தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்சுவர் வாட்டர்ப்ரூஃபிங் மற்றும் அதன் வகைகள்: ஒரு முழுமையான வழிகாட்டி

செலவு அதிகமான பழுதுபார்த்தலைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான வாழும் சூழலைப் பராமரிக்கவும் உங்களின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்களில் வாட்டர்ப்ரூஃபிங் செய்வது முக்கியமாகும். சுவர்களில் உள்ள ஈரப்பதம், கட்டிடத்தின் கட்டமைப்பைச் சேதப்படுத்தி, பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம், இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டின் மதிப்பையும் குறைக்கிறது. வெவ்வேறு தேவைகள் மற்றும் பட்ஜெட்களுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பல வகையான சுவர் வாட்டர்ப்ரூஃபிங் முறைகள் உள்ளன. இந்த ப்ளாகில், உங்கள் சுவர்களுக்கான மிகவும் பிரபலமான மற்றும் திறன்மிக்க சில வாட்டர்ப்ரூஃபிங்க் முறைகள் குறித்து நாம் கலந்துரையாடுவோம்.

Share:


செலவு அதிகமான பழுதுபார்த்தலைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான வாழும் சூழலைப் பராமரிக்கவும் உங்களின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்களில் வாட்டர்ப்ரூஃபிங் செய்வது முக்கியமாகும். சுவர்களில் உள்ள ஈரப்பதம், கட்டிடத்தின் கட்டமைப்பைச் சேதப்படுத்தி, பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம், இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டின் மதிப்பையும் குறைக்கிறது. வெவ்வேறு தேவைகள் மற்றும் பட்ஜெட்களுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பல வகையான சுவர் வாட்டர்ப்ரூஃபிங் முறைகள் உள்ளன. இந்த ப்ளாகில், உங்கள் சுவர்களுக்கான மிகவும் பிரபலமான மற்றும் திறன்மிக்க சில வாட்டர்ப்ரூஃபிங்க் முறைகள் குறித்து நாம் கலந்துரையாடுவோம்.சுவர் வாட்டர்ப்ரூஃபிங் என்றால் என்ன?

வாட்டர்ப்ரூஃபிங் என்பது ஒரு கட்டிடத்தின் சுவர்களில் தண்ணீர் ஊடுருவாத வகையில் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தனித்துவமான நுட்பமாகும். தண்ணீர் உள்ளே வராமல் தடுக்கும் வாட்டர்ப்ரூஃப் அரணை உருவாக்குவதற்காக பல்வேறு வாட்டர்ப்ரூஃபிங் மெட்டீரியல்கள் மற்றும் முறைகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. கன மழை, அதிகமான ஈரப்பதம் அல்லது மற்ற ஈரப்பத காரணிகள் அதிகமாக உள்ள இடங்களில் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மிகவும் முக்கியமானதாகும்.

 

வெளிப்புற மற்றும் உட்புற சுவர்களில் வாட்டர்ப்ரூஃபிங்கை பூசலாம், மேலும் இது நீர் கசிவு, ஈரத்தன்மை, பூஞ்சை வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு சேதம் போன்ற தண்ணீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எதிராக திறன்மிக்க பாதுகாப்பை வழங்குகிறது. சுவர்களை சீல் செய்து, தண்ணீர் ஊடுருவலைத் தடுப்பதன் மூலம், சுவர்களில் வாட்டர்ப்ரூஃபிங் செய்வது கட்டிடத்தின் உறுதியைப் பராமரிக்க உதவி, கட்டமைப்பின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.


சுவர் வாட்டர்ப்ரூஃபிங்கின் நன்மைகள்1. தண்ணீரினால் ஏற்படும் சேதத்திற்கு எதிரான பாதுகாப்பு

சுவர் வாட்டர்ப்ரூஃபிங்கின் முதன்மையான பலன், தண்ணீர் சம்பந்தப்பட்ட சேதத்திலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்கும் திறன் ஆகும். நீர்புகா அரணை உருவாக்குவதன் மூலம், இது சுவர்களுக்குள் தண்ணீர் கசிவதைத் தடுக்கிறது, இல்லையென்றால், இந்த நீர் கசிவு கட்டமைப்பு கூறுகளை அழுக மற்றும் சிதைய வழிவகுக்கக்கூடும். குறிப்பாகக் கன மழை அல்லது வெள்ள ஆபத்துள்ள இடங்களில் இந்த பாதுகாப்பு முக்கியமாகும்.

