தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்

லிவிங் ரூமிற்கான வாஸ்த்து குறிப்புகள்

வழக்கமாக லவுஞ்ச் அல்லது டிராயிங் ரூம் என்று அறியப்படும் லிவிங் ரூம்கள், வீட்டில் ஆற்றல் நுழைவதற்கான நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. எதிர்மறையாகவோ அல்லது நேர்மறையாகவோ இருந்தாலும் சரி, ஆற்றல்கள் லிவிங் ரூம் வழியாகத் தான் நுழையும், அது பிறகு உங்களுடனும் உங்களின் குடும்பத்துடனும் தொடர்புகொண்டு, உங்களின் ஆரோக்கியம், செல்வம், மற்றும் நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

லிவிங் ரூம்கள் உங்கள் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இடமாகும், குழந்தைகளுடன் விளையாடுவதாக இருந்தாலும் சரி, சோஃபாக்களில் வசதியாக அமர்ந்துகொண்டு காஃபி குடிப்பதாக இருந்தாலும் சரி அல்லது அவ்வப்போது உங்களின் அன்புக்குரிய நண்பர்களை அழைத்து ஒன்றுகூடுவதாக இருந்தாலும் சரி. குறையற்ற இண்டீரியர் டிசைனிங்குடன் சேர்த்து, லிவிங் ரூமை மங்கலகரமானதாகவும், நேர்மறை ஆற்றல்களோடும், எதிர்மறை ஆற்றல்கள் இல்லாமலும் வைத்துக்கொள்வதற்குக் குறிப்பிட்ட வாஸ்த்து குறிப்புகளைப் பின்பற்றுவது முக்கியமாகும்.

இந்தக் கட்டுரையில் உள்ள லிவிங் ரூமுக்கான வாஸ்த்து குறிப்புகளானது, உங்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான, வெற்றிகரமான, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யும் ஒரு வாஸ்த்துவுக்கு இணக்கமான இடத்தைத் திட்டமிட்டு வடிவமைக்க உங்களுக்கு வழிகாட்டும்.

ஒன்றுகூடுவதற்கான ஹால் :

A hall for get-togethers

ஒன்றுகூடுவதற்கான ஹால் :

 

  • உங்களின் இடத்திற்குள் ஒருவர் நுழையும்போது அவர்கள் முதலில் நுழையும் அறை லிவிங் ரூம் ஆகும்; அதனால், இந்த இடத்தை நல்ல வெளிச்சத்துடன் வைப்பதோடு, கிழக்கு, வடக்கு, அல்லது வடகிழக்கு போன்ற, உகந்த திசையில் நுழைவாயில் கதவை வைப்பது முக்கியமாகும். இந்த இடம் பெரும்பாலும் ஒன்றுகூடுவதற்கான ஹாலாகக் கருதப்படுகிறது, எனவே, நீங்கள் ஒன்றுகூடுதல் நிகழ்வை அடிக்கடி ஏற்பாடு செய்கிறீர்கள் என்றால், வாஸ்த்துவின்படி ஹாலின் திசை உங்கள் வீட்டின் தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும்.

பணக்காரர் ஆவதற்கு நன்மை தருவது :

Beneficial for becoming wealthy

பணக்காரர் ஆவதற்கு நன்மை தருவது :

 

  • லிவிங் ரூம்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்தின் நுழைவாயில் ஆகும், மேலும் அவை கிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைந்திருக்க வேண்டும். லிவிங் ரூமுக்கான வாஸ்த்து குறிப்புகளின்படி, இந்த இடம் கிழக்கு மற்றும் வடக்கைப் பார்த்தபடி இருக்கும் வீடுகளுக்கு வடமேற்கு மூலையில் அமைக்கப்பட வேண்டும். தெற்கைப் பார்த்தபடி இருக்கும் வீடுகளுக்கு, வாஸ்த்துவின்படி லிவிங் ரூம் வீட்டின் தென்கிழக்கு பக்கத்தில் அமைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட திசைகளில் லிவிங் ரூம்களை வைப்பது ஏராளமான ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், வெற்றியையும் உங்கள் வீட்டிற்குக் கொண்டுவரும். எனவே, நீங்கள் ஏராளமான செல்வத்தை வரவேற்க எதிர்நோக்கி இருக்கிறீர்கள் என்றால், லிவிங் ரூமுக்கு இந்த வாஸ்த்து குறிப்புகளைப் பின்பற்றவும்.

லிவிங் ரூமில் ஒரு சரிவை வைப்பது :

லிவிங் ரூமில் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கிச் சரிவான தரையை அமைப்பது மங்கலகரமானதாக வாஸ்த்து நிபுணர்களால் கருதப்படுகிறது. கிழக்கின் வடகிழக்கு திசையானது லிவிங் ரூமில் சரிவான தரையை அமைப்பதற்கு மிகவும் ஏற்ற திசையாகும்.

