வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



ஃபைன் அக்ரிகேட்ஸ்: வகைகள், வகைப்பாடு மற்றும் கான்கிரீட் கலவையில் அதன் பங்கு

இந்த வலைப்பதிவில், நாம் மணல் போன்ற ஃபைன் அக்ரிகேட்-ஐ பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ள போகிறோம். இவை வலுவான கான்கிரீட்டுக்கு அவசியமானவை. இதன் பல வகைகள், இவற்றின் பங்குகள் மற்றும் ஏன் இவை ஒவ்வொரு கான்கிரீட் கலவையிலும் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • ஃபைன் அக்ரிகேட்ஸ் என்பது 9.5 mm க்குக் குறைவான விட்டம் கொண்ட மணல். இதில் நொறுங்கிய கல் அல்லது நொறுங்கிய ஸ்லாக் (slag) ஆகியவை அடங்கும்.

     

  • ஃபைன் அக்ரிகேட்ஸின் 5 முக்கிய வகைகள், இயற்கை மணல் (natural sand), நொறுங்கிய கல் மணல் (crushed stone sand), நொறுங்கிய ஜல்லி மணல் (crashed gravel sand), உற்பத்தி செய்யப்பட்ட மணல் (manufactured sand) மற்றும் கல் தூள் (stone dust))

     

  • ஃபைன் அக்ரிகேட்ஸ் இடைவெளிகளை நிரப்புகிறது, வலிமையில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது மற்றும் கான்கிரீட்டின் வேலைசெய்யும் திறனை (workability) நிர்ணயிக்கிறது.

     

  • ஃபைன் அக்ரிகேட்ஸின் அளவு, வடிவம் மற்றும் சுத்தத்தன்மை கான்கிரீட்டின் அடர்த்தி, வலிமை மற்றும் வேலைசெய்யும் திறனை நேரடியாக பாதிக்கின்றன.



கட்டுமான பிராஜெக்ட்களில், சிறியதிலிருந்து பெரியதுவரை, ஃபைன் அக்ரிகேட்ஸ் (Fine Aggregates) என்பது முக்கிய பங்கு வகிக்கின்றன. ஃபவுண்டேஷங்களுக்கு அடித்தளத்தை உருவாக்குதல், டிரைவ்வே மற்றும் பாதைகளுக்கான அலங்கார வேலைகள், குழிகளை நிரப்புதல் என பல்வேறு தேவைகளுக்காக இவை பயன்படுகின்றன. ஃபைன் அக்ரிகேட்ஸின் வகைகள் மற்றும் பண்புகளை விளக்கி, உங்கள் பிராஜெக்டிற்கு ஏற்ற வகையை தேர்ந்தெடுக்க இந்த கட்டுரை உங்களுக்கு வழிகாட்டும்.

 

 


ஃபைன் அக்ரிகேட்ஸ் என்றால் என்ன?

ஃபைன் அக்ரிகேட்ஸ் என்பது, கட்டிடப் பணிகளில் பரவலாக பயன்படுத்தப்படும், 9.5 மிமீ க்கும் குறைவான விட்டம் கொண்ட சிறிய துகள்களைக் குறிக்கும். இது பொதுவாக மணல், நொறுங்கிய கற்கள் அல்லது ஸ்லாக் ஆகியவற்றால் ஆனது. கான்கிரீட் மற்றும் மோர்டாரை கலக்கும் போது, அவற்றிற்கு சரியான பதத்தை கொடுக்க இவை முக்கியமானவை ஆகும். மேலும், கான்கிரீட்டின் பெரிய கற்களின் இடைவெளிகளை நிரப்பி கட்டுமானத்தின் நிலைத்தன்மை மற்றும் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன. பல்வேறு கட்டுமான பிராஜெக்ட்களில் சரியான அமைப்பும் வலிமையும் பெற, இவை முக்கியமாக செயல்படுகின்றன.


ஃபைன் அக்ரிகேட்ஸின் 5 வகைகள்: 

வெவ்வேறு வகையான அக்ரிகேட்ஸ்கள் பற்றியும் அவற்றின் பண்புகளை வைத்து, எந்த வகை சிறந்தது என்று பிரித்து தெளிவாக பார்க்கலாம். வாருங்கள்.

 

1. இயற்கை மணல் (Natural Sand)

நதிக்கரைகள் மற்றும் கடற்கரைகளில் இருந்து கிடைக்கும் இந்த மணல், இயற்கை அரிப்பால் மென்மையான தன்மை கொண்டவை ஆகும். இதன் ஒருமையான துகள்களின் அளவு, கான்கிரீட் மற்றும் பிளாஸ்டர் வேலைகளுக்கு ஏற்றதாக உள்ளது. இது கட்டமைப்பின் வலிமையையும் அழகையும் மேம்படுத்தும்.

