Share:
Share:
மைக்ரோ கான்கிரீட் என்பது சிமெண்ட் அடிப்படையிலான ஒரு மெல்லிய அடுக்கு ஆகும், இது விரும்பிய வடிவம் மற்றும் அலங்கார பூச்சுக்கு பல்வேறு தளங்களில் பயன்படுத்தப்படலாம். இது 2 மிமீ முதல் 3 மிமீ வரையிலான தடிமன் கொண்ட மெல்லிய அடுக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.
மைக்ரோ கான்கிரீட் சிமெண்ட், வாட்டர் பேஸ்டு ரெசின், அடிட்டிவ்ஸ், மினரல் பிக்மென்ட்ஸ் மற்றும் பாலிமர்கள் ஆகியவற்றால் ஆனது மற்றும் கிடைமட்ட மற்றும் செங்குத்து பரப்புகளில் பயன்படுத்தப்படலாம். இது வீடுகள் அல்லது ஓய்வு விடுதிகள், உணவகங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், தொழில்துறை கட்டிடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் போன்ற வணிக சொத்துக்களை புதுப்பிக்க பயன்படுத்தப்படலாம்.
இதன் பரவலான பயன்பாடுகள் காரணமாக, அல்ட்ராடெக் மைக்ரோ கான்ங்கிரீட் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பழங்கால அல்லது நவீன கால தோற்றத்தை அடைய விரும்பும் எவருக்கும் பல்துறைக்கேற்ற மற்றும் சிறந்த விருப்ப தேர்வாக உள்ளது. மைக்ரோ கான்கிரீட் சிமென்ட் கலவையைப் பயன்படுத்தும்போது அத்தளத்தின் மேற்பரப்பு ஆயுளை உறுதி செய்யும் ஒரு பாதுகாப்பு பூச்சாக செயல்படுகிறது.
மைக்ரோ கான்கிரீட் சமையலறை தளங்கள் முதல் நீச்சல் குளங்கள் வரை பயன்படுகிறது. இது மிகவும் நீடித்துழைக்கும் தன்மை கொண்ட நம்பகமான விருப்பத் தேர்வாகும், இது ஒவ்வொரு தளத்திலும் ஒரு நிலையான மற்றும் குறைபாடற்ற பூச்சு கொண்டு பல பரப்புகளில் பயன்படுத்தப்படலாம்.
இது ஏற்கனவே கலக்கப்பட்டு பேக் செய்து கிடைப்பதே மைக்ரோ கான்கிரீட் பயன்பாடு அதிகரிப்பதற்கான காரணமாகும். அதாவது, வழக்கமான கான்கிரீட் போலல்லாமல், மைக்ரோ கான்கிரீட்டிற்கு எந்த தொழில்முறை கலவை கருவிகள் அல்லது கருவிகளின் பயன்பாடு தேவையில்லை. மைக்ரோ கான்கிரீட்டை எந்தவொரு தனிநபராலும் பயன்படுத்த முடியும் (கான்கிரீட் இடும் திறன் இல்லாதவர் கூட) மற்றும் அதன் பயன்பாட்டின் மூலம் மென்மையான மற்றும் மேம்பட்ட தோற்றத்தை அடைய முடியும்.
மைக்ரோ கான்கிரீட் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இதனை பல்வேறு மேற்பரப்புகளில் பயன்படுத்தலாம் மற்றும் பயன்படுத்தவும் எளிதானது. ஆனால் அந்த காரணிகள் மிகவும் சாதகமாக இருந்தாலும், பலரும் தேர்ந்தெடுக்கக் கூடிய பொருளாக இதனை ஆக்குவது அந்த பலன்கள் மட்டுமல்ல.
இதன் முக்கியமான நன்மை என்னவென்றால், இது பாரம்பரிய கான்கிரீட்டை விட குறைவான தண்ணீரைப் பயன்படுத்துகிறது. இதன் குறைவான நீர் தேவை காரணமாக, இது மிகவும் குறைந்த செலவில் பயன்படுத்தப்படலாம், அதே நேரத்தில் கான்கிரீட் விரிசல் அல்லது நாள்ப்பட்ட கான்கிரீட் கட்டமைப்புகளை சரிசெய்வதில் சிறப்பாக வேலை செய்கிறது.