படிப்பிற்கு நல்லது :

லிவிங் ரூமில் ஒரு சரிவான தரை இருப்பது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நன்மைகளைத் தரும், அவர்களுக்கு வெற்றியையும், படிக்கும்போது ஒருமுகப்படுத்துதலையும் தரும். கல்வி சார்ந்தவைக்கு, மேற்கு நுழைவாயில் நன்மை தருவதாகக் காட்டப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிக்கான பிரத்யேக இடம் :

A dedicated spot for the TV

தொலைக்காட்சிக்கான பிரத்யேக இடம் :

 

  • உங்களின் இடத்தில் இருக்கும் மற்ற எந்தவொரு பொருளைப் போன்றும், தொலைக்காட்சியைச் சரியான இடத்தில் வைப்பது உங்கள் வீட்டின் அதிர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். வாஸ்த்துவின்படி லிவிங் ரூமில் வீட்டின் தென்கிழக்கு மூலையில் தொலைக்காட்சி வைக்கப்பட வேண்டும். உங்கள் இடத்தின் வடமேற்கு பக்கத்தில் தொலைக்காட்சியை வைத்தால், உங்களின் குடும்பத்தினர் அவர்களின் விலையுயர்ந்த நேரத்தைத் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே வீணாக்கும்படி இந்தப் பொழுதுபோக்கு பகுதி செய்துவிடும்.

உங்களின் ஃபர்னிச்சரை நீங்கள் எங்கு வைப்பீர்கள் ? :

Where do you place your furniture?

உங்களின் ஃபர்னிச்சரை நீங்கள் எங்கு வைப்பீர்கள் ? :

 

  • லிவிங் ரூமுக்கான வாஸ்த்து இண்டீரியரானது, வீட்டில் வசிக்கும் நபர்களின் ஆரோக்கியம், செல்வம், மற்றும் மகிழ்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. லிவிங் ரூமில் வசதியான சோஃபா செட்கள் போன்ற தனித்துவமான ஃபர்னிச்சர்களைச் சேர்ப்பது உங்களின் வீட்டிற்கு அழகைக் கொண்டுவரும், ஆனால், சோஃபா செட்களுக்கான வாஸ்த்துவின்படி இந்த ஃபர்னிச்சர்களை வைப்பதைக் கருத்தில் கொள்வதும் முக்கியமாகும். கிழக்கு அல்லது வடக்கு சுவர்களுக்கு எதிராகச் சோபா செட்களை வைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அவை கிழக்கு திசையில் இருந்து வரும் நேரடி சூரியக் கதிர்களை எதிரொளிக்கும்.

உருவப்படங்கள் மற்றும் ஓவியங்களுக்கான இடம் :

A place for Portraits & Paintings

உருவப்படங்கள் மற்றும் ஓவியங்களுக்கான இடம் :
 

  • கண்கவர் ஓவியங்கள் மற்றும் உருவப்படங்கள் உங்கள் லிவிங் ரூமின் தோற்றத்தை மேம்படுத்துகிறது, மேலும் அவை அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட வேண்டும். இந்தக் கலை பொருட்களானது நேர்மறைத்தன்மை, மகிழ்ச்சி மற்றும் அமைதி உணர்வுகளைத் தூண்டும். இருளான, சோகமான, அல்லது எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் ஓவியங்கள் அல்லது உருவப்படங்களைத் தவிர்க்கவும்.

ஷோபீஸ்களை மாட்டுவதற்கான இடம் :

சாண்டெலியர் போன்ற ஷோபீஸ்களை லிவிங் ரூமின் மேற்கு அல்லது தெற்கு பக்கங்களில் தொங்கவிட வேண்டும் என்று வாஸ்த்து பரிந்துரைக்கிறது. உங்கள் இடத்தின் நேர்மறைத்தன்மை மற்றும் அழகில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

உங்கள் லிவிங் ரூமுக்கு எந்த வண்ணம் சிறந்தது ? :

Which hue is best for your living room?

உங்கள் லிவிங் ரூமுக்கு எந்த வண்ணம் சிறந்தது ? :

 

  • லிவிங் ரூமின் வண்ணத்தால் உங்களின் வீட்டிற்குள் நுழையும் நேர்மறை ஆற்றலைத் தக்க வைக்க முடியும். லிவிங் ரூமுக்கான வாஸ்த்து இண்டீரியரின்படி, அது வெள்ளை, பீச், க்ரீம், மஞ்சள், அல்லது நீளம் போன்ற லைட்டான வண்ணங்களால் பெயிண்ட் செய்யப்பட வேண்டும். இந்த வண்ணங்களால் ஒரு இடத்தில் நேர்மறை தன்மையை, மகிழ்ச்சியை மற்றும் மனநிறைவை அதிகரிக்க முடியும்.