 

2. நொறுங்கிய கல் மணல் (Crushed Stone Sand)



மிகவும் வலுவான பாறைகளை இயந்திரத்தின் மூலம் நொறுக்கி உருவாக்கப்படும் இந்த நொறுங்கிய கல் மணல், ஆங்குலர் துகள்களை கொண்டிருப்பதால், கான்கிரீட் வேலைகளில் சிறந்த பைண்டிங்-ஐ அளிக்கிறது. நீடித்து உழைக்கும் திறன் அதிகமாக தேவைப்படும், கட்டமைப்பு அடித்தளங்கள் மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு இவை ஏற்றவை.

 

3. நொறுங்கிய ஜல்லி மணல் (Crashed Gravel Sand)

இயற்கை ஜல்லியை நொறுக்குவதன் மூலம் பெறப்படும் இந்த மணல், கோண வடிவம் கொண்டிருப்பதால் கான்கிரீட்டின் வலிமையை அதிகரிக்கிறது. இது நொறுங்கிய கல் மணல் போன்றே, டிரைவ்வே மற்றும் பாதை ஆகிய அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

 

4. உற்பத்தி செய்யப்பட்ட மணல் (M-Sand)



இது பாறைகளை நுண்ணிய துகள்களாக நொறுக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதால், இயற்கை மணலுக்கு மாற்றாக இது பரிந்துரைக்கப்படுகிறது. எந்த அசுத்தமும் இல்லாமல் தூய்மையாக நல்ல க்ரேடுடன் (தரநிலையுடன்) இருக்க இவ்வகை மணல் கடுமையாக செயலாக்கம் செய்யப்படுகிறது. அதனால் உயர் வலிமை கொண்ட கான்கிரீட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது.

 

5. கல் தூள் (Stone Dust)

இது கற்கள் நொறுக்கப்படும் போது கிடைக்கும் துணைப் பொருளாகும் (பை-பிராடக்ட்). இது சில நேரங்களில் மணலுக்குப் பதிலாக பயன்படுத்தப்படலாம். இதன் மிக நுண்ணிய துகள்கள், அக்ரிகேட்களுக்கு இடையே உள்ள சிறிய இடைவெளிகளை நிரப்புவதன் மூலம் கலவையின் அடர்த்தியை அதிகரித்து நிலைத்தன்மையை வழங்குகின்றன. இந்த சேர்க்கை, கான்கிரீட் கலவையின் அடர்த்தியையும் சீர்த்தன்மையையும் மேம்படுத்தி, சரியான சமநிலையுடன் கட்டமைக்கப்பட்ட கலவையை உருவாக்கின்றது.

 

 

கான்கிரீட் கலவையில் ஃபைன் அக்ரிகேட்ஸின் பங்கு

இப்போது நாம் ஃபைன் அக்ரிகேட்ஸ்களின் வகைகள் பற்றி புரிந்துகொண்டோம். இப்பொழுது கான்கிரீட் கலவையில் இவை வகிக்கும் பலவகை பங்குகளையும் பார்ப்போம்

 

1. வேலைசெய்யும் திறன் (Workability)

கான்கிரீட்டை கலக்குதல், கையாளுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்த ஃபைன் அக்ரிகேட்ஸ் எளிதாக்குகின்றன. துகள்களை சிறந்த முறையில் விநியோகிக்கும் போது, இது கலவையின் திரவத் தன்மையை (fluidity) அதிகரித்து, தண்ணீர் தேவைப்படும் அளவையும் குறைக்கும்.

 

2. தண்ணீர்-சிமெண்ட் விகிதம் (Water-Cement Ratio)

வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் இவை குறைந்த தண்ணீர்-சிமெண்ட் விகிதத்தை அடைய உதவுகின்றன. இது கான்கிரீட்டின் பலத்தை உயர்த்தி, அதிக இறுக்கம் (shrinkage) அல்லது விரிசல்களைத் தடுக்கும்.

 

3. இணைப்பு (Cohesion)

ஃபைன் அக்ரிகேட்ஸ்களின் மேற்பரப்பு அதிகமாக இருப்பதால் அதிக சிமெண்ட் பேஸ்ட் தேவைப்படுகிறது. இது கலவையில் வலுவான இணைப்பை உருவாக்கி, பிரிவுகள் (segregation) மற்றும் கசிதல் (bleeding) போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.

