சாரக்கட்டு
சாரக்கட்டு என்றால் என்ன?
சாரக்கட்டு அல்லது மேடையமைத்தல் என அழைக்கப்படும் இது, கட்டுமானம் அல்லது பழுதுபார்ப்பு பணிகளின் போது தொழிலாளர்கள் மற்றும் பொருட்களுக்கு உதவியாகப் பயன்படும் ஒரு தற்காலிக அமைப்பாகும். இது உயரமான பகுதிகளை அடைய பாதுகாப்பான மற்றும் நிலையான தளத்தை வழங்குகிறது.
பொதுவாக ஸ்டீல் அல்லது அலுமினியத்தால் ஆன சாரக்கட்டு, கட்டிட கட்டுமானத்தில், குறிப்பாக பிளாஸ்டரிங், பெயிண்டிங் அல்லது ரூஃபிங் போன்ற பணிகளுக்கு பாதுகாப்பையும் செயல்திறனையும் உறுதி செய்கிறது. திட்டங்களை பாதுகாப்பாகவும் திறமையாகவும் மேற்கொள்ள வீடு கட்டுபவர்களுக்கு சாரக்கட்டு பற்றிய புரிதல் அவசியம்.