தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



கட்டுமானத்தில் லிண்டல் என்றால் என்ன?இதன் வகைகள் மற்றும் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வோம்

பழங்கால கட்டமைப்புகள் முதல் நவீன கட்டிடங்கள் வரை, லிண்டல்கள் காலத்தின் சோதனையாக நிற்கின்றன, இது செயல்பாடு மற்றும் அழகியலை தடையின்றி ஒருங்கிணைக்கும் ஒரு கட்டுப்பாடற்ற ஆதரவு அமைப்பை வழங்குகிறது. இந்த வலைப்பதிவில், லிண்டல் என்றால் என்ன என்பதை ஆராய்ந்து அதன் பல்வேறு வகைகள் மற்றும் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வோம்.

Share:


கட்டுமானத்தில், பல கட்டுமான பொருட்கள் ஒன்றிணைந்து திடமான மற்றும் நீடித்த கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. அஸ்திவாரம் முதல் கூரை வரை, ஒவ்வொரு கட்டுமான பொருளும் நிலைத்தன்மை மற்றும் நீண்ட ஆயுளை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுமானத்தில், லிண்டல் பெரிதும் பேசப்படாத ஒன்றாகவே இருந்து வந்தாலும், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வளைவுகள் போன்ற திறப்புகளுக்கு அத்தியாவசிய ஆதரவையும் கட்டமைப்பு ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது. லிண்டல் என்றால் என்ன மற்றும் அதன் வகைகள் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.



கட்டுமானத்தில் லிண்டல் என்றால் என்ன?

லிண்டல் என்பது எளிதாக சொன்னால் கிடைமட்ட பீம் எனலாம், அதன் மேலே உள்ள கட்டமைப்பின் எடையை சுற்றியுள்ள செங்குத்து பீம்களுக்கு திறம்பட விநியோகிக்கிறது. சுமைகளை தாங்குதல், தொங்கல்களை தடுத்தல் மற்றும் கட்டிடத்தின் ஒட்டுமொத்த வலிமையினை தாங்குவதிலேயே இதன் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.

  1. மர லிண்டல்கள் (வுட் லிண்டல்கள்)

  2. மர லிண்டல்கள் பழமையான வகை லிண்டல்களாகும், மரக்கட்டைகள் ஏராளமாக கிடைக்கும் பகுதிகளில் இவற்றின் பயன்பாடு தொடர்ந்து இருந்துவருகிறது. இருப்பினும், தீ பாதிப்பு, சிதைவு மற்றும் கரையான் பாதிப்பு காரணமாக மர லிண்டல் பயன்பாடு குறைந்து வருகிறது. மரத்தாலான லிண்டல்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: ஒற்றை-துண்டு டிம்பர் லிண்டல்கள் (சிறிய இடைவெளிகளுக்கு) மற்றும் போல்ட்களால் பிடிக்கப்படுகின்ற பல துண்டுகள் (பெரிய இடைவெளிகளுக்கு). பொதுவாக, மரத்தாலான லிண்டல்களைப் பயன்படுத்தும் போது மரம் அதன் வகை (தேக்கு, சால், ரோஸ்வுட்) மற்றும் அதன் ஆழம், அகலம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்..

  3. கல் லிண்டல்கள் (ஸ்டோன் லிண்டல்கள்)

    கல் லிண்டல்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் பல்வேறு கட்டுமானத் திட்டங்களில் அவற்றின் ஆயுள் மற்றும் அழகியல் முறையீட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. ஸ்டோன் லிண்டல்கள் குறிப்பாக இயற்கையான மற்றும் பல்வேறு வகையான கற்கள் நிறைந்த பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த வலுவான லிண்டல்கள் வலிமை, நீடித்துழைக்கும் திறன் மற்றும் கட்டடக்கலை வடிவமைப்புகளுக்கு என்றென்றும் மங்காத அழகை வழங்குகின்றன. கல் லிண்டல்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன-.