 

4. நீடித்து உழைக்கும் திறன் (Durability)

கரடுமுரடான அக்ரிகேட்ஸ்களுக்கு இடையே உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அடர்த்தியான கான்கிரீட் அமைப்பை உருவாக்கி, சுற்றுச்சூழல் அழுத்தங்கள் மற்றும் நீர் ஊடுருவலுக்கு எதிராக நீடித்து உழைக்கும் திறன் கொண்ட கட்டிடத்தை உருவாக்குகிறது.

 

5. அலங்காரக் காட்சித்தன்மை (Aesthetic Appeal)

ஃபைன் அக்ரிகேட்ஸ்களின் அடர்த்தி மற்றும் நிறம் கான்கிரீட்டின் பார்வைத்தன்மையை (visual characteristics) பாதிக்க கூடியது. இது கட்டிட வடிவமைப்பு மற்றும் அலங்கார வேலைகளுக்குத் மிகவும் அவசியமானது ஆகும்.


ஃபைன் அக்ரிகேட்ஸ்களின் பண்புகள்

கீழே உள்ள ஒவ்வொரு பண்பும், இறுதிக் கான்கிரீட் கலவையில் ஃபைன் அக்ரிகேட்ஸ்கள் எப்படி பங்களிக்கின்றன என்பதை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாகும்.

 

1. வெற்றிட உள்ளடக்கம் (Void Content)

துகள்கள் இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில், கலவைக்கு எவ்வளவு சிமெண்ட் தேவை என்பதை இந்த ஃபைன் அக்ரிகேட்ஸ்கள் காண உதவுகிறது. ஆங்குலர் அக்ரிகேட்கள் அதிக வெற்றிடங்களை ஏற்படுத்தி, அதிக சிமெண்ட் தேவைப்படும்படி செய்கின்றன. அதுவே நல்ல தரம் (well-graded) கொண்ட அக்ரிகேட்கள் இதனை குறைக்கும்.

 

2. வடிவம் மற்றும் மேற்பரப்பு (Shape and Texture)

ஃபைன் அக்ரிகேட்ஸ்களின் மேற்பரப்பு மற்றும் வடிவம் கலவையின் செயல்திறனை பாதிக்கும். கடுமையான மற்றும் ஆங்குலர் துகள்கள் கலவைக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் படி செய்கின்றன. ஆனால் மிருதுவாகவும் வட்டமாகவும் இருக்கும் துகள்களுக்கு குறைவான தண்ணீரே தேவைப்படும்.

 

3. உறிஞ்சும் திறன் மற்றும் மேற்பரப்பின் ஈரத்தன்மை (Absorption and Surface Moisture)

இந்த பண்புகள் அக்ரிகேட்ஸ் எவ்வளவு தண்ணீரை உறிஞ்சும் என்பதை காட்டுகின்றன. இது கான்கிரீட் கலவைக்கான சரியான தண்ணீர் அளவை கணக்கிட உதவுகிறது.

 

4. தேய்மானம் மற்றும் வழுக்குவதை எதிர்க்கும்திறன் (Abrasion and Skid Resistance)

இந்த ஃபைன் அக்ரிகேட்ஸ்கள் சேதங்களை எதிர்க்கும் திறன் கொண்டவை. அதனால் இதை சாலைகள் மற்றும் தரை போன்ற அமைப்புகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

 

5. துகள்களின் தரவரிசை மண்டலம் (Grading Zone)

இது துகள்களின் அளவுப் பகிர்வு பற்றியது. இந்த கிரேடிங், கான்கிரீட் கலவையின் வேலைசெய்தல் திறனையும், பலத்தையும் தீர்மானிக்க உதவுகிறது.


கான்கிரீட் கலவைக்கான சரியான ஃபைன் அக்ரிகேட்ஸைத் தேர்ந்தெடுப்பதற்கான டிப்ஸ்

உங்கள் கான்கிரீட் கலவை சிறப்பாக இருக்க, சரியான ஃபைன் அக்ரிகேட்ஸை தேர்ந்தெடுக்க சில எளிய டிப்ஸ்கள்:

 

  • ஃபைன் அக்ரிகேட்ஸ்களை டெஸ்ட் செய்யும் முன், அவை எந்த கழிவுகளும் கட்டிகளும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  • உறுதியான மற்றும் நீடிக்கக்கூடிய ஃபைன் அக்ரிகேட்ஸை தேர்வு செய்ய வேண்டும்.

