வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



M5 கான்கிரீட் மிக்ஸ் கலப்பதற்கான அளவு விகிதம் என்றால் என்ன?

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • M5 கான்கிரீட் மிக்ஸ் விகிதம் என்பது கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஒரு எளிய கலவையாகும், இதில் குறைந்த இறுக்க வலிமை (low compressive strength) போதுமானது.
     
  • M5 கான்கிரீட்டிற்கான கலவை விகிதம் பொதுவாக அதிக மணல் மற்றும் குறைந்த சிமெண்டுடன் கூடிய அக்ரிகேட்டை கொண்டிருக்கும்.
     
  • கான்கிரீட் மிக்ஸ்க்கான இந்த M5 விகிதம் முக்கியமாக லெவலிங் மற்றும் பெட்டிங் போன்ற கட்டமைப்பு அல்லாத பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.


கான்கிரீட் அதன் வலிமை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பல்துறை திறன் காரணமாக மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களில் ஒன்றாகும். கான்கிரீட்டைப் பற்றி விவாதிக்கும்போது, ​​"கலவை விகிதம்" என்பது ஒரு குறிப்பிட்ட வகை கான்கிரீட்டை உருவாக்கும் சிமென்ட், மணல், ஜல்லி மற்றும் நீர் போன்ற முதன்மை கூறுகளின் அளவுகளைப் பற்றி குறிக்கிறது. M5 கான்கிரீட் மிக்ஸ் விகிதம் குறைந்த வலிமை கொண்ட கட்டுமானங்களுக்கு அதிகம் தேர்ந்தெடுக்கப்படும் கலவையாகும்.

 

 


M5 கான்கிரீட் விகிதம் என்றால் என்ன?

M5 கான்கிரீட் மிக்ஸ் விகிதம் என்பது சிமெண்ட், மணல், ஜல்லி மற்றும் குறிப்பிட்ட விகிதத்தில் நீர் ஆகியவை கலக்கப்பட்ட கலவையாகும். அதிக வலிமை தேவையில்லாத கட்டமைப்பு அல்லாத கட்டுமானத்தில் இது முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. M5 இல் உள்ள "M" என்பது "கலவை" (மிக்ஸ்) என்பதைக் குறிக்கிறது, உடனிருக்கும் எண் 28 நாட்கள் கியூரிங் செய்த பிறகு அடையும் இறுக்க வலிமையினைக் குறிக்கிறது.



M5 கான்கிரீட் மிக்ஸின் கூறுகள்

முதன்மை கூறுகள்

 

1. சிமென்ட்: கலவையை ஒன்றாக வைத்திருக்கும் பைண்டிங் ஏஜென்டாக செயல்படுகிறது.

2. மணல்: பெரிய ஜல்லிகளுக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்பி ஒட்டுமொத்த வலிமைக்கு பங்களிக்கும் நுண்ணிய மணல் துகள்கள்.



3. ஜல்லி: சரளை அல்லது நொறுக்கப்பட்ட கல் போன்ற கரடுமுரடான பொருள், இது கான்கிரீட்டிற்கு பருமனையும் வலிமையையும் சேர்க்கிறது.

4. நீர்: சிமெண்டுடன் வினைபுரிந்து அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகப் பிணைக்கும் பேஸ்ட்டை உருவாக்குகிறது.

 

வழக்கமான M5 கலவை விகிதம் 1:5:10 (சிமென்ட்: மணல்: ஜல்லி), அதாவது,

 

  • ஒரு பங்கு சிமென்ட்
 
  • ஐந்து பங்கு மணல்
 
  • பத்து பங்கு ஜல்லி

 

M5 கான்கிரீட் மிக்ஸ் விகிதத்தை அளவிடுவதில் துல்லியம் மிக முக்கியமானது. தவறான அளவில் மிக்ஸ் செய்வதால் தேவையான வலிமையினை அடைய முடியாமல் பலவீனமான கான்கிரீட் உருவாக வழிவகுக்கும், இது கட்டமைப்பின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பை பாதிக்கும்.

