3. கட்டமைப்பின் பாதுகாப்பு மதிப்பீடு
கட்டுமானத்துறையில் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால், கட்டமைப்புப் பொறியாளர்கள் தற்போதுள்ள கட்டுமானத்திலோ அல்லது முன்பே இருந்த கட்டமைப்பிலோ பாதுகாப்பு மதிப்பீடுகளைச் செய்வார்கள். கட்டமைப்பின் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை கண்டறிந்து, அது எப்போது பாதிக்கப்படும் என்ற விவரத்தையும், அதை சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் கொடுப்பார்கள்.
4. செலவு மற்றும் பொருள் மதிப்பீடு
ஒரு கட்டுமானப் ப்ராஜெக்டிற்குத் தேவையான பொருட்களின் அளவையும் செலவுகளையும் மதிப்பீடு செய்வதில் கட்டமைப்புப் பொறியாளர்கள் திறமையானவர்கள். ப்ராஜெக்டின் விவரங்கள், பொருட்கள் எவ்வாறு இருக்கிறது, கட்டமைப்பின் தேவைகள் என்ன, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சரியான மதிப்பீடுகளைச் செய்து, கட்டமைப்புக்கான பட்ஜெட் போட்டு மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு இவர்கள் உதவுகிறார்கள்.
5. மேற்பார்வை மற்றும் தரக் கட்டுப்பாடு
கட்டுமானம் நடக்கும் போது, அது கட்டுமான டிசைன் படி, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் விவரக்குறிப்புகளின் படி கட்டப்படுகிறதா என்பதை கட்டமைப்புப் பொறியாளர்கள் சரி பார்ப்பார்கள். அவர்கள் அடிக்கடி கட்டுமானம் நடக்கும் இடத்திற்கு சென்று கட்டுமானம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை கவனிப்பார்கள்.