ஒரு திறன்மிக்க மழைநீர் சேமிப்பு அமைப்பிற்கான படிநிலைகள்

ஆகஸ்ட் 25, 2020

நிலத்தடி நீர் உங்கள் வீட்டிற்கான தண்ணீரின் இயற்கை ஆதாரமாகும். இருப்பினும், இதை அதிகமாகப் பயன்படுத்தினால் காலப்போக்கில் அது குறைந்துவிடும். நிலத்தடி நீரை மீண்டும் நிரம்பச் செய்வதற்கான எளிதான முறை, மழைநீர் ஓட்டத்தைச் சேமிப்பதாகும், மேலும், இதைச் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று மழைநீர் சேமிப்பு குழியை அமைப்பதாகும்.

மழைநீர் சேமிப்பு தொட்டியை நீங்கள் எவ்வாறு கட்டுவது என்பதற்கான முறை இதோ.

  • ஒன்று முதல் இரண்டு மீட்டர்கள் அகலம் மற்றும் இரண்டு முதல் மூன்று மீட்டர்கள் ஆழத்தில் ஒரு குழியைத் தோண்டத் தொடங்கவும்.
  • முதலில் குழியைக் கற்களால் நிரப்பவும், பெருஞ்சல்லிகள் மற்றும் இறுதியாக மணலைக் கொண்டு நிரப்பவும். இந்து வழிந்தோடும் மழைநீரைச் சேகரித்து, குழி வழியாக அதை வடிகட்டும்.
  • மேல் பக்கத்தை ஒரு வலையைக் கொண்டு மூடுவதன் மூலம் குழியை நீங்கள் பாதுகாக்கலாம். தண்ணீர் எளிதாக அதன் வழியே வழிந்தோடுவதற்காக அதைத் தவறாமல் சுத்தம் செய்வதை உறுதி செய்யவும்.
  • மழைநீர் சேகரிக்கப்படும் இடங்களில், மழைநீரை மழைநீர் சேகரிப்பு குழிக்குள் செலுத்த குழாய்களைப் பயன்படுத்தவும். நீங்கள் இந்தத் தண்ணீரை வீட்டுத் தேவைகளுக்காகவும் சேகரித்துப் பயன்படுத்தலாம்.

மழைநீர் சேமிப்பு குழி மூலம் மழைநீரைச் சேகரிக்கும் இந்த நுட்பம் உங்களின் மதிப்புமிக்க நிலத்தடி நீர் இருப்பை மீண்டும் நிரப்ப உங்களுக்கு உதவும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்