வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



வீடு கட்டுவதில் மறைமுக செலவுகள் என்ன?

வீடு கட்டுவதில் உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே கிடைக்கும், எனவே ஒவ்வொரு விவரத்தையும் கவனமாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். மறைமுக செலவுகள் உங்கள் பட்ஜெட்டை எதிர்பாராத விதமாக அதிகரிக்கக்கூடும், ஆனால் அவற்றைத் தவிர்க்கலாம். இந்த வழிகாட்டியில், நீங்கள் புத்திசாலித்தனமாக முன்னேறவும் புத்திசாலித்தனமாகச் செலவிடவும் உதவும் பொதுவான மறைமுக செலவுகள் மற்றும் நடைமுறை குறிப்புகள் மூலம் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

Share:


முக்கிய குறிப்புகள்

 

  • சீரற்ற நிலப்பரப்பை சமன் செய்தல், மோசமான மண்ணின் தரத்தை சரி செய்தல் மற்றும் டிரைனேஜ் சிஸ்டம் நிறுவல்கள் போன்ற செலவுகள் உங்கள் பட்ஜெட்டை கணிசமாக பாதிக்கும்.

     

  • மோசமான திட்டமிடல் பொருள் விரயம், போக்குவரத்து சவால்கள் மற்றும் போதுமான அல்லது தரமற்ற பொருட்கள் காரணமாக எதிர்பாராத செலவுகளுக்கு வழிவகுக்கும்.

     

  • மண்டலப்படுத்தல், சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்களுக்கான கட்டணங்கள், கட்டுமான விதிகளுக்கு இணங்காததற்கான அபராத தொகை போன்றவை பொதுவான மறைமுக செலவுகள் ஆகும்.

     

  • மின்சாரம், நீர் மற்றும் கழிவுநீரை இணைப்பது, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் தற்காலிக அமைப்புகள் உள்ளிட்டவை அதிக செலவுகளை ஏற்படுத்தும்.

     

  • முழுமையான ஆராய்ச்சி, பொருள் பயன்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் நம்பகமான நிபுணர்களுடன் பணிபுரிவது மறைமுக செலவுகளைக் குறைக்கவும், உங்கள் கட்டுமான திட்டத்தை பட்ஜெட்டில் வைத்திருக்கவும் உதவும்.



உங்கள் வீட்டைக் கட்டுவது என்பது எதிர்பாராத செலவுகள் உட்பட சவால் நிறைந்த பணியாகும். வீடு கட்டுவதற்கான இந்த மறைமுக செலவுகள் உங்கள் பட்ஜெட்டை கணிசமாகக் குறைக்கும். வீடு கட்டும் போது இந்த செலவுகளைக் கவனிக்காமல் இருப்பது, வீடு கட்டுதலின் பிற்பகுதியில் தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும், அங்கு போதுமான நிதி இல்லாததால் கட்டுமானத்தை நிறுத்த வேண்டியிருக்கும்.

உங்கள் வீடு, உங்கள் அடையாளம், நீங்கள் அதை சரியாக கட்ட வேண்டும். இதன் பொருள், வீடு கட்டுவதற்கான உங்கள் ஒட்டுமொத்த செலவில் ஏற்படக் கூடிய மறைமுக செலவுகள் குறித்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த செலவுகளைப் புரிந்துகொள்வது, உங்கள் வீடு கட்டும் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியங்களைத் தவிர்ப்பதற்கும், தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கும் உதவிடும்.

 

 


வீடு கட்டுவதற்கான பொதுவான மறைமுக செலவுகள்

வீடு கட்டுவது என்பது சுவர்கள் மற்றும் கூரைகளை கட்டமைப்பது மட்டுமல்ல. இந்தச் செயல்பாட்டின் போது பல மறைமுக செலவுகள் வரலாம். இங்கே சில பொதுவான செலவுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன:

 

 

1) நிலத்தை தயார் செய்தல் மற்றும் தள மேம்பாடு



கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பே, நிலத்தைத் தயார் செய்வது குறிப்பிடத்தக்க செலவுகளை உள்ளடக்கியது. இந்த கட்டத்தில் மறைமுக செலவுகள் எதிர்பாராத விதமாக உங்கள் பட்ஜெட்டை பாதிக்கலாம்.