 

2. பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கிறது

"ஈரமான சுற்றுச்சூழல்கள் பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம், மேலும் இது உட்புற காற்றின் தரத்தைப் பாதித்து

உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக அமைகிறது. சுவர்களுக்கான வாட்டர்ப்ரூஃப் பூச்சு ஈரப்பதம் சேர்வதைத் தடுத்து, சுவர்கள் மற்றும் மற்ற மேற்பரப்புகளில் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கிறது."

 

3. மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு உறுதி

சுவர்களில் நீர் ஊடுருவும்போது, அது காலப்போக்கில் கட்டிடத்தின் கட்டமைப்பு உறுதியைப் பலவீனப்படுத்தக்கூடும். வாட்டர்ப்ரூஃபிங் சுவர்களுக்கு வலுவூட்டுகிறது, வெளிப்புற சக்திகளுக்கு எதிரான அவற்றின் திறனை அதிகரிக்கிறது மற்றும் கட்டமைப்பின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.

 

4. சிக்கனமான தீர்வு

சுவர் வாட்டர்ப்ரூஃபிங்கில் செய்யப்படும் ஆரம்ப முதலீடு குறிப்பிடத்தக்கதாக தோன்றினாலும், அவை நீண்ட காலத்திற்கான ஒரு சிக்கனமான தீர்வு என்று நிரூபிக்கிறது. நீர் சேதத்தைத் தடுப்பதன் மூலம், சொத்தின் உரிமையாளர் செலவு அதிகமான பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணியைத் தவிர்க்கலாம், இறுதியில் கட்டிடத்தின் ஆயுட்காலத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

 

5. மேம்படுத்தப்பட்ட மின்சார சேமிப்பு

கட்டிடத்தின் மின்சார சேமிப்பிலும் வாட்டர்ப்ரூஃபிங் பங்கு வகிக்கிறது. சுவர்களில் உள்ள விரிசல்கள் மற்றும் இடைவெளிகளை மூடுவதன் மூலம், காற்று கசிவதைக் குறைத்து, வெப்பம் உள்ளே வருவதைத் தடுக்கிறது, மிகவும் திறன்மிக்க வெப்ப மற்றும் குளிர்ச்சி அமைப்புகளுக்கு வழிவகுக்கிறது.

 

6. சொத்தின் மதிப்பை அதிகரிக்கிறது

முறையான வாட்டர்ப்ரூஃபிங்குடன் நன்கு பராமரிக்கப்பட்ட சொத்து, அதை வாங்கக்கூடிய சாத்தியமுள்ளவர்களை அதிகமாக ஈர்க்கும். இது கட்டிடத்திற்கு மதிப்பு சேர்க்கிறது மற்றும் நீங்கள் சந்தையில் சொத்தை விற்க முடிவு செய்தால் இது குறிப்பிடத்தக்க விற்பனை புள்ளியாக இருக்கும்.

 

சுவர் வாட்டர்ப்ரூஃபிங் என்பது உங்களின் சொத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பான மற்றும் சௌகரியமான வாழும் அல்லது வேலை செய்யும் சுற்றுச்சூழலையும் உறுதி செய்கிறது. புது கட்டுமானமாக இருந்தாலும் சரி அல்லது ஏற்கனவே உள்ள கட்டிடமாக இருந்தாலும் சரி, வாட்டர்ப்ரூஃபிங் சுவர்களின் பலன்கள் ஆடம்பரத்தை விட இந்த பாதுகாப்பு நடவடிக்கை தான் முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


சுவர் வாட்டர்ப்ரூஃபிங்கின் வகைகள்

சுவர் வாட்டர்ப்ரூஃபிங் இரண்டு வகைப்படும்: வெளிப்புற மற்றும் உட்புற வாட்டர்ப்ரூஃபிங் ஒவ்வொரு வகையிலும் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் நிலைமைகளுக்கு உதவும் வெவ்வேறு முறைகள் மற்றும் மெட்டீரியல்கள் அடங்கும்.

