எச்விஏசி அமைப்பு என்றால் என்ன?
ஒரு எச்விஏசி அமைப்பு என்பது ஒரு முழுமையான வீட்டு வசதி அமைப்பு ஆகும். இது உங்கள் வீட்டிற்கு வெப்பமூட்டவும் குளிரூட்டவும் செய்யும். அதே சமயம், உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்தி ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்தும். பல வகையான எச்விஏசி அமைப்புகள் உள்ளன. அவற்றில் ஏர் கண்டிஷனர்கள், வெப்ப பம்புகள், ஏர் ஹேண்டலர்கள், ஃபர்னேஸ்கள், ஏர் கிளீனர்கள், ஹ்யூமிடிஃபையர்கள் மற்றும் டீஹ்யூமிடிஃபையர்கள் போன்ற குறிப்பிட்ட கூறுகள் இருக்கலாம்.
எச்விஏசி அமைப்பை உருவாக்கும் கூறுகள் யாவை?
ஒரு முழுமையான எச்விஏசி அமைப்பானது ஒன்றுக்கும் மேற்பட்ட கூறுகளை உள்ளடக்கியது. உங்களுக்குத் தேவையான வீட்டு வசதியை வழங்குவதற்கு ஒன்றாக இணைந்து செயல்படும் பல அமைப்புகள் மற்றும் பாகங்களை இது கொண்டுள்ளது.
எச்விஏசி அமைப்பின் கூறுகள்:
ஏர் கண்டிஷனர்
ஹீட் பம்ப்
ஃபர்னேஸ்(பர்னஸ்)
ஏர் ஹேண்ட்லர்
ஹ்யூமிடிஃபையர்கள்
டீஹ்யூமிடிஃபையர்கள்
ஏர் கிளீனர்கள்
உங்கள் வீட்டிற்கான சரியான எச்விஏசி அமைப்பைத் தேர்ந்தெடுத்தல்:
வீடு கட்டுபவர்களுக்கு, சரியான எச்விஏசி அமைப்பைத் தேர்ந்தெடுப்பது ஆற்றல் திறன் மற்றும் சௌகரியத்தை உறுதிப்படுத்த மிகவும் முக்கியமாக உள்ளது. இந்த காரணிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்:
அளவு மற்றும் செயல்திறன்: ஆற்றல் பயன்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்த, எச்விஏசி அமைப்பு உங்கள் வீட்டிற்கு ஏற்ற அளவில் இருப்பதை உறுதி செய்யவும்.
ஆற்றல் சேமிப்பு(எனர்ஜி சேவிங்ஸ்): மின்சார கட்டணங்களையும் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் குறைக்க அதிக ஆற்றல் திறன் மதிப்பீடுகளைக் கொண்ட அமைப்புகளைத் தேடுங்கள்.
உள்ளூர் காலநிலை(லோகல் கிளைமேட்): உங்கள் பகுதியில் உள்ள காலநிலைக்கு ஏற்றதாக இருந்து, ஆண்டு முழுவதும் பயனுள்ள வெப்பத்தையும் குளிர்ச்சியையும் வழங்கும் அமைப்பைத் தேர்ந்தெடுங்கள்.
பராமரிப்பு தேவைகள்: நீண்டகால செயல்திறன் மற்றும் நீடித்த உழைப்பை உறுதிசெய்ய, குறைந்த பராமரிப்பு தேவைகள் மற்றும் நம்பகமான சேவை விருப்பங்களைக் கொண்ட அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
உட்புற காற்றின் தரம்(இன்டோர் ஏர் குவாலிட்டி): உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை ஊக்குவிக்கும் ஏர் கிளீனர்கள் மற்றும் ஹ்யூமிடிஃபையர்கள் அல்லது டீஹ்யூமிடிஃபையர்களில் முதலீடு செய்யுங்கள்.
சரியான எச்விஏசி அமைப்பைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வீட்டின் சௌகரியத்திலும் ஆற்றல் திறனிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவதால், இது வீட்டுக் கட்டுமானத்தில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.