    1.  கல் லிண்டல்கள் மற்ற வகை லிண்டல்களை விட கனமானவை, இதனை அமைக்க கவனமாக கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் சப்போர்ட் தேவைப்படுகிறது

    2. மற்ற லிண்டல்களுடன் ஒப்பிடும்போது கல் லிண்டல்கள் அதிக விலை கொண்டதாக இருக்கும்

    3. கல் லிண்டல்களுக்கு நீள அளவு அடிப்படையில் வரம்புகள் இருக்கலாம் மற்றும் துல்லியமாக முன்கூட்டியே கணக்கிடப்பட வேண்டும்

    4. மற்ற லிண்டல் வகைகளுடன் ஒப்பிடுகையில், கல் லிண்டல்களை நிறுவுவதற்கு அதிக உழைப்பு மற்றும் நேரம் தேவைப்படும்

  4.  

  5. செங்கல் லிண்டல்கள்

    கட்டுமானத்தில் பொதுவாக மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு செங்கல் லிண்டல்கள் பயன்படுத்தப்படுகின்றன. செங்கற்கள் அதிகமாக கிடைப்பதாலும் மற்றும் செங்கல் மேஷனரி கட்டமைப்புகளுடன் எளிதாக பொருந்துவதாலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. செங்கல் லிண்டல்கள் கட்டுமானத்தில் முழு கட்டமைப்பிற்கும் சப்போர்ட் வழங்குவதோடு, அழகான தோற்றம் அளிக்கிறது மற்றும் நிறுவுவதும் எளிது, இவை பல கட்டிடத் திட்டங்களில் நடைமுறைக்கேற்ற தேர்வாக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

    உங்கள் கட்டுமானத் திட்டத்திற்கு செங்கல் லிண்டல்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​​​சில முக்கிய குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்:

    1. நீடித்த, வலிமையான மற்றும் குறைபாடுகள் இல்லாத உயர் தர செங்கலை தேர்வு செய்ய வேண்டும்.

    2. லிண்டல்களை தேர்ந்தெடுக்கும் போது எதிர்பார்க்கப்படும் சுமைகள் மற்றும் இடைவெளி தேவைகளைக் கவனிக்க வேண்டும்.

    3. அளவு, நிறம், அமைப்பு, பரிமாணங்களின் அடிப்படையில் சுற்றியுள்ள செங்கல் வேலைகளுடன் லிண்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் செங்கற்கள் இணக்கமாக இருப்பதை உறுதிசெய்யவும்.



    4) ரீஇன்ஃபோர்ஸ்ட் பிரிக் லிண்டல்கள்

    பாரம்பரிய செங்கல் லிண்டல்களுடன் ஒப்பிடும்போது ரீஇன்ஃபோர்ஸ்ட் பிரிக் லிண்டல்கள் மேம்பட்ட அதிக அளவிலான வலிமை மற்றும் சுமை தாங்கும் திறனை வழங்குகின்றன. செங்கலுக்குள் ரீஇன்ஃபோர்ஸ்மென்டை வைத்தே ரீஇன்ஃபோர்ஸ்ட் பிரிக் லிண்டல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த வலுவூட்டல் கூடுதல் வலிமையை வழங்குகிறது, இது அதிக சுமைகளைத் தாங்குவதற்கும் விரிசல் அல்லது உடைப்பை தடுப்பதற்கும் உதவுகிறது.. ரீஇன்ஃபோர்ஸ்மென்ட் கவனமாக நிலைநிறுத்தப்பட்டு, சரியான பிணைப்பு மற்றும் கட்டமைப்பு ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த மோர்டர் சுற்றிலும் வைத்து பூசப்படும்..

    5) கான்கிரீட் லிண்டல்கள்

    கான்கிரீட் லிண்டல்கள் அவற்றின் தனித்தன்மைவாய்ந்த வலிமை, ஆயுள் மற்றும் பல்துறைத்திறன் காரணமாக கட்டுமானத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்: ப்ளைன் கான்கிரீட் லிண்டல்கள் மற்றும் ரீயின்ஃபோர்ஸ்டு கான்கிரீட் லிண்டல்கள்.