 

 

1. வெளிப்புற சுவர் வாட்டர்ப்ரூஃபிங்வெளிப்புற சுவர்களில் செய்யப்படும் வாட்டர்ப்ரூஃபிங், வெளிப்புற ஈரப்பதத்தினால் ஏற்படும் சேதத்திலிருந்து கட்டிடங்களைப் பாதுகாப்பதற்கு முக்கியமானதாகும். வாட்டர்ப்ரூஃபிங் இரசாயனங்களின் பாதுகாப்பு லேயர், வெளிப்புற சுவர்களின் அழகிய தோற்றத்தைப் பராமரிக்க உதவுகிறது மற்றும் தண்ணீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது.

 

அ. சிமெண்ட் அடிப்படையிலான வாட்டர்ப்ரூஃபிங்இந்த முறையில் சிமெண்ட் அடிப்படையிலான வாட்டர்ப்ரூஃபிங் பொருட்கள் வெளிப்புற சுவர்களின் மீது நேரடியாகப் பூசப்படுகிறது. இந்த பொருட்கள், சுவர்களுக்குள் தண்ணீர் கசிவதைத் தடுக்கும் தடிமனான பாதுகாப்பு லேயரை உருவாக்குகிறது. சிமெண்ட் அடிப்படையிலான வாட்டர்ப்ரூஃபிங் நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் கடுமையான கால நிலைகளைத் தாங்குகிறது என்பதால், இது குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களின் வெளிப்புற சுவர்களுக்கு ஏற்றதாகிறது.

 

ஆ. லிக்விட் வாட்டர்ப்ரூஃபிங் மெம்பரேன்லிக்விட் வாட்டர்ப்ரூஃபிங் மெம்பரேன்கள் சுவர்களின் வெளிப்புற வாட்டர்ப்ரூஃபிங்கிற்கான பிரபலமான தேர்வாகும். அவை சுவர்களின் மீது தடையற்ற, நெகிழும், வாட்டர்ப்ரூஃப் அரணை உருவாக்கும் ஒரு திரவப் பூச்சாகப் பூசப்படுகிறது. இந்த மெம்பரேன்கள் பல்வேறு மேற்பரப்புகளில் எளிதாக ஒட்டிக்கொண்டு, விரிசல் இல்லாமல் கட்டமைப்பின் அசைவிற்கு உதவி, நீர் ஊடுருவலுக்கு எதிராக அற்புதமான நீண்ட கால பாதுகாப்பை வழங்குகிறது.

 

இ. லிக்விட் பிட்டுமினஸ் மெம்பரேன் வாட்டர்ப்ரூஃபிங்பிட்டுமினஸ் என்பது பல காலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறை ஆகும், இதில் வெளிப்புற சுவர்களை வாட்டர்ப்ரூஃப் செய்வதற்காக பிட்டுமென் அடிப்படையிலான மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் அதிகபட்ச திறனை உறுதி செய்வதற்காக, இவை பெரும்பாலும் பல லேயர்களாகப் பூசப்படுகின்றன. பிட்டுமினஸ் மெம்பரேன் UV கதிர்களை எதிர்க்கும் திறன் கொண்டவை மற்றும் வெப்பநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடியவை என்பதால், வெளிப்புற பயன்பாடுகளுக்கு ஏற்றவை ஆகிறது.

 

ஈ. மெம்பரேன் வாட்டர்ப்ரூஃபிங்

மெம்பரேன் வாட்டர்ப்ரூஃபிங் அமைப்புகளில் மாற்றியமைக்கப்பட்ட பிட்டுமென், PVC, அல்லது EPDM போன்ற மெட்டீரியல்களில் இருந்து செய்யப்பட்ட முன் தயாரிக்கப்பட்ட ஷீட்களைக் கொண்டுள்ளன. இந்த ஷீட்களை வெளிப்புற சுவர்களில் பயன்படுத்தி, நீர் ஊடுருவலுக்கு எதிரான தொடர்ச்சியான அரண் உருவாக்கப்படுகிறது. மெம்பரேன் வாட்டர்ப்ரூஃபிங் அதன் எளிதான இன்ஸ்டலேஷனுக்கு பெயர் போனவை ஆகும், மேலும் இது பொதுவாகத் தரை மட்டத்திற்கு கீழே உள்ள பகுதிகள் மற்றும் ஃபவுண்டேஷன் சுவர்களில் பயன்படுத்தப்படுகின்றன.

