கட்டுமான பிராஜெக்ட்களின் தரம் மற்றும் நீடித்து உழைக்கும் திறனை உறுதிப்படுத்த இறுகுவதற்கான ஆரம்ப மற்றும் இறுதி நேரத்தை தெரிந்துக்கொள்வது மிக முக்கியம். இந்த நேரங்களை திறமையாக நிர்வகிப்பது, கட்டமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் செயலாற்றும் திறனை மேம்படுத்தும். துள்ளியமான நேரங்கள் கட்டுமான செயல்பாடுகளை அட்டவணைப்படுத்தவும், வேலையில்லா நேரத்தை குறைக்கவும் மற்றும் வளங்களை மேம்படுத்தவும் உதவுகின்றன. சரியான நேரங்கள் கட்டமைப்புகளின் நீண்ட கால வலிமையையும் மேம்படுத்துகின்றன மற்றும் விரிசல் மற்றும் தோல்வி (ஃபெயிலியர்) அபாயத்தை குறைக்கின்றன.
கான்கிரீட் இறுகுவதற்கான நேரத்தை பாதிக்கும் காரணிகள்
சிமெண்ட் இறுகுவதற்கான ஆரம்ப மற்றும் இறுதி நேரம் இரண்டையும் பல காரணிகள் பாதிக்கும் அவை:
1. தண்ணீர்/ சிமெண்ட் விகிதம்
கான்கிரீட் மற்றும் சிமெண்ட் இறுகுவதற்கான இறுதி மற்றும் ஆரம்ப நேரத்தில் தண்ணீர்/சிமெண்ட் விகிதம் முக்கிய பங்காற்றுகிறது. அதிக தண்ணீர், இறுகுவதற்கான செயல்முறையை தாமதமாக்கும் போது குறைந்த தண்ணீர் அதனை விரைவாக்கும். சரியான செயல்பாட்டிற்கு சரியான விகிதத்தை அடைவது அவசியமாகும்.
2. அட்மிக்ஸ்சர்கள்(admixtures)
முடக்கிகள் (retarders) மற்றும் ஊக்கிகள் (accelerators) போன்ற சேர்க்கைகள் இறுகுவதற்கான நேரத்தை (செட்டிங் டைம்) மாற்றுகின்றன. முடக்கிகள் இறுகுவதற்கான காலத்தை நீட்டிக்கின்றன. அதேசமயம் ஊக்கிகள் குறைக்கின்றன, இது செயலாற்றும் திறன் மற்றும் கியூரிங்கை பாதிக்கிறது.
3. வெப்பநிலை
இறுகுவதற்கான நேரத்தை சுற்றுப்புற வெப்பநிலை குறிப்பிட்ட அளவு பாதிக்கிறது. அதிக வெப்பநிலை ஹைட்ரேஷனை விரைவாக்கி இறுகுவதற்கான இறுதி நேரத்தை குறைக்கும் போது குறைந்த வெப்பநிலை ஹைட்ரேஷனை தாமதமாக்கி, இறுகுவதற்கான இறுதி நேரத்தை அதிகரிக்கிறது. சரியான கியூரிங்கிற்கு(curing) சரியான வெப்பநிலை மேம்பாடு மிக முக்கியமாகும்.
இறுகுவதற்கான ஆரம்ப மற்றும் இறுதி நேர டெஸ்ட்: விகாட் அப்பாரட்டஸ் டெஸ்ட்