Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence

சேதமடைந்த சாலைகள்

நீண்டகாலப் பிரச்சினை

விரைவான நகரமயமாக்கலின் விளைவாக, 35% இந்தியர்கள் இப்போது நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர் மற்றும் முன் எப்போதையும் விட நகரச் சாலைகளில் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். உலகின் 4 வது பெரிய வாகன சந்தையை இந்தியா கொண்டுள்ளது என்ற உண்மையுடன் இணைத்துப் பார்க்கும்போது, நமது சாலைகளில் வரும் ஆண்டுகளில் வாகனங்களால் அதிக நெரிசல் ஏற்படும். இது நமது சாலைகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக விரிசல் மற்றும் ஆபத்தான குழிகள் ஏற்படுகின்றன. உண்மையில், கடந்த நான்கு ஆண்டுகளில், குழி தொடர்பான விபத்துக்களால் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த சிக்கல்கள் நீடித்து நிலைத்த போதிலும், சாலைகள் மற்றும் பயணிகளுக்கு நிவாரணம் தரும் நீண்டகால தீர்வு எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

 

logo

வெள்ளை டாப்பிங் கான்கிரீட் அறிமுகம்

இந்த முக்கிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் நகர சாலைகளைப் பாதுகாப்பானதாகவும் குழி இல்லாததாகவும் மாற்றுவதற்காகவும் அல்ட்ராடெக் வெள்ளை டாப்பிங் உருவாக்கப்பட்டது. சாராம்சத்தில், வெள்ளை டாப்பிங் என்பது ஒரு போர்ட்லேண்ட் சிமென்ட் கான்கிரீட் (பிசிசி) மேலடுக்காகும். இது ஏற்கனவே இருக்கும் பிட்மினஸ் சாலையின் மேல் கட்டப்படுகிறது. சாலைகளின் மறுசீரமைப்பு அல்லது கட்டமைப்பு வலுப்படுத்துதலுக்கான நீண்டகால மாற்றாக இந்த மேலடுக்கு செயல்படுகிறது.


மேலும் நன்மைகள்

  • வண்டித்தடம், கட்டமைப்பு விரிசல் மற்றும் குழிகளைத் தடுக்கிறது. இது பாதுகாப்பான மற்றும் வேகமான பயணத்தை வழங்குகிறது.
  • தற்போதுள்ள பிட்டுமென் நடைபாதைகளின் கட்டமைப்புத் திறனை மேம்படுத்துகிறது.
  • ஆரம்ப பட்ஜெட் பிட்டுமென் சாலைகளை விட சற்றே அதிகமாக இருந்தாலும் நிலைப்பு சுழற்சிச் செலவு பிட்டுமென் மற்றும் கான்கிரீட் சாலைகளை விட மிகக் குறைவாகும்.
  • இதன் நிறைவுசெய்யும் நேரம் வெறும் 14 நாட்களே. கான்கிரீட் சாலைகளுக்கான நிறைவுசெய்யும் நேரத்தை விட இது மிக துரிதமானதாக உள்ளது.
  • ஒளி பிரதிபலிப்பை அதிகரிப்பதன் மூலம் இரவில் பார்வையையும் பயணிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. இது எந்த சாலையின் வெளிச்ச சுமையையும் குறைக்கிறது, இதனால் ஆற்றலைச் சேமிக்கிறது (20-30%).
  • நடைபாதை விலகலைக் குறைக்கிறது, இதன் விளைவாக குறைந்த வாகன எரிபொருள் நுகர்வு (10-15%) ஏற்படுகிறது, இதனால் உமிழ்வு குறைகிறது.
  • வாகன பிரேக்கிங் தூரத்தை குறைக்கிறது, இது உலர்ந்த மற்றும் ஈரமான மேற்பரப்பு நிலைகளில் பாதுகாப்பாக இருக்கும்.
  • குறைந்த வெப்பத்தை உறிஞ்சுவதன் மூலம் நகர்ப்புற வெப்ப தீவு விளைவைக் குறைக்கிறது, இதன் விளைவாக நகர்ப்புற கட்டிடங்களில் காற்று பதப்படுத்தலுக்கான ஆற்றல் நுகர்வு குறைகிறது.
  • வெள்ளை டாப் செய்யப்பட்ட நடைபாதை 100% மறுசுழற்சி செய்யக்கூடியது மற்றும் முடிவில் நசுக்கி மீண்டும் பயன்படுத்தப்படலாம்.
coin


கட்டுமானத்தின் கட்டங்கள்

 

1. சமப்படுத்தல் மற்றும் நிலை திருத்தம்

 

2. மேற்பரப்பை தயாரித்தல்

 

3. கான்கிரீட் மேலடுக்கு

 

4. மேற்பரப்பு நேர்த்தி

 

5. டெக்ஸ்சரிங்

 

6. பள்ளம் வெட்டுதல்

 

7. பதப்படுத்தல் மற்றும் சோதனை செய்தல்

 

8. கர்ப் லேயிங் & லேன் மார்க்கிங்



தொடர்பு விபரங்கள்

மேலும் தகவலுக்கு, எங்கள் இலவச எண் 1800 210 3311 ஐ அழைக்கவும் அல்லது உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் கட்டுமானத் தீர்வுகள் (யுபிஎஸ்) மையத்தை அணுகவும்.




Loading....