தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்


டைல் அதெசிவ் - முக்கியத்துவம், வகைகள் மற்றும் நன்மைகள்

டைல் மேற்பரப்புகளின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் ஆயுளை உறுதி செய்வதில் டைல் அதிசிவ் ஒரு முக்கிய கூறு ஆகும். இது ஃப்ளோர்கள், சுவர்கள் மற்றும் கவுன்டர்டாப்கள் போன்ற சப்ஸ்டிரேட்கள் மீது டைல்களைப் பிணைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு வகை பசை அல்லது சிமெண்ட் ஆகும். இது நல்ல ஒட்டும் திறனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், டைல் ஒட்டப்பட்ட மேற்பரப்பின் நிலைத்தன்மை மற்றும் உறுதியைப் பராமரிக்கவும் உதவுகிறது.

Share:


டைல்ஸ் அதே இடத்தில் இருந்து, காலப்போக்கில் நகராமல் அல்லது விரிசல் விடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், டைல் மற்றும் சப்ஸ்டிரேட் இடையே பிணைப்பு பொருளாக டைல் அதெசிவ் செயல்படுகிறது. மோர்டார் சிமெண்ட் பயன்படுத்துவது போன்ற வழக்கமான முறைகளுக்கான தேவையை நீக்கி, இன்ஸ்டலேஷன் நேரம் மற்றும் உழைப்பைக் குறைக்கிறது. இது வெப்பநிலை மாற்றங்கள், ஈரப்பதம் மற்றும் மக்கள் நடமாட்டம் போன்று, டைல் ஒட்டப்பட்டுள்ள மேற்பரப்புகள் எதிர்கொள்ளும் அழுத்தங்களைத் தாங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை இன்ஸ்டலேஷன் செயல்முறையில் ஒரு முக்கிய பங்கு வகித்து, பாதுகாப்பான மற்றும் நீடித்து நிற்கும் பிணைப்பை வழங்குகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உதவியால், டைல்ஸை ஃபிக்ஸ் செய்ய பயன்படுத்தப்படும் அதெசிவ்கள் மிகவும் பன்முகமாக மற்றும் திறன்மிக்கதாக மாறி, வெவ்வேறு வகை டைல்ஸ் மற்றும் சப்ஸ்டிரேட்களில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளன. நீடித்து உழைக்கும் மற்றும் அழகான டைல் இன்ஸ்டலேஷனை அடைய, அதன் முக்கியத்துவம், வெவ்வேறு வகை அதெசிவ்கள் மற்றும் அதன் நன்மைகளைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.



டைல் அதெசிவின் முக்கியத்துவம்



1. பிணைப்பு வளிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை

டைல் அதெசிவின் முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் அற்புதமான பிணைப்பு வலிமையாகும். இது டைல்ஸ் மற்றும் சப்ஸ்டிரேட் இடையே நீடித்து உழைக்கும் உறுதியான நீடித்து உழைக்கும் பிணைப்பை உருவாக்கி, டைல்ஸ் காலப்போக்கில் நகராமல், விரிசல் விடாமல் அல்லது லூஸாகாமல் இருப்பதை உறுதி செய்கிறது. குறிப்பாக டைல்ஸ் தொடர்ச்சியான தேய்மானத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டிய அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அல்லது ஈரப்பதத்திற்கான வாய்ப்புள்ள இடங்களில் இது முக்கியமானதாகும். மேலும், எபாக்ஸி கிரவுட் பயன்படுத்துவது டைல் ஒட்டப்பட்டுள்ள மேற்பரப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை மேம்படுத்தலாம்.

 

2. ஃப்ளெக்ஸிபிலிட்டி மற்றும் நிலைத்தன்மை

வெவ்வேறு வகை டைல் அதெசிவ் டைல் ஒட்டப்பட்டுள்ள மேற்பரப்பிற்கு ஃப்ளெக்ஸிபிலிட்டி மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது. இது வெப்பநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய லேசான நகர்வு மற்றும் விரிவடைதலை அனுமதித்து, டைல்ஸ் விரிசல் விடும் அல்லது உடையும் ஆபத்தைக் குறைக்கிறது. அதெசிவ், டைல்ஸுக்கான நிலையான அடித்தளத்தை உருவாக்கி, வரும் ஆண்டுகளில் அவை அதே இடத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.