 

M5 கலவை விகிதத்தைத் தயாரிப்பதற்கான படிப்படியான வழிகாட்டி

M5 கலவை விகிதத்தினை சரியான நிலைத்தன்மையையும் வலிமையையும் அடைவதற்கு கவனமாக கலக்க வேண்டும்.

 

1. தேவையான பொருட்களை துல்லியமாக அளவிடவும்: சிமென்ட், மணல் மற்றும் ஜல்லி விகிதாச்சாரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய அளவிடும் கொள்கலனைப் பயன்படுத்தவும்.

2. ஈரமில்லாத பொருட்களை கலக்கவும்: சிமென்ட், மணல் மற்றும் ஜல்லி ஒரு கொள்கலனில் அல்லது கலவை மேடையில் இணைக்கவும்.

3. படிப்படியாக தண்ணீரைச் சேர்க்கவும்: காய்ந்த கலவையில் மெதுவாக தண்ணீரைச் சேர்க்கவும், அது சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யவும்.

4. நன்கு கலக்கவும்: அனைத்து கட்டுமான பொருட்களும் நன்கு கலக்கப்பட்டு ஒரே மாதிரியான சீரான கலவை உருவாவதை உறுதிப்படுத்தவும்.

5. நிலைத்தன்மையை சரிபார்க்கவும்: கலவை ஒரே மாதிரியாகவும் போதுமான அளவு சீராகவும் இருக்க வேண்டும். சரியான நிலைத்தன்மையை அடைய தேவையான தண்ணீரை சரிசெய்யவும்.



கலப்பதற்கான குறிப்புகள்:

 

  • M5 கான்கிரீட் மிக்ஸ் விகிதம் மிகவும் நீர்த்து போனதாக மாறுவதைத் தவிர்க்க எப்போதும் தண்ணீரை மெதுவாகச் சேர்க்கவும்.
 
  • கட்டிகள் உருவாகாமல் இருக்கவும், கலவை சீராக இருக்கவும் கட்டுமான பொருட்களை நன்கு கலக்கவும்.
 
  • கான்கிரீட்டை பலவீனப்படுத்தக்கூடிய மாசுபாட்டைத் தவிர்க்க புதிய நீர் மற்றும் ஜல்லிகளைப் பயன்படுத்தவும்.

 

 

M5 கான்கிரீட் விகிதத்தின் வலிமை மற்றும் ஆயுள்

M5 கான்கிரீட் மிக்ஸ் அதன் குறைந்த இறுக்க வலிமைக்கு பெயர் பெற்றது, இது சுமை (லோட்) தாங்காத பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதிக வலிமை தேவையில்லாத இடங்களில் அடித்தளம் அல்லது ஆயத்த வேலைகளுக்கு சிறந்ததாக அமைகிறது. உயர் தர கான்கிரீட்டின் வலிமை இதற்கு இல்லாவிட்டாலும், ஃபில்லிங் அல்லது லெவலிங் போன்ற நோக்கத்திற்காக போதுமான நீடித்துழைக்கும் திறனை வழங்குகிறது.

 

 

M5 கான்கிரீட் மிக்ஸின் பயன்பாடுகள் 

குறைந்த வலிமை காரணமாக, M5 கான்கிரீட்டின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.

 

  • ஃபவுண்டேஷன் ஸ்லாப்களுக்கான ஃபூட்டிங்: பிற கட்டுமான லேயர்களுக்கு நிலையான, சமதள அடித்தளத்தை வழங்குதல்.
 
  • பாதைகள் மற்றும் நடைபாதைகள்: அதிக போக்குவரத்து அல்லது லோட்களை அனுபவிக்காத பகுதிகள் கட்டமைக்க பயன்படுத்தப்படும்.
 
  • லெவலிங்: உயர் தர கான்கிரீட் அல்லது ஃபினிஷிங் லேயர்கள் பயன்படுத்துவதற்கு முன்பு இவை லெவலிங் அடுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

 

M5 கான்கிரீட் தரத்தை பாதிக்கும் காரணிகள்

M5 கான்கிரீட்டின் தரம் பல காரணிகளால் பாதிக்கப்படலாம்:

 

  • தவறான M5 கலவை விகிதம்: முறையற்ற சிமென்ட், மணல் மற்றும் ஜல்லி விகிதங்கள் கலவையை பலவீனப்படுத்தும்.
 