 

மறைமுக செலவுகள்:

 

  • சீரற்ற நிலப்பரப்பு: தளத்தை சுத்தம் செய்தல், சீரற்ற நிலத்தை சமன் செய்தல் மற்றும் மண் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவை விலை உயர்த்தும் செலவாக இருக்கலாம்.

     

  • மோசமான மண் தரம்: பாறை அல்லது சதுப்பு நிலப்பகுதி போன்ற நிலையற்ற மண்ணுக்கு, ஃபில்லிங் அல்லது சுருக்குதல் போன்ற கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படலாம், இது உங்கள் பட்ஜெட்டைக் அதிகரிக்க செய்யும்.

     

  • டிரைனேஜ் சிஸ்டம்கள்: சீரற்ற சரிவுகள் அல்லது மோசமான நீர் மேலாண்மைக்கு தடுப்பு சுவர்கள் அல்லது டிரைனேஜ்களில் கூடுதல் முதலீடுகள் தேவைப்படுகின்றன.

     

 

2) கட்டிடப் மெட்டீரியல்கள் மற்றும் பொருட்கள்



ஒரு வீட்டைக் கட்டும் போது, ​​பொருட்களின் தேர்வில், குறிப்பாக நல்ல தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது.சிமெண்ட். ஸ்டீல் மற்றும் செங்கல் போன்ற பொருட்களுடன் சேர்த்து நீங்கள் கணக்கிட வேண்டிய செலவு இது. இதைத் தாண்டி, சில மறைமுக செலவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

மறைமுக செலவுகள்:

 

  • போக்குவரத்துக் கட்டணங்கள்: உங்கள் மனையின் இருப்பிடத்தை மாற்ற முடியாது. எளிதில் அணுக முடியாத ஒரு மனையை நீங்கள் தேர்வுசெய்தால், இந்த இடங்களுக்கு மெட்டீரியல்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதே செலவுகளை கணிசமாக அதிகரிக்கும். நீங்கள் தேர்வுசெய்த மனை சாலை வழியாகவும் பள்ளிகள், சந்தைகள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு அருகிலும் அணுகக்கூடியதாக இல்லாவிட்டால், நீங்கள் குடிபெயர்ந்தவுடன் இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

     

  • தரமற்ற பொருட்கள்: நீங்கள் உங்கள் வீட்டை ஒரு முறை மட்டுமே கட்டுகிறீர்கள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருட்கள் அதன் நீடித்துழைக்கும் திறனின் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வீடு கட்டும் போது பொருட்களை சமரசம் செய்வது பின்னர் விலையுயர்ந்த பழுதுபார்ப்பு மற்றும் விலையுயர்ந்த பராமரிப்புக்கு வழிவகுக்கும்.

     

  • போதுமான பொருட்கள் இல்லாமை: தவறான திட்டமிடல் வீட்டைக் கட்டுவதற்கு போதுமான பொருட்கள் இல்லாமல் போக வழிவகுக்கும். அதனால்தான் ஒவ்வொரு பொருள் செலவையும் கணக்கிட வேண்டும்.

     

  • பொருள் விரயம்: இதற்கு நேர்மாறாக, முறையற்ற திட்டமிடாமல் போனால் அதிகப்படியான மெட்டீரியல்களை வாங்க வழிவகுக்கும், இதனால் ஒட்டுமொத்த செலவுகள் அதிகரிக்கும்.

 

 

3) அனுமதிகள் மற்றும் ஆய்வுகள்

 

சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுவதும் ஆய்வுகளை நடத்துவதும் கட்டாயமாகும், ஆனால் இது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. ஒரு மனையை அதிக பணம் கொடுத்து வாங்குகிறோம், மேலும் நீங்கள் அதை வாங்குவதற்கு முன் அதன் சட்டப்பூர்வ நிலையை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

 

மறைமுக செலவுகள்:

 

  • அனுமதி கட்டணங்கள்: மண்டல ஒப்புதல்கள், சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு சான்றிதழ்கள் அனைத்தும் கட்டுமானம் தொடர்புடைய கட்டணங்களுடன் வருகின்றன. இந்த செலவுகள் திட்டத்தின் இடம் மற்றும் சிக்கலான தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

     

  • கட்டுமான விதிகளுக்கு இணங்காததற்கான அபராதங்கள்: கட்டாய அனுமதிகளைத் தவறவிடுவது அல்லது புறக்கணிப்பது மிகப்பெரிய அபராதங்கள் அல்லது தண்டணைகளை விதிக்க வழிவகுக்கும் மற்றும் தேவையற்ற நிதி நெருக்கடியைச் சேர்க்கும்.