 

 

2. உட்புற சுவர் வாட்டர்ப்ரூஃபிங்உட்புற சுவர்களில் வாட்டர்ப்ரூஃபிங் செய்வது ஈரத்தன்மை மற்றும் தண்ணீர் ஊடுருவலிலிருந்து உட்புற பகுதிகளைப் பாதுகாக்க உதவுகிறது. வாட்டர்ப்ரூஃபிங் திரவத்தைப் பயன்படுத்தி உட்புறங்களைப் பாதுகாப்பது, சௌகரியமான மற்றும் ஆரோக்கியமான வாழும் சூழலை உறுதி செய்ய உதவுகிறது.

 

அ. பெயிண்ட் மற்றும் சீலண்ட்கள்வாட்டர்ப்ரூஃப் பெயிண்ட்கள் மற்றும் சீலண்ட்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுவர்களின் உட்புற வாட்டர்ப்ரூஃபிங்கைப் பெறலாம். வாழும் இடங்களில் ஈரப்பதம் நுழைவதைத் தடுக்கும் பாதுகாப்பு அரணை உருவாக்குவதற்காக இந்தத் தயாரிப்புகளை உட்புற சுவர்களில் பூசலாம். அவை குறிப்பிட்ட அளவுக்கு நீர் எதிர்ப்புத்திறனை வழங்கினாலும், அவை குளியலறைகள் மற்றும் சமயலறைகள் போன்ற குறைவாக தண்ணீர் படும் இடங்களுக்கு ஏற்றவை ஆகும்.

 

ஆ. வாட்டர்ப்ரூஃப் மெம்பரேன்கள்உட்புற வாட்டர்ப்ரூஃப் மெம்பரேன்கள் சுவர்களின் உட்பக்கங்களில் இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. அவை தண்ணீருக்கு எதிராக உறுதியான அரணை வழங்குகின்றன, குறிப்பாக, வெளிப்புற வாட்டர்ப்ரூஃபிங் போதாத இடங்களில் பயனுள்ளதாகும். உட்புறத்தில் உள்ள இடங்களில் தண்ணீர் நுழைவதைத் தடுப்பதற்காக அடித்தளங்கள் மற்றும் ஃபவுண்டேஷன் சுவர்களில் வாட்டர்ப்ரூஃப் மெம்பரேன்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

இ. டிரைனேஜ் போர்ட்கள்நீர் கசிவைத் திறம்படக் கையாள்வதற்காக உட்புற சுவர்களில் டிரைனேஜ் போர்ட்கள் இன்ஸ்டால் செய்யப்படும். இந்த போர்ட்கள் வடிகால் அமைப்பிற்கு தண்ணீரைத் திருப்பிவிடும் சேனல்களைக் கொண்டுள்ளன, இது சுவர்களில் தண்ணீர் சேராததை உறுதி செய்கிறது. டிரைனேஜ் போர்ட்கள் நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மற்ற உட்புற வாட்டர்ப்ரூஃபிங்குடன் சேர்ந்து நன்றாகச் செயல்படுகிறது.

 

ஈ. சிமெண்ட் பூச்சு

சிமெண்ட் பூச்சுகள் உட்புற சுவர்களில் நேரடியாகப் பூசப்படுகின்றன மற்றும் மேற்பரப்பை ஊடுருவிச் சென்று தண்ணீர் நுழைவதைத் தடுப்பதன் மூலம் வாட்டர்ப்ரூஃப் அரணை உருவாக்குகின்றன. அவை ஈரப்பதத்திற்கு எதிராக ஒட்டுமொத்தப் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக, பெரும்பாலும் மற்ற வாட்டர்ப்ரூஃபிங் முறைகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன.இறுதியில், சுவர்களின் வாட்டர்ப்ரூஃபிங் என்பது உங்கள் வீடு அல்லது கட்டிடத்தின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நீண்ட ஆயுளை உறுதி செய்வதில் முக்கியமான பங்கு வகிக்கும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை ஆகும். சுவர்களில் தண்ணீர் ஊடுருவலால் ஏற்படும் சேதம், ஒட்டுமொத்த கட்டமைப்பின் உறுதியைச் சமரசம் செய்யக்கூடிய கட்டமைப்பு சீர்குலைவு, பூஞ்சை வளர்ச்சி மற்றும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். பொருத்தமான சுவர் வாட்டர்ப்ரூஃபிங் முறைகள் அல்லது சுவர்களுக்கான வாட்டர்ப்ரூஃப் இரசாயனத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் சொத்தைத் தண்ணீர் சம்பந்தப்பட்ட சேதத்திலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமாக வாழும் சூழலைப் பராமரித்து, நீண்ட காலத்திற்கு பழுது பார்ப்பதற்காக ஆகும் அதிகமான செலவை மிச்சப்படுத்தலாம்.அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. ஈரத்தன்மை என்பது ஒரு தீவிரமானப் பிரச்சனையா?