 

3. நீர் எதிர்ப்பு மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவது

வழக்கமாக இந்த அதெசிவ்கள் நீர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை குளியலறைகள் மற்றும் சமயலறைகள் போன்ற, தண்ணீருக்கு வெளிப்படக்கூடிய பகுதிகளுக்கு ஏற்றதாக உள்ளது. இது தண்ணீர் ஊடுருவலைத் தடுக்கும் அரணாகச் செயல்பட்டு, நீரினால் ஏற்படும் சேதம் அல்லது டைல்ஸுக்கு பின்னால் பூஞ்சை வளரும் ஆபத்தைக் குறைக்கிறது. மேலும், சில வகை டைல் அதெசிவ்கள் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகளையும் கொண்டிருப்பதால், ஈரத்தன்மை உள்ள சப்ஸ்டிரேட்களில் அவை பயன்படுத்தப்படுகின்றன.

 

4. பயன்படுத்த எளிதானது

டைல் அதெசிவ் பயனருக்கு ஏற்றதாகவும், அதை பயன்படுத்தி வேலை செய்ய எளிதானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயன்படுத்த தயாராக உள்ள வடிவத்தில் வருவதால், மோர்டார் சிமெண்ட் கலப்பது மற்றும் தயார் செய்யும் தேவையை நீக்குகிறது. அதன் சீரான கன்சிஸ்டென்ஸி காரணமாக, அதை சீராக பூசுவது எளிதாக உள்ளது மற்றும் சரியான கவரேஜ் மற்றும் அதெஷனை உறுதி செய்கிறது. பயன்படுத்த எளிதாக இருப்பதால், இது டைல் இன்ஸ்டலேஷன் செயல்முறையை வேகமானதாகவும், மிகவும் திறன்மிக்கதாகவும் ஆக்குகிறது.

 

5. சிக்கனமானது

டைல் அதெசிவைப் பயன்படுத்துவது டைல் இன்ஸ்டலேஷனுக்கான சிக்கனமான தேர்வாக இருக்கலாம். இது மோர்டார் சிமெண்ட் போன்ற கூடுதல் மெட்டீரியல்களின் தேவையை நீக்கி, மெட்டீரியல் மற்றும் பணியாளர்களுக்கு ஆகும் செலவுகளைக் குறைக்கிறது. மேலும், டைல் அதெசிவின் செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை நீண்ட கால சேமிப்புக்கு வழிவகுக்கிறது, ஏனெனில் இது செலவு அதிகமான டைல் பழுதுபார்த்தல்கள் மற்றும் டைல்ஸ் மாற்றுவதற்கான தேவையை நீக்குகிறது.

 


டைல் அதெசிவின் வகைகள்



இதில் பல வகைகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட டைல் வகைகள் மற்றும் இன்ஸ்டலேஷன் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவான சில டைல் அதெசிவ் வகைகள் இதோ:

 

1. வகை 1 அதெசிவ்

வழக்கமான உடல் கூறுகள் மற்றும் அதிகமான நுண்துளைகள் கொண்ட டைல்ஸுக்கு வகை 1 அதெசிவ் ஏற்றதாகும். இது பொதுவாக பல்வேறு பின்னணிகளில் நாண்-வெட்ரிஃபைட் செராமிக் டைல்ஸ் மற்றும் போரஸ் ஸ்டோன்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அதெசிவ் பெரும்பாலான செராமிக் டைல்ஸுக்கு பாதுகாப்பான பிணைப்பை வழங்குகிறது மற்றும் இது உட்புற பயன்பாடுகளுக்கு பொருத்தமான தேர்வாகும்.