  • 1) ப்ளைன் கான்கிரீட் லிண்டல்கள்

  • ப்ளைன் கான்கிரீட் லிண்டல்கள் என்பது கூடுதல் ரீயின்ஃபோர்ஸ்மென்ட் இல்லாமல் கான்கிரீட்டால் மட்டுமே செய்யப்பட்ட லிண்டல்களைக் குறிக்கிறது. இவை பொதுவாக சிறிய இடைவெளிகள் மற்றும் இலகுவான சுமைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, இது போன்ற இடங்களில் தேவையான சுமைகளை சப்போர்ட் செய்ய கான்கிரீட்டின் சுய-எடை மற்றும் சுருக்க வலிமை (கம்ப்ரெஷிவ் ஸ்ட்ரென்த்) போதுமானது.

  • 2) ரீயின்ஃபோர்ஸ்ட் கான்கிரீட் லிண்டல்கள்

    ரீயின்ஃபோர்ஸ்ட் கான்கிரீட் லிண்டல்கள் அவற்றின் சுமை தாங்கும் திறன் மற்றும் கட்டமைப்பு செயல்திறனை மேம்படுத்துவதற்காக கான்கிரீட்டிற்குள் எஃகு ரியின்ஃபோர்ஸ்மென்டை கொண்டிருக்கும். அவை பெரிய திறப்புகளில் பயன்படுத்துவதற்கேற்றவாறும் மற்றும் அதிக சுமைகளை ஆதரிக்கும் திறனும் கொண்டவை. ரியின்ஃபோர்ஸ்டு கான்கிரீட் லிண்டல்களை மேலும் இரண்டு துணை வகைகளாகப் பிரிக்கலாம்:

  • 1. ப்ரீகேஸ்ட் லிண்டல்கள்
  • ப்ரீகாஸ்ட் லிண்டல்கள் தரப்படுத்தப்பட்ட அளவுகள் மற்றும் வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன, இது விரைவான உற்பத்தி மற்றும் விரைவான நிறுவலுக்கு ஏற்றது. இவை நிலையான தரம், பரிமாணத் துல்லியம் ஆகியவற்றை வழங்குகின்றன, மேலும் திட்டத் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு முடிவுகளுக்கேற்ப கஸ்டமைஸ் செய்ய முடியும்.

  • 2. காஸ்ட்-இன்-சிடு லிண்டல்கள்

    காஸ்ட்-இன் சிடு லிண்டல்கள் கட்டுமான தளத்திலேயே தயாரிக்கப்படுகின்றன, கட்டுமான தளத்தில் ஃபார்ம்ஒர்க் அதாவது சாரத்தில் ரீயின்ஃபோர்ஸ்மென்ட் வைக்கப்படும், மேலும் அதில் லிண்டல் கட்டமைப்பை உருவாக்க கான்கிரீட் ஊற்றப்படும். இவை டிசைன் மற்றும் ஸ்டைல் போன்றவற்றில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன மற்றும் இதனை சிக்கலான அல்லது தனித்துவமான கட்டுமான சூழ்நிலைகளில் பல்துறை மற்றும் சுற்றியுள்ள கட்டுமானத்துடன் தடையின்றி ஒருங்கிணைக்க முடியும்.


6) ஸ்டீல் லிண்டல்கள்


    பாரம்பரிய செங்கல் லிண்டல்களுடன் ஒப்பிடும்போது ரீஇன்ஃபோர்ஸ்ட் பிரிக் லிண்டல்கள் மேம்பட்ட அதிக அளவிலான வலிமை மற்றும் சுமை தாங்கும் திறனை வழங்குகின்றன. செங்கலுக்குள் ரீஇன்ஃபோர்ஸ்மென்டை வைத்தே ரீஇன்ஃபோர்ஸ்ட் பிரிக் லிண்டல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த வலுவூட்டல் கூடுதல் வலிமையை வழங்குகிறது, இது அதிக சுமைகளைத் தாங்குவதற்கும் விரிசல் அல்லது உடைப்பை தடுப்பதற்கும் உதவுகிறது.. ரீஇன்ஃபோர்ஸ்மென்ட் கவனமாக நிலைநிறுத்தப்பட்டு, சரியான பிணைப்பு மற்றும் கட்டமைப்பு ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த மோர்டர் சுற்றிலும் வைத்து பூசப்படும்.