     

  • கூடுதல் ஆய்வுகள்: கட்டிட கட்டுமான விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட ஆய்வுகளில் ஆரம்ப பட்ஜெட்டில் சேர்க்கப்படாத கூடுதல் கட்டணங்கள் சேர்க்கப்படலாம்.

     

     

4) பயன்பாட்டு இணைப்புகள்



உங்கள் நிலத்திற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளைப் பெறுவது அவசியம், ஆனால் அது விலை உயர்ந்ததாக இருக்கலாம். பெரும்பாலும் இவை கட்டுமான செயல்முறையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன, அவை குறிப்பாக வளர்ச்சி குறைந்த பகுதிகளில் அதிக செலவை ஏற்படுத்துபவையாக மாறுகின்றன.

 

மறைமுக செலவுகள்:

 

  • உள்கட்டமைப்பு மேம்பாடு: உங்கள் நிலம் தொலைதூரப் பகுதியில் இருந்தால், மின்சாரம், தண்ணீர் அல்லது கழிவுநீருக்கான பயன்பாட்டுக் குழாய்களை நீட்டிப்பது விலை உயர்ந்ததாக இருக்கலாம்.

     

  • செப்டிக் அமைப்புகள் அல்லது போர்வெல்கள்: நகராட்சி கட்டுமான அமைப்பு இல்லை என்றால், கழிவு மேலாண்மைக்கு செப்டிக் டேங்க் அல்லது தண்ணீருக்காக ஒரு போர்வெல் அமைக்க நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும், இது செலவுகளை கணிசமாக அதிகரிக்கும்.

     

  • இணைப்புக் கட்டணம்: பயன்பாட்டு வழங்குநர்கள் பெரும்பாலும் உங்கள் சொத்தை தங்கள் நெட்வொர்க்குகளுடன் இணைப்பதற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள், இது முதலில் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம்.

     

  • ஏற்கனவே உள்ள அமைப்புகளுக்கான மேம்பாடுகள்: சில சந்தர்ப்பங்களில், ஏற்கனவே உள்ள பயன்பாட்டு அமைப்புகள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் போகலாம், இதனால் விலையுயர்ந்த மேம்பாடுகள் அல்லது மாற்றீடுகள் தேவைப்படும்.

     

  • தற்காலிக பயன்பாட்டு அமைப்புகள்: கட்டுமானத்தின் போது, ​​உங்களுக்கு தற்காலிக பயன்பாட்டு இணைப்புகள் தேவைப்படலாம், அவை அவற்றின் சொந்த நிறுவல் மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களுடன் வருகின்றன.

 

 

புதிய வீடு கட்டும்போது மறைமுக செலவுகளைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்.



வீடு கட்டும் போது எதிர்பாராத செலவுகளைத் தவிர்ப்பதற்கு நன்கு திட்டமிடுவது அவசியம். சில நடைமுறை குறிப்புகள் இங்கே:

 

 

1) முழுமையான ஆராய்ச்சி மற்றும் முன் திட்டமிடல்

 

நீங்கள் எவ்வளவு அதிகமாக ஆராய்ந்து முன்கூட்டியே திட்டமிடுகிறீர்களோ, அவ்வளவுக்கு கட்டுமானத்தின் போது நீங்கள் சந்திக்கும் ஆச்சரியங்கள் குறையும். நீங்கள் தொடங்குவதற்கு முன் நிலம், அனுமதிகள், பயன்பாடுகள் மற்றும் பொருட்களின் மொத்த விலையைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

  • அனுமதிகள், பயன்பாட்டு இணைப்புகள் மற்றும் தள தயாரிப்பு போன்ற மறைமுக செலவுகள் உட்பட, சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளின் விரிவான சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்கவும்.

     

  • எதிர்காலத்தில் எந்த ஆச்சரியங்களும் ஏற்படாமல் இருக்க, தள ஆய்வுகள் மற்றும் வில்லங்கம் குறித்த சோதனைகளை செய்யுங்கள்.

