பொதுவாக ஒரு தெளிவான திட்டத்துடன் தான் கட்டுமானம் தொடங்கும். அளவு முடிவு செய்யப்பட்டு, பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டு, எல்லாம் படிப்படியாக ஆரம்பிக்கும். ஆனால் ஒரு சின்ன மாற்றம் கூட வேலையை பல நாட்களுக்கு நிறுத்திவிடும். இந்த மாற்றங்கள் தான் கட்டுமான தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணம். இந்த மாற்றங்களை ஒவ்வொன்றாகப் புரிந்துகொண்டு, இனிமேல் அதை எப்படித் தவிர்க்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
கட்டுமானத்தின் போது டிசைன் மாற்றங்கள்: பெரிய கட்டுமான ப்ராஜெக்ட்களில் தாமதத்திற்கு ஒரு பொதுவான காரணம்
டிசைன் மாறும்போது, புதிய பொருட்கள் தேவைப்படும், அவை பணி இடத்திற்கு வந்தடைய நேரமாகும். சில பொருட்கள் தயாராக இருக்காது அல்லது பக்கத்து கடைகளில் கிடைக்காது, எல்லாம் வரும் வரை வேலையைத் தொடர முடியாது.
ஒரு சுவரை மாற்றுவது, கதவை நகர்த்துவது அல்லது டைல்ஸ் நிறத்தை மாற்றுவது போன்ற சிறு மாற்றங்கள் பாதிப்பு இல்லாதது போலத் தோன்றலாம், ஆனால் அவை வேலையின் வேகத்தைக் குறைக்கும்:
ஏற்கனவே செய்த வேலையை மீண்டும் செய்வது
புதிய அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருப்பது
வேலை நாளுக்கு நாள் தாமதமாவது
கட்டுமான தாமதத்திற்கான பிற காரணங்கள்
கட்டுமானத்தின் போது செய்யப்படும் டிசைன் மாற்றங்களுடன், வேறு சில விஷயங்களும் தாமதத்திற்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனைகள் சிறியதாகத் தோன்றினாலும், பல நாட்களுக்கு வேலையை நிறுத்திவிடும்:
சரியான தகவல் தொடர்பு இல்லாமை
விஷயங்களைத் தெளிவாகச் சொல்லாத போது, தவறுகள் நடக்கும். மீண்டும் விளக்கும் வரை வேலை தாமதமாகும். அதனால்தான் சரியான தகவல் தொடர்பு இல்லாதது கட்டுமான ப்ராஜெக்ட்களில் தாமதத்திற்கு ஒரு பொதுவான காரணமாக இருக்கிறது.
தொழிலாளர் பற்றாக்குறை
போதுமான ஆட்கள் இல்லாத போது, வேலை மெதுவாக நடக்கும்.
அனுமதி கிடைப்பதில் தாமதம்
வேலையைத் தொடங்குவதற்கு முன்னால் தேவையான அனுமதி வாங்க வேண்டும். சில நேரங்களில் ஆவணப் பணிகளுக்கு நேரமாகும். பொருட்களும் ஆட்களும் தயாராக இருந்தாலும், அனுமதி கிடைக்கும் வரை வேலையை நிறுத்த வேண்டியிருக்கும்.
கட்டுமானத்தின் போது டிசைன் மாற்றங்களால் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் வழிகளைப் பார்க்கும் முன், இந்த வலைப்பதிவில் உள்ள தாமதத்திற்கான முக்கிய காரணங்களைப் படியுங்கள்: ஒரு வீடு கட்டும் திட்டத்தில் தாமதங்களைத் தவிர்ப்பது எப்படி?
வெற்றிகரமான கட்டுமானத்திற்கு தாமதங்களை தவிர்ப்பது எப்படி?
ஆரம்பத்திலேயே நல்ல திட்டம் போட்டால் பின்னர் வேலை வேகமாக நடக்கும். முடிவுகள் தெளிவாக இருக்கும்போது, கட்டுமானம் சீராகவும் அமைதியாகவும் நடக்கும், தாமதங்களையும் தவிர்க்கலாம்.
இதையெல்லாம் கவனியுங்கள்:
வேலை தொடங்கும் முன்பே எல்லா திட்டங்களையும் முடிவு செய்திடுங்கள்.
அமைப்புகள், அளவு மற்றும் வேலைப்பாடுகள் என அனைத்தையும் வேலை தொடங்கும் முன்பே முடிவு செய்யுங்கள்.
கட்டுமானம் தொடங்கிய பிறகு திட்டத்தை மாற்ற வேண்டாம்.
ஆரம்பத்திலேயே எடுக்கும் சிறு முடிவுகள் வேலையை சீராக வைக்கும், எதிர்காலத்தில் காத்திருக்க வேண்டிய பல நாட்களை மிச்சப்படுத்தும்.