  • 1) ஸ்டாண்டர்ட் கேவிட்டி ஸ்டீல் லிண்டல்கள்

  • ஸ்டாண்டர்ட் கேவிட்டி ஸ்டீல் லிண்டல்கள் கேவிட்டி வால் (காற்றிடை சுவர்) கட்டுமானத்திற்காக வடிவமைக்கப்படுகின்றன இதில் ஒரு கிடைமட்ட ஸ்டீல் பீம் கொண்ட ஒரு கேவிட்டி டிரே இருக்கும், இது சுவரில் ஈரப்பதத்தை நிர்வகிக்க உதவுகிறது. வெப்பத் திறனைப் பராமரிக்கும் போது சுவரின் உள் மற்றும் வெளிப்புற லீஃப்களுக்கான சப்போர்ட்டினை வழங்கும், இன்சுலேட்டட் கேவிட்டி இருக்கும் பயன்பாடுகளுக்கு இந்த லிண்டல்கள் பொருத்தமானவை.

  • 2) ஷார்ட் அவுட்டர் லீஃப் ஸ்டீல் லிண்டல்கள்

    உட்புற லீஃப் உடன் ஒப்பிடும்போது சுவரின் வெளிப்புற லீஃப் உயரம் குறைவாக இருக்கும்போது ஷார்ட் அவுட்டர் லீஃப் ஸ்டீல் லிண்டல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த லிண்டல்கள் குறிப்பாக வெளிப்புற லீஃபிற்கு சப்போர்ட்டினை வழங்குகின்றன, கட்டமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் சரியான சுமை விநியோகத்தை உறுதி செய்கின்றன. இவை பொதுவாக முகப்பு வடிவமைப்பு அல்லது கட்டடக்கலை அம்சங்கள் போன்ற வெளிப்புற லீஃபிற்கு இடமளிக்க வேண்டிய சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன..

  • 3) வைட் இன்னர் லீஃப் ஸ்டீல் லிண்டல்கள்

  • வைட் இன்னர் லீஃப் ஸ்டீல் லிண்டல்கள் வெளிப்புற லீஃபை விட அகலமான கேவிட்டி வால் உட்புற லீஃபை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உட்புற லீஃபிற்கு கூடுதல் சுமை தாங்கும் திறன் தேவைப்படும்போது அல்லது சுவரில் தடிமனான இன்சுலேஷன் அல்லது சர்வீஸ்களுக்கு இடமளிக்கும் போது இந்த லிண்டல்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுவர் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பை பராமரிக்கும் போது இவை அகலமான உட்புற லீஃபிற்கான சரியான சப்போர்ட்டையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்கின்றன.

  • 4) வைட் அவுட்டர் லீஃப் ஸ்டீல் லிண்டல்கள்

    கேவிட்டி வாலின் வெளிப்புற லீஃப் உட்புற லீஃபை விட அகலமாக இருக்கும் போது வைட் அவுட்டர் லீஃப் ஸ்டீல் லிண்டல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த லிண்டல்கள் அகலமான வெளிப்புற லீஃபிற்கு ஆதரவை வழங்குகின்றன, கட்டுமானத்தின் நிலைத்தன்மை மற்றும் சுமை விநியோகத்தை உறுதி செய்கின்றன. இவை பொதுவாக கட்டடக்கலை வடிவமைப்புகளில் பரந்த வெளிப்புற சுவர்கள் தேவைப்படும் போது அல்லது அழகியல் அல்லது செயல்பாட்டு நோக்கங்களுக்காக கூடுதல் இடம் தேவைப்படும்போது பயன்படுத்தப்படுகின்றன.

