமைத்தல் மற்றும் இயற்கை, வானிலைகளால் ஏற்படும் சேதங்கள் அல்லது பாதிப்புகள் போன்றவைகளால் கசிவுகள் ஏற்படலாம். இதோ கான்கிரீட் கூரைகளை சரி செய்ய சில படிகள்

 

 • கசிவின் மூலத்tதை சோதித்து கண்டறியுங்கள்

 • சேதமுற்ற பகுதியை குப்பை, மற்றும் தளர்வான கான்கிரீட் பகுதிகளை சுத்தம் செய்து தயார்ப்படுத்துங்கள்

 • அந்தப் பகுதி மீது சீலன்ட் அல்லது பேட்சிங் காம்பவுண்ட் கொண்டு பூசுங்கள்

 • அந்தப் பகுதி உலர்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்

முடிவாக, சரியான காலத்தில் அதை சரிபடுத்தாவிட்டால் ஒரு கசியும் கூரை ஏராளமான சேதத்தை உங்களுக்கு ஏற்படுத்தும். கூரைக் கசிவை ஏற்படுத்தும் காரணங்களை அடையாளம் காண்பது முதலிலேயே நீங்கள் கசிவைத் தடுக்க உதவி செய்யும். இந்த நீர்புகா (வாட்டர் ப்ரூஃபிங்) ஏற்பாட்டின் குறிப்புகள் உங்கள் முடிவில் இருக்கிறன, நீங்கள் உங்கள் கூரையின் ஆயுள் மற்றும் முழுமையை உறுதிப்படுத்த உதவும் அதனால் உங்கள் வீட்டை நீங்கள் பாதுகாக்கலாம் மேலும் திறமையாக கசியும் கூரையை சரி செய்யலாம்.தொடர்புடைய கட்டுரைகள்
பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்

  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....