பூஞ்சை வளர்ச்சி, கட்டமைப்பு அழுகல் மற்றும் மோசமான உட்புற காற்றின் தரம் காரணமாக ஏற்படும் உடல் ஆரோக்கியம் சார்ந்த ஆபத்துகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், ஈரத்தன்மை என்பது ஒரு தீவிரமான பிரச்சனை ஆகும். சரி செய்யாமல் விடப்பட்டால், ஈரமான சுவர்கள் கட்டிடத்தின் கட்டமைப்பில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தி, வாழ்வதற்கு ஏற்ற அதன் தன்மையில் சமரசம் செய்யப்படுகிறது.

 

2. ஈரத்தன்மை உள்ள சுவரை உங்களால் வாட்டர்ப்ரூஃப் செய்ய முடியுமா?

பொதுவாக, ஈரத்தன்மை உள்ள சுவரை வாட்டர்ப்ரூஃபிங் செய்யப் பரிந்துரைக்கப்படுவதில்லை. எந்தவொரு வாட்டர்ப்ரூஃபிங் தீர்வையும் பயன்படுத்துவதற்கு முன், ஈரத்தன்மைக்கான அடிப்படைக் காரணத்தைத் சரி செய்வது அவசியமாகும், அதில் கசிவுகளைச் சரி செய்வது, நீர் வெளியேற்றத்தை மேம்படுத்துவது அல்லது கண்டென்சேஷன் பிரச்சனைகளைத் தீர்ப்பது உள்ளிட்டவை அடங்கும். சுவர் உலர்ந்து, மூலக்காரணம் சரி செய்யப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் ஈரத்தன்மை ஏற்படுவதைத் தடுக்க வாட்டர்ப்ரூஃபிங் நடவடிக்கைகளைப் பயன்படுத்தலாம்.

 

3. சுவர்களில் எது ஈரத்தன்மையை ஏற்படுத்துகிறது?

ரூஃப்களிலிருந்து தண்ணீர் கசிவு, தவறான ப்ளம்பிங், நிலத்திலிருந்து எழும் ஈரத்தன்மை, காற்றோட்டம் போதாமை மற்றும் வெப்பநிலை மற்றும் ஈரப்பத வேறுபாடுகள் காரணமாக ஏற்படும் கண்டென்சேஷன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் சுவர்களில் ஈரத்தன்மை ஏற்படுகிறது.

 

4. ஈரத்தன்மையின் அறிகுறிகள் என்ன?

தண்ணீர் கறைகள், பெயிண்ட் அல்லது வால்பேப்பர் உரிவது, கெட்டுப்போன நாற்றம், கண்ணுக்கு தெரியும் வகையிலான பூஞ்சை வளர்ச்சி, மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஈரத்தன்மை அல்லது ஈரப்பதம் உள்ளிட்டவைச் சுவர்களில் ஈரத்தன்மையின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

 

5. ஜன்னல்களைத் திறந்து வைப்பது ஈரத்தன்மையைக் குறைக்குமா?

ஜன்னல்களைத் திறப்பது, உள்ளே உள்ள காற்று வெளியேறி, புதிய காற்று உள்ளே உதவி, காற்றோட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் ஈரத்தன்மையைக் குறைக்க உதவலாம். குளியலறைகள் மற்றும் சமயலறைகள் போன்ற, ஈரத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் முறையான காற்றோட்டம் அவசியமாகும்.


தொடர்புடைய கட்டுரைகள்
பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்

வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....