    7) ஸ்பெஷலிஸ்ட் லிண்டல்கள்

    ஸ்பெஷலிஸ்ட் லிண்டல்கள் என்பது குறிப்பிட்ட கட்டுமானத் தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட லிண்டல்களாகும். இவை நவீன கட்டுமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த லிண்டல்கள் வெவ்வேறு பொருட்களில் கிடைக்கின்றன, ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகள் மற்றும் பலன்களை கொண்டுள்ளன. இவை வெப்ப எதிர்ப்புத்திறன், தீ தடுப்புத்திறன், சவுண்ட் இன்சுலேசன் மற்றும் கட்டமைப்பு ஆதரவு, குறிப்பிட்ட திட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற அம்சங்களை வழங்குகின்றன.



    8) கேவிட்டி லிண்டல்கள்

    கேவிட்டி லிண்டல்கள் என்பது கேவிட்டி சுவர் கட்டுமானங்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை லிண்டல் ஆகும். சுவரின் உள் மற்றும் வெளிப்புற லீஃப்களுக்கு இடையில் உள்ள கேவிட்டிக்கு இடமளிக்கும் போது சுவரில் உள்ள திறப்புகளை விரிவுபடுத்த இந்த லிண்டல்கள் பயன்படுத்தப்படுகின்றன. கேவிட்டி லிண்டல்கள் பொதுவாக ஸ்டீல் அல்லது கான்கிரீட் போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன, மேலும் இவை சுவரின் உள் மற்றும் வெளிப்புற லீஃப்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. கேவிட்டி லிண்டல்களின் முக்கிய அம்சங்களில் ஒன்று கேவிட்டி டிரே. ஈரப்பதம் கேவிட்டியில் ஊடுருவி, சுவருக்கு சேதம் விளைவிக்கும். இதனை தடுக்கும் விதமாக இந்த டிரே ஒரு தடையாக செயல்படுகிறது, கேவிட்டி லிண்டல்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​சுவர் கட்டுமான வகை, மற்றும் சுமை தேவைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்வதும், கட்டமைப்பு பொறியாளர்களுடன் கலந்தாலோசிப்பதும் அவசியம்.

     

லிண்டல்களின் செயல்பாடுகள்

கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை, சப்போர்ட் மற்றும் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த, கட்டுமானத்தில் லிண்டலின் செயல்பாடு முக்கியமானது.

    1) சுமைதாங்கும் திறன்

    கிடைமட்ட பீம்களாக செயல்படுவதால், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற திறப்புகளுக்கு மேலே உள்ள மேஷனரி அல்லது கட்டமைப்பு தளங்களின் சுமையை லிண்டல்கள் தாங்குகின்றன.

    2) கட்டமைப்பு நிலைத்தன்மை

    லிண்டல்கள் அவற்றின் மீதிருக்கும் அழுத்தம், சுருக்க மற்றும் வெட்டு விசை அழுத்தங்களை எதிர்க்கின்றன, சுவர் அல்லது கட்டமைப்பின் ஒட்டுமொத்த வலிமை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்கின்றன.



முடிவாக உங்கள் கேள்விக்கான பதில், லிண்டல் என்றால் என்ன? கட்டுமானத்தில் லிண்டல்கள், கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்து நிற்கும் திறனிற்கான அத்தியாவசிய செயல்பாடுகளை நிறைவேற்றும் முக்கிய அமைப்பாகும். இவை செயல்பாட்டு நோக்கங்களுக்காக மட்டுமல்லாமல், ஒரு கட்டமைப்பின் கட்டடக்கலை ஒருங்கிணைப்பு மற்றும் அழகான தோற்றத்திற்கு பங்களிப்பதால் கட்டுமானத் திட்டங்களில் இவற்றை இன்றியமையாத முக்கியமான ஒன்றாக்குகின்றன. மரம், கல், செங்கல், கான்கிரீட், ஸ்டீல் அல்லது ஸ்பெஷலிஸ்ட் லிண்டல்கள் என எதுவாக இருந்தாலும், லிண்டல் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதும் மற்றும் பொருத்தமான வகையைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது. இது உங்கள் கட்டுமானத் திட்டத்தின் வெற்றிக்கு உதவும்.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....