 

 

2) அனுமதிகள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்திடுங்கள்

 

சட்ட மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் முறையாகக் கையாளப்படாவிட்டால் பெரும் தாமதங்களும் அபராதங்களும் ஏற்படக்கூடும். கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

  • எந்தவொரு மனை ஒப்பந்தத்தையும் இறுதி செய்வதற்கு முன், தாய் பத்திரம், விற்பனை பத்திரம் மற்றும் வில்லங்கச் சான்றிதழ் போன்ற அனைத்து முக்கியமான ஆவணங்களையும் சரிபார்க்கவும்.

     

  • எதிர்காலத்தில் ஏற்படும் ஆச்சரியங்களைத் தவிர்க்க, உங்கள் ஆரம்ப பட்ஜெட்டில் அனுமதிக் கட்டணங்கள் மற்றும் கூடுதல் ஆய்வுச் செலவுகளைச் சேர்க்க வேண்டும்.

 

 

3) பயன்பாட்டு இணைப்புகளுக்கான திட்டமிடலை முன்கூட்டியே செய்யுங்கள்.

 

உங்கள் சொத்துடன் அன்றாட பயன்பாட்டுச் சேவைகளை இணைப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் விலை உயர்ந்ததாக இருக்கலாம். இந்த இணைப்புகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுவது திடீர் செலவுகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

 

  • உங்கள் மனையில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள் அல்லது செப்டிக் டேங்க் மற்றும் போர்வெல் போன்ற மாற்று வழிகளை ஏற்பாடு செய்யுங்கள்.

     

  • நிலத்தை வாங்குவதற்கு முன் பயன்பாட்டு இணைப்பு கட்டணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செலவுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.

 

 

4) மெட்டீரியல் பயன்பாடு மற்றும் கழிவுகளை கண்காணித்தல்

 

பொருள் வீணாவதும், மோசமான திட்டமிடலும் கட்டுமானச் செலவுகளை விரைவாக உயர்த்தக்கூடும். அதிகமாக வாங்குவதையோ அல்லது பொருட்கள் தீர்ந்து போவதையோ தவிர்க்க, விவரமறிந்து திட்டமிடுங்கள் மற்றும் பொருள் பயன்பாட்டை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.

 

  • அனைத்து மெட்டீரியல் வாங்குதல்களையும் கண்காணித்து, இன்வென்ட்ரியை கண்காணிக்க கட்டுமான மேலாண்மை செயலியினை பயன்படுத்தவும்.

     

  • அதிகப்படியான ஸ்டாக்கினை தவிர்க்கவும், கழிவுகளைக் குறைக்கவும் படிப்படியாக பொருட்களை ஆர்டர் செய்யுங்கள்.

 

 

5) நம்பகமான நிபுணர்களுடன் பணிபுரிதல்

 

அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரர்கள்,கட்டிடக் கலைஞர்கள், மற்றும் ஆலோசகர்கள் பணியமர்த்துவதும் மறைமுக செலவுகளுக்கு வழிவகுக்கும் தவறுகளைத் தடுக்க உதவலாம். பட்ஜெட்டுக்குள் இருப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.

 

  • நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவைக் கொண்ட ஒப்பந்ததாரர்களைத் தேர்ந்தெடுத்து, முடிவெடுப்பதற்கு முன் பல கட்டுமான செலவு விவரங்களைப் பெறுங்கள்.

     

  • உங்கள் குழுவுடன் உங்கள் பட்ஜெட்டை தெளிவாக விவாதித்து, உங்கள் நிதி வரம்புகளை அவர்கள் புரிந்துகொள்வதை உறுதிசெய்யவும்.

 

 

6) ஒரு தற்செயல் நிதியை உருவாக்குங்கள்.

 

நீங்கள் எவ்வளவு சிறப்பாக திட்டமிட்டாலும், எதிர்பாராத செலவுகள் நிச்சயமாக ஏற்படும். ஒரு தற்செயல் நிதியை வைத்திருப்பது உங்கள் பட்ஜெட்டை சீர்குலைக்காமல் இந்த செலவுகளை ஈடுகட்ட உதவும்.

 

  • எதிர்பாராத செலவுகளை ஈடுகட்ட, உங்கள் ஒட்டுமொத்த கட்டுமான பட்ஜெட்டில் 10-15% ஒதுக்குங்கள்.