  • அக்ரிகேட், கடினமாக உறுதியாக இருக்க வேண்டும்

  • சிமெண்டுடன் கலக்கும்போது வேதியியல் எதிர்வினை ஏற்படக்கூடாது என்பதனை முன்பே உறுதி செய்து கொள்ளுங்கள்.

  • 5% க்கும் குறைவான தண்ணீரையே உறிஞ்ச வேண்டும்

  • மிருதுவான மற்றும் துளையுள்ள (porous) ஃபைன் அக்ரிகேட்ஸை தவிர்க்கவும்



கான்கிரீட் கலவையின் அமைப்பிலும் செயல்திறனிலும் ஃபைன் அக்ரிகேட்ஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இஞ்சினியர்கள் மற்றும் கட்டுமான நிபுணர்கள் இந்த ஃபைன் அக்ரிகேட்களின் வகைகள், வகைப்பாடு மற்றும் பங்களிப்புகளை புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அடிப்படையான ஒன்றாகும். இது குறிப்பிட்ட கட்டமைப்பு தேவைகளுக்கான கான்கிரீட் கலவை வடிவமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது கட்டுமானத்தின் நீடித்த தன்மையையும், கட்டமைப்பின் ஒருங்கிணைப்பு தன்மையையும் அதிகரிக்கும்.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. ஃபைன் அக்ரிகேட்ஸின் அடர்த்தி வரம்பு என்ன?

ஃபைன் அக்ரிகேட்ஸின் அடர்த்தி பொதுவாக 1400 முதல் 1600 kg/m³ வரையிலான அளவில் இருக்கும். இது அக்ரிகேட் என்னும் பொருளின் அமைப்பு மற்றும் ஈரப்பதம் போன்றவற்றால் மாறுபடலாம்.

 

2. ஃபைன் அக்ரிகேட்ஸின் கிரேடிங் (தரவரிசை) என்றால் என்ன?

ஃபைன் அக்ரிகேட்ஸின் கிரேடிங் என்பது அதற்குள் உள்ள துகள்களின் அளவுகளைப் பொறுத்து அவை எப்படி பகிரப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கும். இது பொதுவாக மணல், மண்ணி (silt), களிமண் (clay) போன்ற துகள்களின் வீதங்களில் (percentage) குறிப்பிடப்படுகிறது. இந்த வகைப்பாடு கான்கிரீட்டின் வேலை செய்யும் திறனையும் (workability) வலிமையையும் தீர்மானிக்க மிகவும் முக்கியமானது.

 

3. ஃபைன் அக்ரிகேட்ஸ்கும் கரடுமுரடான அக்ரிகேட்ஸ்கும் இடையிலான முக்கிய வித்தியாசம் என்ன?

ஃபைன் மற்றும் கரடுமுரடான அக்ரிகேட்களுக்கு இடையிலான முக்கிய வித்தியாசம் துகள்களின் அளவில் தான் உள்ளது. ஃபைன் அக்ரிகேட்ஸ்கள் மணலைப் போன்று தான் சிறிய துகள்களைக் கொண்டுள்ளன. ஆனால் கரடுமுரடான அக்ரிகேட்ஸ்கள் ஜல்லி அல்லது நொறுங்கிய கல் போன்று பெரிய துகள்களைக் கொண்டுள்ளன. இரண்டுமே கான்கிரீட் கலவைகளில் முக்கியமானவை.

 

4. ஃபைன் அக்ரிகேட்ஸின் இரண்டு மூலங்கள் என்ன?

ஃபைன் அக்ரிகேட்களில் இரண்டு அடிப்படை மூலங்கள் உள்ளன. அவை இயற்கை மூலங்கள், உதாரணமாக, நதிமணல் அல்லது கடல்மணல் போன்றவை. மற்றும் செயற்கை மூலங்கள் உதாரணமாக நொறுங்கிய கல் துகள்கள் அல்லது குவாரி கழிவுகள் போன்றவை.

 

5. ஃபைன் அக்ரிகேட்ஸுக்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்?

கான்கிரீட் கலவையில் ஃபைன் அக்ரிகேட்ஸுக்கு மாற்றாக, நொறுக்கப்பட்ட கான்கிரீட் (crushed concrete) அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடி போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட மெட்டீரியல்களை பயன்படுத்தலாம். இந்த மாற்று பொருள்கள், இயற்கையான ஃபைன் அக்ரிகேட்களின் தேவையை குறைக்கும். மேலும், நிலையான கட்டுமான நடைமுறைகளையும் ஊக்குவிக்கும்.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....