கான்கிரீட் உரிதல் என்பது வெறும் மேற்பரப்புப் பிரச்சினையை விட அதிக சிக்கலை ஏற்படுத்துபவை, ஏனெனில் உடனடியாக கவனிக்கப்படாவிட்டால் அது விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளுக்கு வழிவகுக்கும்:
- சமரசம் செய்யப்பட்ட கட்டமைப்பு: சிதிலமடைதல் கான்கிரீட்டின் வலிமையை பலவீனப்படுத்துகிறது, அதன் லோடு தாங்கும் திறனைக் குறைக்கிறது. காலப்போக்கில், இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக சுவர்கள், பீம்கள் மற்றும் ஃபவுண்டேஷன் போன்ற முக்கியமான கட்டமைப்பு கூறுகள் பாதிக்கப்படலாம்.
- அழகியல் பாதிப்பு: உதிர்தல், சில்லுகள் அல்லது உரிந்து விழும் கான்கிரீட் மேற்பரப்புகள் உங்கள் வீட்டின் காட்சி அழகை வெகுவாகக் குறைத்து, அது பழையதாகவும், மோசமாக பராமரிக்கப்பட்டதாகவும் தோற்றமளிக்கும். இது உங்கள் சொத்தின் மதிப்பையும் குறைக்கலாம்.
- அதிக பழுதுபார்க்கும் செலவுகள்: பழுதுபார்க்கும் பகுதியை கவனிக்காமல் விட்டால், சேதம் மோசமடைந்து, அதிக விரிவான மற்றும் விலையுயர்ந்த பழுதுபார்ப்புகள் வரலாம். ஆரம்பகால தலையீடு உங்களுக்கு குறிப்பிடத்தக்க செலவுகளைச் சேமிக்கும் மற்றும் மேலும் மோசமடைவதைத் தடுக்கும்.
உதிர்வடைந்த கான்கிரீட்டை எவ்வாறு சரிசெய்வது
உதிர்ந்த கான்கிரீட்டை சரிசெய்வதற்கான முறை சேதத்தின் அளவைப் பொறுத்தது. எனவே நமது உதிர்ந்த கான்கிரீட்டை வலுவாகவும் நீடித்துழைக்க கூடியதாகவும் மாற்றுவதற்கான சில முறைகள்:
1. மேற்பரப்பு பழுதுபார்ப்புகள்:
- எபோக்சி ஃபில்லர்கள்: இவை உரிதல்களை மூடவும், மென்மையான மேற்பரப்பை மீட்டெடுக்கவும், மேலும் ஈரப்பதம் ஊடுருவுவதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
- மேல் அடுக்கு பயன்பாடுகள்: சேதமடைந்த பகுதியின் மீது ஒரு மெல்லிய அடுக்கு கான்கிரீட் பூசப்படுகிறது, இது சில்லுகள் மற்றும் உரிதல்களை மறைக்கிறது, இதனால் தோற்றம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை மேம்படும்.
2. ஆழமான பழுதுபார்ப்புகள்:
- ரீயின்ஃபோர்ஸ்மென்ட் மாற்றீடு: துருப்பிடித்த ஸ்டீல் ரீயின்ஃபோர்ஸ்மென்ட் கம்பிகள் (ரீபார்) அகற்றப்பட்டு, கட்டமைப்பு வலிமையை மீட்டெடுக்க புதியவற்றால் மாற்றலாம்.
- பகுதி மாற்றுதல்: கடுமையாக சேதமடைந்த பகுதிகள் வெட்டப்பட்டு, நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக புதிய கான்கிரீட்டால் மாற்றப்படலாம்.
நீடித்துழைக்கும் தீர்வுகளுக்கு, குறிப்பாக ஆழமான பழுதுபார்ப்புகளுக்கு, தொழில்முறை நிபுணத்துவம் அவசியம். நிபுணர்கள் உரிதல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை நிவர்த்தி செய்து, பழுதுபார்ப்புகள் நீடித்து நிலைக்கவும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிசெய்து, உங்கள் கட்டமைப்பை மேலும் சேதத்திலிருந்து பாதுகாக்க முடியும்.