  • மோசமான தரத்தில் கிடைக்கும் பொருட்கள்: குறைந்த தரம் வாய்ந்த சிமென்ட், மணல் அல்லது ஜல்லி வலிமையைக் குறைக்கும்.
 
  • போதுமான கலவை இல்லாமை: முழுமையாக கலக்கத் தவறினால் கான்கிரீட்டில் பலவீனமான ஸ்பாட்கள் ஏற்படலாம்.

 

கான்கிரீட்டின் M5 விகிதத்தில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்

 

  • அதிக தண்ணீரைப் பயன்படுத்துவது கான்கிரீட்டை பலவீனப்படுத்தி அதன் நீடித்து உழைக்கும் தன்மையைக் குறைக்கும்.
 
  • சரியாக கலக்காதது: இது பொருட்களின் சீரற்ற விநியோகத்திற்கும் வலிமை குறைவதற்கும் வழிவகுக்கிறது.
 
  • துல்லியமற்ற அளவீடுகள்: வலிமையினை பூர்த்தி செய்யாத கலவையாக இருக்கும்.


 

M5 கான்கிரீட் மிக்ஸ் விகிதம் முதன்மையாக கட்டமைப்பு அல்லாத பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, அதிக கட்டமைப்பு வலிமை தேவையில்லாத இடங்களுக்கு ஏற்றது. கான்கிரீட், பயன்பாட்டிற்கு எதிர்பார்த்தபடி செயல்படுவதை உறுதிசெய்ய கட்டுமான பொருட்களையும், சரியான கலவை விகிதத்தையும் புரிந்துகொள்வது அவசியம். சரியான கலவை நுட்பங்கள் மற்றும் பொதுவான தவறுகளைத் தவிர்ப்பது தேவையான நிலைத்தன்மையையும் வலிமையையும் அடைய உதவும், இது M5 கான்கிரீட்டை அடிப்படை கட்டுமானத் தேவைகளுக்கு நம்பகமான தேர்வாக மாற்றுகிறது.





அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. கட்டமைப்பு வேலைக்கு M5 கான்கிரீட் விகிதம் பொருத்தமானதா?

குறைந்த இறுக்க வலிமை காரணமாக, M5 கான்கிரீட் கட்டமைப்பு உறுதியான கட்டுமானத்திற்கு பொருத்தமற்றது. லெவலிங் மற்றும் ஃபவுண்டேஷன் வேலைகள் போன்ற கட்டமைப்பு அல்லாத பயன்பாடுகளுக்கு இது சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

2. M5 தர கான்கிரீட்டின் விலை என்ன?

M5-தர கான்கிரீட்டின் விலையானது பயன்படுத்தப்படும் இடம், பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் தொழிலாளர் செலவுகளைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும், அதன் குறைந்த வலிமை மற்றும் குறைவான பொருட்களே போதும் என்பதால், இது பெரும்பாலும் உயர் தர கான்கிரீட்டை விட குறைந்த விலை கொண்டது.

 

3. M5 கான்கிரீட்டின் அடர்த்தி என்ன?

M5 கான்கிரீட்டின் அடர்த்தி பொதுவாக 2200 முதல் 2500 கிலோ/மீ³ வரை இருக்கும், இது பயன்படுத்தப்படும் ஜல்லி மற்றும் கலவை செயல்முறையை பொறுத்து இருக்கும்.

 

4. M5, M10, M15, M20, M25 என்றால் என்ன?

இவை 28 நாட்கள் கியூரிங் பிறகு இறுக்க வலிமையைக் குறிக்கும் வெவ்வேறு தர கான்கிரீட் ஆகும். M5 கான்கிரீட் மிக்ஸ் விகிதம் மிகக் குறைந்த வலிமையைக் கொண்டது, ஒவ்வொரு அடுத்தடுத்த தரமும் அதிக வலிமையைக் கொண்டிருக்கும் மற்றும் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்படும்


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....