ஐ பீமின் பயன்கள்
கட்டுமானம் மற்றும் பிற வேலைகளில் ஐ பீமிற்கு பல பயன்கள் உள்ளன.
1. கட்டமைப்பு ஆதரவு(ஸ்ட்ரக்சுரல் சப்போர்ட்): கூரைகள் மற்றும் தரைகளைத் தாங்குவதற்காக ஐ பீம்கள் முதன்மையாக கட்டிட சட்டங்களில் செங்குத்து ஆதரவுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
2. பாலங்கள்: அவை பாலக் கட்டுமானத்திற்குத் தேவையான வலிமையையும் நிலைத்தன்மையையும் வழங்கி, பாதுகாப்பான போக்குவரத்துக்கு உதவுகின்றன.
3. ரயில்வே ட்ராக்ஸ்: ரயில்வே தடங்கள் மற்றும் ஆதரவுகளின் கட்டுமானத்தில் ஐ-பீம்கள் பயன்படுத்தப்பட்டு, பாதுகாப்பையும் நீடித்த உழைப்பையும் உறுதி செய்கின்றன.
4. கனரக இயந்திர தளங்கள் (ஹெவி மெஷினரி பேஸ்): அவற்றின் வலிமை மற்றும் கணிசமான எடையைத் தாங்கும் திறன் காரணமாக அவை பெரும்பாலும் கனரக இயந்திரங்களுக்கான தளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
5. முன்னரே உருவாக்கப்படும் கட்டிடங்கள்: ஐ-பீம்கள் பொதுவாக முன்னரே உருவாக்கப்படும் கட்டிட அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டு, விரைவான மற்றும் திறன்மிக்க கட்டுமானத்தை அனுமதிக்கிறது.
உங்கள் வீட்டுக் கட்டுமானத்திற்கு ஐ-பீம்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
வலிமை-எடை விகிதம்: ஐ பீம்கள் சிறந்த வலிமை-எடை விகிதத்தை வழங்கி, அதிக எடையின்றி உறுதியான கட்டமைப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது.
பல்பயன் (வெர்சடிலிட்டி): அவற்றை பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தலாம் என்பதால், வெவ்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
செலவு குறைந்தவை: ஐ பீம்களைப் பயன்படுத்துவது பொருள் செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில் நம்பகமான கட்டமைப்பு ஆதரவை வழங்குகிறது.
எளிய நிறுவல்: பாரம்பரியமான திட பீம்களுடன் ஒப்பிடும்போது ஐ பீம்களைக் கையாளுவதும் நிறுவுவதும் எளிதானது. எனவே, இது கட்டுமான செயல்முறையை விரைவுபடுத்துகிறது.
நீடித்த உழைப்பு (லாங்கெவிட்டி): சரியான பராமரிப்பு இருந்தால், ஐ பீம்கள் நீண்ட கால நீடித்த உழைப்பை வழங்கி, உங்கள் வீடு பல ஆண்டுகளாக பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
ஐ-பீம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வதன் மூலம், உங்கள் கட்டிட வடிவமைப்பின் கட்டுமானத்தில் ஐ பீமைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும். இது கட்டமைப்பு ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதோடு தனி வீட்டுக் கட்டுபவர்களுக்கு மன அமைதியையும் அளிக்கும்.