 

2. வகை 2 அதெசிவ்

வெட்ரிஃபைட் டைல்ஸ் அல்லது முழுமையான வெட்ரிஃபைட் டைல்ஸ், கிளாஸ் மொஸைக் டைல்ஸ் மற்றும் டென்ஸ் ஸ்டோன்ஸ் உள்ளிட்ட, குறைவான நுண்துளைகள் உள்ள டைல்ஸுக்கு வகை 2 அதெசிவ் ஏற்றதாகும். ஈரமான மற்றும் தண்ணீரில் மூழ்கியுள்ள பகுதிகள் உட்பட, உட்புற மற்றும் வெளிப்புற பயன்பாடுகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அதெசிவ், மேம்பட்ட பிணைப்பு வலிமை மற்றும் நிலைத்தன்மை தேவைப்படும் இன்ஸ்டலேஷன்களுக்கு அதை வழங்குகிறது.

 

3. வகை 3 அதெசிவ்

பிளாஸ்டர் அல்லது கான்கிரீட் போன்ற வெளிப்புற சுவர் சப்ஸ்டிரேட்களுக்காக வகை 3 அதெசிவ் வடிவமைக்கப்பட்டுள்ளது. செராமிக், க்ளே, போர்ஸலின், அல்லது கிளாஸ் மொசைக் டைல்ஸ், அத்துடன் இயற்கையான கல் டைல்ஸ் அனைத்திற்கும் இது ஏற்றதாகும். வெளிப்புற சுவர்களில் இந்த அதெசிவ் நம்பகமான ஒட்டும் திறன் மற்றும் வலிமையை டைல்ஸுக்கு வழங்குகிறது.

 

4. வகை 4 அதெசிவ்

டிரை வால்போர்டு சப்ஸ்டிரேட்களின் மீது இன்ஸ்டலேஷனுக்காக வகை 4 அதெசிவ் பயன்படுத்தப்படுகிறது. இது மெட்டல் டைல்ஸ் அல்லது என்ஜினியர்டு ஸ்டோன்ஸ் தவிர, பல்வேறு வகை டைல்ஸ் மற்றும் ஸ்டோன்ஸுக்கு ஏற்றதாகும். ஜிப்சம் போர்டுகள், பிளைவுட், வுட், மற்றும் பிற உலர் சப்ஸ்டிரேட்கள் போன்ற டிரைவால் போர்டுகளின் மீது இந்த அதெசிவைப் பயன்படுத்தலாம்.

 

5. வகை 5 அதெசிவ்

கிளாஸ் அல்லது மெட்டாலிக் சப்ஸ்டிரேட்களில் டைல்ஸ் மற்றும் ஸ்டோன்ஸை இன்ஸ்டால் செய்வதற்காக வகை 5 அதெசிவ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்டல் டைல்ஸ், கிளாஸ் டைல்ஸ் மற்றும் என்ஜினியர்டு ஸ்டோன்ஸுக்கு, அத்துடன் சிமெண்ட் அடிப்படையிலான சப்ஸ்டிரேட்கள் மீது பிற வகை டைல்ஸ் மற்றும் ஸ்டோன்ஸை ஒட்டுவதற்கு இது ஏற்றதாகும். இந்த அதெசிவ் ஸ்பெஷலைஸ்டு இன்ஸ்டலேஷன்களுக்கான நல்ல ஒட்டும் திறன் மற்றும் நீடித்து உழைக்கும் திறனை வழங்குகிறது.


டைல் அதெசிவின் நன்மைகள்

டைல் இன்ஸ்டலேஷனுக்கு வெவ்வேறு வகை டைல் அதெசிவ்களைப் பயன்படுத்துவது, வெற்றிகரமான மற்றும் நீடித்து நிலைக்கும் முடிவைப் பெறுவதில் பங்கு வகிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. சில முக்கியமான நன்மைகளைக் காண்போம்:

 

1. நல்ல டைல் அலைன்மெண்ட் மற்றும் லெவலிங்

டைல் பேஸ்ட் அதெசிவ் நல்ல ஒட்டும் திறனை வழங்குகிறது மற்றும் டைல்ஸின் துல்லியமான அலைன்மெண்ட் மற்றும் லெவலிங்கிற்கு உதவுகிறது. சமச்சீராக இல்லாத மேற்பரப்புகள் அல்லது டைல் ஸ்லிப்பேஜுக்கு வழிவகுக்கக்கூடிய வழக்கமான மோர்டார் போல் இல்லாமல், ஒவ்வொரு டைலும் சப்ஸ்டிடேட்டுடன் பாதுகாப்பாக பிணைக்கப்பட்டிருப்பதை அதெசிவ் உறுதி செய்து, சீரான மற்றும் சரியாக அலைன் செய்யப்பட்ட ஃபினிஷை வழங்குகிறது.