     

  • அத்தியாவசியமற்ற மாற்றங்கள் அல்லது மேம்பாடுகளுக்காக தற்செயல் நிதியில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

 

 

7) உங்கள் பட்ஜெட் மற்றும் முன்னேற்றத்தை தவறாமல் மதிப்பாய்வு செய்யவும்.

 

கட்டுமானப் பணிகள் முன்னேறும்போது, ​​செலவுகளைக் கண்காணித்து, தேவைப்பட்டால் சரிசெய்யவும். எல்லாம் சரியான பாதையில் இருப்பதை உறுதிசெய்ய உங்கள் பட்ஜெட்டைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யவும்.

 

  • பட்ஜெட்டை மதிப்பாய்வு செய்து முன்னேற்றம் குறித்து விவாதிக்க உங்கள் கட்டுமானக் குழுவுடன் வாராந்திர ஆலோசனை நடத்துங்கள்.

     

  • எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டால் உங்கள் பட்ஜெட்டை சரிசெய்து, சாத்தியமான அதிகப்படியான செலவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையாக இருங்கள்.



ஒரு வீடு என்பது உங்கள் அடையாளம், அதைக் கட்டுவது சவாலானது. ஒரு வீட்டைக் கட்டுவதற்கான மறைமுக செலவுகளை அறிந்துகொள்வது சிறப்பாகத் திட்டமிடவும் நிதி அழுத்தத்தைத் தவிர்க்கவும் உதவும். நிலத்தை தயார் செய்வதில் இருந்து பயன்பாட்டு இணைப்புகள் வரை, ஒவ்வொரு படியிலும் கூடுதல் செலவுகள் சேர்ந்து கொண்டே போகலாம். இருப்பினும், கவனமாக திட்டமிடல், நம்பகமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் தரமான பொருட்கள் மூலம், இந்த செலவுகளை நீங்கள் திறம்பட நிர்வகிக்கலாம்.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. வீடு கட்டுவதில் மிகப்பெரிய செலவு என்ன?

மிகப்பெரிய செலவு பெரும்பாலும் கட்டுமானமே ஆகும், இதில் சிமென்ட் மற்றும் ஸ்டீல் போன்ற பொருட்கள் அடங்கும். தொழிலாளர் செலவுகளும் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க பகுதியை உருவாக்குகின்றன.

 

2. வீடு கட்டுவதற்கு என்னென்ன அனுமதிகள் அவசியம்?

உங்களுக்கு பொதுவாக கட்டிட அனுமதிகள், மண்டல அனுமதிகள் மற்றும் பாதுகாப்பு ஒப்புதல்கள் தேவைப்படும். தேவைகள் இடத்திற்கு இடம் மாறுபடும், எனவே உங்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் ஆலோசிக்கவும்.

 

3. மறைமுக செலவுகள் என்ன?

மறைமுக செலவுகளில் நில தயாரிப்பு, பயன்பாட்டு இணைப்புகள், கஸ்டமைசேஷன், அனுமதிகள் மற்றும் லேண்ட்ஸ்கேப்பிங் அமைத்தல் ஆகியவை அடங்கும். இவை மொத்த பட்ஜெட்டை கணிசமாக அதிகரிக்கும்.

 

4. கட்டுமானத்தின் போது எதிர்பாராத செலவுகளை எவ்வாறு குறைப்பது?

முழுமையாகத் திட்டமிடுங்கள், தரமான பொருட்களைத் தேர்வு செய்யுங்கள், அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரர்களை வேலைக்கு அமர்த்துங்கள். எதிர்பாராத செலவுகளுக்கு ஒரு தற்காலிக நிதியை ஒதுக்குங்கள்.

 

5. கட்டுமானத்தில் எதிர்பாராத செலவுகள் என்ன?

எதிர்பாராத செலவுகளில் நிலையற்ற மண்ணை சரிசெய்தல், ஏற்ற இறக்கமான பொருள் விலைகள் மற்றும் கூடுதல் ஆய்வுகள் ஆகியவை அடங்கும். இதுபோன்ற செலவுகளுக்கு தயாராக இருப்பது பட்ஜெட்டிலிருந்து விடுபடுவதிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.


தொடர்புடைய

கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....