சில பொருட்களை உங்கள் லிவிங் ரூமிலிருந்து நீக்குவது நல்லது :

It’s best to discard certain things from your living room

சில பொருட்களை உங்கள் லிவிங் ரூமிலிருந்து நீக்குவது நல்லது :

 

  • குறிப்பிட்ட சில வீட்டு அலங்காரப் பொருட்கள் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை வீட்டிற்குக் கொண்டுவரக்கூடும். அத்தகைய பொருட்களை உங்களின் லிவிங் ரூமிலிருந்து நீக்குவது முக்கியமாகும். வாஸ்த்துவுக்கு இணக்கமான வீட்டைப் பெறுவதற்கு, நீங்கள் பின்வருவனவற்றை நீக்க வேண்டும் :

    1. சேதமடைந்த அல்லது வேலை செய்யாத மின்னணு கருவிகள் மற்றும் சாதனங்கள்.

    2. போர், அழும் குழந்தை, அல்லது மூழ்கும் கப்பல் போன்ற எதிர்மறையைக் காட்சிப்படுத்தும் ஓவியங்கள் மற்றும் உருவப்படங்கள்.

    3. உடைந்த அல்லது விரிசல்கள் உள்ள ஃப்ரேம்கள், கண்ணாடிகள், மற்றும் ஷோபீஸ்கள்.

தொலைபேசியை வைப்பதற்கான இடம் :

A Phone Area

தொலைபேசியை வைப்பதற்கான இடம் :

 

  • லிவிங் ரூமின் கிழக்கு, வடக்கு, அல்லது தென்கிழக்கு பக்கத்தில் தொலைபேசியை வைக்க வேண்டும் என்று வாஸ்த்து பரிந்துரைக்கிறது. உங்கள் லிவிங் ரூமின் தென்மேற்கு அல்லது வடமேற்கு பக்கத்தில் தொலைபேசியை வைப்பதைத் தவிர்க்கவும்.

பூஜை செய்வதற்கான இடம் :

Place for Pooja

பூஜை செய்வதற்கான இடம் :

 

  • வடகிழக்கு பகுதியில் பூஜை செய்யும் பகுதியை வைக்க வேண்டும் என்று லிவிங் ரூமில் கடவுளின் படங்களை மாட்டுவதற்கான வாஸ்த்து பரிந்துரைக்கிறது. அது மங்கலகரமானதாகவும், செழிப்பைக் கொண்டுவருவதாகவும் கருதப்படுகிறது.

படிக்கட்டுகளைக் கட்டமைத்தல் :

Building a Staircase

படிக்கட்டுகளைக் கட்டமைத்தல் :

 

  • உகந்த நன்மைகளுக்காக லிவிங் ரூமின் மேற்கு, தெற்கு, அல்லது தென்மேற்கு மூலையில் படிக்கட்டுகளை அமைப்பது சிறந்தது என்று லிவிங் ரூமுக்கான வாஸ்த்து குறிப்புகள் பரிந்துரைக்கின்றன.

இயற்கையை இணைப்பதன் முக்கியத்துவம் :

The importance of incorporating nature

இயற்கையை இணைப்பதன் முக்கியத்துவம் :

 

  • உங்கள் லிவிங் ரூமின் வடகிழக்கு மூலையில் செடிகளை வைப்பதன் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தில் இயற்கையின் அழகைக் கொண்டுவந்திடுங்கள். இது லிவிங் ரூமிற்கு நேர்மறை அதிர்வுகளைக் கொண்டுவருகிறது.

ஏர் கண்டிஷனர்கள் :

Air Conditioners

ஏர் கண்டிஷனர்கள் :

 

  • உங்களின் லிவிங் ரூமின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்த, ஏர் கண்டிஷனரை உங்களின் லிவிங் ரூமின் வடமேற்கு, கிழக்கு அல்லது மேற்கு பக்கத்தில் வைக்க வேண்டும் என்று வாஸ்த்து பரிந்துரைக்கிறது.

வாஸ்த்துவுக்கேற்ப உள்ள இடத்தில் வாழ்வதன் மூலம் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி, மற்றும் மனநிறைவை வரவேற்றிடுங்கள். உங்களின் குழந்தைகளுக்கான பிரகாசமான எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்காகவும், ஒரு நேர்மறை சுற்றுச்சூழலுக்குள் விருந்தினரை வரவேற்பதற்காகவும், குழந்தைகள் மற்றும் விருந்தினர் அறைகளுக்கான வாஸ்த்து சாஸ்திரம் குறித்த இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.