 

2. தேவைப்படும் நேரத்தைக் குறைக்கிறது

இந்த அதெசிவ்கள் வழக்கமான மோர்டார் அடிப்படையிலான முறைகளுடன் ஒப்பிடும்போது இன்ஸ்டலேஷன் நேரத்தைக் கணிசமான அளவு குறைக்கிறது. பயன்படுத்த தயாராக உள்ள இதன் கலவை, அதிக நேரம் எடுக்கக்கூடிய கலக்கும் மற்றும் தயார் செய்யும் செயல்முறைக்கான தேவையை நீக்குகிறது. எளிதாக பூச முடிவது மற்றும் அதன் விரைவாக உலரும் பண்புகள் டைல்ஸ் ஒட்டும் பணிகளை வேகமாக முடிக்க உதவுகிறது மற்றும் இதை நேரத்தை மிச்சப்படுத்தும் ஆப்ஷனாக்குகிறது.

 

3. பணி செயல்திறன்

டைல் இன்ஸ்டலேஷன் செயல்முறையை டைல் அதெசிவ் எளிமையாக்கி, அதை அதிக திறன்மிக்கதாக்கி தேவையான உழைப்பைக் குறைக்கிறது. இதை எளிதாகவும் சீராகவும் பூச முடியும் என்பதால், இன்ஸ்டாலர்கள் திறம்பட பணியாற்றி குறைவான நேரத்தில் அதிகமான பகுதிகளைக் கவர் செய்கிறார்கள். மேலும், அதெசிவின் உறுதியான பிணைக்கும் பண்புகள் விரிவாக மீண்டும் வேலை செய்யும் அல்லது பழுதுபார்ப்புகளின் தேவையை நீக்கி, உழைப்பின் தேவைகளை மேலும் குறைக்கிறது.

 

4. நல்ல பிணைப்பு வலிமை

டைல்ஸ் மற்றும் சப்ஸ்டிரேட் இடையே நல்ல பிணைப்பு வலிமையை டைல் அதெசிவ் வழங்குகிறது. இந்த உறுதியான பிணைப்பானது, அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும்போது அல்லது அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் கூட, டைல்ஸ் அதே இடத்தில் உறுதியாக இருப்பதை உறுதி செய்கிறது. அவற்றின் பயன்பாடு காரணமாக, டைல்ஸ் காலப்போக்கில் லூஸ் ஆவது, சிப் ஆவது அல்லது விரிசலடைவதைக் குறைத்து, நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கும் டைல் ஒட்டப்பட்ட மேற்பரப்பிற்கு வழிவகுக்கிறது. இது பற்றாக்குறையான அதெஷன் காரணமாக மேற்பரப்பிலிருந்து டைல்ஸ் வெளியே வரும் டைல் பாப்பிங் ஏற்படுவதைத் திறம்பட குறைக்கிறது.



டைல் மேற்பரப்புகளின் நீடித்து உழைக்கும் தன்மை, நிலைத்தன்மை மற்றும் அழகிய தோற்றத்தை உறுதி செய்வதில் டைல் அதெசிவ் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான டைல் அதெசிவ் வகைகளைத் தேர்ந்தெடுத்து சரியான இன்ஸ்டலேஷன் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், தனிநபர்களால் தொழில்முறை சார்ந்த அழகான டைல் இன்ஸ்டலேஷன்களை அடைய முடியும். குடியிருப்பு அல்லது வணிக திட்டங்களுக்காக இருந்தாலும் சரி, டைல்ஸில் அதெசிவ்களைப் பயன்படுத்துவது வெற்றிகரமான பலனுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒரு விவேகமான தேர்வாகும்.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....