போர்ட்லேண்ட் சிமெண்ட்டின் பல்வேறு வகைகள்
போர்ட்லேண்ட் சிமெண்ட்டின் ஐந்து முக்கிய வகைகள் பின்வருமாறு:
1. வகை I: சிறப்புப் பண்புகள் தேவையில்லாத பொதுவான கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிற, பொதுப் பயன்பாட்டு சிமெண்ட்.
2. வகை II: மிதமான சல்பேட் எதிர்ப்பையும் குறைவான நீரேற்ற வெப்பத்தையும் வழங்குகிற, மாற்றியமைக்கப்பட்ட சிமெண்ட்.
3. வகை III: விரைவாக இறுகி, விரைவாக வலிமை பெற்று, வேகமாகச் செய்யப்படும் திட்டங்களுக்கு ஏற்ற, மிக சீக்கிரத்தில் வலிமையடையும் சிமெண்ட்.
4. வகை IV: பெரிய கான்கிரீட் தொகுதிகளுக்கான நீரேற்ற வெப்பத்தைக் குறைத்து விரிசல்களைத் தடுக்கிற, குறைந்த வெப்ப சிமெண்ட்.
5. வகை V: அதிக சல்பேட் வெளிப்பாடு உள்ள சூழல்களில் பயன்படுத்தப்படும் அதிக சல்பேட் எதிர்ப்பு சிமெண்ட்.
6. வெள்ளை போர்ட்லேண்ட் சிமெண்ட்: இது வகை 1 இன் அதே பண்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் இது சிறப்பான மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இது வெண்ணிற அல்லது வண்ண மார்ட்டர்களில் காட்சி விளைவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
சரியான வகை போர்ட்லேண்ட் சிமெண்ட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
போர்ட்லேண்ட் சிமெண்ட்டை சரியாக தேர்வு செய்வது உங்கள் கட்டுமானத் திட்டத்தின் நீண்ட ஆயுளுக்கும், மீள்திறனுக்கும் மிக முக்கியமானது. அதற்கான காரணங்கள் இதோ:
1. கட்டமைப்பின் உறுதித்தன்மை: சரியான சிமெண்ட் வகை, கட்டிடத்தின் நீண்ட ஆயுளைப் பாதுகாக்கும் வகையில், தேவையான வலிமையையும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு எதிரான எதிர்ப்பையும் வழங்கும்.
2. எதிர்கால சிக்கல்களைத் தடுக்கிறது: குறிப்பிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு சரியான வகை சிமெண்ட்டைப் பயன்படுத்துவது, விரிசல்கள் அல்லது சல்பேட் தாக்குதல்கள் போன்ற சாத்தியமான சேதங்களைத் தவிர்க்க உதவுகிறது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அதிக செலவுள்ள பழுதுபார்ப்புகள் மிச்சமாகும்.
3. செயல்திறன் மற்றும் சேமிப்புகளை மேம்படுத்துகிறது: போர்ட்லேண்ட் சிமெண்ட்டின் பயன்பாடுகளைப் புரிந்துகொள்வதன் மூலமும், திட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப சிமெண்ட் வகையைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், நீங்கள் கட்டமைப்பின் நீண்ட ஆயுளையும், பொருட்கள் மற்றும் பராமரிப்பில் குறைந்த செலவையும் உறுதி செய்கிறீர்கள்.