கான்கிரீட்டில் சிதிலமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்
உங்கள் கட்டமைப்புகளின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்க கான்கிரீட் சிதறுவதைத் தடுப்பது அவசியம். நீங்கள் எடுக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்:
1. உயர்தர சிமெண்ட் பயன்படுத்துதல்:
உங்கள் வீட்டின் ஃபவுண்டேஷன் வலிமை, பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது. அதனால்தான் சிமெண்டின் தரத்தைப் பொறுத்தவரை நீங்கள் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது. உயர்தர சிமெண்டைத் தேர்ந்தெடுப்பது நீடித்து உழைக்கும் தன்மையை உருவாக்க உதவுகிறது. உரிதல் மற்றும் சேதத்தை எதிர்க்கும் கான்கிரீட் கலவை பயன்படுத்தலாம். சிறந்த பாண்டிங் பண்புகளுடன், பிரீமியம் சிமென்ட் சுற்றுச்சூழல் சவால்களைத் தாங்கி, சிராய்ப்பு அபாயத்தைக் குறைத்து, உங்கள் ஃபவுண்டேஷனை பாதுகாப்பாகவும் நீண்ட காலம் நீடிக்கும் வகையிலும் வைத்திருக்கும்.
2. சீல் மேற்பரப்புகள்:
கான்கிரீட் மேற்பரப்புகளுக்கு வாட்டர்-ப்ரூஃபிங் பூச்சுகள் அல்லது சீலண்டுகளைப் பயன்படுத்துவது ஈரப்பதம் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்புத் தடையை உருவாக்குகிறது. இந்த பூச்சுகள் கான்கிரீட்டில் நீர் ஊடுருவுவதைத் தடுக்க உதவுகின்றன, இது உறைபனி-உருகும் சுழற்சிகள் அல்லது அதிக மழை பெய்யும் பகுதிகளில் மிகவும் முக்கியமானது.
3. சரியான நிறுவலை உறுதி செய்யுங்கள்:
வலுவான மற்றும் நீடித்த கான்கிரீட் கட்டமைப்பை அடைவதற்கு அனுபவம் வாய்ந்த ஒப்பந்தக்காரர்களுடன் பணிபுரிவது மிக முக்கியம். காற்று அடைப்பு அல்லது முறையற்ற அமைப்பு போன்ற சிக்கல்களைத் தடுக்க சரியான கலக்குதல், ஊற்றுதல் மற்றும் கியூரிங் நுட்பங்கள் அவசியம், இவற்றை சரியாக பின்பற்றாவிட்டால் உதிர்வுகள் ஏற்படலாம். திறமையான கான்ட்ரக்டர்கள் வெவ்வேறு நிலைமைகள் மற்றும் மெட்டீரியலை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொண்டு, சிறந்த முடிவுகளை உறுதி செய்கிறார்கள்.
4. வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுங்கள்:
உங்கள் கான்கிரீட் மேற்பரப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்வது, சிராய்ப்பு அல்லது பிற சேதங்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய உதவும். சிறிய உரிதல்கள், நிறமாற்றம் அல்லது உரிதல் மேற்பரப்புகளைத் தேடுங்கள். பழுதுபார்ப்பு அல்லது பராமரிப்பு மூலம் இந்தப் பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்வது, அவை மோசமடைவதைத் தடுக்கலாம் மற்றும் நீண்ட காலத்திற்கு உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
இந்த தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம், கான்கிரீட் உரிதல் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்து, உங்கள் கட்டமைப்புகளின் ஆயுளை நீட்டித்து, அவை வரும் ஆண்டுகளில் பாதுகாப்பாகவும் அழகியல் ரீதியாகவும் இருப்பதை உறுதிசெய்யலாம்.