மைக்ரோ கான்கிரீட்டின் கூடுதல் நன்மை என்னவென்றால், அது விரைவாக காய்ந்துவிடும் மற்றும் மைக்ரோ கான்கிரீட் பயன்படுத்தப்பட்ட தளங்களை எந்த இடையூறும் இல்லாமல் பயன்படுத்தலாம். மைக்ரோ கான்கிரீட்டின் இந்த பலன்களால், விரைவாக காய்ந்துவிடும் நேரத்தைக் கொண்டிருப்பதால், பயன்படுத்தப்பட்ட பகுதியை ஒரு நாளுக்குள் முழுமையாகச் செயல்பாட்டிற்குரிய பகுதியாக்கிவிடுகிறது.
மேற்பரப்பு காய்ந்து ஈரமில்லாமல், கிரீஸ் அல்லது அழுக்கு இல்லாமல் இருக்கும்போது மட்டுமே மைக்ரோ கான்கிரீட்டைப் பயன்படுத்த முடியும். அதனால்தான், கான்கிரீட் அல்லது ஸ்டீல் என எந்தவொரு மேற்பரப்பிலும் இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு, மேற்பரப்பு சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்வது அவசியம். மைக்ரோ கான்கிரீட்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு அரிப்புக்கு உள்ளாகும் உலோகப் பரப்புகளை சுத்தம் செய்து பூச வேண்டும்.
மைக்ரோ கான்கிரீட் ஒரு சிறந்த தேர்வாக இருப்பதற்கு ஒரு காரணம், வழக்கமான கான்கிரீட்டை விட மைக்ரோ கான்கிரீட் கலப்பது மிகவும் எளிது. தேவையான அளவின் அடிப்படையில், கலவையை கையால் அல்லது கலவை பாத்திரத்தில் கலக்கலாம்.
மைக்ரோ கான்கிரீட்டிற்கு குறைந்த நீரே போதுமானதாக இருப்பதால், அதன் கலவையை தயாரிக்கும் போது மைக்ரோ கான்கிரீட்டிற்கு 1:8 என்ற விகிதத்தில் தண்ணீர் அளவை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்ணீர் மற்றும் மைக்ரோ கான்க்ரீட் ஒன்றாகச் சேர்க்கப்பட்டவுடன், அவற்றைப் படிப்படியாகவும், தொடர்ந்தும் கிளற வேண்டும்..
மேற்பரப்பு எதுவாக இருந்தாலும், கலந்தவுடன் மைக்ரோ கான்கிரீட் ஊற்றப்பட வேண்டும். அதிக நேரம் காத்திருந்தால் கலவை காய்ந்துவிடும் என்பதால், உடனடியாக ஊற்றி விட வேண்டும். பயன்பாட்டின் போது சிறந்த நிலைத்தன்மையையும் பரவலையும் அடைய கலவை விரைவாக ஊற்றப்பட வேண்டும். கலவையை ஊற்றிய பிறகு, கலவையை காயவிடுவதற்கு முன், கலவையை சமன் செய்து சீராக்குவதற்கு பொருத்தமான கருவிகளைப் பயன்படுத்தலாம்.
மைக்ரோ கான்கிரீட் கலவைக்கு கனமான இயந்திரங்கள் தேவையில்லை, ஏனெனில் இதில் ஒன்றோடு கலக்கக்கூடிய பொருட்கள் இருக்கும் மற்றும் இறுக்கமடைய செய்ய தேவையில்லை.
இது குறைந்த ஊடுருவலைக் கொண்டுள்ளது என்பதால் உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் பயன்படுத்தப்படலாம்.
இதில் குளோரைடுகள் இல்லை என்பதால் மிகவும் நீடித்துழைக்கும்.
மைக்ரோ கான்கிரீட் பரப்புகளில் விரிசல் ஏற்படாது, ஏனெனில் இவை சுருங்காது.
மைக்ரோ கான்கிரீட் பட்ஜெட்டிலேயே அடங்க கூடியது, ஏனெனில் இதற்கு வழக்கமான கான்கிரீட்டை விட மிகவும் குறைவாகவே செலவாகும்.
மனிதத் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை நீக்கி, முன்கூட்டியே தொகுக்கப்பட்ட கலவையாக வருவதால், கான்கிரீட்டைக் கலக்கவோ அல்லது இடுவதில் நீங்கள் திறமையானவராக இருக்க வேண்டியதில்லை.
இதையும் படியுங்கள்: ஃப்ளோர் ஸ்க்ரீடிங் பற்றிய வழிகாட்டி
1. அடித்தளத்தில் வீப் ஹோல்கள் தேவையா?
உங்கள் அடித்தளம் CMU பிளாக்ஸ், சிண்டர் பிளாக்ஸ் அல்லது கான்கிரீட் பிளாக்ஸ் என அழைக்கப்படும் கான்கிரீட் மேஷனரி யூனிட்களால் செய்யப்பட்டிருந்தால், உங்கள் வாட்டர்ப்ரூஃபிங் அமைப்பில் வீப் ஹோல்ஸ் இருக்க வேண்டும். இந்த அனைத்து அழுத்தத்தின் விளைவாக, உங்கள் அடித்தளத்தில் நீர் ஊடுருவி சேதமடையலாம்.
2. வீப் ஹோல்ஸை அடைத்து வைக்கலாமா?
எந்த சூழ்நிலையிலும், வீப் ஹோல்ஸ்களை மூடாதீர்கள். செங்கலுக்குப் பின்னால் நீர் தேங்குவதைத் தடுக்கும் டிரைனேஜ் அமைப்பில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நீர், செல்லும் பாதையில் பயன்பாட்டிற்கு பதப்படுத்தப்படாத மரக்கட்டைகளை தீவிரமாக அழுகச் செய்து, அச்சு வளர்ந்து, இறுதியில் உங்கள் வீட்டில் கட்டமைப்புச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
3. வீப் ஹோல்ஸின் நோக்கம் என்ன?
மேஷனரி டிசைன் மேனுவலின்படி, வீப் ஹோல்ஸ் என்பது "நீர் மட்டத்தில் மோட்டார் மூட்டுகளில் ஈரப்பதம் வெளியேற அனுமதிக்கும் திறப்புகள் அல்லது நீர் வெளியேற அனுமதிக்கும் சுவர்களில் திறப்புகள்" எனக் கூறலாம்.
1) மைக்ரோ கான்கிரீட்டை எந்தப் தளத்தில் இடலாம்?
மைக்ரோ கான்கிரீட்டை கிடைமட்ட மற்றும் செங்குத்து தளங்களில் உட்புறம் அல்லது வெளியில் பயன்படுத்தலாம். இது பல இடங்களில் பயன்படுத்துவதற்கேற்ற அலங்கார பூச்சு ஆகும், இது சமையலறைகள், படிக்கட்டுகள், குளியலறைகள் மற்றும் நீச்சல் குளங்களுக்கு கூட உதவுகிறது. ஆனால் மர பரப்புகளில் இதைப் பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
2) மைக்ரோ கான்கிரீட் வாட்டர்ப்ரூஃப் கொண்டதா?
மைக்ரோ கான்கிரீட் வாட்டர்ப்ரூஃப் கிடையாது ஆனால் நீர் எதிர்ப்புத்திறன் கொண்டது. இதனுடன் சீலன்ட் போன்ற பொருள் பயன்படுத்தப்படும் போது நீர் எதிர்ப்புத்திறனை அடைய முடியும். சீலன்ட் போன்ற பொருள் மைக்ரோ கான்கிரீட்டின் நீர்-எதிர்ப்பு பண்புகளை மேம்படுத்துகிறது மற்றும் நீடித்துழைக்கச் செய்கிறது.
3) மைக்ரோ கான்கிரீட் அடுக்கின் சரியான அளவு தடிமன் என்ன?
மைக்ரோ கான்கிரீட் ஒரு அலங்கார பூச்சு என்பதால் இது பொதுவாக மெல்லிய அடுக்குகளாகவே பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோ கான்கிரீட் லேயரின் சிறந்த தடிமன் என்பது 2 மிமீ முதல் 3 மிமீ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சுருக்கமாக, மைக்ரோ கான்கிரீட் அதன் பல்துறை, ஆயுள் மற்றும் வடிவமைப்பு நெகிழ்வுத்தன்மை காரணமாக அற்புதமான மெட்டீரியலாக உள்ளது. உங்கள் தளங்கள், சுவர்கள் அல்லது ஃபர்னிச்சர்களில் நேர்த்தியான, நவீன டிசைன்களை சேர்க்க விரும்பினாலும் அல்லது தனித்துவமான மற்றும் கலை வடிவமைப்பை உருவாக்க விரும்பினாலும், மைக்ரோ கான்கிரீட் சிறந்த தேர்வாகும். எனவே, ஃபங்க்ஸ்னலான மற்றும் ஸ்டைலான ஒரு மெட்டீரியலை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் அடுத்த வடிவமைப்பு திட்டத்திற்கு மைக்ரோ கான்கிரீட்டைப் பயன்படுத்துவதற்கு மறவாதீர்கள்!